”ஆமென்”

”ஆமென்” என்கிற புத்தகம் வெளிவந்த ஆறே மாதங்களில் 12 பதிப்புகளை கண்டிருக்கிறது. இதை எழுதிய பெண் தலைமறைவாக இருக்கிறாராம். அவர் பெயர் சகோதரி ஜெஸ்மி.

இவரது புத்தகத்தில் பாதிரியாரால் பாலியல் ரீதியான பலாத்காரத்துக்குள்ளாகி தான் பட்ட வேதனைகளை, கொடுமைகளை பற்றி எழுதிய புத்தகம் தான் அது. இப்புத்தகம் உலகம் முழுக்க பலமான அதிர்வுகளை ஏற்படுதியுள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் இவர் ஆமென் புததகத்தின் இரண்டாவது பாகத்தை எழத ஆரம்பித்திருக்கிறார். இவர் எழுதிவரும் புத்த்கத்தின் மூலமாய் வறுமையினால் வாடும் அப்பாவி பெண்கள் சேவைக்காக தங்களை அர்பணித்து திருச்சபைகளில் கன்யாஸ்த்திரிகளாய் தஞ்சம் அடைபவர்களை, பாதிரியார்கள் பாலியல் ரீதியாய் சித்திரவதை செய்வதை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புத்தகமாய் இருக்கும் என்கிறார் ஜெஸ்மி.

சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் குஜாலாக இருந்திருக்கிறார். இதற்கு பிஷப்புகளின் ஆதரவும் உண்டு. இப்போது கூட ஏதோ ஒருபிரஷரில் தான் விஷயம் வெளியே வருந்திருக்கிறது.

இந்த விஷயமும் பத்திரிக்கைகளில் வெளிந்தது. நித்யாந்தாவை போட்டு கிழிகிழி என கிழிதத பத்திரிக்கைகள், பதிவர்கள் யாருமே இச்செய்தியை பற்றி ஒரு வரி செய்தியாய் அங்கொன்றும், இங்கொன்று எழுதியதை தவிர பெரியதாய் எழுதியதாய் தெரியவில்லை. இம்மாதிரியான விஷயங்களில் எல்லா மத சாமியார்களும், ஒரு மார்கமாகவே இருக்கிறார்கள். தவறு செய்யும் யாரையும் ஒரே பார்வையில் தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு இந்து மத சாமியார்கள் செய்யும் செயல்களை பற்றிய செய்தி வந்தவுடனேயே ஆளாளுக்கு பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். அது என்ன காரணம் என்றே தெரியவில்லை. ஒரு வேளை பிரபலமாய் இருக்கும் சாமியார்களை பற்றி எழுதினால் தான் தங்கள் புத்தக விற்பனை ஏறும் என்ற எண்ணமோ? இல்லை அந்த ஒரு நாளுக்கான பதிவுகளுக்கான ஹிட்சுகளை ஏற்ற ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ? என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

இதை நான் எந்த விதத்திலும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக எழுதியதாய் நினைக்க வேண்டாம். அவன் செயதது மகா அயோக்கிதனம். அனால் அவனை பற்றி எழுதிவிட்டு, மற்ற மத சாமியார்கள் செய்வதை கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட அயோக்கியததனமாய் எனக்கு படுகிறது.

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் மத சாமியார் ஒருவர் எங்கள் ஏரியாவில் சிறுவர்களை வைத்து செய்த ஹோமோ செக்ஸுவல் விஷயங்களுக்காக மாட்டினார். ஒரு பெரிய பிரச்சனையான அந்த விஷயம் காதும், காதும் வைத்ததுபோல, போலீஸாராலும், பத்திரிக்கையினாலும், அரசியல் மற்றும் மதவாதிகளின் ஹெவி பிரஷிரினாலும் அமுக்கப்பட்டு. அவர் மட்டும் வேறு ஏரியாவுக்கு காலி செய்யப்பட்டார். இது நடநத்து சென்ற ஆட்சியில்.

தவறு என்று வரும் போது அது யாராக இருந்தாலும் சுட்டிக் காட்டப்படுவது அவசியம். பத்திரிக்கைகளோ, அரசாங்கமோ செய்ய தவறினால் கூட பதிவர்களாகிய நாம் அதை மத சார்பின்மையோடு செய்வது நம் கடமை.

Comments

//இவர் எழுதிவரும் புத்த்கத்தின் மூலமாய் வறுமையினால் வாடும் அப்பாவி பெண்கள் சேவைக்காக தங்களை அர்பணித்து திருச்சபைகளில் கன்யாஸ்த்திரிகளாய் தஞ்சம் அடைபவர்களை, பாதிரியார்கள் பாலியல் ரீதியாய் சித்திரவதை செய்வதை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புத்தகமாய் இருக்கும் என்கிறார் ஜெஸ்மி.//
அட கொடுமையே

