இசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6
இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் கமல். இளையராஜாவின் பரம விசிறி. முக்கியமாய் கமல் படத்தில் வரும் ராஜாவின் பாடல்களுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.
கமலின் ஆரம்பகால படங்களிலிருந்து, ஹேராம் வரை இருவருக்குமான பிணைப்பு அவர்கள் இணைந்து உருவாக்கும் படைப்பில் தெரியும் அதில் முக்கியமானது கமலின் ராஜ பார்வை. கண் தெரியாத ஒரு இசைக் கலைஞனின் காதலை சொல்லும் படம். முழுக்க, முழுக்க இசையோடு பயணித்த படம். வழக்கமாகவே ராஜாவின் இசை கோர்வையில் வயலினும், புளூட்டும் பின்னி பெடலெடுக்கும். வயலின் கலைஞர் பற்றிய படம் பின்பு கேட்கவா வேண்டும்.
இப்படத்தில் முக்கியமாய் ஒரு ஆரம்பக் காட்சியில் பார்வையற்றோர் பள்ளியில் கமல் வயலின் வாசிப்பதை போல ஒரு காட்சி ஆரம்பிப்பதாய் ஞாபகம். அதில் ஒரு பெரிய பி.ஜிஎம். ஸ்கோர் செய்திருப்பார் இளையராஜா. அதே ஸ்கோரை படத்தின் பின்னணியிசையிலும் பயன்படுத்தியிருப்பார்.
படத்தில் வரும் முக்கிய பாடலையே பின்னணியிசை கோர்வையாய் பயன்படுத்துவதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ராஜா தான் என்று ஞாபகம். ராஜபார்வையில் பாடல்களிலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும் ராஜா தன் முத்திரையை பதித்திருப்பார். அந்தி மழை பொழிகிறது, அழகே அழகு போன்ற பாடல்கள் இன்றளவிலும் கூட சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.
அந்த வயலின் பிட்
அழகே அழகு பாடல்
அந்தி மழை
மீண்டும் ராஜ வெள்ளத்தில் நீந்துவோம்..
கேபிள் சங்கர்
Comments
ராஜா ராஜாதான்,
கமல்,ராஜா இணைந்த கடைசி படம் விருமாண்டி
அழகான ரசனை
”படத்தில் வரும் முக்கிய பாடலையே பின்னணியிசை கோர்வையாய் பயன்படுத்துவதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ராஜா தான் என்று ஞாபகம். ராஜபார்வையில் பாடல்களிலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும் ராஜா தன் முத்திரையை பதித்திருப்பார். அந்தி மழை பொழிகிறது, அழகே அழகு போன்ற பாடல்கள் இன்றளவிலும் கூட சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.”
கண்டிப்பாக ராஜாவின் பாடல்கள் அவரின் ரசிகன் அல்லாதவர்களைகூட கவரும் அந்தளவிற்கு அவர் இசையில் ஒரு ஜீவன் இருக்கும்...
அவர் செய்த சாதனைகளை பட்டியலிடமுடியாது அவர் செய்த அனைத்து பாடல்களுமே சாதனைதான்...
இதை ராஜாவின் வெறியனாக இருப்பதனால் சொல்லவில்லை அவரின் இசையை கேட்கும்போது நமக்குள்ளும் அந்த உணர்வை கொண்டுவந்துவிடுவார் அதுதான் ராஜா
ராஜாவை எங்கும் தேட வேண்டாம் நல்ல தமிழிசையை தேடிக்கேட்டாலே நிச்சயம் ராஜா அங்கு இருப்பார்
தமிழிசை உள்ளவரை ராஜாவும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்....
”இசையெனும் ராஜ வெள்ளம்”
அடிக்கடி எதிர்பார்க்கிறோம் சார்
அட்லீஸ்ட் வாரத்திற்கு ஒருமுறையாவது...
வாய்ப்பிற்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
[மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்]
லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்குTamil Movie Gallery &

நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வந்துட்டுபோங்க சார்
http://www.urssimbu.blogspot.com/
வாய்ப்பிற்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
[மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்]
அப்ப 2005ல வந்த மும்பை எக்ஸ்பிரஸ்?
வர்த்தக காரனங்களுக்காக கமல் வேறு இசை அமைப்பாளர்களுடன் இனைந்தாலும் கமல்-ராஜ இனைக்கு இனை ஏது?
எந்திரனுக்கு போட்டியா “ராஜபார்வை” படத்துக்கு மினி விமர்சனம் எழுதின மாதிரியே இருக்கே....
ஜோக்ஸ் அபார்ட்... நீங்கள் சொல்லும் அந்த பிஜிஎம் ஒரு அழகான ஃப்ரேமில் செதுக்கப்பட்டு இருக்கும்...
கமலை நடுநாயகமாக ஒளியின் நடுவில் வைத்து சுற்றம் முழுக்க இருட்டடிக்கப்பட்டிருக்க, கமல் வயலின் வாசித்து கொண்டிருப்பதை போன்று வரும் அந்த காட்சி, மெல்ல மெல்ல ஒளி பெற்று, கடைசியில் மேடையில் அனைத்து வாத்திய கோஷ்டிகளிடையே கமல் வயலின் வாசித்துக்கொண்டு இருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கும்...
படத்தில் பலே சபாஷ் என்று சொல்ல வைத்த காட்சியும் இது தான்...
தகுந்த ரசனை இருந்தால் மட்டுமே இந்த காட்சிகளை ரசிக்க முடியும்...
கே.வி.எம் எல்லாம் முன்பே அறிமுகப்படுத்தி விட்டார்கள்
நன்றி தலைவரே
@என்.விநாயகமுருகன்
தகவலுக்கு நன்றி..
@வந்தியத்தேவன்
ஆமாம். திருத்திவிடுகிறேன்
@ஜோக்கிரி
என்னால் மறக்க முடியாத இசைக் கோர்வை அது.
@ஷன்முகவேல்
நன்றி
@வினு
தேங்க்ஸ்
@மாணவன்
நன்றி