Thottal Thodarum

Apr 9, 2010

Joyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி

DSC_6007 DSC_6008
அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும் என்னுடய வாசகருமான ராஜ் உடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி.
DSC_5999 IMGA0329
DSC_5949 DSC_5931
நல்ல டால் அண்ட் ஸ்லிம் பர்சனாலிட்டியாய் இருந்தார். மணக்க, மணக்க கொங்கு தமிழ் பேசுகிறார். பார்த்தவுடன் ரொம்ப நாள் பழகியவர் போல் பழகுகிறார். அவ்வளவு இயல்பு. பழகிய ஒரே நாளில் நெருக்கமாகி போனவர். இவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் நன்றாக இருக்கும். இவர் ஒரு தகவல் களஞ்சியம். சிங்கப்பூரை பற்றி பல விஷயங்களை அருமையான ஜுராங்பார்க் டிரைவின் போது சொல்லி வ்ந்தார். அவரின் ஜிபிஎஸ் பெண் அவ்வப்போது நேராக போ, லெப்டில் திரும்பு, ரைட் திரும்பு, கேமரா இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே வந்தது. வழி மாறிவந்துவிட்டால் கூட அடுத்த கணம் மாற்று வழி காண்பித்தது.
DSC_5913 DSC_5969
DSC_5914 DSC_5917
சிங்கப்பூரை விட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாம். அதற்காகவே ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம். அதை கண்காணிக்க அங்கே ஆட்கள் இருக்கிறார்களாம். சிங்கப்பூரில் ஒன்னறை டாலர் என்று கேள்வி. மார்கெட் நிலவரத்தை போல ஏறும் இறங்குமாம்.
DSC_5946 DSC_5973
ஜுராங் பார்க் மிக அருமையாய் அமைதியாய் இருந்தது, நிச்சயம் அங்கு நடக்கும் பறவைகள் ஷோவை மிஸ் பண்ணக் கூடாது. க்யூட். அங்கிருந்த அமைதியும், அரிய வகை பறவைகளையும் பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாய் இருந்தது.
DSC_5907 DSC_5974
DSC_5967 DSC_5951
மதியமாகிவிட்டபடியால் பசிக்கு மீண்டும் லிட்டில் இந்தியா தலப்பாகட்டி பிரியாணிக்கு வந்தோம். அங்கிருந்த பெண்ணிடம் ஆளுக்கு ஒன்றை ஆர்டர் செய்ய அவள் மெனு கார்டில் உள்ள் அத்தனை அயிட்டஙக்ளை விட்டு வேறு அயிட்டங்களை சொன்னாள். மிக அழகாய் எங்களை கோபப்பட விடாமல் சமாளித்து ஆர்டர் எடுத்தாள். அவள் அழகாகவும் இருந்தாள். அவளுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதை பார்த்த ராஜ்.. “பாருங்க.. நாங்களும் தான் இந்த ஊர்காரவுங்க.. எங்க கிட்டயெல்லாம் பேசுறாளா பாருங்க..? எல்லாத்துக்கு ஒரு முவ ராசி வேணும்ங்க” என்றார்.
DSC_6004 DSC_5928
அருமையான சாப்பாட்டை முடித்துக் கொண்டு மதியம் மொத்த சிங்கப்பூரையும் காரிலேயே ஒரு ரவுண்ட் அடித்தார். இரவில் சுற்றுவதை விட பகலில் சிங்கப்பூரை பார்பதற்கும், காரில் சுற்றுவதற்கும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வழக்கமாய் முன் சீட்டில் உட்காரவே மாட்டேன். ஏனென்றால் டிரைவருடன் நானும் வெறும்காலில் கார் ஓட்டி வருவேன். டென்ஷனாக்வே இருப்பேன். ஆனால் ராஜின் டிரைவிங் அவ்வளவு ஸ்மூத். அதற்கு முக்கிய காரணம் ராஜின் டிரைவிங்க மட்டுமில்லாமல், வழுக்கிச் செல்லும் சிங்கப்பூர் ரோடுகளும், டிராபிக்கை மதிக்கும் டிரைவர்களும், மீறினால் விதிக்கப்படும் ஃபைன்களும் தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
DSC_5971 DSC_5965 DSC_5908
சிங்கப்பூரில் ஒரு முறை விதியை மீறினால் ஒரு தண்டனையும், தொடர்ந்து விபத்துகளில் ஈடுபட்டால் பிறகு லைசென்ஸ் கேன்சல் செய்துவிடுவார்களாம். பைக்குகளை பார்பதே அறிதாய் இருந்தது. அப்படியே பார்த்தாலும் ரேஸ் பைக் போல ஒரு மாதிரி குனிந்து கொண்டு ஓட்டும் வண்டிகளையும், எம்.80 போன்ற வண்டிகளையும் தான் பார்க்க முடிந்தது. டூவீலர் லைசென்ஸ் வாங்குவதற்குள் தாவூ தீர்ந்துவிடுமாம். நம்ம ஊர் போல எட்டு போட சொல்வார்களாம். கிட்டத்தட்ட படுத்து எழுந்திருக்க வேண்டும் என்றார் ராஜ்.
Image0466 DSC_6036
DSC_6047 DSC_6052

