ரமேஷ் சாருக்கு என்னை பார்த்து என்ன பேசறுதுன்னு தெரியாம முவமெல்லாம் வேர்த்து போயிருந்தார். அழகாய் ஒரு பொம்மை லாகா.. பார்த்த என்னை, இப்படி இந்த இடத்தில பாக்கிறதுக்கு அவருக்கு கஷ்டமாதானிருக்கும். என் பேச்சில் ரொம்ப தெலுகு வந்திச்சின்னா மன்னிச்சிக்கங்க.. ரேணிகுண்டா தான் என் ஊரு.. நா பேரு ராஜீ..
ஆந்திராவிலிருந்து ஓடி வந்து ’துரை’னி பெல்லி சேசின.. அதான் கல்யாணம் செஞ்சதுக்கப்புறம், சாப்பாட்டுக்கு இல்லாமல் துரை ப்ரெண்டு வீட்டில் தங்கியிருந்த போது.. துரை என்னை பார்த்து ‘நீ ஏன் சினிமால நடிக்க கூடாதுன்னு” கேட்டான். அவன் ப்ரண்டு சினிமால சாப்பாடு போடுற வேலையில இருந்தான். எனக்கும் சின்ன வய்சிலேர்ந்து மனசுல ஆசை இருந்திச்சு. நா கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் களையாத்தான் இருக்கேன்னு எங்கம்மா சொல்லிகிட்டேயிருக்கும். வாணிஸ்ரீ, ரோஜா எல்லாம் கருப்புதானாமே..? எவனாச்சும் கொத்திக்கிட்டு போயிருவான் நா கூத்துர என்று சொல்லிக்கிட்டேயிருப்பாள். அவளோட சின்ன வயசில நிறைய ஆசைப்பட்டு ஆகல. ஆனா அவள ஆசப்பட்டவங்க நிறைய பேர். அப்படி ஆசைபட்ட ஒருத்தனுக்கு பொறந்தவதான் நான்.
துரை அப்படிதான் என்னை கொத்திகிட்டு போக வந்தான். பக்கத்தூரூ ரைஸ்மில் ஓனருடய மகன். சென்னையில் படிச்சுட்டு ஊருக்கு வந்தவனை மயக்கி போட்டேன்னு, அம்மா புத்திதானே எனக்கும் வரும்னு என்னன்னவோ பேசினாங்க.. நா அம்மா குரிஞ்சி அந்தரூ செப்பினதி தப்பில்ல. நிசம் தானே அவஙக் சொன்னது. பணம், குடும்பம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு யாரும் வேணாம்னு எனக்காக வந்தவன் நா துரை.. என் மேல அவ்வளவு லவ்வா..ன்னு கேட்டப்ப ஒரு மாதிரி சிரிச்சி என்னை கட்டிக்கிட்டான். உள்ளுக்குள்ள சந்தோஷமா இருந்திச்சி..
சென்னை வந்து வேலைதேடி அலைஞ்சப்பதான் தெரிஞ்சுது அவனிக்கு படிப்பு பெரிசா இல்லைன்னு. அவனால லைன் குடித்தனவீட்டில கக்கூஸூ லைன்ல கூட நிக்க முடியல.. வசதியா வாழ்ந்த புள்ள.. எனக்காக கஷ்டப்படுறத பார்த்தா மனசு கேக்கல. துரை என்னை சினிமால நடிக்கிறியானு கேட்டதும்.. அதுனாலதான் ஏதும் பேசாம உடனே சரின்னுட்டேன். யார் கேட்டாலும் ”என் அக்கா வீட்டுக்கார்ன்னு” துரை சொல்ல சொன்னான். ஏன் கேட்டதுக்கு கல்யாணமான பொணணுன்னா சான்ஸ் கிடைக்காதுன்னான். கழுத்தில இருக்கிற தாலிய கழட்டி வச்சிருன்னு சொன்ன போதுதான் மனசு ரொம்பத்தான் கஷ்டப்பட்டுது. எங்கம்மாவுக்கு கிடைக்காதது.. சரி இவ்வளவும் துரைக்காகத்தானேன்னு மனசை தேத்திக்கிட்டேன்.
