2012-(2009)
2009 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு கோல் மைனில் சாய்ராம் என்ற இந்தியர் ஒருவர் உலகம் அழியப்போகிறது என்பதை தன் நண்பரான ஒரு கருப்பரிடம் சொல்கிறார். அவர் உடனடியாய் ஆம்னிபஸ் பிடித்து ஊருக்கு போவது போல் அமெரிக்கா போய் உடனடியாய் விஷயத்தை சொல்ல, பேச ஆரம்பிக்கிறார்கள். இதற்கு நடுவில் சைனாவில் அணை கட்ட ஆள் எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலகில் முக்கியமான ஆட்கள் எலலாம் செத்து போகிறார்கள். என்று ஆரம்பிக்கும் பில்டப்.. மெதுவாய் சூடேறி.. சூடேறி.. பூமி வெப்பமடைந்து வெடிக்க கிளம்புவது போல் கதையும் பரபரவென வெடிக்க ஆரம்பிக்க.. ஆரம்பிக்கிறது விஷுவல் ஆர்ப்பாட்டம்.
இம்மாதிரியான டிஸ்ஸாஸ்டர் படங்களுக்கு எல்லாம் ஒரு விதமான டெம்ப்ளேட் திரைககதை ரெடியாய் இருக்கும். எப்படியென்றால் ஹீரோ ஒரு சாதாரணன் ஆனால் புத்திசாலி, அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி வேறு ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருப்பாள், ஹீரோவுக்கு பிறந்த பிள்ளைகளில் ஒரு ஆணும், ஒரு பெண் குழந்தையும் நிச்சயம் உண்டு, பெண் குழந்தை அழகாய் க்யூட்டாய் இருப்பது அவசியம். வீக் எண்ட் பார்ட்டிக்கோ, அல்லது டூருக்கோ அவர்களை கூட்டி போகும் போதுதான் இம்மாதிரியான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும், உடனே தன் குழந்தைகளை காப்பாற்ற, இயற்கையை எதிர்த்து போராடுவான், ஹீரோவின் பையனுக்கும், அவனுக்கு ஒரு சின்ன முரண் இருக்க வேண்டும், அப்போதுதான் க்ளைமாக்ஸில் தன் தகப்பனுக்காக அவன் ரிஸ்கை ரஸ்குபோல் நினைத்து அப்பாவுடன் சாகசம் செய்ய முடியும்.
இதற்கிடையில் நிச்சயமாய் ஒரு கறுப்பினர் ஒருவர் உயிர் தியாகம் செய்ய வேண்டும், பழைய மனைவியுடன் மீண்டும் காதல் துளீர்க்க, புதிய கணவன் விளக்கு பிடிக்காத குறையாய் பார்த்து கொண்டு நிற்பது, படத்தில் முக்கிய கதபாத்திரம் மனித நேயத்தை வலியுறுத்தும் ஆளாய் அவ்வப்போது அவருக்கு ஒரு செண்டிமெண்ட் காட்சி, இதற்கு நடுவில் பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்பதை சொல்ல ஒரு கேரக்டர் கடைசியில் மனிதம் தான் பெரிது என்பதை மகக்ளுக்கு விளக்க, சாவது. க்ளைமாக்ஸில் பத்து நிமிஷம் தான் இருக்குன்னு டைமரை போட்டு காட்டிவிட்டு அரை மணி நேரம் ஒரே ஆக்ஷனும், செண்டிமெடுமாய் ஆளாளுக்கு கட்டி பிடித்து அழுவதும், முத்தமிட்டு கொள்வதும் நடக்க, சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போகும் என்று நினைக்கும்படியான ஒரு சின்ன ஸ்கேல் போன்ற ஒன்றினால் மிகப்ப்பெரிய பிரச்சனை இருக்க, ஹீரோ சென்று காப்பாற்றி எல்லாம் சுகமே.
