Darling –2010
ப்ரபாஸ் ஒரு ஜாலியான இளைஞன், அவனை ஒரு பெண் ப்ரபோஸ் செய்கிறாள். ஆனால் பரபாஸோ மறுக்கிறான். இதனால் மனம் உடைந்த அந்த பெண் சூசைட் செய்ய முயல்கிறாள். அந்த பெண்ணின் தாதா அப்பன் ப்ரபாஸின் நண்பர்களை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்ட, தான் ஏற்கனவே காதலித்தவன் என்றும், அவள் தற்போது ஒரு விபத்தினால் கோமாவில் இருப்பதாகவும் அவளுக்காகத்தான் உயிர் வாழ்வதாய் சொல்கிறான். இவனின் கதையை கேட்ட தாதா, மனம் இறங்கி அவனையும், நண்பர்களையும் விடுவிக்கிறான். நிஜ வாழ்வில் அவன் சின்ன வயதிலிருந்து மனதில் இருக்கும் நந்தினியை நினைத்து சொல்லிய கதை, நிஜத்தில் அவள் வரும் போது நடந்ததா? என்பதுதான் கதை
படம் முழுவதும் ப்ரபாஸ் இளமை துள்ளலோடு வளைய வருகிறார். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் நன்றாக இருக்கிறது. படத்தில் நம் மனதை அள்ளுபவர் காஜல் அகர்வால். அவ்வளவு க்யூட். அதுவும் சுவிட்சர்லேர்ந்து எபிஸோடில் அந்த லொக்கேஷன்களும், அதில் தேவதை ட்ரஸில் சுற்றும் காஜலும் அய்ய்ய்ய்ய்யோ.. அவ்வளவு க்யூட். காஜலுக்கு வலிக்காமல் கன்னத்தில் ஒரு முத்தமிடவேண்டும் போலிருந்தது.
நம்ம பிரபு தான் ப்ரபாஸின் அப்பா.. விரைவில் தெலுங்கு கேரக்டர் ஆர்டிஸ்டிகளுக்கு புளி கரைக்க போகிற நடிப்பு. அவ்வள்வு ஆப்டான நடிப்பு.
படத்தின் முக்கிய முதுகெலும்பு ஒளீப்பதிவாளர் ஆண்ட்ரூ. அருமையான குளுகுளூ ஒளிப்பதிவு. இம்மாதிரியான படங்களுக்கு முக்கியமான விஷயம் இசை. அந்த விஷயத்தில் ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் இசை பெரிய லெட்டவுன் என்றுதான் சொல்ல வேண்டும். பாடல்களும் சரி. பின்னனி இசையிலும் சரி.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
கதை திரைககதை இயக்கம் கருணாகரன். இவர் இன்னும் தொலிப்ரேமா ஹாங் ஓவரிலேயே இருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு படக் காட்சிகளிலேயே தெரிகிறது. சுவிட்சர்லேந்து லவ் ட்ராக்கில் தனக்கு பேஸ் ரீடிங் தெரியும் என்று காஜலை அலைய வைக்கும் ப்ரபாஸிடம், தன் காதலை சொல்ல ப்ரபாஸிடம் தன் முகத்தை மட்டுமே காட்டி அவன் தெரிந்து கொள்ள்ட்டும் என்று காஜல் நிற்கும் இடம் க்யூட். ஆனால் ரெண்டாவது பாதியில் பிரபுவின் நண்பர்கள்,குடும்பம், குழந்தைகள், ஊரிலிருந்து வரும் காஜலை காதலிக்கும் இன்னொரு இளைஞன், அவனின் நண்பர்கள், எல்லாம் வருஷம் 16ஐ ஞாபகப்படுத்துகிறது. கருணாகரன் இன்னமும் தமிழ் நாட்டை மறக்கவில்லை என்பது தெரிகிறது. ப்ரபாஸின் தங்கை தன் காதலனை கைபிடிப்பதற்காக, தன் தந்தையின் பூர்வீக் சொத்தை விற்றாவது தனக்கு வரதட்சணை கொடுக்க சொல்லும் காட்சி ஸ்வீட் செண்டிமெண்ட்.
Darling - ok
கேபிள் சங்கர்
Comments
வயசாக வயசாக சில பேரு ரொம்ப ஜொள்ளு விட ஆரம்பிச்சுடுவாங்களாமே..இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க :))
BTW கேபிள் சங்கர் கூடிய சீக்கிரத்தில் ஜொள்ளு சங்கர் ஆகும் அபாயம் இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன :)
ஆனா, எங்க மண்ணின் மைந்தர்கள் படம் எடுத்தா அதை கிழிச்சு தொங்கப்போட்ருவீங்க.
அப்புறம் - யாருங்க அந்த வெற்றி, என்னது எங்கண்ணனுக்கு வயசாகுதா, அவ்ரு நிரந்தர யூத்துங்கறது உங்களுக்கு தெரியாது போல.
தராசண்ணே.. அப்படி இல்லைண்ணே.. போன வாரம் எழுதின கொல்டிபடம் மொக்கைன்னுதானே எழுதியிருக்கேன். அதுல விஷயம் என்னன்னா.. நல்லாருக்கு இல்ல சுமாரா இருக்குன்ற படஙகளை மட்டும்தான் எழுதறேன். தமிழ்ல அப்படி இலலை பாருங்க..
இளமுருகன்
நைஜீரியா