எந்திரன்
சில ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கும் போது தமிழில் இம்மாதிரி படங்கள் வராதா என்று ஏங்க வைக்கும், அந்த ஏக்கத்தை போக்க வந்திருக்கும் படம் தான் எந்திரன். தமிழ் கூறும் நல்லூலகம் எல்லாவிடத்திலேயும் ரேடியோ, டிவி, மக்கள் என்று பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம்
படத்தின் கதை என்ன என்பதை உலகறியும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம் வசிகரன் என்கிற விஞ்ஞானி மனிதனைப் போலவே ஒரு ரோபோட்டை உருவாக்குகிறார். அது ரோபோவாக இருக்கும் வரை பிரச்சனையில்லை.. ஆனால் அதற்கு ஆர்டிபீசியல் இண்டெலிஜெண்டின் மூலம் மனித உணர்வுகளை கொடுத்து சிந்திக்க ஆரம்பித்ததும் வரக் கூடிய ப்ரச்சனைதான் கதை. கடைசியில் நீதி சொல்லி முடிக்கிறார்கள்.
படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி.. என்று ஒரே ரஜினி மயம்தான். வழக்கமாய் இம்மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களில் நிறைய கேரக்டர்கள வலம் வரும். இதில் பார்த்தால் மொத்தமே மொத்தம் நான்கு கேரக்டர்களில் படத்தின் திரைக்கதை ஓடுகிறது. ரஜினி, ஐஸ், ரோபோ ரஜினி, வில்லன். இவ்வளவுதான். வசீகரன் ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை.. அவ்வளவு சுறுசுறுப்பு.. அந்த வாய்ஸ் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், டான்ஸ் ஆடும் ஸ்டைல், ரஜினியிடம் உள்ள பெரிய ப்ளஸ் பாயிண்ட் அவருடய சின்ன கண்கள். அதிலும் ஷார்ப்பாக முறைக்கும் காட்சிகளில் குத்தும். ஆனால் சிட்டி ரஜினி கண்களில் ஒரு கூலிங் கிளாஸை மாட்டியிருந்தாலும் அந்த லுக்கும், ஸ்டைலும் ஷார்ப்.
ரத்னவேலுவின் ஓளிப்பதிவு அருமை என்பது சூரியனுக்கே டார்ச் வகை. முக்கியமாய் அந்த காதல் அணுக்கள் லொக்கேஷனும், பாடலும் சூப்பர். ரசூல் பூக்குட்டி, முதல் இந்திய, உலகின் சிறந்த டெக்னீஷியன்கள் பங்கேற்று சிறப்பு புரிந்திருக்கின்றார்கள். இப்படத்தின் கிராபிக்ஸ் கிரியேட்டர் ஷங்கர்.
எல்லோரும் ஒரே கதையை ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். கதையை சொல்லும் முறை என்பது அவரவர்கள் கை ரேகை மாதிரி. அது போலத்தான் ஷங்கர் இக்கதையை சொன்னதும். ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பிக்கிறார். பத்தாவது நிமிடத்தில் படம் எதை நோக்கி போகிறது என்று தெளிவாக்கிவிடுகிறார். பிறகென்ன. வெரி ஸ்மூத் ரைட்..தான் அதிலும் முதல் பாதியில் எந்திரனை நிறுபிப்பதற்காக வசீகரனும் செய்யும் முயற்சியும், சிட்டி அதில் தோல்வியடைவதும்.. அதற்காக ஷங்கர் அமைத்திருக்கும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர்ப்.. ஏனென்றால் மிகவும் டெக்னிகலான ஒரு சப்ஜெக்டில் இம்மாதிரியான இயல்பான, டவுன் டு எர்த காட்சிகள், கொஞச்ம் ட்ராமாவாக, ஷங்கரின் க்ளிஷே காட்சிகளாய் இருந்தாலும் அது தான் வெற்றி பார்முலா. முக்கியமாய், அந்த தீ விபத்து காட்சியின் முடிவும். அந்த பிரசவக் காட்சியும். மொத்த தியேட்டரும் கை தட்டுகிறது. ஆனால் பாவம் ஷங்கரின் அடுத்த படமான 3 இடியட்ஸ் படத்தின் முக்கிய காட்சியே இது தான் எனும் போது அந்த படத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்று யோசிக்க வைக்கிறது.
ரஹ்மானின் இசையில் பாடல்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், மெல்ல மெல்ல ஏறும் விஷமாய் கேட்க, கேட்க, இனித்தது, இப்போது பார்க்க, கிடைக்க.. இன்னும் நன்றாகவேயிருக்கிறது. பின்னணி இசையில் அதிரடித்திருக்கிறார்.
படத்தின் க்ராபிக்ஸ், அனிமேட்ரானிக்ஸ், அது இது என்று ஏகப்பட்ட டெக்னிக்கல் விஷயங்கள் மேலோங்கி நம்மை கட்டிப் போட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் இரண்டாவது பாதி.. முக்கியமாய் ரோபோ ரஜினிக்கு ஐஸ்ஸின் மீது ஏற்படும் காதல் ஓகே. அதுவே அப்ஷஷனாக மாறி ஆக்கிரமிக்கும் போது, டாமினண்டாக இருக்கும் ரோபோவின் கேரக்டரைசேஷனுக்கு இன்னும் கொஞ்ச்ம் எத்திகல் ஃபீலீங்கோடு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்தை பற்றி பரபரப்பு, சன் டிவி, விளம்பரம், 150 கோடி செலவு என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதை விட, படத்தை பற்றி படிப்பதை விட ஒரு நடை உங்க வீட்டு பக்கத்து குட்டி தியேட்டரில் கூட எந்திரன் ஓடும் ஒரு நடை போய்விட்டு வந்து சொல்லுங்கள். நிச்சயம் உங்க குழந்தைகளை கூட்டி செல்லுங்கள்.. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசங்களுக்காக..