அதே போல லாட்டரி சீட்டு வாங்குவதில் சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். ஆன்லைன் லாட்டரிக்கு க்யூவில் நின்று பணம் கட்டி விளையாடுகிறார்கள். சாதாரணமாகவே சீனர்கள் சூதாடுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்று கேள்வி. மிக சிரத்தையாய் சீட்டை எடுத்து ஆறு, ஆறு நம்பர்களை பென்சிலால் கருப்படித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச வருடஙக்ளுக்கு முன்னால் எவனோ ஒரு பங்களாதேஷிக்கு ஒரு மில்லியன் அடித்ததாம்.
DSC_6065 DSC_6072
DSC_6078 DSC_6080

அதே போல் பேங்க்குகள் மொத்தம் ரெண்டு பேர் மூன்று பேருடன் நடக்கிறது. ஒரு பெரிய ஏடிஎம் செண்டரில் காலையில் இருந்து மாலை வரை ஆட்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூட ஏதாவது அவசர உதவிக்குத்தான். மற்றபடி எல்லாமே மிஷின் தான். நாலாப்பக்கமும், அக்கவுண்ட் பாலன்ஸ் பார்க்க, பணம் எடுக்க, பணம் போட, பாஸ் புக் பிரிண்ட் அவுட் எடுக்க என்று எல்லாவற்றிக்கும் மிஷின் தான். மீறி பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கு கால் செண்டர் போன். பகலில் வேலை செய்யும் ஆட்கள். இம்மாதிரி நிறைய சிறிய ப்ராஞ்சுகளை பார்த்தேன்.
எல்லா இடத்திலும் நாம் கண்காணிக்கபடுகிறோம் என்பது ஒரு மாதிரி உறுத்தலாய் இருந்தாலும். பழகிவிட்டால் ஏதும் உறுத்தாது என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் வலிக்காமல் காசு வசூலிக்கிறார்கள். பார்க்கிங்குக்கு கூட ப்ரீபெய்ட் கூப்பன் வாங்கி வைத்துக் கொண்டு, போகும் போது பார்க்கிங் கூப்பனை எடுத்து அதில் நேரம், தேதி, எத்தனை மணிக்கு வந்தோம், எவ்வளவு நேரம் பார்க்கிங் செய்யப் போகிறோம் என்பதற்கான சரியான கூப்பனை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கும் வீட்டுற்கு ஓலை வருமாம்.
DSC_6095 DSC_6096
சிங்கப்பூர் குழந்தைகள் நிறைய பேர் மிகச்சிறிய வய்திலேயே கண்ணாடி அணிந்திருப்பது பற்றி பேச்சு வர, அதற்கு பெயர் “Lasy Eyes”  என்றார் ராஜ். டாக்டரிடம் கேட்ட போது அவர் சொன்னது “சிங்கப்பூர் முழுக்க மிக அருகருகில் கட்டடங்கள், கட்டடங்கள், தேடும் தொலைவிலேயே சைன் போர்டுகள், பெரிய பெரிய எழுத்துக்களில் அடையாளங்கள் என்று தொலைவில் தேடிப்பார்க்கும் வேலையே இல்லையாதனால் குழந்தைகளில் பார்வை தூரம் மிக குறைந்த அளவே பார்க்க பழகிவிட்டதால் வரும் பிரசசனை இது. இதற்கு சரியான தீர்வு. அவுட்ஸ்கர்டுகளுக்கு கூட்டி போய் தூரத்தில் தெரியும் மரம் செடி கொடிகள் போன்ற விஷயங்களை பார்க்க பழக்குவதுதான் தீர்வு. என்று சொன்னாராம் டாக்டர். ஆயிரம் வசதிகள் இருந்தும் புதுசா வருது பாருங்க வியாதி.
DSC_6099 DSC_6108
பின்பு அங்கிருந்து ஏதாவது பீச்சுக்கு போகலாம் என்றார் ராஜ். பீச் என்றதும் அலைகள் கரையில் முத்தமிடும் பீச் என்று கற்பனை கடலில் மிதந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏதோ தேங்க வைக்கப்பட்டிருக்கும் ஏரி தண்ணீர் கரையில் அடிக்குமே அது போல இருந்தது கடல். மணலே ஒரு முப்பதடிக்குதான் இருக்கும். ஷாங்கி பீச். ஆங்காங்கே சில பேர் மட்டும் தண்ணீரின் அருகில் நின்று கொண்டிருக்க, நாங்கள் சீரியஸாய் பேச ஆரம்பித்தோம். மற்ற பதிவர்கள் எழுத்தை பற்றி ராஜ் தன் அபிப்ராயத்தை கூறி பாராட்டினார். என் எழுத்தை மிகவும் சிலாகித்தது வெட்கமாய் இருந்தது.  அப்போது ஜோசப் போன் செய்தார். மாலை எந்த வேலையும் வைக்க வேண்டாம் உங்களை பார்க்க மிகவும் ஆவலாய் ஒரு நண்பர் வாசகர் இருப்பதாகவும் மீண்டும் இரவு லிட்டில் இந்தியாவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு போனை வைத்தார். ரோஸ்விக்கும் உங்களை பார்க்க என் நண்பர் வாசகர் ஒருவரையும் அங்கு வர சொல்லியிருப்பதாய் சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
