அடித்து பிடித்து எழுந்தேன். மணி ஆறு ஆகியிருந்தது. எழுந்த வேகத்தில் பக்கத்தில் படுத்திருந்த கேட்டியை உலுக்கி..” ஏய்.. கேட்டி.. கேட்டி.. வேக் அப்” என்று திரும்ப, திரும்ப உலுக்க, கேட்டி மிகுந்த அயர்ச்சியுடன் எழ, உடலில் பொட்டு துணி கூட இல்லாமல் ஷாம்பெயின் மார்பகத்துடன் நின்று..
”வாட்ஸப்.. விசு.. ஏன் இப்படி அதிகாலையில் எழுப்புகிறாய். ஐயாம் டாம் டயர்ட்.. நேற்று நீ ரொம்பவே வேகம்.. நாளை என்பதே இல்லை என்பதை போல..:” என்று தூக்க கலக்கத்தில் அவள் கையை ஆட்டி, ஆட்டி பேசும் போது, லேசாய் அதிர்ந்த மார்பகங்களை பார்க்க, பார்க்க உடல் வெப்பமானது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை.
“என்னை பொருத்த வரை இன்னும் 15 நாளுக்கு நாளை என்பது இல்லை தான். கமான் குவிக்.. நான் உடனே எர்போர்ட் போகவேண்டும்,” என்று சொல்லிக் கொண்டே நிர்வாணமாய் எழுந்து சரக்கென்று என்னுடய ஜாக்கியை தேடி இழுத்து விட்டுக் கொண்டே ஜீன்ஸை மாட்டிக் கொண்டு, “கேட்டி ஹனி.. ஒரு உதவி.. இங்கேயிருக்கும் பியர் பாட்டிலகளையும், காண்டம் குப்பைகளையும், எடுத்து வெளியே எறிந்துவிட்டு, பார்த்தால் ஒரு கன்னி கழியாத இந்திய பாச்சுலர் அறை போல மாற்றி விட்டு போகிறாயா.? ஐ காட் எ விசிட்டர் ப்ரம் இண்டியா.. ? ஹோலி மேன் என்று அவளை இறுக அணைத்து முத்தமிட்டுவிட்டு “ மறக்காமல் உடை மாட்டி கிளம்பு”
“நிச்சயம்.. போன முறை போல் நடக்காது.. பை டேக் கேர்..” அவள் வழியனுப்ப பை சொன்ன நேரத்தில் என்னுடய கார் ஹைவேயில் வழுக்கிக் கொண்டிருந்தது.
பதினைந்து நாள சைவ சமய சொற்பொழி செய்ய ஆதீனம் அமெரிக்கா வருவதாகவும், அவரை வீட்டில் தங்க வைத்து மரியாதை செய்து அனுப்பும் படி அப்பா உத்தரவு. கிராமத்து கோயில் பூசாரியான அப்பாவுக்கு குல சாமியே ஆதீனம்தான். ஆனால் அவர் இது வரை ஆதினத்தின் மடத்தின் வாசல் வரை தான் அனுமதிக்கபட்டிருக்கிறார். அப்பாவே நெருங்க முடியாத ஆதீனம் இன்று முதல் தன்னோடு இருக்க போவதை நினைத்து, உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டேன்.
வீட்டில் என்னை இன்னமும் அதே தேவாரம், திருவாசகம் படித்தவனாகவே பாவிக்க, நடித்து கொண்டிருப்பது ஒரு ஓரத்தில் குற்ற உணர்வு மேலோங்கினாலும், அமெரிக்காவின் விஸ்தீரணமும், அதன் கவர்ச்சியின் ஆக்கிரமிப்பும், என்னை விழுங்கி வருடங்களாகிவிட்ட நிலையில் பணமும் அது தரும் போதையும், சுகமும் பழகிவிட்டது.
