Posts

Showing posts with the label சினிமா வியாபாரம்

Box Office உண்மைகள்

  தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல். என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்‌ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்க...

சினிமா வியாபாரம் -6- திரைப்பட பாடல் மூலம் எளிதில் சம்பாதிப்பது எப்படி?

Image

சினிமா வியாபாரம் - 5- ஆடியோ உரிமைகள்

Image

சினிமா வியாபாரம் - 4 - 7 ஏரியாக்கள் 9 ஆன கதை.

Image

சினிமா வியாபாரம் -3 - தமிழக சினிமா ஏரியாக்கள்

Image

சினிமா வியாபாரம் -2 - Distribution

Image

சினிமா வியாபாரம் - பாகம் 1 - தமிழ் சினிமா 100 கோடி வசூல் செய்யுமா?

Image

கொத்து பரோட்டா - 15/12/14

ஆவணப்படம் சினிமா வியாபாரம் புத்தகத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கவிருக்கும் ஆவணப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். இதைக் குறித்து நிறைய வி.ஐ.பிக்களிடம் பேசிய போது மனம் திறந்து வரவேற்று, உடனடியாய் எனக்கு பேட்டியெடுக்க அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சினிமா வியாபாரம் ஆவணப்படமாய் சிறப்பாய் வெளிவருமென்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.  @@@@@@@@@@@@@@@@@@@

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைரஸி, டிவிடி, C2H

திருட்டு டிவிடியினால் தான் இவ்வளவு பெரிய ப்ரச்சனை என்று சொல்வது ஒரளவுக்கு உண்மையென்றாலும், திருட்டு விசிடியிலோ, டிவிடியிலோ கூட வெளிவராத திரைப்படங்கள் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.  அவர் ஒர் சினிமா ப்ரியர். கையில் கிடைக்கிற படங்கள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவர். அவர் தான் மேல் வரிகளை சொன்னவர். சில வருடங்களுக்கு முன் மோசர்பியர் நிறுவனம் பழைய வீடியோ உரிமங்கள் வாங்கியவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவர்களது பழைய படங்களை எல்லாம் சேர்த்து முப்பது ரூபாய்க்கு மூன்று படம், ரெண்டு படம் என லீகல் ப்ரிண்டுகளை டிவிடிகளாய் வெளியிட்டார்கள். மொழி படத்தை படம் வெளியான சில மாதங்களில் 100 ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். பெரியதாய் போகவில்லை என்றும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனியை க்ளோஸ் செய்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று அவர்கள் சரியான நெட்வொர்க் அமைக்கவில்லை என்பதும் ஒன்று.  பின்பு நிறுவனத்தில் ப்ரச்சனை ஏற்பட்டதால் டிவிடி தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ...

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைரஸியும், சேரனின் C2H

சமீப காலமாய் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆரம்பித்து, அடிப்படை வேலை செய்பவர்கள் வரை புலம்புவது சினிமா நிலைம ரொம்ப மோசமாயிருக்கு என்பதுதான். ஏற்கனவே சின்னப் படங்களின் வெற்றி, மற்றும் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் சேரன் அவர்களின் C2H எனும் விளம்பரம் வந்தது. அவ்விளம்பரம் பார்த்து  நேற்று காமராஜ் அரங்கில் கூடிய கூட்டத்தில் முக்கியமானவர்கள் எல்லோருமே சின்னப் படம் தயாரிப்பவர்கள், தயாரித்துவிட்டு வெளியிட முடியாமல் காத்திருப்பவர்கள். அட எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பாளர் ஏதோ ஒரு ஐடியாவோடத்தான் ஆரம்பிச்சிருப்பாரு.. என்ற நம்பிக்கையில் கூடியிருந்த கூட்டம்.  கூடியிருந்த கூட்டத்திற்கு பதில் கிடைத்ததா? என்று கட்டுரையின் முடிவில் பார்ப்போம். கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்து அப்போதைக்கு கைவிடப்பட்ட இந்த தமிழ் சினிமா எனும் யானைக்கு மீண்டும் மணிக்கு கட்ட விழைந்த தைரியத்திற்காக சேரனுக்கு பாராட்டும் ஆதரவும்.

புத்தக விமர்சனங்கள்.

Image
அன்பு நண்பருக்கு வணக்கம், தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.

மங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.