DSC_6070 DSC_6074
இந்நேரத்தில் ரோஸ்விக் எனும் விக்டரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஊருக்கு போகும் போதே அண்ணன் அப்துல்லா சொன்னார். ரோஸ்விக்குனு ஒருத்தர் இருப்பாரு. அவரு இருந்திட்டா போதும் பொழுது தன்னால ஓடிரும். ரொம்ப..ரொம்ப. ரொம்ப நல்ல மனுஷன்னு சொன்னாரு. ஆனா அவரு சொன்னதை விட ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல மனுஷன். அவ்வளவு இனிமையான வெள்ளந்தியான மனிதர். இவ்வ்ளவு இயல்பாய், அன்பாய் ஒரு மனுஷன் பழக முடியுமான்னு நினைச்சா ஆச்சர்யமாக இருகிறது. எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்  மனுஷனுக்கு. முக்யமாய் நண்பர்கள் முகம் கோணாமல் பேசுவதில் மன்னர். இவருடன் இருந்தால் உங்கள் பொழுது இனிமையான பொழுதுதான். பாசக்கார மனுஷன்.
DSC_6017 DSC_6018
மாலை மீண்டும் லிட்டில் இந்தியா வந்த்தும், ஜோசப், பாலா, இரவிசந்திரன், தீபன், ராஜ், ரோச்விக், நான் எல்லாரும் ஒன்று சேர, பரஸ்பர அறிமுகம் ஆன பிறகு ரவிச்சந்திரனுடனும், தீபனுடனும் பேச ஆரம்பித்தேன். தீபன் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணி புரிகிறார். குறைவாகவே பேசினார். என்னை சந்தித்ததில் மிகவும் சந்தோஷம் கொண்டதாக சொன்னார். கொஞ்சம் எக்ஸைட்டாகவே இருந்தார். நினைவு பரிசு ஒன்றை அளித்தார். எப்போது ஒரு சிரிப்பு அவர் முகத்தில் இருந்து கொண்டேயிருந்தது.
DSC_6021 DSC_5975
ரவிச்சந்திரன் பழைய யாஹு குருப், திண்ணை, மரத்தடி காலத்திலிருந்து இருக்கும்  ப்ளாகரமும் கூட, சிங்கையில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் முக்கிய பொருப்பில் இருப்பவர். அதற்கான எந்தவிதமான பாசாங்குகளும் இன்றி இன்றைய ட்ரீட் என்னுடயது வாருங்கள் எல்லோரும் சாப்பிட போகலாம் என்றார். அருகிலேயிருந்த மால்குடி என்று நினைக்கிறேன் அந்த உணவகத்துக்கு சென்றமர்ந்தோம். மிக கனிவான உபசரிப்பு. பல விஷயங்கள் பற்றிய அறிவு என்று இண்ட்ரஸ்டிங்கான பர்சனாலிட்டியாக இருந்தார். அவர் தொடர்ந்து என் பதிவுகளீன் வாசகன் என்றும், விண்ணை தாண்டி வருவாயா விமர்சனம் பற்றியும் பேசினார். தீபனும் அதை பற்றி பேச ஆரம்பித்தார். பின்னர் பேச்சு  பல திசைகளை சுற்றி வந்து கிளம்பினோம். மிக அருமையான சந்திப்பு மீண்டும் எப்போது அவர்களை சந்திப்பேனோ என்ற வருத்தம் கலந்த சந்தோஷத்தில் முடிந்தது. மீண்டும் யூஷுனுக்கு பயணம். ராஜுடம் மீண்டும் ச்ந்திப்பதாய்  நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். ரோஸ்விக் ”அண்ணே நாளைக்கு காலையில நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி பர்சேஸ் முடிச்சிட்டு, ஒரு மூணு மணிக்கா கிளம்பினோம்னா ஏர்போர்ட் எல்லாம் சுத்தி காமிச்சிட்டுட்டு உங்களை ஏத்திவிட்டுட்டுதான் கிளம்புவேன்” என்றார்.
DSC_6027 DSC_6026