//தவறு என்று வரும் போது அது யாராக இருந்தாலும் சுட்டிக் காட்டப்படுவது அவசியம்.//
ரைட்டு
நல்ல முயற்சி
இன்றுகூட குமுதத்தில் இவரின் இன்டர்வியூ வந்துள்ளது. இரண்டாம் பாகம் வேறு எழுதுகிறாராம்.
VISA said…
Very correct!!!
Krishna said…
மத சார்பாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் பரவாயில்லை. இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்கிற நிலையே இங்கு இருக்கிறது. அதற்க்கு காரணம், இந்துக்களின் சோம்பேறித்தனுமும் அலட்சியமும் மட்டுமே. மற்ற மதத்தில் குற்றம் செய்பவர்களைப் பற்றி எழுதினாலும், அவர்கள் எளிதில் விட்டுக்கொடுப்பதில்லை. சிலர், கொலை செய்வது வரை கூட செல்கிறார்கள். பகுத்தறிவுவாதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் அறிவு ஜீவிகள் சிலரும், இந்து மதத்திற்கு எதிராக மட்டுமே தங்களுது நாத்திக சிந்தனையை செலுத்துகிறார்கள். மற்ற மதத்தைப் பற்றி பேசினால், உயிர் போய் விடுமோ என்ற அச்சம். கோழைத்தனம். even this government is a fu***** pseudo secular government. remember wat happened to neeya naana show where they wer about to debate on muslim women wearing pardha. the show was not telecasted. But every now and then, neeyaa naanaa's topic was about criticising hindu religion and its sentiments.
'பிரபலம்' என்ற ஒன்றே ஒன்றுதான் காரணம்..
*/மத சார்பாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் பரவாயில்லை. இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்கிற நிலையே இங்கு இருக்கிறது. அதற்க்கு காரணம், இந்துக்களின் சோம்பேறித்தனுமும் அலட்சியமும் மட்டுமே. மற்ற மதத்தில் குற்றம் செய்பவர்களைப் பற்றி எழுதினாலும், அவர்கள் எளிதில் விட்டுக்கொடுப்பதில்லை. சிலர், கொலை செய்வது வரை கூட செல்கிறார்கள். பகுத்தறிவுவாதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் அறிவு ஜீவிகள் சிலரும், இந்து மதத்திற்கு எதிராக மட்டுமே தங்களுது நாத்திக சிந்தனையை செலுத்துகிறார்கள். மற்ற மதத்தைப் பற்றி பேசினால், உயிர் போய் விடுமோ என்ற அச்சம். கோழைத்தனம். even this government is a fu***** pseudo secular government. remember wat happened to neeya naana show where they wer about to debate on muslim women wearing pardha. the show was not telecasted. But every now and then, neeyaa naanaa's topic was about criticising hindu religion and its sentiments.*/

ரிப்பீட்டு.
நெத்தியடி. சரியா சொன்னீங்கண்ணே! பதிவுலகமும் (ஒரு சிலரைத் தவர), வர்த்தக நோக்கில், பரபரப்பு செய்திகளை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

சபாஷ் & சல்யூட்!
மனிதம் காக்கப்பட வேண்டும் எனில் ...முதலில் மதம் ,சாதி போன்றவை களைய பட வேண்டும் ...சமுகத்தில் இருந்து அல்ல ...நம் ஆழ மனதில் இருந்து.....
உயர்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு ...நாம் முட்டாள்களாக இருக்கும் வரை ........
நாமம்,பட்டை,குல்லா,சிலுவை நாமாக கொண்டு வந்த வேறுபாடு .....நாமம்,பட்டை,குல்லா,சிலுவை போட்ட எல்லோருக்கும் இரண்டு கை ,கால், ஒரு கு..சு தான் உள்ளது ........நீங்கள் உயர்தவர்கள் என்றால் extra எதாவது create பண்ணுகபா....
டக்லஸ் பசங்க என்றும் திருந்த மாட்டார்கள் ............
Refer:http://thanikaatturaja.blogspot.com/2010/04/3.html
false said…
அன்பான நண்பர் திரு கேபிள்,

நான் சில நாட்களுக்கு முன்னர் இதே போல எழுதிய ஒருவருக்கு போட்ட பின்னூட்டம்
----------------------------------
............பார்த்த வரையில் இவைகள்தான் ட்ரெண்டு:

" பகுத்தறிவு எனப்படுவது யாதெனின் ஹிந்து மதத்தை மட்டும் கண்டபடி திட்டல்"

" இந்து மதத்தைப்பற்றி மட்டும் என்ன சொன்னாலும் ஒருத்தர், அவர் நாண பகுத்தறிவு சுடரே என்று பெயர்கொடுத்தல்"

" இந்து மதத்தை திட்டி எழுதுபவரே வாழ்வார், மற்றோரெல்லாம் பகுத்தறிவற்ற பிற்போக்குகளாகி சாவார்"

நான் எந்த ஒரு மதத்தையோ சாமியையோ தூக்கி பிடிப்பவன் இல்லை என்றாலும், இங்கே நடப்பது ஒரு பயங்கர தமாஷுஐ பார்த்து அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை! அதாவது, இந்து மதத்தை பற்றி அநாகரீகமாக தூற்றுபவர்களில் ஒரு பகுதியும், அங்கே வந்து ஜல்லி அடிக்கின்ற ஒரு கும்பலும் கூர்ந்து கவனித்தால், மற்ற மதங்களை சார்ந்த கடைந்தெடுத்த மத வெறியர்கள் மட்டுமே! எப்படிங்க, நம்ம கருப்பு சட்டை பகுத்தறிவு காமடி பீசுகள் இந்து மதத்தின் தீமைகளை பற்றி பேசுகிறார்களாம், எங்கே என்று பார்த்தல் மற்றொரு மதம் சார்ந்த கூட்டத்தில்!

