Mayasabha-Telugu Web Series

மாயசபா. இரண்டு பேர். மாணவர்கள். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கே.கே.ஆருக்கு அரசியலில் இறங்கி ஊருக்கு நல்லது செய்ய ஆசை. இன்னொரு பக்கம் டாக்டருக்கு படிக்கும் எம்.எஸ்.ஆர். ரெட்டியிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு ரவுடியிச குடும்பத்திலிருந்து வருகிறவர். இவருக்கு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைத்தவிர வேறு ஆசை இல்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் அரசியல் வாழ்க்கை ஆந்திர அரசியலில் மிக முக்கியமானது. சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி இருவரைப் பற்றிய கதை. இருவரும் ஒன்றாய் அரசியலில் வளர்ந்து, ஒரே கட்சியிலிருந்து, என்.டி.ஆரின் மருமகனாகி, என்.டி.ஆர்- சிவபார்வதியின் பிரச்சனையால் கட்சியை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து ஆட்சியமைத்த கதை. நண்பர்கள் இரு துருவமாக மாறும் நேரம் வரை இந்த சீசன் போகிறது. சந்திரபாபு நாயுடுவாக ஆதிபினிசெட்டியும் ராஜசேகர ரெட்டியாக சைத்தன்யா ராவும் நடித்திருக்கிறார்கள். என்.டி.ஆரை ஆர்.சி.ஆர், என்றும் நாகேஸ்வரராவை ஏ.சி.ஆர், என அழைக்கிறார்கள். ஆந்திர அரசியல் தெரிந்தவர்களுக்கு செம்ம சுவாரஸ்யமாய் இருக்கும் இந்த சீரிஸ். ஆங்...