சொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo (2008)
“நான் செத்த பிறகு கடவுளை பார்க்க விரும்பவில்லை. இப்போதே நம் உறவின் மூலம் பார்க்க விரும்புகிறேன்.’
“நான் இருவரும் சேர்ந்து மின்சாரத்தை உருவாக்குகிறோம். பயோ எலக்ட்ரிக்ஸிட்டி” என்பது போன்ற குறியீடுகளான வசனங்களும், மிக அற்புதமான ஒளிப்பதிவும், பார்க்கும் திரையை விட்டு கண்ணை அகல விடமாட்டேன் என்கிறது. அவ்வளவு கவிதை. அதிலும் அவர்கள் முழு நிர்வாணமாய் படம் முழுக்க நின்றாலும், கொஞ்சம் கூட அசூசையாகவோ, எரிச்சலோ அடையாமல் விஷுவல் செய்திருப்பது அருமையோ.அருமை..

மாண்ட்ரியல் பட விழாவிலும், மெக்ஸிகன் பட விழாவிலும், சிறந்த இயக்குனர், மற்றும் படத்துக்கான விருதை பெற்றார் இயக்குனர் Eliseo Subiela. படம் முழுவதும் குறியீடுகளாய் பல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு இளைஞனுக்கு அவனின் எதிர்கால வாழ்வில் சில விஷயங்களை கற்றுக் கொண்ட சந்தோஷமும், பெண்ணின் மீதான மரியாதை மேலோங்கும் என்பது நிச்சயம்.
படத்தின் டோரண்ட் லிங்க: http://thepiratebay.org/torrent/4712129/Dont_Look_Down_(2008)_[DvdRip]_[Xvid]__1337x_-Noir
டிஸ்கி: படம் முழுக்க முழு நிர்வாண காட்சிகள் இருக்கும் அதனால் வீட்டில் டவுன்லோடினால் ஜாக்கிரதை..
கேபிள் சங்கர்
Comments
Got It!!! லீனா மணிமேகலையின் குறியீடுகள்தானே?
எப்படி ஹாலி பாலி இதல்லாம்.
ஆனா லிங்க் கொடுத்த வள்ளல் நீங்கதான் ...
ஏற்கனவே ஜாக்கி முழுசா எழுதிட்டாரு.
இதோ லிங்க்:
http://jackiesekar.blogspot.com/2010/04/dont-look-down-18.html
ஷ்பானிஷில் என்றால் சப்டைட்டில் எங்கே பிடித்தீர்கள்?
பல நாட்கள் தேடி வருகிறேன். எங்கும் கிடைக்கவில்லை.
try this link boss
http://subscene.com/Dont-Look-Down-No-mires-para-abajo/subtitles-75587.aspx
ஆமா.. ஜாக்கி எழுதியிருந்தாரு.. தெரியும். காம்படீஷன் எல்லாம் இல்லை.. நான் படம் பார்த்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. எழுதி வச்சி ட்ராப்டுல கிடந்தது.. அதுக்குள்ள ஜாக்கி முந்திகிட்டாரு.. ஒரே படத்தை பத்தி எல்லோரும் எழுதறதில்லையா.. அது போலத்தான்..
அது மட்டுமில்லாமல்.. ஜாக்கியும் நல்லா எழுதியிருந்தாரு.. அதை படிச்சிட்டு தான் ஞாபகம் வந்திச்சு நம்ம ட்ராப்டுலயும் ஒன்னு எழுதி வச்சிருக்கமேன்னு.. அதான் போட்டு விட்டுட்டேன்.
//
ahaa.. உசுரோடத்தான் இருக்க்கியா..?
//
தனியா பார்க்குறதை விட காதலியோடோ... மனைவியுடனோ பார்த்தால்.. உபயோகமாக இருக்கும்..:)
ஏற்கனவே ஜாக்கி முழுசா எழுதிட்டாரு.
//
நான் பாதியா எழுதியிருக்கேன்.. அவ்வ்வ்வ்வ்வ்..:(
//
இதை எழுதற நேரத்தில ... புரிஞ்சிக்கங்க..
ஷ்பானிஷில் என்றால் சப்டைட்டில் எங்கே பிடித்தீர்கள்?
பல நாட்கள் தேடி வருகிறேன். எங்கும் கிடைக்கவில்லை.
//
நான் ஸ்பானிஷ்..மூலத்தில் ஆங்கில சப்டைட்டிலோடு பர்த்தேன். நான் கொடுத்திருக்கும் லிங்கில் சப்டைட்டிலும் இருக்கிறாது என்று நினைக்கிறேன்.