எந்திரன் – A Film To Watch
கேபிள் சங்கர்
Comments
மகாத்மாவை கொண்டாடுவோம்!
http://www.youtube.com/watch?v=PcIrst3Lx_4
ரஜினி அடுத்த தலைமுறையைக் கவர சிறந்த படம்.
சிட்டி பாடி லாங்குவேஜ் கலக்கல்.. அந்த எகத்தாளமான சிரிப்பு.. அது போதும்..
ஐஸ்வரியா குளிர்ச்சி.. நடனத்தில் “இருவர்” நினைவிற்கு வருவதைத் தவிற்கமுடியவில்லை..
ரஜினி படம் பார்த்த எஃபெக்ட் இல்லை.. ரஜினியிடம் எதிர்பார்க்கும்(த்த) விஷயங்கள் மிஸ்ஸிங்.. ஸ்பைடர் மேனை ரோபோவாக உறுமாற்றம் செய்து, வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதை. கெட்டவனாக ரஜினி இருக்கமுடியாததால் இறுதியில் சிட்டி திருந்தியேயாக வேண்டிய கட்டாயம். கிளிமாஞ்சாரோ தினிப்பு, செல்லமுடியாத இடத்திற்கு செல்வோம் என்ற கொக்கறிப்பு..
மொத்தத்தில் எந்திரன்: Toy Story
(ஒரு வேளை ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகலையோ)
------------
இப்படி சொன்னா, என்னைத் திட்டுவாங்களா?? ஆட்டோ ஏதும் வருமா???
மீண்டும் ஜீனே.. என் இனிய எந்திரா பாதிப்பு அப்படியே தெரிகிறது..
சமர்ப்பணம் போட்டுட்டு தொடங்கியிருக்கலாம்...
இன்னொரு விமர்சனம்http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.htm
i'm awaiting to watch..
specially for our 'thala' Sujatha's dialogs.
thanks.. :)
ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தில் பங்கு கொண்ட அனைவரின் உழைப்பும் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது...
அமீரகத்தில் 30ம் தேதியே ரிலீஸானதால், நாங்கள் முதன் முதலில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது...
படம் இங்கும் பட்டையை கிளப்புகிறது.
ஹிந்தியிலும் மெதுவாக பிக்கப் ஆவதாக செய்தி....
எல்லோரும் ஒரே கதையை ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். கதையை சொல்லும் முறை என்பது அவரவர்கள் கை ரேகை மாதிரி. >>>
எவ்வளவு சத்தியமான வரிகள்?
கமல் ரசிகர்கள் ரெண்டாவது காட்சி பாத்துட்டு போன் பண்ணி கதறி அழுறானுங்க.... எங்க தலைவர் மிஸ் பண்ணிட்டாரேன்னு.....
ஷாருக்... நேத்து நைட் ஃபுல் மப்பில் இருந்ததாக கேள்விப்பட்டேன்
வாழ்த்துகள்
appo "endhiran" sujaathaavOda kadhai illaiyaa. avar vasanam mattumthaanaa.
என் விமர்சனத்தையும் டைம் இருந்தா செக் பண்ணுங்க..
http://suthershan.blogspot.com/
we can match so many scene with other hollywood movies.
but it is a worth effort from Shankar and its Team.
Nothing to say about Rajini . He roocka always.
movie is very good enteriner
இரண்டாவது பாதி இழுவை...
http://denimmohan.blogspot.com/
Mr.Shankar, as I told, ROBOT FLOPPED in Bollywood and Tollywood. The response is very poor in Mumbai and Andhra Pradhesh. Soon the same is going to happen here in Tamil Nadu also.//
ஒரு கூடை “ஜெலுசில்” பார்சேல்...
சூப்பர், சேம்லைக் திஸ் தமிழ்ல சொன்னாதானே அண்டர்ஸ்டாண்ட் ஆகுது. வெல் செட் கேபிள்:-))
\\அதுவே அப்ஷஷனாக மாறி ஆக்கிரமிக்கும் போது, டாமினண்டாக இருக்கும் ரோபோவின் கேரக்டரைசேஷனுக்கு இன்னும் கொஞ்ச்ம் எத்திகல் ஃபீலீங்கோடு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது\\
சூப்பர், சேம்லைக் திஸ் தமிழ்ல சொன்னாதானே அண்டர்ஸ்டாண்ட் ஆகுது. வெல் செட் கேபிள்:-))//
******
அசத்தல் கேபிளார்....
அட்டகாச கமெண்டுடன் அபி அப்பா...
ஹீ...ஹீ...ஹீ....
தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.
-ப்ரியமுடன்
சேரல்
ரைட்டு. கூட்டம் கொறயட்டும். பாத்துருவோம்..
//நிச்சயம் உங்க குழந்தைகளை கூட்டி செல்லுங்கள்.. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசங்களுக்காக..//
ரைட்டு. கூட்டம் கொறயட்டும். பாத்துருவோம்.
=======
Appadiye theaterla old rate Rs.60 varattum... paathuralaam..
இது கொஞ்சம் என்னை ஏமாற்றிய படம்
Sarasari Rajni rasigan na , Review nalla ezhudha maattaangala???? chumma yedhavenumnaalum sollidaradhu...