ஏர்போர்ட் சேர எட்டு மணியாகிவிட்டது. பார்க்கிங் தேடி காரை வைத்துவிட்டு, உள்ளே போகவும், காவி வேட்டி ஆதீனம் வரவும் சரியாய் இருக்க, அமெரிக்க வழக்கப்படி கையை உயர தூக்கி ‘ஹாய்” என்பது போல் சைகை செய்துவிட்டு, சட்டென குழப்பமாகி ஹாய் சொல்வதா.. வணக்கம் சொல்வதா என்று யோசித்திருக்கும் நேரத்தில் ஆதீனம் அருகே வந்து விட சட்டென அறைகுறையாய் காலில் விழுந்தேன்.
வெளியே ஜெர்கினை மீறி குளிர் குத்தியது. வெற்றுடம்பு ஆதினத்துக்காக், எடுத்து வந்திருந்த ஜெர்கினை அவருக்கு கொடுத்து போட சொல்ல.. ஆதீனம் மெதுவாய் சிரித்து “ சிவன் உள்ளிருக்கும் போது குளிர் தெரியாது. இருந்தாலும் கொடு.. உனக்காக..” என்று ஜெர்கினை வாங்கி போடுவதற்கு முன் அதை ஆழ்ந்து முகர்ந்து பார்பதை பார்த்து, “சாமி.. வேறு வழியில்லை என்னுடயது தான் அவசரத்துக்கு வேறு உடனே வாங்க முடியல..” என்றது.. “சேச்சே அதில்லை. நல்ல வாசனை” என்றார். அவர் சிவன் என்று சொன்னதும் வேறு ஞாபகம் வந்தது. ஆம் சிவன் உள்ளிருக்கும் போது குளிர் என்ன எதுவுமே தெரியாதுதான்.
வீட்டிற்குள் அவருக்கான அறையில் எல்லா வசதிகளையும் செய்துவிட்டு, கிளம்ப எத்தனிக்கும் போது சுவாமி :”விசு உனக்கு பெயர் வைத்ததே நான் தான் தெரியுமா.?”
“அப்பா ..சொல்லியிருகார் சாமி”
”உன் அப்பா கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைத்து, அமெரிக்கா வரை உன்னை அனுப்பி நீ உயர எவ்வளவு கஷ்டபட்டிருக்கிறான் தெரியுமா.?” மீண்டும், மீண்டும் பலர் இதையே சொல்லி என்னை கடுப்பேற்றியிருந்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டு கொண்டிருந்தேன்.
“அப்படி கஷ்டபட்டு படித்து அமெரிக்கா வரும் இந்த இளைஞர்கள், பெண் சுகத்துக்கும், போதைக்கும் அடிமையாகி அலைவது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. நீ இன்னும் திருமறை ஓதுறயாமே . அப்பா சொன்னார். தென்னாடுடய சிவன் உன்னை காப்பார்.” என்று ஆசீர்வதிக்க, நான் சிரித்தேன்.
“என்ன விசு சிரிக்கிறாய். ஒரு வேளை அமெரிக்கா உன்னையும் விழுங்கி விட்டதோ.?”
“சேச்சே.. நான் அப்படியில்லை சாமி.. எனக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது.. நான் உண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன். ஆண் நண்பர்களிடம் கூட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாய் இருப்பவன் என்று சொல்லும் போது கேட்டியின் மார்பகம் ஞாபகம் வர, சாமி என்னை உற்று பார்த்து கொண்டேயிருந்தார்.
“நான் உன்னை சந்தேகபடவில்லை.. காமம் கொடியது, அதிலும் பெண் மயக்கம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். பட்டினத்தார் பாடியிருக்கிறார் :” எத்தனை பேர் நட்ட குழி, தொட்ட முலை” தெரியுமல்லவா.. என்னையே எடுத்துக் கொள் பத்து வயதில் இளைய பட்டம் கட்டிக் கொண்டேன். இப்போது என் வயது நாற்பது என்றால் நம்புவாயா..?
பார்பதற்கு என்னை விட இளைமையாக்வே இருந்தார். “காமத்தை வென்றதால் தான் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்.”
