Thottal Thodarum

Sep 11, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்

Boss-Engira-Baskaran
சிவா மனசில் சக்தியின் லைனிலேயே பெரியதாய் கதைக்காக எந்தவிதமான மெனக்கேடும் இல்லாமல், சந்தானத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் ராஜேஷுன் அடுத்த படம். படத்திற்கு கதாநாயகன் சந்தானம் என்றால் தப்பேயில்லை. டிபிகல் சீரியல் அம்மா, கல்யாணமாகாத வெட்டினரி டாக்டரான 35 வயது அண்ணன், காம்பியரர் மாடுலேஷனில் பேசி அலையும் தங்கை என்ற குடும்பத்தில், ஐந்து வருஷமாய் அரியர் வைத்து முடிக்காமல் வெட்டியாய் அலையும் வெட்டி ஆபீஸ்ர் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இத்தனை களேபரத்தில் இவருக்கு பார்த்த மாத்திரத்தில் காலேஜ் லெக்சரரான நயன் மேல் காதல் வேறு வந்து தொலைத்துவிடுகிறது. இருந்திருந்து அண்ணனுக்கு ஒரு பெண் அமைய, நயன் அவரது தங்கையாகவே இருக்க, காதலை இன்னும் வலுப்படுத்த முயற்சி செய்யும் போது, அண்ணியிடம் பெண் கேட்க சொல்லும் போது, அண்ணி ஒண்ணுமில்லாத வெட்டிபயலுக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தன் தங்கை கல்யாணத்தையும்,  தன் காதலையும் ஜெயித்து காட்டிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்று சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்து பாதி ஜெயித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்ததிலிருந்து சந்தானத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அதிலும் முதல் பாதி முழுவதும், அவரது ராஜ்ஜியம்தான். மனுஷன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார். காதலிக்க ஐடியா கொடுக்குமிடம், அதற்கு பழைய சினிமா பாணியை எல்லாம் போட்டு கிண்டலடிக்கும் காட்சிகள் எல்லாம் ரணகளம். நண்பனுக்காக கடன் பத்திரத்தில் கையெழுத்து போட போகும் நேரத்தில் வேறு ஒருவன் போடாதீங்க.. என்று அலறியடிக்க, அந்த  நேரத்தில் அவரின் ரியாக்‌ஷனும், கடையை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது போல நினைத்து கலங்கும் காட்சி.. அட்டகாசமோ.. அட்டகாசம்.

boss-engira-baskaran-movie-review
ஆர்யா முதல் முறையாக காமெடி முயற்சி செய்திருக்கிறார். அவர் மிக சாதாரணமாக பேசினாலே அவருடய மாடுலேஷனுக்கு செட்டாகிவிடுகிறது.  நயன் தாரா வாடி வதங்கி போயிருக்கிறார். ஒரு காலத்தில் அவரை ஸ்கிரினில் பார்ப்வர்களையெல்லாம் வாடி வதங்கச் செய்தவர். ம்ஹும்.. ஆர்யாவின் அண்ணனாக் வரும் பஞ்சு அருணாசலத்தின் மகனின் நடிப்பும், அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை.