------------------------------------------

கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்-

நீங்கள் சென்னையில் இருந்தீர்களானால், வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் போனால், ஆந்திரா! அங்கே இந்த மாதிரி இந்து மதத்தை தூற்ற முடியாது! பலத்த எதிர்ப்பு வரும்! சுமார் முன்னூற்றி ஐம்பது கிலோ மீட்டர் அந்த பக்கம் போனால் கர்நாடகம்! அங்கே இந்து மதத்தை தூற்றி வாயை திறந்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டாம்! சுமார் இருபது வருடங்களுக்கு முன் வரை கேரளத்தில் இந்து மத தூற்றல் இருந்தது! இப்பொழுது கொளுத்தி விடுவார்கள்! சங்கு பரிவார்களினால் அங்கே ஓட்டு வாங்க முடியாதே தவிர, சமுதாய தளத்தில் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் அங்கே உண்டு! தமிழகத்தை எடுத்து கொண்டால், உங்களுக்கு தெரிந்திருக்கும். கன்னியா குமரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் இப்பொழுது கருப்பு சட்டைக்காரர்களால் (சபரிமலை கோஷ்டி இல்லை) அவ்வளவு எளிதாக கூட்டம் நடத்த முடியாது! சிலருடன் பேசியவரையில் காவி ஓட்டு வாங்காதே தவிர, பல இடங்களில் மெதுவாக வேர்விட தொடங்கிவிட்டது என்பது போலதான் தெரிகிறது (I may be wrong, but somehow it looks like that) ! அதற்க்கு உரம் போட்டு வளர்ப்பவர்கள், இந்த மாதிரி இந்து மதத்தை மட்டும் திட்டும் முற்போக்கு சுடரொளிகள்! நிதின் கட்காரியும், நாக்பூரில் உள்ள பலரும் செய்யமுடியாததை இவர்கள் இங்கே செய்கிறார்கள், அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி சங்க பரிவாருக்கு ஆதரவு மன நிலையை ஊருவக்குகிரார்கள்!

உங்கள் கேள்விக்கு பதில் - ஆங்கில ஊடகங்களில் இன்னுமும் வலது சாரி சார்பு அறிவு ஜீவிகள் நிறைய இருக்கிறார்கள்! ஆதலால் ஒரு மத தாக்கு மட்டும் ஜரூராக நடக்கிறது! அனால் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைப்போல (blitz பத்திரிகை ஒன்றின் பழைய பிரதியை, அதாவது 1986-87 இல் வந்ததை படிக்க நேர்ந்தது, அதில் தமிழகத்தில் உள்ள பிரபலமான கிருத்துவ பாதிரி ஒருவர், இந்து மதம் அழிந்தால்தான் நாடு உருப்புடும் என்று சொல்லுவார், எந்த பயமும் இல்லாமல்) இப்பொழுது யாராவது இந்து மதத்தை நகையாடினால், நடப்பதே வேறு! Moral of the story is கொடுக்கு உள்ள மதமே (அல்லது அந்த மதத்தின் வழிவந்தவர்களின் immediate எதிர்ப்பு முறை) மதிக்கப்படும்! உடனே கொட்டு விழும் என்று புரிந்தால், எல்லோரும் பயப்படுவார்கள், இல்லையேல்
வாய்க்கு வந்தபடி சாடுவார்கள்!

இந்து மதத்திற்கு கொடுக்கு வைக்கும் வேலையை செய்வது, surprisingly, காவிக்காரர்கள் இல்லை, இந்து மதத்தை "மட்டும்" கண்டபடி திட்டுபவர்கள்தான்!

வாழ்க அவர்கள் பணி!
settaikkaran said…
மதச்சார்பின்மை என்கிற பெயரில் சட்டங்களைக் கூட பாரபட்சமாக இயற்றி, செயல்படுத்தி வருகிற நம் நாட்டில் இதெல்லாம் சர்வசாதாரணம் தானே?
/////எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் மத சாமியார் ஒருவர் எங்கள் ஏரியாவில் சிறுவர்களை வைத்து செய்த ஹோமோ செக்ஸுவல் விஷயங்களுக்காக மாட்டினார்.////


சார் , அதுவந்து சார் இந்த விசியம் எனக்கு தெரிஞ்சு இருந்தா பிரச்சு மேஞ்சிருப்பேன் , சாமியார் நித்தியானதா விசியதிளையும் நான் மேலோட்ட மாகத்தான் போகணும் , ஏன்னா ? இதை வேறுமாதிரியாக சமுதாய பிரச்னை ஆக்கி விடுகிறார்கள் , அந்த பாதிரியார் விசயமும் அப்படியே ,
ரைட்டு தல
தங்கத்தைத் தான் தல, சுடுவாங்க, தகரத்தை இல்ல
Barari said…
தவறு செய்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவறானலும் விமர்சீக்க படவேண்டியவர்தான்.அப்படி விமர்சிப்பதை யார் தடுத்தார்கள்.அதை நீங்கள் செய்ய வேண்டியது தானே? ஆனால் தற்போது நீங்கள் விமர்சிப்பதை போல் போகிற போக்கில் கல்லெறிய கூடாது.ஆதாரத்துடான் விமர்சனம் இருக்க வேண்டும்.
மணிஜி said…
அடுத்ததா? நடத்துங்க...
ஆகச் சிறந்த பதிவு!.......
நல்ல பதிவு தலைவரே.
jai said…
கேபிள் நாங்க எல்லாம் மானங்கெட்ட ஜென்மம் , எங்களுக்கு பகுத்தறிவு தான் முக்கியம்.
jai said…
//தவறு செய்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவறானலும் விமர்சீக்க படவேண்டியவர்தான்.அப்படி விமர்சிப்பதை யார் தடுத்தார்கள்.அதை நீங்கள் செய்ய வேண்டியது தானே? ஆனால் தற்போது நீங்கள் விமர்சிப்பதை போல் போகிற போக்கில் கல்லெறிய கூடாது.ஆதாரத்துடான் விமர்சனம் இருக்க வேண்டும்//

