City Of Gold –(2010)
மும்பை பம்பாயாய் இருந்த 80களில் அங்கே இருந்த மில்களையெல்லாம் மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் ஏறுமுகமாய் இருந்த நேரத்தில் மில்கள் எல்லாம் மால்களாய் மாறிய நேரத்தில் நடந்த கதை. மில்லை மட்டுமே நம்பி இருக்கும், குடும்பங்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சொல்லும் கதை.
மில் தொழிலாளி குடும்பதலைவன், தலைவி, அவளின் எழுத்தாளர் மகன், கிரிக்கெட் பைத்திய, பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமியுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இரண்டாவது மகன், மிடில் க்ளாஸ் மனப்பான்மையில் கனவுகளூடன் வாழும் மகள், அந்த ஏரியாவிலேயே ரவுடித்தனம் செய்து வாழும் கடைசி மகன், பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமி, அவளின் குண்டு கணவன், மகளின் மளிகைகடை காதலன், மில் ஓனரின் மகன், யூனியன் தலைவர் ராணா, அவரது உதவியாளர் கோவிந்த், அவரின் திக்குவாய் மகன், லோக்கல் தாதா, ஹிஸ்டரிக்கலாய் மாரோ..மாரோ என்று உன்மத்தம் பிடித்தலையும் அந்த சிறுவன் என்று கேரக்டர்களால் உருவாக்கப்பட்ட கதை.
இவர்களை சுற்றியே கதைகளம் ஓடுகிறது. சில சமயம் கொஞ்சம் பழைய வாசனை டிவி சீரியல் காட்சிகளை பார்க்கிறோமா என்று யோசிக்க வைத்தாலும், அவைகளில் உள்ள உண்மைத்தனத்தினால் அதை தாண்டி பார்க்க முடிகிறது. படத்தில் ப்ரச்சனைகள் ஒரு நெக்ஸஸ் போல இவர்களூக்குள் வளைந்து, நெளிந்து சிக்கலாகி ஓடுகிறது.
படத்தின் பெரிய பலம் நடிகர்கள். எல்லோருமே தங்கள்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். யூனியன் தோழராக வரும் கோவிந்தின் நடிப்பு அவ்வளவு எதார்த்தம், ஒவ்வொரு முறையும், முதலாளியுடன் மோதும் காட்சியாகட்டும், அடிக்க முற்படுவதாகட்டும்,ஒரு கட்டத்தில் கோபத்தில் அவரை அடிக்குமிடமாகட்டும் ம்னுஷன் நிற்கிறார். அதே போல அவரின் திக்குவாய் பையன், ரவுடிப்பையனுடன் சேர்ந்து சுற்ற, ஒரு கட்டத்தில் முதலாளியால் கோவிந்தை போட்டுதள்ள லோக்கல் தாதாவிடம் காசு கொடுக்க, அதை செய்ய ரவுடித்தனம் செய்யும் கடைசி பையனிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவன் தன் நண்பனின் அப்பா என்று தெரியாமல் இரண்டு லட்ச ரூபாய் பணத்துக்காக முகம் கூட பார்க்காமல் கொன்றுவிட, தான் செய்த செயலாம் மனம் உடைந்து, பெரிய தாதாவால் பணம் ஏமாற்ற பட்டு, அவனை பழி தீர்க்க, அவனை கொன்று அவனிடமிருந்து பணம் பறித்து, அப்பாவின் காரியத்துக்கு வரும் போது தன் ந்ண்பனாலேயே கொல்லப்படும் காட்சியில் அந்த திக்குவாய் நடிகரின் நடிப்பு தூள்.
குடும்பத்தலைவியாய் எல்லா பிரச்சனைகளுக்கும் மிக இயல்பான பதட்டத்தோடு, தன் குடும்பத்தின் மீது அளவற்ற பாசத்தை கொட்டும் தாயாய் சீமா பிஸ்வாஸ். பிள்ளைகளின் வருமானத்தை நம்பி இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களூக்கான சாப்பாட்டை கொடுத்துவிட்டு தன்னை கவனிப்பதாய் குற்றம் சொல்லும் கணவனிடம் எலலாவற்றையும் முடித்துவிட்டு, மெல்ல தன் கணவனின் அருகில் உட்கார்ந்து வாஞ்சையுடன், செல்ல கொஞ்சலுடன் டீ சாப்பிட கூப்பிடும் அந்த காதல் அருமை.
வேலையின்மையினால் வறுமையின் உக்கிரத்துக்கு பல பெண்கள் விபச்சாரம் செய்யும் அளவுக்கு போய் குடும்பத்தை காப்பாற்றும் நிதர்சனம் கொடுமை. அதே போல தன்னை திருமணம் செய்வதாய் ஏமாற்றி கர்பமாக்கிய மளிகை கடைக்காரனிடமே, தன் திருமணத்துக்கு பிறகு பணத்துக்காக படுக்கும் மகள், தன் தம்பி தொலைத்த பணத்துக்காக தன் கிட்னியை விற்று காப்பாற்றும் வெற்று பயலான எழுத்தாளர் பெரிய மகன் என்று கதற, கதற, நெஞ்சுவலியில் படுக்கும் தந்தை, சிரித்துக் கொண்டே இறக்கும் அம்மா போன்ற என்பதுகளின் க்ளிஷே காட்சிகள் நம்மை சூழ்ந்து அடிக்கிறது.
அஜித் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றதாய் இருக்கிறது. பின்னனி இசையும் ஓகே. குறைந்த பட்ஜெட் படமாய் எடுத்திருப்பார்கள் என்பது படத்தின் இருக்கும் காட்சிகளின் அமைப்பிலும், பேக்ரவுண்டிலும் தெரிகிறது.
இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் இப்படத்தில் நாம் ஏற்கனவே பார்த்த பல பாலசந்தரின் படங்களின் காட்சிகளாய் தெரிந்தாலும், கதை சொல்லும் முறையில் நேர்மையாக இருப்பதாலும், ஆங்காங்கே சில நச் வசனங்கள், அருமையான நடிப்பு என்று எல்லாவற்றையும் ஒருகிணைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். என்ன கமர்சியல் படமாகவும் இல்லாமல் சீரியஸ் படமாகவும் இல்லாமல் திரிசங்கு நிலையில் படம் இருப்பதையும் மறுக்க முடியாது.
City of Gold - Optional
கேபிள் சங்கர்
Comments
இத்தனை கேரக்டரை எப்படிண்ணே உன்னிப்பா கவனிக்கறீங்க.....
Neat one !
நுணுக்கமான பார்வை தரமான பதிவு!
நன்றி யுவா
@
இன்னும் ரெண்டு மூணு கேரக்டர்கள் விட்டு போச்சண்ணே
ஓகே ரைட்டு..
ஓகே
@மோகன் குமார்
அடுத்த மாதம் புத்தகமாய் வெளிவருகிறது..
@செ.சரவணக்குமார்
நன்றி தலைவரே
@நேசமித்ரன்
நன்றி..