பிட்டு அடிக்க எழுதி வைத்த பேப்பரை பஸ்சில் தொலைத்துவிட்டு கண்டுபிடித்து தரும் நயனே, தனக்கு லெக்சராய் வருவதும், பக்கத்தில் ஐந்து வருஷமாய் தொடர்ந்து தன்னுடன் பரிட்சை எழுதி வரும் அரியர் ப்ரெண்ட் சுவாமிநாதன், “தயவு செஞ்சு பாஸ் ஆயிடாதீங்க பாஸ்” என்று வேண்டிக் கொள்வது செம கலாட்டா. இப்படி முதல்
பாதி முழுவதும் கண்ணில் நீர் வர சிரிப்பதற்கான காட்சிகள் பல.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. யுவனின் இசையில் இரண்டு, முன்று பாடலக்ள் அருமை. முக்கியமாய் யார் அந்த பெண் தான் என்று கேட்டேன், மாமா மாமா போன்ற பாடல்கள் நிச்சய ஹிட்.. ரெண்டுமே பழைய இளையராஜாவின் ரீமேக்.. அதனால் ஸ்யூர் ஹிட். நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் பல பாடல்களில் பளிச்.Boss-Engira-Baskaran-wallpapers-postersராஜேஷ்.எம் எழுதி இயக்கியிருகிறார். கொஞ்சம் கூட முந்தைய வெற்றி பார்முலாவை கைவிடாமல் ஆர்டிஸ்டை மட்டுமே மாற்றி ஆட்டம் ஆடியிருக்கிறார். முதல்பாதி போன ஸ்பீடுக்கு, செகண்ட் ஹாப் தீயா பறக்கும் போலன்னு நினைச்சிருந்தா, காத்தா கூட இல்லாம போனது வருத்தம், அதுவும் ஆர்யாவும், சந்தானமும் டுடோரியல் காலெஜ் ஆரம்பிக்கிறோம்னு கிளம்பினதும், அதுக்கு அப்புறம் என்ன செய்யறது தெரியாம அவங்க விழிக்கிறா மாதிரியே திரைக்கதையும் விழிக்கிது. ரமணா, ஷகிலா, கண் தெரியாத பெண் டீச்சர், அந்த ரவுடியின் பையன், அவன் பாஸாவது என்று நிறைய டெம்ப்ளேட் காட்சிகள், பார்பவர்களை சோர்வடைய வைக்கிறது. காமெடி படத்துக்கு இது போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படத்தின் க்ளைமாக்ஸில் தன்னையே ஒரு கேரக்டராய் சேர்த்து போனில் பேசும் காட்சி இண்ட்ரஸ்டிங் என்றாலும் பெரும்பாலும், ஒரு டிவி ஸ்லாப்டிக் ஷோவாகத்தான் இருக்கிறது இந்த திரைப்படம்.  ஒரு நகைச்சுவை படத்துக்கான அத்துனை விஷயங்களும் சரியான விகிதங்களில் சி.ம.சயில் ஆர்யா க்ளைமாக்ஸில் வருவார். இதில் ஜீவா வருமிடம் பரபரப்பு. சந்தானத்தின் பலத்தை முழுக்க, முழுக்க பயன்படுத்தியிருக்கிறார். ஆர்யாவை விட இப்படத்தின் ஷோ ஸ்டீலர் சந்தானம் தான். “நண்பேண்டா”

பாஸ்(எ)பாஸ்கரன் – நகைச்சுவை விரும்பிகளுக்கு,,,
கேபிள் சங்கர்
Post a Comment

26 comments:

vinthaimanithan said...

பார்ரா... நான் தான் மொத கமெண்டா?!

vinthaimanithan said...

அடுத்ததாவும் இதே மாவை அரைச்சி பெயில் [எ] பீதாம்பரம்னு எடுப்பாய்ங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Ok. Today will see

King Viswa said...

தல,

// அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை//

அவிங்க விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் ஒரு ஹீரோயின்.

பெசொவி said...

அப்போ படம் பாக்கலாம் போலிருக்கு!
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள், கேபிள்ஜி!

Cable சங்கர் said...

நன்றி விஸ்வா..

அதான் ஆண்டிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ம்ஹும். சில பேர் வயசானா பின்றாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்.படம் பிக்கப் ஆகிடுச்சுனு நியூஸ் வந்துட்டிருக்கு.உங்க ஒரே ஒரு கருத்தில் ஒரு டவுட்.
<>

பட்டியல் படத்துலயே செம காமெடி பண்ணுனதா ஞாபகம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

படம் நல்லாயிருக்குன்னு நீங்க சொன்னதுகப்புறம் எதுக்கு வெயிட் பண்ணனும்... பாத்திட வேண்டியது தான்.....