கேபிள் விட்டுக்கு ஆட்டோ வரும் பீ கார்புல்.
மற்ற பதிவர்கள் மத சாயம் பூசுகிறார்களோ இல்லையோ, இந்த பதிவின் மூலம் நீங்கள்தான் மதசாயம் பூச முயல்வதாக எனக்குப்படுகிறது.
நித்யானந்தாவை கிழி கிழியென எல்லோரும் கிழித்ததற்கு காரணம் அவர் ஒரு இந்து என்பது மட்டுமல்ல.
அவர் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தவர் என்பதுதான்.
நித்யானந்தாவை எத்தனை லட்சம் (கோடி) பேருக்கு தெரியும், நீங்கள் சொன்ன கிறிஸ்து பாதிரியாரை எத்தனை லட்சம் பேருக்கு தெரியும். ஒரு சின்ன கணக்கு போட்டு பாருங்கள்.
யூட்யூபில் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட மதபோதகர்களில் நித்யானந்தாவும் ஒருவர். எனவே அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஏராளம். அதனால் அவர் தவறு செய்யும்போது அது பெரிய அளவில் பரவுகிறது. நித்யானந்தா விவகாரம் இந்தளவுக்கு பெரிய அளவில் பேசப்படுவது அவருடைய பிரபலம்தானே தவிர அவரது மதமல்ல.


//எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் மத சாமியார் ஒருவர் எங்கள் ஏரியாவில் சிறுவர்களை வைத்து செய்த ஹோமோ செக்ஸுவல் விஷயங்களுக்காக மாட்டினார். ஒரு பெரிய பிரச்சனையான அந்த விஷயம் காதும், காதும் வைத்ததுபோல, போலீஸாராலும், பத்திரிக்கையினாலும், அரசியல் மற்றும் மதவாதிகளின் ஹெவி பிரஷிரினாலும் அமுக்கப்பட்டு. அவர் மட்டும் வேறு ஏரியாவுக்கு காலி செய்யப்பட்டார்//
இது ஏதோ அந்த முஸ்லிம் சாமியார் மட்டுமல்ல. பணபலமும் ஆட்சி அதிகார பலத்தின் துணையும் இருக்கிற எல்லோரும் இன்று இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். கல்கி, சாய்பாபா, நீங்கள் சொன்ன முஸ்லிம் சாமியார், ஆமென் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட கிறிஸ்து சாமியார் வரை இந்த பட்டியலில் உண்டு. இதற்கும் மத சாயம் பூச முற்படுவது கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, மற்ற எல்லா கேப்மாரித்தனங்களையும் செய்கிற லோக்கல் அரசியல்வாதி முதல் ரௌடி வரை எப்படி தப்பிக்கிறார்கள் என்று நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நீங்கள்தான் இதனை மத ரீதியாக பார்க்கிறீர்கள்....
//பத்திரிக்கைகளோ, அரசாங்கமோ செய்ய தவறினால் கூட பதிவர்களாகிய நாம் அதை மத சார்பின்மையில்லாமல் செய்வது நம் கடமை.//

புல்லரிக்குதுங்க.

ஜனகனமன ஜனங்களை நினை
யோவ்யூவ்வா யோவ் யூவ்வ்வாஅ....
//இந்த மாதிரி இந்து மதத்தை மட்டும் திட்டும் முற்போக்கு சுடரொளிகள்! நிதின் கட்காரியும், நாக்பூரில் உள்ள பலரும் செய்யமுடியாததை இவர்கள் இங்கே செய்கிறார்கள், அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி சங்க பரிவாருக்கு ஆதரவு மன நிலையை ஊருவக்குகிரார்கள்!//

இந்த மாதிரி இந்து மக்களுக்கு உணர்வுகளை தூண்டிவிடும் பகுத்தறிவு வியாதிகளுக்கு கோடானு கோடி நன்றி. தொடரட்டும் உங்கள் இந்துமத வளர்ச்சி பணி. இப்போ எங்க நாகர்கோயில் ஊர்லே எந்த கருப்பு சட்ட காரனும் வாலாட்ட முடியாது. ஓட்ட நறிக்கிடுவாங்க இவங்களாலேயே தூண்டி விடப்பட்டவங்க
jai said…
/// நித்யானந்தா விவகாரம் இந்தளவுக்கு பெரிய அளவில் பேசப்படுவது அவருடைய பிரபலம்தானே தவிர அவரது மதமல்ல.///


அது சரி எங்களுக்கு ஹிட் தான் முக்கியம் , பரபலம் இல்லைனா ஹிட் எப்படி கெடிகும் அப்புறம் எப்படி 200 பதிவெழுதிய பதிவர் என்று பெயர் வாங்குவது எப்படி ?
ரவி said…
யாராவது அமவுண்டு தாரதா சொன்னாய்ங்களா ஹி ஹி ? இல்லை எப்படி இந்த திடீர் ஞானோதயம் ? எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு நாங்க திங்கிங் பண்ண வெச்சுட்டீங்களே ?