படத்தை பற்றி நீங்கள் வர்ணித்தவிதம்
சூப்பர் சார்.இன்றே டவ்ன்லோடு செய்து விடுகிறேன்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
ஜாக்கி ஒவ்வொரு படத்திற்க்கும் விமர்சணம் எழுதிட்டு முடிவில் இந்த படம் எங்கே டவுன்லோட் பண்ணலாம் எங்கே கிடைக்குன்னு என்னிடம் கேட்காதிர்கள்ன்னு, நான் எந்த படத்தையும் டவுண்லோட் செய்து பார்ப்பதில்லைன்னு சொல்வது எவ்வளவு நல்லாயிருக்கிறது. அது தான் தொழிலுக்கு தரும் மரியாதை
நாம சொல்லி தான் மத்தவங்க டாரண்ட்ல படம் பாப்பாங்கன்னு இல்ல அட்லீஸ்ட் நாம அதுக்கு உதவி பண்ணாமவாது இருக்கலாமே. நம்ம பண்ற தப்பை அடுத்தவங்களையும் செய்ய தூண்டுவது சரியா?
Repeateeeeeeeeeeeeeee.
www.cablesankar.blogspot.com
கேபிள்சங்கர் என்பவரின் இந்த வலைப்பதிவினை 'சினிமா ஸ்பெஷல்' எனலாம். பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளியான மறுநாளே அதன் விமர்சனம் பதிவிடப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி சினிமாக்களும் இதில் அடக்கம். மாற்று முயற்சிகளாக மேற்கொள்ளப்படும் குறும்பட அறிமுகங்களும், சென்னை நகரின் விதவித ஹோட்டல்கள் குறித்த பகிர்தல்களும் தேர்ந்த ரசனை. 'சினிமா வியாபாரம்' என்ற கட்டுரைத் தொடர், சினிமா என்கிற பண்டம் உற்பத்தியானதில் இருந்து வெவ்வேறு மட்டங்களில் நடக்கும் வியாபார நுணுக்கங்கள் குறித்து விளக்குகிறது!
all the best
idhu intha vaaram anantha vikatan
இல்லை.. இந்த படமெல்லாம் இங்கே திரையரங்குகளில் வரப்போவதுமில்லை.. வீடியோவாக டிவிடி கூட பைரஸிதான் கிடைக்கும்
ஜாக்கி டிவிடியில் பார்ப்பவர்.. நான் டவுன்லோடியும், டிவிடியிலும், தியேட்ட்ரிலும் பார்ப்பவன்..
அலோ.. நான் அதுக்கு முன்னாடியே ஒலக்படங்கள் எல்லாம் பாக்குறவன்.. இதை பாக்குறதுக்கெலலம் பாரின் டூர் போயிட்டுதான் வரணும்னா.. விளங்கிரும்..:)
செக்ஸ் என்பது இயல்பானது தான் ...அது மறைத்து மறைத்து வைக்கப்படும் போது தான் வக்கிர படுகிறது மனதில் ...
நிர்வாணம் தான் இயல்பானது ....அழகானது ....
//“நான் செத்த பிறகு கடவுளை பார்க்க விரும்பவில்லை. இப்போதே நம் உறவின் மூலம் பார்க்க விரும்புகிறேன்.’ //
உண்மையாய் உள்ளது .......
No Mires Para Abajo ஸ்பானிஸ் மொழியில் உள்ளது. "Don't Look Down" என்னும் தலைப்பில் உள்ளதில் படம் ஆங்கிலத்தில் உள்ளதா அல்லது English sub-title மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதா?
"www.cablesankar.blogspot.com
கேபிள்சங்கர் என்பவரின் இந்த வலைப்பதிவினை 'சினிமா ஸ்பெஷல்' எனலாம். பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளியான மறுநாளே அதன் விமர்சனம் பதிவிடப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி சினிமாக்களும் இதில் அடக்கம். மாற்று முயற்சிகளாக மேற்கொள்ளப்படும் குறும்பட அறிமுகங்களும், சென்னை நகரின் விதவித ஹோட்டல்கள் குறித்த பகிர்தல்களும் தேர்ந்த ரசனை. 'சினிமா வியாபாரம்' என்ற கட்டுரைத் தொடர், சினிமா என்கிற பண்டம் உற்பத்தியானதில் இருந்து வெவ்வேறு மட்டங்களில் நடக்கும் வியாபார நுணுக்கங்கள் குறித்து விளக்குகிறது!
all the best
idhu intha vaaram anantha vikatan"
இதை எழுதலாம்னு தான் வந்தேன், யாழிபாபா முந்திட்டார்......
எப்படியோ வாழ்த்துக்கள் தலைவரே!!
எங்களுக்குள் போட்டி எல்லாம் இல்லை...ஒரே படத்தை இருவர் எழுதினால் பார்வை கோணங்கள்,ரசனை மாறுபாட்டை மிக அழகாய் காணலாம்...
அதுதான் இங்கு நடந்து இருக்கின்றது..
தங்கள் பதிவின்மூலம் சில வசனங்கள் புரிந்து கொண்டோம்..
விருதுகள் குவித்த படம் நாம் புதுசா பாராட்ட வேண்டியதில்லை..
பகிர்வுக்கு நன்றி..
(யோவ் சைக்கிள் சூசை.. அசூசைன்னா என்னா அர்த்தம்னு தெரியுமாய்யா.?)