அப்பத்தான் ரமேஷ் சாரை பார்த்தேன்.. நான் மொத, மொத நடிக்க போன படத்தோட அஸோஸியேட் டைரக்டர். “நீ தமிழா.. இதுக்கு முன்ன நடிச்சிருக்கியா..? டயலாக் பேசுவியான்னு? கடகடன்னு கேள்வி கேட்டுகினே இருக்க, நான் சட்டுனு தமிழ்ல சொல்லாம தெலுகுல “லேது.. நேனு தெலுகண்டி..” என்று சொல்லிவிட்டு, நாக்க கடிச்சிகிட்டே கொஞ்சம் நாணி கோணி நின்னதை ஒரு நிமிஷம்.. என்னை உத்து பாத்துட்டு ”சரி நாளைலேர்ந்து சூட்டிங்குக்கு வான்னு சொன்னாரு”. எனக்கு தெரிஞ்சு.. நான் டைட்டா போட்டுட்டு போயிருந்த டீசர்ட் பனியனை பார்த்துகிட்டே பேசுனவங்க நடுவுல ரமேஷ் சார்தான் முஞ்சிய பார்த்து பேசுனாரு. நாக்கு சால சந்தோஷம்.. அதுல எனக்கு ஹீரோயின் பிரண்டு கேரக்டரு.. ஷூட்டிங்ல ஆளாளுக்கு ஒன்னு சொன்னாங்க, நா மொரண்டு போயி நின்னப்ப எல்லாம் ரமேஷ் சார் தான் வந்து பொறுமையா சொல்லி கொடுப்பாரு.. என்னவோ தெரில அவரு சொன்னா நா உடனே செஞ்சிருவேன். அதனால அங்க இருந்தவங்க, சாரை கிண்டல் பண்ணாங்க.. ஆனா அவரு அதை பத்தி கவலைபடவேயில்ல..
சூட்டிங் நடந்த முத அஞ்சு நாள்ல ஏதாச்சும் சாக்கு வச்சு என்னய தொட்டவங்க சாஸ்தி.. ஹீரோ ஒரு தடவ இங்க வந்து நில்லுன்னு கூப்பிடற மாதிரி என் மாரை அழுத்தினான். துரைகிட்ட சொன்னப்ப.. சினிமான்னா அப்படித்தான்னு அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னான்.. உள்ளுக்குள்ள கூசிச்சு.. துரைக்காக பொறுத்துகிட்டேன்.
கடைசி நாளனைக்கு டைரக்டர் பச்சையாவே என்கிட்ட கேட்டுட்டாரு.. எனக்கு அழுகையா வந்திருச்சு.. என் அம்மா ஞாவகம் வந்திச்சு.. என் முவத்தை பாத்தவரு.. ஏதும் பேசாம.. போயிட்டாரு. அதுக்கு அப்புறம் என் கிட்ட எறிஞ்சு, எறிஞ்சு விழுந்தாரு.. ஏன்னே தெரியல.. எல்லாத்தையும் விட்டு ஓடிடலாமான்னு நினைச்சா துரைய பாக்க பாவமாயிருந்தது. இதோட கடைசின்னு முடிவு பண்ணி பல்லை கடிச்சிட்டு நடிச்சேன்.. ரமேஷ் சார் தான் பாவம்.. டைரக்டர் கிட்ட நிறைய திட்டு வாங்கினாரு..