எங்க ஊர் கிறித்தவ சாமியாருக்கு சின்னவீடு இடுக்கு. ஒரு கிறித்தவ சாமியார் ஒரு நடிகையை தள்ளிக்கினு போனதை நான் ரெண்டு கண்ணால பார்த்திருக்கேன். குடிக்காத சுருட்டு பிடிக்காத கிறித்தவ சாமியாரை விரல் விட்டு எண்ணிடலாம். (அது ஒன்னும் தப்பில்லை தனிப்பட்ட வகையில். ஆனா நாம தம் அடிச்சா பிரிச்சு மேய்ச்சுருவாங்க). ஒரு பாண்டிச்சேரி செக்ஸ் டாக்டர் தன்னோட ஹை ப்ரொபைல் கஸ்டமர்ஸ் கண்ணிகாஸ்திரிங்கதான்னு எங்கிட்ட சொன்னார். தினத்தந்தில இன்னைக்கு கூட அவர் விளம்பரம் கொடுத்திருப்பார் பாருங்க. ஜாதி வித்யாசம் பார்க்காத கிறித்தவ சாமியாரே கடையாது வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டத்துல. இன்னும் சொல்லிக்கினே போலாம். .
கேபிள் எனக்குத் தெரிந்தவரை நித்தியை கிழிகிழியென பதிவுலகில் கிழித்தெடுத்த பலரும் (சிங்கை கிரி,ராகவன் நைஜீரியா,நர்சிம் இன்னும் பலர்) தீவிர ஆத்திகர்கள். அவர்கள் நாத்திகர்களோ,பகுத்தறிவுவாதிகளோ அல்ல. நாட்டில் எல்லா மதத்தையும் சார்ந்த எத்தனையோ பேர் விபச்சார வழக்கில் மாட்டுகின்றனர்.ஆனால் ஒரு நடிகை மாட்டினால் மட்டும் ஏன் மீடியா கிழிக்கிறது?? அதுவும்கூட இதுவரை மாட்டிய நடிகைகள் ஹிந்து என்பதால்தான் என்பீர்களா?? எவர் அதிக பிரபலமோ அவர் அதிகமாக வறுத்தெடுக்கப்படுகின்றனர். ஒருவேளை ஃபரூக் அப்துல்லா யாராவது ஒரு ஃபிகரோடு மாட்டினால் நித்தியாவைவிட இன்னும் அதிகமாக கிழிபடுவார். காரணம் அவர் பாப்புலாரிட்டி நித்தியைவிட அதிகம்.எல்லா மதத்துக்காரர்களையும் எல்லாரும் கிழித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஹிந்துகள் எண்ணிக்கையில் அதிகம்.அதனால் விமர்சனம் அதிகமாகத் தெரிகின்றது. கிருத்துவ மற்றும் இஸ்லாமியர் எண்ணிக்கையில் கம்மி. அதனால் விமர்சனம் கம்மியாகத் தெரிகின்றது.

எப்படியோ இன்னைக்கி நீங்க ஹிட்ஸை ஏத்திக்கிட்டீங்க. உங்க மார்க்கெட்டிங் மைண்டே தனி தலைவரே :)))
Athisha said…
நல்ல பதிவு தல.
/எப்படியோ இன்னைக்கி நீங்க ஹிட்ஸை ஏத்திக்கிட்டீங்க. உங்க மார்க்கெட்டிங் மைண்டே தனி தலைவரே :)))//

எவ்வளவு கஷ்டப்பட்டு, யோசித்து,ஃபீல் பண்ணி இந்த மாதிரி எழுதினா அதையும் மார்கெட்டிங்க்னு சொல்லிட்டீங்களேண்ணே..:(( இது ஞாயமா..?
/பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்//

தோத்திரம் உண்டாகட்டும் மகனே..
ரவி said…
தோத்திரம் உண்டாகட்டும் மகனே...

தோத்திரம் எத்தனை முறை உண்டாகறது ?
//இந்த விஷயமும் பத்திரிக்கைகளில் வெளிந்தது. நித்யாந்தாவை போட்டு கிழிகிழி என கிழிதத பத்திரிக்கைகள், பதிவர்கள் யாருமே இச்செய்தியை பற்றி ஒரு வரி செய்தியாய் அங்கொன்றும், இங்கொன்று எழுதியதை தவிர பெரியதாய் எழுதியதாய் தெரியவில்லை//

:)

இதற்கு காரணம் உண்டு, இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை, அதனால் அவர்கள் தொடர்புடைய செய்தி என்றால் பத்திரிக்கை விற்கும், இது தான் பத்திரிக்கை தர்மம்.

இந்து மதத்தில் மதவாதிகள் தவிர்த்து அனைவரும் போலி சாமியார்களை கண்டிக்கக் கூடியவர்கள். போலி சாமியார்களை பொதுமக்களும் தகுந்த ஆதாரங்களுடன் காட்டும் போது மக்களும் புறக்கணிப்பார்கள். ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வசிக்கும் மதங்களில் அந்த மதத்தைச் சேர்ந்த தனிநபர்களின் (மத போதகர்களின் தவறுகள்) விளம்பரப்படுத்தப்பட்டால் மதத்திற்கே ஆபத்து என்பதாக அவர்கள் கருதுவதால் இது போன்ற நிகழ்வுகள் வெளியே தெரிவது இல்லை. ஒரு கிறித்துவ நாட்டின் கிறித்துவ பாதிரியார் தவறு செய்தால் அங்கு வாழும் கிறித்துவர்கள் கண்டிப்பாக கண்டனம் தெரிவிப்பார்கள். ஒரு செய்தி பெரிதாக்கப்படுவதற்கு அந்த செய்தி மீது எவ்வளவு பேர் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே. மற்றபடி அதை வேண்டுமென்றே கண்டிக்காமல் விடுகிறார்கள் என்று கொள்வதற்கு இல்லை, இது என் தனிப்பட்ட கருத்து.
யோவ் எல்லாரும்தான் கஷ்டப்பட்டு எழுதுறாங்க. ஆனா எந்த நேரத்துல என்ன எழுதனும் எப்படி எழுதனும்னு சிந்திக்கிறீங்க பாருங்க...அந்த மைண்டை சொன்னேன் :))
தோத்திரம் எத்தனை முறை உண்டாகறது ? //


ரவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணா :)))))))))))))
Paleo God said…
மனிதனின் தவறு செய்வது மதத்தின் அடிப்படையிலா? மனதின் அடிப்படையிலா?