அடுத்த நாள் காலையில் பிரபாவிடம் விடை பெற்றுக் கொண்டு யூஷுன் பஸ் டெப்போவுக்கு வந்து நின்றேன். ரோஸ்விக் கையில் ஒரு பாக்கெட்டோடு காத்திருந்தார். அண்ணே இந்த ஊரு சிக்கன் பப்ஸ் சாப்பிடலை இல்லை அதுக்காத்தான் உங்களுக்கு வாங்கி வச்சிருக்கேன் என்று சொல்லி சுடச்சுட ஒரு பப்ஸை கொடுக்க அருமையாய் இருந்தது வெஜிட்டபிள்பப்ஸ். உடனே போய் வேறு சிக்கன் பப்ஸையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, முஸ்தபா போய் பெட்டியை வைத்துவிட்டு, குழந்தைகளுக்கான சாக்லெட் பாக்கெட்டுகளை அள்ளிக் கொண்டோம். அவரும் தன் பங்குக்கு என் குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளும், சென்னையில் உள்ள நண்பர்களுக்கு நினைவு பரிசுகளையும் வாங்கி கொடுத்தனுப்பினார்.
DSC_6113 DSC_6117
பஸ்ஸில் வரும் போது சிங்கப்பூர் வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்.  ஷேரிங்கில் இருப்பதை பற்றியும், அதன் கஷ்ட நஷ்டஙக்ளை பற்றியும். தன் சம்பாத்யத்தில் அவரின் தாய், தந்தையை அழைத்து வந்து சிங்கை, மலேசியா, இந்தோனேஷியா சுற்றிக் காட்டியதை ச்ந்தோசமாக சொன்னார். விரைவில் கொஞ்சம் காசு சேர்ந்த்தவுடன் தன் தம்பியையும் அவர் மனைவியையும் அழைத்து வந்து சுற்றி காட்ட வேண்டும் என்றார். ஸோ..க்யூட். 
DSC_6073 DSC_6062
மேலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வெளியே வரும் சமயம் சாமி நான் அங்குதான் வருகிறேன் உங்களை வழியனுப்ப விமான நிலையம்  வரமுடியாது அதனால் லிட்டில் இந்தியாவிலேயே உங்களை சந்திக்கிறேன் என்று வ்ந்து சந்தித்துவிட்டு கிளம்பினார். அப்போது ஒரு போன். யாரென்று பார்த்தால் நண்பர் ராஜ் தான். உங்களை வழியனுப்ப நானும் வருகிறேன். நானும் லிட்டில் இந்தியாவிலிருந்து உங்களை பிககப் செய்து காரில் நான் ட்ராப் செய்கிறேன். இன்று லீவு போட்டு விட்டேன் என்றார். பாசக்கார மனிதர்.  சுமார் மூன்று மணிக்கு அங்கிருந்து கிளம்பி நேராக ஷாங்கி ஏர்போர்டுக்கு இறக்கிவிட்டு விட்டு, போக மனசில்லாமல் போனார் மனிதர். ராஜ் ஐ மிஸ் யூ.
DSC_6087 DSC_6120
DSC_6124 DSC_5857
பின்பு நானும் ரோஸ்விக்கு எல்லா டெர்மினலையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு பட்ஜெட்டுக்கு வரும் போது ஏழு மணி ஆகிவிட்டிருந்த்து. அங்கே ஜோசப், வெற்றிக் கதிரவன், ஜெகதீசன், என்று மீண்டும் நண்பர் பட்டாளம். நான் அங்கே வ்ந்து பார்க்க முடியாமல் போனது சிங்கை நாதனை மட்டும்தான் என்று நினைத்த போது அங்கே வந்து நின்றார் சிங்கை நாதன் கையில் தந்தூரி சிக்கனுடன். எனக்கு பசிக்காம். நான் நெகிழ்ந்து போய் விட்டேன். கொஞ்ச நேரத்தில் பதிவர் கருப்பு அங்கே வர  இன்னும் பேச்சு களை கட்ட, பிரிய முடியாமல் எல்லோரையும் பிரிந்து வந்தேன். ஒரு வாரம் திகட்ட, திகட்ட அன்பை மட்டுமே வழங்கி என்னை திக்கு முக்காட செய்துவிட்ட இவர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன்? இவ்வளவு சந்தோசத்தை, நட்பை, குதூகலத்தை, அன்பை எனக்கு பெற்றுத் தந்த பதிவுலகத்திற்கும் நன்றிகள் பல. இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் துளிகள் திரண்டு திரையின் எழுத்துக்களை மறைக்கிறது.அன்பு காட்டி நெகிழ்வித்த உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி .I MISS YOU ALL MY DEAR FRIENDS. SEE YOU SOON….
DSC_6116 DSC_6121