இதுக்கு பொறவு நான் நடிக்க மாட்டேன் சொன்ன போது தான் துரை என்னை மொத, மொதலா அடிச்சிட்டான். உள் கன்னத்துல பல்லு பட்டு ஒரே ரத்தம். ரண்டு ரோஜூ நான் அவனோட பேசல.. சூட்டிங் போய் வந்த காசுல ஒரு அஞ்சு நா ஓடிச்சி., திரும்பவும் கையில காசில்லாம அலைய ஆரம்பிச்சோம். அந்த நேரத்திலதான் மறுபடியும் அந்த படத்து டைரக்டர் கூப்ட்டு அனுப்சாரு..
”தபாரு.. வயசிருக்கும் போதே எல்லாத்தையும் பார்த்தாத்தான் உனக்கும் நாலு படம் கிடைக்கும், சும்மா அது, இதுன்னு பேசினேன்னு வச்சிக்க நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்க்க வேண்டியதுதான்.”ன்னுனார் டைரக்டர். இதை பேசும் போதும் என் மாரை பாத்துக்கிட்டேதான் பேசுனாரு. யாராச்சும் முதுகு பக்கம் உத்து பாத்தாலே எனக்கு உள்ளுக்குள்ள உறுத்தும். துரைய பாத்தேன். அவன் டைரக்டர பாத்து வழிஞ்சிட்டு சிரிச்ச மாறி இருந்திச்சு. “நான் சொல்லி கூட்டியாறேன் சார்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு என் கையை பிடித்து வெளியே வந்து லிப்டில்.. என்னிடம் “அவரு சொன்னது புரிஞ்சுது இல்ல..?” என்றான்.
“என்ன இவன்.. புரிஞ்சிட்டுதான் சொல்றானா..? கட்டின புருஷனே இன்னொருத்தனோட படுக்க சொல்றது என்ன அநியாயம்..?” ன்னு கோபம்..கோபமா வந்திச்சு... எதுவும் பேசாம வீட்டுக்கு வ்ந்திட்டோம்.. வந்து சாப்டவுடனே.. பெட்ல வந்து என் பக்கத்துல படுத்துக்கிட்டு என்னை கட்டிகிட்டான். மெதுவா என் கன்னத்துல முத்தம் கொடுத்தான். அவன் முகத்தில அவனுக்கு ”ஏங்காவாலி”ன்னு புரிஞ்சிச்சி.. அவன் கேட்ட கேள்விக்கு அவன் மேல கோபம் இருந்தாலும், என்னால துரைக்கு முடியாதுன்னு சொல்ல முடியாது. அவன் முடிக்கிற வரைக்கு படுத்திருந்தேன்.. எல்லாம் துரைக்காக..
அன்னைக்கு துரை ரொம்பவே முரட்டுதனமா இருந்தான். வேர்த்து முடிஞ்சி பக்கத்தில படுத்தப்ப.. “இப்ப என்கூட படுத்தப்ப... இருந்தியே அதேபோல டைரக்டர் கூட படுத்தேன்னா என்ன குறைஞ்சா போயிருவே..?”ன்னு கேட்டதும். எனக்கு அழுகை அழுகையா வந்திச்சு. அவன் சீரியஸ்சதான் பேசுறான்றது புரிஞ்சிச்சு.. எனனை லவ் பண்ணின துரையா இப்படி பேசுறான்னு தோணிச்சு. ஓன்னு வாய் விட்டு அழுதேன். கோவத்துல ”ஒரேய்.. தொங்கனா கொடுக்கா. கட்டின நீயே கூட்டி கொடுக்கிறீயே.. உனக்கு வெக்கமாயில்லை..”ன்னு கத்தி அவனை அடிச்சேன். கத்தினேன். ஆர்பாட்டம் பண்ணேன். துரை எல்லாத்துக்கு அமைதியாவே இருந்தான். ஓஞ்சு போய் உக்காந்தப்ப.. “ நல்லா யோசிச்சு பாரு.. எனக்கோ படிப்பில்ல.. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு நல்லா வாழ்றதுங்கறது அவ்வளவு ஈஸியில்ல.. சான்ஸு வருது. இன்னைக்கு என்கூட படுக்கிறதுக்கு உனக்கு இஷ்டமில்லைன்னாலும்.. கண்ணை மூடிட்டு படுத்தேயில்ல அதே போல அவன் கூட படுத்தா.. சான்ஸுக்கு சான்ஸு.. பணத்துக்கு பணம்.. ஒரு வாட்டி.. எனக்காக ஒருவாட்டி.. அதுக்கப்புறம் வாணாம்.. நாம செட்டில் ஆவணும் ராஜீ.. ஒரு நாலு படம் பண்ணிட்டன்னு வச்சிக்க.. அப்புறம் நம்மள எல்லாம் தலைல தூக்கி வச்சு ஆடுவாங்க.. வசதியா ஊரை சுத்திட்டேன்.. என்னால கஷ்டப்பட முடியாது..மூட்டை தூக்கியாவது காப்பாத்துறேன்னு சொல்றது சினிமால வேணும்னா நல்லாருக்கும் நிசத்துக்கு ஆவாது.. ஒருவாட்டி.. ஒரே ஒரு வாட்டி”னு கெஞ்சினான். துரையோட நிஜ முக தெரிஞ்சிச்சி..