மதத்தை வைத்து தவறை எடை போடுவது சரியா??

மனதின் அடிப்படையிலேயே எனில் மற்றவைகள் சப்போர்ட் எதற்கு? தோலுரித்து தொங்கவிடவேண்டியதுதானே??
//இந்த விஷயமும் பத்திரிக்கைகளில் வெளிந்தது. நித்யாந்தாவை போட்டு கிழிகிழி என கிழிதத பத்திரிக்கைகள், பதிவர்கள் யாருமே இச்செய்தியை பற்றி ஒரு வரி செய்தியாய் அங்கொன்றும், இங்கொன்று எழுதியதை தவிர பெரியதாய் எழுதியதாய் தெரியவில்லை//

தமிழகத்தில் அனைத்து மதத்தினர் வசித்தாலும் 99 விழுக்காடு சினிமா இந்து குடும்ப பின்னனி பெயர்களுடைய பாத்திரங்களின் கதையாகத்தான் வருது. எனக்கு தெரிந்து ஒரு சில படம் மின்சாரக்கனவு, குஷி ஆகிய இருபடங்கள் கிறித்துவ பாத்திரங்கள் மையமாக இருந்தன, இஸ்லாமிய பாத்திரத்தை மையமாக வைத்த தமிழ் படங்களில் நாயகி இஸ்லாமிய பெண் என்பதாக மணிரத்னம் படம் உட்பட மிகச் சில, இஸ்லாமிய நாயகனாக எந்த ஒரு படமும் வந்ததில்லை (கள்ளழகரில் கடைசி காட்சியில் விஜய காந்த் தான் ஒரு முஸ்லிம் என்பார்). திரை நாயகர்களின் பெயர்களில் முடிந்த அளவு மூன்று எழுத்து இந்து பெயர்கள்
வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள் சம்பந்த பட்ட நடிகர் பிற மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்.

மீடியாக்கள் அனைத்துமே இந்துக்களை மையப்படுத்தி தான் இயங்குகின்றன. நீங்க பத்திரிக்கையையும் பதிவுலகத்தை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்.

:)
Paleo God said…
// எம்.எம்.அப்துல்லா said...
யோவ் எல்லாரும்தான் கஷ்டப்பட்டு எழுதுறாங்க. ஆனா எந்த நேரத்துல என்ன எழுதனும் எப்படி எழுதனும்னு சிந்திக்கிறீங்க பாருங்க...அந்த மைண்டை சொன்னேன் :)//

ரீவைண்டு. :))
/தோத்திரம் எத்தனை முறை உண்டாகறது ?//
தோத்திரம் உண்டாகுமா..?
/ரீவைண்டு. //

அவ்வ்வ்வ்வ்வ்
/மீடியாக்கள் அனைத்துமே இந்துக்களை மையப்படுத்தி தான் இயங்குகின்றன. நீங்க பத்திரிக்கையையும் பதிவுலகத்தை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்.

:)//

அப்படி இருக்கக்கூடாது என்பதுதான் என் ஆசை.. அண்ணே
Romeoboy said…
மதத்தின் பெயரால் நடக்கும் அநியாங்கள் எல்லாம் ஏதோ ஒருவழியில் தப்பித்து கொண்டேதான் செல்கிறது. ஆமென் புத்தகம் இங்கு கிடைகிறதா ??
@கவுண்டமணி
ஆமாம்..சார்

@விசா
நன்றி
This comment has been removed by the author.
/மதத்தின் பெயரால் நடக்கும் அநியாங்கள் எல்லாம் ஏதோ ஒருவழியில் தப்பித்து கொண்டேதான் செல்கிறது. ஆமென் புத்தகம் இங்கு கிடைகிறதா ??//

கிடைக்கிறது என்றுதான் நினைக்கிறேன்
லேண்ட் மார்க்கில்
Paleo God said…
/நன்றி சபரிநாதன் அந்தணன்// தல பேர் செக் பண்னுங்க. புதுசா அடுத்த ஹிட்ஸ்க்கு ரெடியாவறீங்களா??

:))
நல்ல வேளை பார்த்து சொன்னீங்க.. பின்ன தேவையில்லாம கும்மி நடந்திருக்கும்..:)

நன்றி சபரிநாதன் அர்தநாரி.
joe vimal said…
கேபிள் இந்தபதிவில் எந்த உள்குத்தும் இல்லை என்று நம்பி பின்னோடமிடுகிறேன் .எந்த மதத்தை சேர்ந்தவர் தப்பு செஞ்சாலும் தப்பு தப்பு தான் தண்டனை அவசியம் தான் .மற்றபடி நித்தி கிழிபட்டதற்கு காரணம் அவர் சின்ன திரை,பத்திரகை மூலம் அடைந்த புகழ் மற்றும் வலை உலகிற்கு பிடாத எழுத்தாளர் அவருக்கு சொம்படிதது .உமர் அப்துல்லாஹ் ஒரு பிரச்சனில் சிக்கியபோது இதை விட அதிகமாக கிழிபட்டார் மற்றபடி இந்து என்பதால் பெரிது படுதபடுகின்றது என்பதெல்லாம் பேத்தல் இங்கே இந்துக்கள் பெரும்பான்மை அதனால் இங்கே பெரிதுபடுத்த படுகிறது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அந்த விஷயம் பெரிதுபடுத்தபடும் சும்மா R.S.S வகையறாக்களை போல புலம்பாதீர்கள் ,அவர்கள் தங்கள் வேலைகளை செவ்வனே செய்கிறார்கள் ,வலை உலகினர் செய்ய ஆகா பெரும் விடயங்கள் பல உள்ளன தலைவரே இந்த மாதிரி எழுதி தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றில்லை .உண்மை என்னவெனில் கடவுள் மீதிருந்த நம்பிக்கை/பயம் எல்லா மதத்தவற்கும் போய்விட்டது அதனால் தான் மத தலைவர்களே தவறு செய்கின்றனர் .