இதையெல்லாம் விடுங்க.. எப்படி நம்ம பட ஹீரோக்களுக்கு சண்டையில அடியே படாதோ அது போல கரெக்டா அவரு நவுந்தப்புறம் பூமி ரெண்டா பொளக்குது,ன்னு தெரியல.? மேலே சொன்ன எல்லா விஷய்ங்களும் ஆர்டர்படி முறையே வருகிறது. க்ளமாக்ஸில் மூன்று ஸ்பேஸ்ஷிப்பில் ஒரு ஷிப் மட்டும் பிச்சிட்டு போய்டுது.. ஆனா க்ளமாக்ஸில் மூணும் ஒண்ணா இருக்கு. வழக்கமா செத்து போற கருப்பினர் குரூப்பில் ஒருத்தரா இருப்பாரு.. இதில அமெரிக்கன் ப்ரெசிடெண்ட்..
ஆனால் இதுவெல்லாம் என்னன்னு யோசிக்கக்கூட முடியாம ஒரு விஷுவல் அட்டகாசம் பண்ணியிருக்கங்க பாருங்க. அங்கதான் நிக்கிறான் வெள்ளைக்காரன். பெரிய திரையில் மட்டுமே பார்த்து வாய் பிளக்க கூடிய விஷுவல். ஊரே தொபுக்கடீர்ன்னு பூமிக்குள்ள போறதும், சீட்டு கட்டை போல மகா கட்டடஙக்ள் எலலாம் சாஞ்சி பூமியில் போவதும், கடலும் அது பொங்குவது, என்று அட்டகாசம். க்ளைமாக்ஸ் சுனாமி காட்சியெல்லாம் சில ஷாட்டுகளில் நம்ம தசாவதாரத்தை மிஞ்ச முடியவில்லை.
2012- உலகம் அழிய போவுது உடனே பாத்துருங்க..
டிஸ்கி:
நேற்று தமிழகம் எங்கும் சூப்பர்ஸ்டார் படங்களுக்கு எப்படி ஓப்பனிங் இருக்குமோ அப்படி ஒரு ஓப்பனிங். சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களையும் சேர்த்து சுமாராக 20 தியேட்டர்களுக்கு மேல் த்மிழிலும், ஆங்கிலத்திலும் ரிலீஸ். எல்லா தியேட்ட்ர்களிலும் ஆல்மோஸ்ட் புல்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இன்று நான் சத்யம் திரை அரங்கில் இந்த படத்தை பார்க்க உள்ளேன்........
விமர்சனத்திற்கு நன்றி...........
இன்று நான் சத்யம் திரை அரங்கில் இந்த படத்தை பார்க்க உள்ளேன்........
விமர்சனத்திற்கு நன்றி.......//
நன்றி ஊடகன்.. மாலை பதிவர் சந்திப்புக்கும் ஒரு எட்டு எட்டி பார்த்து போகவும்..உங்களை எதிர்பார்க்கிறேன்.
(கலந்துக்க முடியலையேங்கற சின்ன வயித்தெரிச்சலுடன்)
நானும் ஒரு உலக படத்துக்கு விமர்சனம் பண்ணிருக்கேன் முடிஞ்சா படிங்க தல..
பிச்சிகிட்டு போனதை ரிவர்ஸ் எடுக்கறதை காட்டுறாங்களே கேபிள். அது ரிவர்ஸ்ல.. திரும்ப அவ்ளோ தூரம் போறதை காட்டினா.. விடிஞ்சிடாது? :) :)
அது இல்லாம.... 27 நாள் கழிச்சின்னுதான் சப்டைட்டில் போடுவாங்க. 27 நாளுக்குள்ள கண்டு பிடிச்சிகிட்டாங்கன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்! :)
=========
சதீஷ்குமாரை கேட்டேன்னு சொல்லுங்க.. கேபிள் & தண்டோரா...!
தூங்கி எழுந்திட்டா.... கண்டிப்பா கால் பண்ணுறேன்.
//
கரெக்ட்ஆ சொன்னிங்க தலைவரே...
ஆனால் இந்த காட்சியில் தான்
தியேட்டரில் செம கைதட்டு
இன்றைய பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்..
சரியா சொண்ணீங்க தலைவா
thalaivare..இது உங்களூக்கே அநியாயமா தெரியல.. உலகம் பூரா நேத்துதான் ரிலீஸ் ஆயிருக்கு..:(
கேபிளார் என்னாதான் "கமல்தாசனோட" ரசிகர்னாலும் இது எல்லாம் ரெம்ப ஓவருங்கோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மத்தபடி கிராஃபிக்ஸ் கலக்கலுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்....