எனக்கு அவன் சொல்றது புரிஞ்சிச்சி.. அவனால கஷ்டப்பட முடியாது. அப்படியே அவ்னை தள்ளிவிட்டுட்டு ஊருக்கே திரும்ப போலாமான்னு தோணிச்சு.. போனா.. மறுபடியும் அம்மாவுக்கு கிடைசச் பேருதான் எனக்கு கிடைக்கும். அங்க போய் பேர் கெட்டு.. அம்மா தொழிலையே செய்யறதுக்கு.. இங்க புருசன் ஹெல்போட செய்யப்போறேன். அவ்வளவுதான். அதிலேர்ந்து வெளிய வரணும்னுதான் நான் துரைனி லவ் பண்ணினேன். தேவுடு சித்தம்.ன்னு நினைச்சிகிட்டு.. கால் மனசா சரின்னு சொன்னேன். அப்படி சொன்னாலும்.. மனசுக்குள்ள அழுகை, அழுகையா வந்திச்சு.. இதுவரைக்கு துரை தவிர யாரும் என்னை தொட்டது கூட கிடையாது. நிசங்கா.. நா மீது ஒட்டு.. அம்மாவுக்கு தெரிஞ்சவங்க பதிமூணு வயசில என்னை கூப்ட போது கூட நா முடியாதுன்னு சொன்னவ.. இன்னைக்கு துரைக்காக..
டைரக்டர் ரொமப் லவ் ஆளு.. பாட்டு பாடுனாரு.. ஒரு க்ளாஸுல பீரை ஊத்தி எனக்கு ஊட்டி விட்டாரு... ஓரே கசப்பு.. சில்லுன்னு உள்ளுக்குள்ள இறங்கிச்சு.. சாப்டான ஆளு.. மொதல்ல அவரு தொடும் போது, கூசிச்சி.. துரை ஞாபகம் வந்திச்சு.. இன்னொரு க்ளாஸ் பீரை குடிச்சதும்.. கொஞ்சம் கிரக்கமா இருந்திச்சு.. அதுக்கு அப்புறம்.. கூச்சம் குறைஞ்சிச்சு.. இன்னொரு க்ளாஸ்.. க்ளாஸ்... க்ளாஸ் என்று கூச்சம் எனக்கு குறைய.. குறைய.... டைரக்டர்க்கு வெறி பிடிச்சு.. புரட்டி எடுக்க. அடுத்த படத்துல செகண்ட் ஹீரோயின் சான்சு தரதா சொல்லி, இருபதாயிரம் பணம் கொடுத்தார். ”அடுத்த வாரம் புரொடியூசர் வர்றாரு வந்து ஒரு வாட்டி பாத்துரு”ன்னாரு.. துரைக்கு ஒரே சந்தோசம்.. வெளியே வரும் போது ரமேஷ் சார் பக்கத்து ரூமிலேர்ந்து வெளியே வ்ந்தாரூ.. என்னை பார்த்தாரூ.. தெரியாத மாதிரி போயிட்டார். எனக்கு ஒரு மாதிரியா இருந்திச்சு..
