லவ் ஸ்டோரி -1
”நான் ஏன் அவனை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியலை” “அழகா இருந்தானோ?” “அழகுன்னா.. அப்படியும் சொல்ல முடியாது. ஆனா அழகாத்தான் இருந்தான்” “சரி எப்ப உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு?” “அதையேன் சார் கேக்குறீங்க?” “நான் அப்ப +1 படிச்சிட்டு இருந்தேன். “+1 ஆ” “அவன் எதிர் வீட்டுல இருந்தான்.” “ம்” “நான் படிச்சிட்டு இருக்கும் போது தெனம் என்னை சைட் அடிச்சிட்டே போவான்” “வயசுல எல்லாரும் பண்றதுதானே?” “இல்லை சார் என்னை சைட் அடிக்குறதுக்காகவே ஒரு நாளைக்கு 100 முறையாட்டும் வந்து பார்ப்பான்” “சரி” “ஒரு நா திடீர்னு சாயங்காலம் வெளிய உக்காந்து படிச்சிட்டு இருக்கேன். என்னாண்ட வந்தான்” “லவ் பண்ணுறேன்னு ப்ரோப்போஸ் பண்ணாரா? ”இல்லைங்க” “பின்ன?” “நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்” “உடனே சரின்னுண்டேன்” “வாட்?” “ஆமாங்க ஏன் சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை.+2 ல ஸ்கூல் பர்ஸ்ட். எவ்வளவோ சொன்னாங்க. மேல படின்னு கல்யாணம் கல்யாணம்னு அரிச்சிட்டே இருந்தான். நான் படிக்க வைக்குறேன்னான். வீட்டுல சண்டை போட்டு கல்யாணம் பண்ணேன். இந்த ஏழு வருஷத்துல ரெண்டை பெத்தது தான் நான் செஞ்ச சாதனை.” “இன்னும் அந்த காதல் இருக்கா?” “தெரியல....