கேபிள் சங்கர்
Post a Comment

35 comments:

பிரபாகர் said...

அருமை அண்ணே... திரும்ப வரும் நாளை எதிர் நோக்கி இருக்கிறோம்!

பிரபாகர்...

க ரா said...

என்னன்ன அதுக்குள்ள முடிஞ்சுப்போச்சா. அப்படியே இங்க ஜாக்சன்வில்லுக்கும் ஒரு தடவ வாங்க. நானும் ஹாலி. பாலியும் இருக்கோம் இங்க.

youtubeuser said...

kallakkal cable sir.. unga athanai parts padichuten.. Anbu ku munnadi yethuvume illanu prove panaura pathivu sir unga singapore trip...

Oru suggestion sir, if possible photos naming la unga kooda irukurathu yaaru nu potta helpful la irukum avangala pathi therinchuka

ரோஸ்விக் said...

அண்ணா, தங்களுக்கு சிங்கையை சுற்றிக் காட்டியதில் மகிழ்ச்சி. நிறைய பேசினோம், நிறைய சிரித்தோம், இருப்பினும் இன்னும் நிறைய புதைந்து தான் கிடக்கிறது சிரிப்பும், சிலாகிப்பும்.

எனது நண்பர் இருவரும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்துல்லா அண்ணன், என்னைப் பற்றி எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை... ;-)

சிங்கை பயணம் இனிமையாகக் கழிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ரோஸ்விக் said...

அண்ணா, தங்களுக்கு சிங்கையை சுற்றிக் காட்டியதில் மகிழ்ச்சி. நிறைய பேசினோம், நிறைய சிரித்தோம், இருப்பினும் இன்னும் நிறைய புதைந்து தான் கிடக்கிறது சிரிப்பும், சிலாகிப்பும்.

எனது நண்பர் இருவரும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்துல்லா அண்ணன், என்னைப் பற்றி எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை... ;-)

சிங்கை பயணம் இனிமையாகக் கழிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Ravichandran Somu said...