அனனிக்கு பூரா துரை என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துகிட்டே இருந்தான். வீட்டுலேயே பீர் வாங்கி வந்து குடிச்சான்.. என்னை பார்த்து குடிக்க்றியானு கேட்டான். நான் வேணாம்னு சொல்லிட்டேன். என் பதிலுக்கு எதிர்பாக்காம கடகடன்னு குடிச்சான். ரொம்ப சந்தோஷமாயிருந்தான்.. அவன் சந்தோஷமா இருக்கிறதுக்கு எது வேணும்னாலு செய்யலாம்னு தோணிச்சு. அவன் என்னை யூஸ் பண்றானோன்னு கூட தோணிச்சு... உடம்பு வலிச்சுது.. இப்ப கூட கெட்டுறல.. ராஜீ.. போயிருன்னு மனசு சொல்லிச்சு.. ஆனா எல்லாம் என் துரைக்காகத்தானே...
அடுத்த நாள் ரமேஷ் சார்.. என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில வந்து பார்த்தாரூ.. ஏதுவும் கேட்கல.. ஆனா நானா சொன்னேன். டைரக்டர் அடுத்த படத்துல செகண்ட் ஹீரோயின் கேரக்டர் தர்றேன்னு சொன்னதை.. சிரிச்சாரூ.. நீ இத்தோட அஞ்சாவது செகண்ட் ஹீரோயின்னாரு.. எனக்கு தூக்கி வாரி போட்டிச்சு.. அன்னைக்கு உன்னை கூட்டி வந்தது யாருன்னு கேட்டாரூ.. அது என் மாமான்னதும் சிரிச்சாரு.. நான் தயங்கி என் வீட்டுக்காரர்ன்னு சொன்னேன். வேணாம்னு சொல்லல எடுத்தவுடனேயே இதுல மாட்டின சீரழிச்சுருவாங்க.. ராஜீ.. ஏதாவது வேலை வெட்டி பாக்க சொல்லு உன் புருசனை.. இதுல சம்பாரிச்சு பழகிட்டான்னா.. உனக்கு இதிலேர்ந்து வெளிய வர விடவே மாட்டான். உன் வீட்டுகாரருக்கு டிரைவிங் வேலை தெரிஞ்சா சொல்லு.. எனக்கு தெரிஞ்ச டிராவல்ஸுல வேலை வாங்கி தர்றேன்னு சொன்னாரு.. சொல்லிட்டு ஏன் இவ்வளவு பேர்ல உன் கிட்ட மட்டும் இன்வால்வ்மெண்டுன்னு புரியல..ன்னு எம் கண்ணை பார்த்து சொல்லிட்டு போயிட்டாரு.. டைரக்டர் நாங்க பேசுறத பாத்து அவரை தாண்டி போன ரமேஷ் சாரை கூப்ட்டு கோபமா பேசினாரு.. ரமேஷ் சார்..தலைகுனிஞ்சியிருக்க, திடீர்னு அவரு கையில இருந்த பேப்பர் பேடை எல்லாம் டைரக்டர் பக்கத்தில வச்சிட்டு.. அங்கிருந்து ஒரு மாதிரியா என்னை பார்த்துட்டு வெளியே போயிட்டாரூ. அவரு என்னை லவ் ப்ண்ணுறாறோன்னு தோணிச்சு. அதுக்கு அப்புறம் அவரு சூட்டிங்கிக்கு வரவேயில்லை.
துரைகிட்ட வேலை பத்தி சொன்னதும் விழுந்து, விழுந்து சிரிச்சான். ”நாம நினைச்சா இன்னும் ஒரு வருசத்துல பத்து காருக்கு டிரைவர் போடலாம்.. காரியம் கைகூடுறப்போ இந்த மாதிரியெல்லாம் எவனாவது எதையாவது சொல்லிட்டுதானிருப்பான்.”