தவறாக பட்டால் மன்னிக்கவும்
//தவறாக பட்டால் மன்னிக்கவும்//

சே..சே என்ன ஜோ இது.. இதில் எந்தவிதமான உள்குத்துக்களும் இல்லை. என் மனதில்பட்டதை எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான் அஃதே உங்களுடய
பின்னூட்டமும்.. நன்றி
Veliyoorkaran said…
நித்யானந்தர் அப்டிங்கற முப்பது வயசு பையன் செக்ஸ் வெச்சுகிட்டதுல என்ன தப்பு கண்டுபுடிட்சிடாங்கன்னு தெரில...அவன சாமின்னு நெனைச்சது உங்க தப்பு...அந்த பாதிரியார சாமின்னு நெனைச்சது உங்க தப்பு...முஸ்லிம் போதகர சாமின்னு நெனைச்சது உங்க தப்பு..தப்ப நீங்க பண்ணிட்டு ஏன் சார் பாவம் அவங்கள திட்றீங்க..மனுஷன் எந்த காலத்துலயும் சாமியாக முடியாதுன்னு சொன்னா நாத்திகம் பேசறான் கருப்பு சட்டைன்னு சொல்லுவீங்க...இந்த மாதிரி சின்ன உண்மைய சொல்றதுக்கு நாத்தீகனா இருக்கணும்னு அவசியம் இல்ல சார்..காமன் சென்ஸ் இருக்கற சாதாரண மனுசனா இருந்தா போதும்...!! இந்த மாதிரி ஏமாத்தற ஆளுங்கள பார்த்த எடத்துலேயே செருப்பால அடிங்கன்னு சொல்லத்தான் கருப்பு சட்ட போடணும்..!! இயேசு இருக்காருங்கரத நம்ப வெக்கறதுக்கு நக்மா பிரச்சாரம் பண்ணனும் இந்த நாட்ல.அப்பத்தான் நம்புவாங்க...நக்மாவே சொல்லிடாங்கன்னு....!

கொஞ்சம் கஷ்டம்தான் கேபிள் அண்ணேன்..விடாதீங்க.....
ட்ரை பண்ணி பாருங்க...!! :)
@நேசன்
நன்றி

@சரவணக்குமார்
நன்றி
@பிள்ளையாண்டான்
நன்றி உங்கள் ஆதரவுக்கு.
Thamira said…
பின்னூட்டம் எல்லாம் இம்மாம் பெருசா இருந்தா எப்பிடி படிக்குறது. பதிவு படிக்கவே நேரமில்லை..

யோவ் மண்டை., // நாம் அதை மத சார்பின்மையில்லாமல் செய்வது// சார்பின்மையில்லாமலிருந்துமில்லாமல்.. ஏன் இப்படி? அர்த்தம் ரிவர்ஸாகி லக்கி வேற நக்கல் பண்ணிட்டு போயிருக்கார் பாருங்க. அதை 'சார்பின்மையோடு' அல்லது 'சார்பில்லாமல்' என மாற்றுங்கள்.
false said…
//மற்றபடி இந்து என்பதால் பெரிது படுதபடுகின்றது என்பதெல்லாம் பேத்தல் இங்கே இந்துக்கள் பெரும்பான்மை அதனால் இங்கே பெரிதுபடுத்த படுகிறது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அந்த விஷயம் பெரிதுபடுத்தபடும்//

மத விடயத்தில் பெரும்பான்மை என்பது என்ன சிறுபான்மை என்பது என்ன?? அந்த மதக்காரர்களின் ஜனத்தொகை மட்டும் அல்ல இது! அவர்களின் visibility எவ்வளவு என்பதும் மிக முக்கியம்! நாங்கள் ரெண்டரை சதவிகிதமே என்று கூறிக்கொண்டு, அத்துனை தொலைக்காட்சிகளிலும் நாளைக்கு சுமார்
நாலு மணிநேரம் மத பிரச்சாரம் செய்து, தெருக்கள் முழுதும் ஆவி கூட்டும் ஜபங்கள் நடக்கிறது என்று வாரம்தோறும் போஸ்டர்கள் ஒட்டி, சமயம் கிடைக்கும் பொழுதேல்லாம் தெருவில் போகிறவர்களிடம், எங்கள் தேவனே உண்மையானவன் என்று துண்டு சீட்டு கொடுத்து, இந்த நாட்டின் பெரும்பான்மை மதம் எது என்றே புரியாதமாதிரி ஆக்கிவிட்டு, எங்களைப்பற்றி பேசவே கூடாது ஏனென்றால் நாங்கள் சிறுபான்மையினர் என்று சொல்ல வேண்டியது! அது மட்டும் இல்லை, இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மிக்க நிலங்களை கையகப்படுத்திய ஒரு குழுமும் எது என்றால், அது கிருத்துவ சபைகள்தான்! அதில் பாதி இடத்தில் கடைகள் மற்றும் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டு வேறு பிசினஸ்! அதை யாரவது கேட்டால், நாங்கள் சிறுபான்மை என்று வேறு! இதை பார்த்து மிக்க கோவப்பட்டு ஒருவர் சொன்னார் "சிறுபான்மையினர் என்றால் சிறுபான்மையினர் போல நடந்துகொள்ள வேண்டும்" என்று. இதை சொன்னது, ஒரு ஆர் எஸ் எஸ் காரனோ இல்லை மத வெறியரோ இல்லை! சொன்னவர் ஆ கே ஆண்டனி,
கேரளா முதல்வராக சில வருடங்களுக்கு முன் அவர் இருந்தபொழுது!

சொல்லவருவது, இவ்வளவு visibility வைத்துக்கொண்டு, ஊரெல்லாம் நாளும் தண்டோரா போடும் பலரைப்பற்றி எதுவும் பேசாமல், இந்து மதத்தை மட்டும் ஏன் தாக்குகிறார்கள் என்பதுதான்! இதே இரு சதவிகிதம் இருக்கும் சீக்கிய மதத்தவரையோ, அல்லது அதற்க்கும் கம்மியாக இருக்கும் பாரசிகளையோ யார் ஏன் ஒன்றும் சொல்லுவதில்லை! ஏனென்றால் அவர்கள் ஜனத்தொகையிலும் சிறுபான்மை, சத்தம் போடுவதிலும் சிறுபான்மை!

// சும்மா R.S.S வகையறாக்களை போல புலம்பாதீர்கள் ,அவர்கள் தங்கள் வேலைகளை செவ்வனே செய்கிறார்கள்//

அதானே பார்த்தேன், நான் சொல்லுவதும் அதேதான்! இந்து மதத்தை கொஞ்சம் சப்போர்ட் செய்து பேசினால் நீ ஆர் எஸ் எஸ்!!! இதை கேட்டு கடுப்பான பலர் சொன்னது, அப்படியே வெச்சிக்கோங்க இப்போ என்ன? சாதாரண இந்து ஆர் எஸ் எஸ் ஆளாக மாறுவதற்கு உங்களைப்போன்ற மத வெறியர்கள் நாலு பேரு போதும்!

//வலை உலகினர் செய்ய ஆகா பெரும் விடயங்கள் பல உள்ளன //
நான் ரசித்த மிக நல்ல ஜோக்கு!!!

//உண்மை என்னவெனில் கடவுள் மீதிருந்த நம்பிக்கை/பயம் எல்லா மதத்தவற்கும் போய்விட்டது அதனால் தான் மத தலைவர்களே தவறு செய்கின்றனர்//
இந்து மத ஆளு தப்பு செய்தால், பிசாசு மதத்துல இதெல்லாம் சகஜம், பார்பனிய மதம் இப்படிதான் இருக்கும் போன்ற வசை பாடல்கள்! அதையே வேறு மதங்களில் செய்தால், எல்லோருக்கம் கடவுள் பக்தி போய்விட்டது என்று ஒரு பொத்தம் பொதுவாக பேசுவது!

வாழ்க "ஒரு மத" தாக்கு!
ஓகே ரைட்டு மாத்திட்டேன்.. ஆதி
Unknown said…
Rightu
நோ அண்ணே, ஜோ தான் தவறாகப்பட்டால் மன்னிக்கவும்ங்குறாரே.. விட மாட்டேங்குறீங்களே :))

நாட்டுக்கு நம்ம செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. இதை விட்டுட்டு அதைப் போய் பார்ப்போம்.


[ நல்லவேளை நான் தப்பிச்சேன் உங்ககிட்ட இருந்து :))) ]
ரைட்டுக்கு நன்றி முகிலன்
கேபிள் சங்கர்
நன்றி மிஸ்டர் நோ..

கேபிள் சங்கர்
/கொஞ்சம் கஷ்டம்தான் கேபிள் அண்ணேன்..விடாதீங்க.....
ட்ரை பண்ணி பாருங்க...!! ://

ஏதோ என்னாலான முயற்சி செய்திகிட்டுதான் இருக்கேன் வெளியூர்காரரே..:)
/மீடியாக்கள் அனைத்துமே இந்துக்களை மையப்படுத்தி தான் இயங்குகின்றன. நீங்க பத்திரிக்கையையும் பதிவுலகத்தை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்.//

ஓகே.. மீடியா ஒத்துக்கிறேன்..:)
//மீடியாக்கள் அனைத்துமே இந்துக்களை மையப்படுத்தி தான் இயங்குகின்றன.//
siru thirutham. indukkalai thakkithan iyangugindrana

@cable

anne romba nalla pathivu
vijay.s said…
@ cable

sariyana pathivu...manathil nenaithaithai solitinga...
nithyanandha mathiri thirutu pasanga irukara varaikum...ithu urupadathu...
ivanala, indha bishop mathiri aalnaala andha andha madhathuku/margathuku ketta per...

aana inga enna nadakuthu... mooda nambikaiya ozhikka pirandha periyar vazhi pagutharivu sidhandha periyavargal.. hindu madhathayum,kadavulayum,makkalayum pesaranga...
ivanga, unmaiyilaye dhillana aala irundha...christian,muslim madhathil irukara thirudankalayum, mooda nambikaigalayum ethirkattum parpom...

vengaya payalunga...

vijay

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.