படதுல எனக்கு புடுச்ச ஒரு கேரக்டர் யாருனா? அது ஓயாம ரேடியோல பேசிட்டு இருப்பாரே அவர்தான், சாவ பற்றி கவலைப்படாத ஒரு கலைஞன். சூப்பர்! மத்தபடி படம் எதிர்பர்ப்பை மிக சரியாக ஈடு செய்திருக்கிறது.
படம் பாத்துட்டு கொல்றேன் சாரி சொல்றேன். மத்தபடி விமர்சனம் சூப்பரு தலைவரே. முக்கியமா அந்த டெம்ப்ளேட் கதை. வெள்ளக்காரன் பல்ஸ கரெக்டா நாடி புடிச்சிறிக்கீங்க. குட்.
படம் நானும் பார்த்தேன். கடைசியில் கப்பல்கள் விசயத்தில் குழப்பங்கள் எழவில்லை. நீங்கள் குழப்பிவிட்டீர்கள். திரும்பவும் பாக்கனும்.
அண்ணன் தண்டோரா சொன்னது போல சந்திப்பு கண்டிப்பா நடக்கனும். இப்போ லேசா தூர ஆரம்பித்துவிட்டது. என்னதான் புயலே அடித்தாலும் கூட நான் கண்டிப்பா வந்துவிடுவேன். நீங்களும் வந்துவிடுங்கள்.
போன வாரம் நாம்தான் மழையென்று இருந்துவிட்டோம். கேணி கூட்டமெல்லாம் வழக்கம்போல நடந்ததாம். ஒரு பிரபலம் சொன்னார்...
தைரியமாக இருக்கவும்...
அடாத மழையில் விடாது சந்திப்பு நடக்க வாழ்த்துக்கள். ஹ ஹ ஹா.
ஹஸன் ராஜா.
மனம் தளராதீர்கள்.
ஹஸன்..
ரொம்ப வருத்தம் அண்ணா... ஆழ்ந்த அனுதாபங்கள்.....
அப்பாவுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....
நேற்று இரவு காட்சிக்கு படத்துக்கு போனேன் அரங்கம் நிறைந்த் காட்சியை பார்த்தவுடன் ஒன்னு தோனுச்சு உலகம் அழியரத பார்க்க என்னை போல் எல்லோருக்கும் ஆசை இருக்கும் போல.உங்கள் விமர்சனம் 100 க்கு 100 உன்மை.எனக்கு படத்துல பிடிக்காத முதல் விசயம் அமெரிக்க பிரசிடண்ட்டாக வரும் அந்த கதாபாத்திரம் பின் அவருடைய காஸ்டூயும் ஏதோ அமெரிக்காவில் வேலை இழந்தவன் போல். என்ன கொடுமை என்றால் Hollywoodடும் அரசியல்வாதிக்கு சொம்பு அடிக்க்ராங்க ஓபாமா ஒரு கருப்பர் என்பதர்க்காக படத்திலும் ஒரு தியாகமே மொத்த உருவம் போல் ஒரு கருப்பர். எப்படி கலைஞர் தசாவதாரத்தில் வந்தார்ரோ, எல்லா இடத்திலும் அரசியல்வாதிக்கு ஆயில் போடுர பாலிசி இருக்கு.
நன்றி
எனது ஆழ்ந்த இரங்கல்கள் சங்கர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.
ஆழந்த இரங்கல்கள் அண்ணா..
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
தங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றேன் நண்பரே.
- ஊடகன்
கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் துக்கத்தில் நானும் பங்கேற்றுக்கொள்கின்றேன். தைரியமாக இருங்கள் சங்கர்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
-senthil.g,tiruppur
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-Karthik. US.
டெம்ப்ளேட் படங்கள்... அருமையான கண்ணோட்டம்.
ஆமாம், அது என்ன திடீரென்று கமெண்ட் மாட்ரேஷன் ஓடுகிறது... யாராவது தாக்குதல் ஆரம்பித்து விட்டார்களா, உங்கள் தளத்திலும் :) ???
ரஃபிக் ராஜா
காமிக்கியல்