ரமேஷ் சாரை யாரோன்னு துரை சொன்னது வருத்தமாயிருந்தது. அவர்தானே என்னை முதல்ல செலக்ட் செஞ்சாரு.. துரை அதுக்குள்ள மற்ந்துருச்சேன்னு வருத்தமாயிருந்தது.
கையில கிடச்ச காசுல தனியா சாலிக்கிராமத்துல வீடு எடுத்து, தினம் ஒரு ப்ரோடியூசர், டைரக்டர்னு போட்டோ எடுத்துட்டு துரை அலைய ஆரம்பிச்சான். ஒன்னு ரெண்டு படத்துல ஹீரோயின் ப்ரெண்டு, கல்யாண பெண் சிநேகிதின்னு சான்ஸ் வரத்தான் செஞ்சிச்சு.. நடிச்சதுக்கு பணம் வாங்கினதைவிட, படுத்ததுக்கு வாங்கினதுதான் ஜாஸ்தி.. ஒவ்வொரு வாட்டியும் இத்தோட லாஸ்டு.. இத்தோட லாஸ்டுன்னுதான் சொல்லுவான். இப்பெல்லாம் துரை என் கிட்டயே வரதில்லை. ஆனா எனக்கொன்னுன்னா துடிச்சிருவான். ரமேஷ் சார் சொன்ன மாரி.. முத டைரக்டர் சொன்ன படத்துல செகண்டு ஈரோயினின்னு சொன்னது டுபாக்கூர்னு தெரிஞ்சிருச்சு.. அவர் கிட்ட கேட்டேன். எப்ப சொன்னேன்னார்.. தொங்க சச்சினோடான்னு மனசுக்குள்ள திட்டிட்டு வந்திட்டேன்.
எனக்கு இப்ப சினிமா புரிஞ்சிருச்சு.. துரை இல்லாமயே ஷூட்டிங் போக ஆரம்பிச்சிட்டேன். கையில ஓரளவுக்கு காசு தேற ஆரம்பிசிருச்சு.. டைரக்டரோ.. புரோடியூசரோ.. பாக்கிற பர்வையிலேயே அவங்களுக்கு என்ன் தேவைன்னு எனக்கு தெரிஞ்சிரும். ஒரு ரோஜூ உடம்புக்கு முடியல.. யாரோ புரொடியூசரை பாக்கணும்னு சொன்னான். முடியல வேணாம்னு சொன்னேன்.. நம்ம கிட்ட தான் காசு கொஞ்சம் இருக்கு.. வேற வேலை பாக்காலாமே.. எதாவது கடை கிடை போட்டுக்கலாம்னு சொன்னதுக்கு.. இப்பதான் வாழ்கையில சந்தோஷமா இருக்கேன். அது ஒனக்கு பொறுக்கலையான்னு கேட்டான். எனக்கு புரிஞ்சி போச்சு.. இனி இவன் நம்மள வச்சுதான் பொழைகக் போறான்னு.. கோவம் வந்திச்சு.. ஆனா அவனை விட்டு பிரிய முடியல.. ஏன்னே தெரியல.. சில சமயத்துல் இந்த மாரி வலிக்க, வலிக்க, அடங்கிட்டுருக்கிறது கூட ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்குன்னு தோணுது.. எல்லாம் என் துரைக்காகத்தானே..