தலைவரே,

பயணக்கட்டுரை அருமை! விரைவில் சிங்கையில் சந்திப்போம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிவப்பு கலர் பூமி உருண்டை, M(மேக் டானல்ட் சிம்பல்) லோட நாலு போடோஸ் இருக்கே அது எந்த ஏரியா பிரதர்

மேவி... said...

anne. sema narration.supereb

venkit_Raj said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
சிவப்பு கலர் பூமி உருண்டை, M(மேக் டானல்ட் சிம்பல்) லோட நாலு போடோஸ் இருக்கே அது எந்த ஏரியா பிரதர்
//
terminal 3 -ங்கண்ணா..


@கேபிள்
ஆமாம் சார். எப்படி, எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதினீர்கள்..( கையில பேப்பர், பேனா இல்லாமல்..)

அடுத்து, மலேசியா டூர், ப்ளான் பன்ணுவம் சார்..
ரிலாக்ஸ்ச சுற்றலாம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்
சிவப்பு கலர் பூமி உருண்டை, M(மேக் டானல்ட் சிம்பல்) லோட நாலு போடோஸ் இருக்கே அது எந்த ஏரியா பிரதர்
//

ஒரு வேளை, வண்ணாரப்பேட்டையா இருக்குமோ கேபிள்ஜி..

Anonymous said...

அண்ணே,
நீங்க சொன்னது மாதிரி சிங்கப்பூர்லையே ஒரு நல்ல கம்பெனில (SINGTEL) வேலை கிடைச்சிடுச்சு.....Employment Pass மட்டும் correctta transfer ஆகிருச்சுன்னா ,, Make yourself to be ready to fly SINGAPORE/MALAYSIA once again....Will update you by 20th April nna.

துளசி கோபால் said...

முடிவுப்பகுதி ரொம்ப சூப்பர்.

கொசுவத்தியை ஏத்திட்டீங்க.....

(இனிவரும்(?) நிகழ்சிகளுக்கு நான் பொறுப்பல்ல)

சைவகொத்துப்பரோட்டா said...

அப்படியே எங்களுக்கும் ஊரை
சுற்றி காட்டி விட்டீர்கள்!!!

மணிஜி said...

அன்பு பரிசுக்கு நன்றி தம்பி ரோஸ்விக். சென்னையில் சந்திப்போம். வாழ்த்துக்கள். கேபிள்.. இதயம் பேசுகிறது மணியன் ரேஞ்சுக்கு போயிட்டயா நீயி...

Sukumar said...

ஆனாலும் ஏர் ஹோஸ்டஸ் போட்டோவை கூட விட்டு வைக்கல பாருங்க நீங்க....
Joyfull சிங்கபூர் தொடர் நல்லா இருந்துச்சு...
Cheeful சென்னை தொடர் ஒன்னு எழுதுங்க தல.......

Paleo God said...

அருமை கேபிள்ஜி. சிங்கை அன்பு நண்பர்களுக்கு ஒரு சல்யூட்! :))

இளமுருகன் said...

சிங்கப்பூர் பயணத்தை மிகவும் சுவைபட எழுதி இருந்தீர்கள்.இன்னும் வரும் என்றிருந்தபோது பட் என நிறுத்தி ஏங்க வைத்து விட்டீர்கள்,அருமையான பகிர்வு.

இளமுருகன்
நைஜீரியா

வடுவூர் குமார் said...

ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம்.
அப்படி முடியாது,ஆதாவது சிங்கையை விட்டு வெளியேறும் போது உங்கள் டேங்கில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும் இதை தேர்ந்தெடுத்த வண்டிகளில் சோதனை செய்வார்கள்.இதை ஏமாற்ற எனனென்வோ செய்து மாட்டிக்கொண்டவர்களும் உண்டு.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
7 ராசியான நம்பரா உங்களுக்கு?
இந்த பாகம் ரொம்ப வேகமா ஏதோ இப்பவே முடிக்கனும்னு எழுதுன மாதிரி இருக்கு.

இதை ரெண்டா பிரிச்சு இன்னும் விரிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன்.

மிக சுவையான பயணக்கட்டுரை. மிக அருமையா எழுதியிருந்தீங்க.
மீண்டும் சந்திப்போம் சிங்கையில்.

வடுவூர் குமார் said...

மிகச்சிறிய வய்திலேயே கண்ணாடி
மயோப்பியா குறைபாடு சிங்கை சீனர்களிடம்(மரபனு பிரச்சனை) அதிகமாக காணப்படுகிறது.டாகடர் சொன்னதாக கூறிய குறைபாடு கேட்கவே புதிதாக இருக்கு.