Image
எந்த நேரத்தில் மங்காத்தா என்று சூதாட்டப் பெயரை வைத்தார்களோ? ஒரே ஆட்டமாய்தான் இருக்கிறது. மங்காத்தாவை ஆளாளுக்கு கை மாற்றி விட்ட குழப்பம் ஒரு வழியாய் முடிந்து மீண்டும் சன்னிடமே வந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் விஷயமே வேறு. முதலில் மங்காத்தா படத்தை துரை தயாநிதியே வெளியிட நினைத்து தியேட்டர்களை புக் செய்ய முனைந்த போது துரை தயாநிதியின் முந்தைய படங்களான, வா குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களினால் அடைந்த நஷ்டத்தை சரிகட்டினால்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா?- சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா செத்துக் கொண்டிருக்கிறது என்று சினிமாவில் உள்ள பல பெரிய தலைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான புலம்பல்கள் ஒவ்வொரு ஆட்சியின் ஆரம்பத்திலும் எழுவதுதான் என்றாலும் இம்முறை கொஞ்சம் கூக்குரல் அதிகமாகவே இருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர், தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே.ஆர், கே.ஆர்.ஜி, தனஞ்செயன், ஆர்.கே.செல்வமணி,  ராஜேந்தர் ஆகியோர் பேசினார்கள். கே.ஆர். தமிழ் சினிமாவிற்கான வரி விலக்கு எடுக்கப்படக்கூடாது என்றும், இரண்டு க்ரவுண்டில் இருநூறு இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அமைப்பதற்கு சட்ட திட்டங்களை இலகுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். யுடிவி தனஞ்செயனோ.. சிறு முதலீட்டுப் படங்களை தயாரிப்பது ஒன்றும் பெரியதல்ல, ஆனால் அதை சந்தைப்படுத்துவதில் தான் சிக்கலே. குறைந்த பட்சம் ஒன்னரை கோடி விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்குக்கு இல்லாமல் படம் தயாரிக்கவே வரக்கூடாது என்றும் கூறினார். அவர் கூறியதும் முக்கியமான விஷயம்தான். டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியால் படம் தயாரிப்பது கூட சுலபம். ஆனால் அதை சந்தைப்படுத்துதல் அவ்வள...

சினிமா வியாபாரம்-10

பகுதி 10 ஆங்கிலப் படங்களை விலைக்கு வாங்கி.. அதுவும் கொஞ்சம் பழைய படங்களை வாங்கி, நிதமும் வேலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து படங்களுக்கான வியாபாரம் பேசி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இருக்கும் தியேட்டர்களில் ஒவ்வொரு படத்துக்கு இடையே கிடைக்கும் கேப்பில் தன் படங்களைப் போட்டு மிகச் சிறிய விநியோகஸ்தராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்று சொல்வார்கள். அதன் பிறகு சூப்பர் குட் செளத்திரியின் படங்களை அவர் வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்ததும், நோ.. லுக்கிங் பேக் இருவருக்கும். தமிழ் நாட்டில் முக்கியமாய் என்.எஸ்.சி ஏரியாவின் கிங் என்றால் அது அவரைத்தான் குறிக்கும் அந்த அளவுக்கு இந்த ஏரியாக்களில் ஆளுமையுள்ள ஒரு விநியோகஸ்தராக இருக்கிறவர்.

வாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்

subiah ravi sarvagar@gmail.com Dear sir, I am M.Subbiah, working as an Associate Director. I read your recent  book "Cinema viyabaram". so nice and remarkable one. very useful for me. i want to talk to u sir. can i get your mobile number, please. My hearty wishes to all your further future products, sir. Thank you, regards, subbiah.m. என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து. ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ..  அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்...

சினிமா வியாபாரம்-2-6

பகுதி-6 இந்த போஸ்டருக்கு பின்னால் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு ஒரே அள் போஸ்டர் ஒட்டுபவராக இருப்பார். அது தவிர அவரிடம் மற்ற அறிவிப்பு போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் என திடீர் திடீரென வரும ஆர்டர்களும் உண்டு. இந்த ஆட்களுக்கு இன்றளவிலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. மற்ற போஸ்டர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு மார்க்கெட் சினிமா போஸ்டர்களுக்கு மட்டுமே உண்டு. அது என்னவென்றால் ரீ சேல் வேல்யூ. ஆம் ரீசேல் வேல்யூதான். ஒரு சிங்கிள் ஷீட், டூ ஷீட், ஃபோர்ஷீட், சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் முறையே 20,40,60,100 என்று வைத்துக் கொள்வோம். புதுப்படங்கள் ரிலீஸாகும் போது விநியோகஸ்தர்களே இத்தனை போஸ்டருடன் படப்பெட்டியை தருவார்கள். அப்படி விளம்பரத்துக்காக வரும் போஸ்டர்களை ஒட்டாமல் ஒட்டியதாய் கணக்கு காட்டிவிட்டு ஒரு போஸ்டருக்கு இவ்வளவு என்று கணக்கு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு டிசைனிலும் குறைந்தது ஐந்து போஸ்டரையாவது எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை கொண்டு போய் தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களின் மைய...

சினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ

சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு. அப்போது முழுதாக கிடைக்க வில்லை. மொத்த வீடியோவின் தொகுப்பு. புத்தக கண்காட்சியில் சினிமா வியாபாரம் – F 13,14,15 , 176 ஸ்டால்களிலும் மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கிறது. லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் – 176, திரிசக்தி ஆண்டாள் புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை – 176 ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை ஆன்லைனில் வாங்க  Sanswas Infotech Ac/No.007705010890 Ashok Nagar branch, ICICI bank, chennai என்கிற அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாய் அனுப்பி வைக்கப்படும். தமிழ் நாட்டில் எல்லா ஊர்களுக்கும் கொரியர்/ போஸ்டல் செலவு கிடையாது. மற்ற ஊர்களுக்கு புத்தக விலையுடன் ரூ.25 சேர்த்து ட்ரான்ஸ்பர் செய்யவும். கேபிள் சங்கர்

சினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2

பகுதி-2 மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய அந்த படத்தின் மூலமாய் என் நண்பர் பெரிய லாபம் ஏதும் சம்பாதிக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவத்தை கிடைக்கப் பெற்றார். அந்த அனுபவம் அவருள் இன்னும் இறங்கி எப்படியாவது ஒரு தியேட்டர் நடத்தணும் என்று முடிவெடுக்க முக்கிய காரணமாய் இருந்தது. இதற்கு நடுவில் “சேது”வில் ஆசைப்பட்டு, உயிரிலே கலந்தது படத்தில் செட்டிலாகி அதை வெளியிட்டு முழு நேர விநியோகஸ்தராக ஆகிய கதை சினிமா வியாபாரம் புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்(விளம்பரம்). பின்பு சென்னையில் ஒரு பிரபல பழைய தியேட்டர் ஒன்று லீஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட.. எங்கள் காட்பாதருக்கு தெரிந்த நண்பர் தான் அந்த தியேட்டர் ஓனர் என்பதால் உடனடியாய் பேச்சு வார்த்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தார். தியேட்டர் தொடங்குவது என்று முடிவாகி அட்வான்ஸ் எல்லாம் பேசி.. மாத வாடகைக்கு தியேட்டரை லீஸுக்கு எடுத்தாயிற்று. தியேட்டரை நாமே கட்டி பார்ப்பது என்பது ஒரு வகை. ஆனால் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரை அதன் அதன் நிலையில் இருக்கும் தியேட்டரை எடுக்கும் போது சில பல பிரச்சனைகள் இருக்கிறத...

புத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..

Image
சினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் … கேபிள் சங்கர்

சினிமா வியாபாரம் -6

Image
நான்கு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய, சக பதிவர்கள், வாசகர்களுக்கு, நன்றி.. நன்றி..நன்றியோ.. நன்றி.. எம்.ஜி.(Minimum Guarentee) மினிமம் கேரண்டி என்றால் குறைந்தபட்ச உத்திரவாதம் என்று வைத்து கொள்ளலாம். அதாவது குத்து மதிப்பாய் ஒரு படத்தை அதன் நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களை வைத்து, இதற்கு முன் அந்த நடிகர், நடிகை நடித்த படஙக்ளின் வசூல் போன்ற எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த படம் இவ்வளவு வசூல் செய்யும் என்ற அனுமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை பேசுவது. நாங்கள் துள்ளுவதோ இளமை என்கிற படத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் சென்னை மாநகர உரிமைக்கு ஐந்து லட்சம் எம்.ஜி. கேட்டார்கள், நாங்களோ அவுட்ரைட்டாக கேட்டோம். அப்படத்தை எம்.ஜியில் எடுத்திருந்தால். படத்தின் வசூல் ஐந்து லட்சம் வரும் வரை நாம் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கு தொகையும் தர தேவையில்லை. அதே நேரம் அப்படம் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி வசூலை பிரித்து கொள்வார்கள். ஒரு வேளை அப்படம் ஐந்து லட்சம் வசூல் வரவில்லை என்றால் தயாரிப்பாளரை எந்த விதத்தி...