ஒரு நாள் ஷூட்டிங் கேன்சலாகி கூட்டிட்டு போறதுக்கு துரைக்கு போன் பண்ணேன். எடுக்கவேயில்ல.. சரின்னு யூனிட் கார்லேயே கிளம்பி வீட்டுக்கு போனப்ப.. ஆடிப்போயிட்டேன். ரூமில துரையும், வீட்டுகார அம்மா பொண்ணும்.. ஒட்டு துணியில்லாம செஞ்சிட்டுருந்தாங்க.. சத்தம் கேட்டு திரும்புனவன்.. எதுவும் நடக்காத மாதிரி.. அந்த பொண்ணை அனுப்பிச்சிட்டு.. பதட்டமேயில்லாம லுங்கிய கட்டிட்டு வந்தான். என் கண்ணுல தண்ணி வ்ந்திட்டேயிருந்தது. உள்ளுக்குள்ள அவன் எனக்கு செஞ்ச துரோகம் புரியவேயில்லை. அப்படியே அவன் தலை முடிய பிடிச்சி இழுத்து உலுக்கினேன். ”எந்துக்குரா.. எந்துக்குரா.. இலா சேசாவூ.. “ன்னு வெறிபிடிச்ச மாதிரி அவனை அடிச்சேன்.. ”நூகோசம்.. அன்னி நூகோசம்.. உனக்காத்தானே.. இப்படியெல்லம் சம்பாரிக்கிறேன். எனக்கு நீ இப்படி பண்ணலாமா..?னு கேட்டேன். அவன் அப்படியே பதில் சொல்லாம கூட விட்டிருந்தா பரவாயில்லை. நேரே என்னை பாத்து “உன் கூட படுத்தா.. எனக்கு அயிட்டம் கிட்ட படுக்கிற மாரி இருக்கு.. எவ்வளவு நாள்தான் .. அதனாலதான்.. நான் அவளை கட்டிக்க போறேன்னான்.” எனக்கு அப்படியே துர்கம்மா போல ஆவேசம் வந்திச்சு பாருங்க அப்படி ஒரு ஆவேசம் எங்கிருந்து வந்திச்சினே தெரியல.. துரையோட சந்தோஷத்துக்காக.. அவன் கஷ்டபடக்கூடாதுங்கிறதுக்காக,னு எல்லாத்தையும் அவனுக்காகவே செஞ்சி இப்ப வேற ஒருத்திய கட்டிக்க போறேன்ன் சொன்னத கேட்டவுடனே.. பக்கத்து டேபிள் மேல இருந்த கத்திய எடுத்து அவனோடத பிடிச்சி அழுத்திட்டே.. “இது இருக்கிறதுனாலதானே.. இவ்வளவு திமிரா பேசினே..ன்னு கத்திட்டே.. சர..சர.. சர...ன்னு அறுத்திட்டேன்.. ரூம் பூரா உடைச்ச பைப்லேர்ந்து வர்றா மாதிரி ரத்தம் பீச்சிச்சி.. என் மூஞ்சி.. உடம்பு, மாரூ.. இடுப்பு எல்லா இடத்திலேயும்..அவன் துடிச்சி.. துடிச்சி.. மயங்கி செத்ததை பாத்துகிட்டேயிருந்தேன்... கொஞ்சம் சுதந்திரமாவும் எனக்கு தோணிச்சு.கொல கேசாயிருச்சு.. கேஸுக்கு வக்கீல் வைக்க, கொள்ளன்னு ஹெல்ப் வேணுமில்ல.. யாராச்சும் தெரிஞ்சவங்க இருந்தா கூப்பிடுன்னு சொன்னாங்க்.. எனக்கு தெரிஞ்சி இங்க எனக்கு உதவுறதுக்கு உங்கள விட்ட யாரும் தெரியாது. இஷ்டமிருந்தா உதவி செய்ங்க.. இல்லேன்னா தேவுடு சித்தம்..னு சொன்னவுடனே.. ரமேஷ் சார். என் கைய அழுத்தி பிடிச்சாரூ.. கண்ணு கலங்கி இருந்தது.. அவரு பிடியில ஒரு நம்பகம் ஒச்சிந்தி. எனக்கென்னவோ ரமேஷ் சார் இப்பவும் என்னை லவ் பண்றாரூன்னு தோணுது. அன்னி தேவுடு சித்தம்..
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..