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா...
அருமையான பதிவு !

CS. Mohan Kumar said...

அருமையான தொடர்; படங்கள் மூலம் கூடவே வந்த உணர்வு

Punnakku Moottai said...

யோவ் ஜோசப்பு,

விடுய்யா, அண்ணன் வேற எதோ புதுசா எழுதபோறாரு. கெடுத்துடுவ போல நீய்யி!

நீ ஒன்னும் எழுதறது இல்ல. எழுதுறவரையும் கெடுக்காதே.

விடு விடு. அவர் மனம் போல எழுதட்டும்.

அண்ணே நீ கலக்கு அண்ணே.

கோவைத்தம்பி said...

@வடுவூர் குமார்


//மிகச்சிறிய வய்திலேயே கண்ணாடி
மயோப்பியா குறைபாடு சிங்கை சீனர்களிடம்(மரபனு பிரச்சனை) அதிகமாக காணப்படுகிறது.டாகடர் சொன்னதாக கூறிய குறைபாடு கேட்கவே புதிதாக இருக்கு.//

உண்மைதான்..நானும் , எனது குழந்தைகளுக்கு, அனுபவப்பட்டுள்ளேன்..
நான் , இண்டியா வந்தபோது,நமது டாக்டர்களும் ஆமோதித்தனர்..
ஆனா, இதை பப்ளிக்கா எந்த அரசாங்கமும் அறிவிக்காது..


//ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம்.
அப்படி முடியாது,ஆதாவது சிங்கையை விட்டு வெளியேறும் போது உங்கள் டேங்கில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும் இதை தேர்ந்தெடுத்த வண்டிகளில் சோதனை செய்வார்கள்.இதை ஏமாற்ற எனனென்வோ செய்து மாட்டிக்கொண்டவர்களும் உண்டு.//

என்ன சார்.. ரொம்பவே அப்பிராணியா இருக்குறீர்கள்..
இங்கு சீட்டிங் நன்றாக நடக்குது..
மேலும், தாய்லாந்திலிருந்து , மலேசியா வரும் வாகனங்களும் , இதையேதான் செய்கிறார்கள்..
மலேசியா அதை தடுக்க , புது புது சட்டங்கள் கொண்டுவந்தவண்ணம் உள்ளனர்..
( J.B யில் சிங்கை வண்டிகள், 20 லிட்டருக்கு மேல் பம்ப் செய்யகூடாது என புது சட்டம் வந்துவிட்டது.. ஆகவே, இரண்டு , மூன்று பங்குகளில் பெட்ரோல் அடித்து ஏமாற்றுகிறோம்..ஹா.ஹா..)

GNU அன்வர் said...

ஓரு வழியா முடிஞ்சுடுச்சு
இ எந்த நாடு!

திருநெல்வேலி ஜங்ஷன் said...

addapavikala nanthan lasta!!!!!!!!!!!!
any way nice trip.
thank u
gnanam.

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)
See you back here soon

Anputan
Singai Nathan

அமுதா கிருஷ்ணா said...

லிட்டில் இந்தியாவில் தலப்பாக்கட்டியா..டூப்ளிகேட் அங்கேயும் வந்திருச்சா????

அறிவிலி said...

சுவையான தொடர். மீண்டும் சந்திப்போம்.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Superb Sir! ரொம்பவும் நல்லா இருந்தது...

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அண்ணன், என்னைப் பற்றி எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை... ;-)

//

உண்மையைச் சொன்னேன் :)

சுரேகா.. said...

அழகான பயணக்கட்டுரை வித் அற்புத நண்பர்கள்!

வாழ்த்துக்கள் ஜி!

கவிதன் said...

சுவாரஸ்யமான பயணம் என்பதை புகைப்படங்களில் பார்த்தாலே தெரிகிறது.....பயணக்கட்டுரையும் படங்களும் மிக அருமை!!!

Unknown said...

இந்த புகைபடஙள் நன்றாக இருக்கிருது

கிரி said...

சங்கர் உங்கள் சிங்கப்பூர் பயணம் சிறப்பாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் சிங்கப்பூர் வர வேண்டுகிறேன். எனக்கு shift இருந்ததால் உங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை.