சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு

கடந்த ஒரு வாரமாக உள்ளூர் பதிவர்கள் மட்டுமல்லாது, வெளியூர் பதிவர்கள், வெளிநாட்டு பதிவர்களை கூட சந்தித்து கொண்டிருக்கிறேன். எங்கே என்று கேட்கிறீர்களா..? வேறெங்கே நம்ம புத்தக சந்தையில் தான். என்ன இந்த பக்கம் போது ஒரு நாலு பேரை பாத்தோம்னா, அந்த பக்கம் போகும் போது இரண்டு பேரை பார்ப்பேன். நான், அப்துல்லா, லக்கி, அதிஷா, நர்சிம், தண்டோரா, வாசு, எல்லோரும் பல இடங்களில் சுத்தினாலும் கிழக்கு சைடால ஒதுங்கிடறதுதான் வழக்கம்.

சென்னையில் இருக்கிற பதிவர்களையெலலாம் சந்திக்கணும்னு கோவையிலிருந்து நண்பர் சர்புதீன் வந்திருக்காரு. முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் சேர்த்து பார்த்தா சந்தோஷமா இருக்கும்னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம அவர் ஒரு பதிவரும் கூட http://www.vellinila.blogspot.com/ என்கிற பெயரில் பதிவு எழுதிவருகிறார்.

சென்னையில் அவர் முக்கியமாய் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால் அவர் நடத்தி வரும் வெள்ளிநிலா என்கிற பத்திரிக்கையை முழுக்க, முழுக்க பதிவர்களின் பங்களிப்போடு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பதிவர் சந்திப்புகளில் சந்திக்கலாம் என்று தோன்றிய போது இந்த மாதத்தில் புத்த்க கண்காட்சி நடந்து கொண்டிருப்பதால் பலரும் அங்கே இருக்க வாய்ப்புள்ளது என்பதாலும், வரணும்னு நினைச்சிட்டு இருக்கிற இன்னும் சில பேர் சந்திப்பை சாக்கிட்டாவது வரலாம், சந்திக்கலாம் இல்லை.

நண்பர்களே எல்லோரும் பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க..

தேதி: 09.01.2010

இடம்: புத்தக கண்காட்சி “கிழக்கு பதிப்பகம் ஸ்டால் அருகில்”

நேரம் : மாலை 6.00 மணி முதல் ..

தொடர்புக்கு
சர்பூதீன் - 81 24 24 8660
கேபிள் சங்கர் – 9840332666



தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க

Comments

வந்திருங்க சாமியோவ்
Raju said…
:-(
Romeoboy said…
வந்துடுறேன் ...
தேதி எங்க பாஸ்?
இன்னைக்குத்தான....வந்துருவோம்ல
என்ன ஜி, இதுக்கும் மைனஸ் குத்து குத்திருகாக??
நாங்கெல்லாம் வரலாமா?
:))
வந்தா, உங்க ஞாபகார்த்தமா எதாவது நல்ல புக்கா பிரசன்ட் பண்ணுவீங்களா??
;))
அப்ப இன்னைக்கு சென்னைல மழைன்னு வானொலி நிலையத்த அறிவிக்க சொல்லிற வேண்டியது தான்!!
அடாது மழை பெய்தாலும், விடாது வருவோம்
கலக்குவோம்
தல எனக்கு சில புத்தகங்கள் வேண்டும் இன்று வாங்கி அனுப்பமுடியுமா? திங்கள் கையில் கிடைக்க வேண்டிய அவசியம், முடியுமா? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்...
Ganesan said…
சந்திப்புக்கு பிரியா மணி வருவாங்களா?

ஹி ஹி
அன்புள்ள கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள நண்பர்களுக்கு., தற்பொழுது சென்னை வந்திருக்கும் அடியேன் திங்கள் காலை கோவை எக்ஸ்ப்ரெஸ் ரயிலில் கோவை வருகிறேன்., ஆகவே உங்களின் நண்பர்கள் யாரேனும் கோவையை சேர்ந்த உங்களுக்காக புத்தகங்கள் வாங்கி தந்தால், அதனை பத்திரமாக கோவை கொண்டுவருவேன் என இதன் மூலம் உறுதி அளிக்கிறேன். தொடர்புக்கு, சர்புதீன் 81 24 24 8660
Ashok D said…
வந்துர்றோம்
பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்
மணிஜி said…
//KaveriGanesh said...

சந்திப்புக்கு பிரியா மணி வருவாங்களா?

ஹி ஹி//


மணி பிரியாத்தான் வருகிறேன்..

அதே..ஹி...ஹி...
Paleo God said…
ராஜகோபால் (எறும்பு) said...
வந்தா, உங்க ஞாபகார்த்தமா எதாவது நல்ல புக்கா பிரசன்ட் பண்ணுவீங்களா??
;))//

வழி மொழிகிறேன்...::))

தண்டோரா ...... said...
//KaveriGanesh said...

சந்திப்புக்கு பிரியா மணி வருவாங்களா?

ஹி ஹி//


மணி பிரியாத்தான் வருகிறேன்..

அதே..ஹி...ஹி..//

இப்படி வயத்த வலிக்க வெச்சீங்கன்னா எப்படி சார் வர்ரது..:))

நர்சிம் said...
கலக்குவோம்//
அதே அதே...

அதுத்த முறை கடை போட்டுற வேண்டியதுதான்.. ::))

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.