நல்ல விமர்சனம்... படம் பார்த்தது போலவே ஒரு உணர்வு...

பித்தன் said...

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள், கேபிள்ஜி!

சிவராம்குமார் said...

படம் பார்த்திரலாம்! ஷூட்டிங் வேலை எப்படி போகுது?

a said...

கேபிள்ஜி : இணை இயக்க வேலைகளெல்லாம் நன்றாக செல்கிறதா????

Unknown said...

“நண்பேண்டா”....

Thamira said...

சொல்றதப் பாத்தா எனக்குப் பிடிக்கும் போல இருக்கு. ஸாங்ஸ் டைமுக்குதான் என்ன பண்றதுன்னு தெரியலை. மொபைல்ல கேம்ஸ் விளையாண்டுக்க வேண்டியதுதான்.

தமிழினியன் said...

//சொல்றதப் பாத்தா எனக்குப் பிடிக்கும் போல இருக்கு. ஸாங்ஸ் டைமுக்குதான் என்ன பண்றதுன்னு தெரியலை. மொபைல்ல கேம்ஸ் விளையாண்டுக்க வேண்டியதுதான்.//

இதேதான் நானும் நெனைக்குறேன்.

DREAMER said...

ஜி வணக்கம்,
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
நானும் நேத்துதான் படம் பாத்தேன். சந்தானம் தண்ணியடித்துவிட்டு, நயன் அப்பாவை பாராட்டுவிழாவில் கலாய்க்கும் காட்சி... செம..!

//அதான் ஆண்டிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ம்ஹும். சில பேர் வயசானா பின்றாங்க...//
வழிமொழிகிறேன்...

-
DREAMER

suneel krishnan said...

நம்பி போகலாம்னு சொல்லுறீங்க , நேரம் கிடைக்கும் போது போகணும்

Mohan said...

சில குறைகள் இருந்தாலும்,படம் நன்றாகத்தான் இருந்தது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆர்யாவின் அண்ணனாக் வரும் பஞ்சு அருணாசலத்தின் மகனின் நடிப்பும், அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை.//

அண்ணே அது விஜயலட்சுமி. Friends படத்துல சூர்யா ஜோடி...

Karthik Sriram said...

Good one Shankar...

butterfly Surya said...

கேபிள், படம் ஒகே தான். சந்தானத்தின் காமெடியில் தியேட்டர் அதிர்கிறது..

கிராமத்து கதை என்ற பாணியில் சலித்து போன ரசிகர்களுக்கு பாஸ் நிச்சயம் பாஸ்தான்.

உங்க படம் எப்போ..??

Valaipayan said...

really cannot wait to see your movie .. not because that i want to critize you with the comments you made for other movies..but to see a quality movie without many ordinary glitches ..

with lov and respect.
Nags, Ohio.
after 4 glasses of white rum :)

saro said...

Ennathu, unkallukku "friends" vijayalakshmiyai therialaya. Same Same puppy same.

சு.கி.ஞானம் said...

Good Comments,as you said there is no good content and theme in the movie,but it looks like watching comedy show santhanam with arya aside.Rajesh having talent of creating humour in a plot with the help of santhanam and not more than that.Nayanthara also is very very ugly.The last song "Mama Mama" uter waste.I like film more than SMS because of more santhanam ,No Female abusing dialogues and Very Less Liqour Sceens compared to SMS.
Waiting to see Vikatan's Vimarasanam in which they would praise the Film as they did for SMS. "Mannar Vali Makkal"

maaya said...

http://www.viduppu.com/view.php?2aHHP5e0d9hmA0ecJJZz4b4YabZcd3j5G3dc2Bnl3a434OT2e22ZLt30
your review.. word to word copied..
Atleast dont have the sense to thank you..

Prem S said...

arumaiaka vimarsanam panirukinga valthukal

Prem S said...

super vimarsanam arumai