”இவர் பேச, பேச என்னுள் கேட்டிக்களும், லிசாக்களும், அம்மணமாய் ஓட, “சாமி. தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒன்று கேட்கிறேன். சாமி என்னையே பார்த்து கொண்டிருக்க, “ பத்து வயசில வேண்டுமானால் காமத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனா வாலிப வயசில பெண் வாடையில்லாவிட்டாலும், உங்களுக்குள் எழும் காமத்தை எப்படி அடக்கினீர்கள்?”
என்றதும் மெல்ல என் அருகில் வந்து தோளை தொட்டு அணைத்தபடி, மெல்ல நடந்து, வீட்டின் பால்கனிக்கு அருகே நின்று, என்னையே பார்க்க, பார்வையின் அர்த்தம் புரியாமல் நான் அதை தவிர்க்க, சாமி ஏதோ சொல்ல வாயெடுக்க, குரல் ஒரு மாதிரி பிசிறடிக்க, தொண்டையை கனைத்து கொண்டு
”உன்னை மாதிரியான இளைஞர்களை பார்க்கும்போது எனக்குள் ஒரு எழுச்சி வரும். அவர்களால் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அது போதும்,” என்றபடி மெல்ல அவர் கை என் ஜீன்ஸின் பின்பக்கத்தை தடவ ஆரம்பிக்க, “ரொம்ப குளிராயிருக்குல்ல” என்ற சாமியின் கண்கள் பளபளவென இருந்தது.

71 comments:
அவனா நீ?
தல,
இப்பதான் ஒருத்தரு “ரூம்மேட்”ன்னு ஒரு கதை எழுதி திடீர்னு ரூம மூடிட்டாரு.அடுத்தது இதுவா?
//அமெரிக்க வழக்கப்படி கையை உயர தூக்கி ‘ஹாய்”/
ரசித்தேன்
கடைசி வரியாக சேர்த்திருக்கலாம்:
“ஐய்யையோ! இன்னும் 15 நாளுக்கு நாளை என்பது இல்லையா” விசு யோ(வி)சித்தான்.
யோசனை:
சுஜாதா நெடியைக் குறைக்கலாமே.
நான் அப்பிடியே ஷ்ஷ்ஷாக்
ஆயிட்டேன்
முடிவை ஒருவாறு எதிர்பார்த்தேன்
என் மனதில் தோன்றுவதை அப்படியே நான் எழுதினால் இந்தக் கதையை எழுதிய உங்களைவிட்டுவிட்டு பின்னூட்டம் போடும் என்னை குறிவைத்து பலர் செயல்பட வாய்ப்பிருப்பதால்....
மீ த எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்
:))
சிவ சிவா.....
sorry to say this
அப்படியே ஆசான் சுஜாதா நடை. மிகவும் ரசித்தேன்
இதென்ன உள் குத்து "சிவன் உள்ளிருக்க குளிராது"
அப்போ சிவலிங்கமும் லுல்லாவும் ஒன்னுங்கறீங்க!!!!!!!!(வடிவத்தில)
ஹே ஹே கவனிங்கப்பா இவரும் ரவுடிதான்!!!!!!!!!!!!!!
//sorry to say this
அப்படியே ஆசான் சுஜாதா நடை. மிகவும் ரசித்தேன்//
No need to be sorry.. :)
//இதென்ன உள் குத்து "சிவன் உள்ளிருக்க குளிராது"//
கஞ்சாவுக்கு சிவன் என்று இன்னொரு அழைக்கும்பெயர் இருக்கிறது சவுத் சைட் ஆட்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
//அப்போ சிவலிங்கமும் லுல்லாவும் ஒன்னுங்கறீங்க!!!!!!!!(வடிவத்தில)
ஹே ஹே கவனிங்கப்பா இவரும் ரவுடிதான்!!!!!!!!!!!!!!//
ஹா.. ஹா.. ஆமா நானும் ரவுடிதான். சுரேஷ். மிக்க நன்றி..
தல,
முடிவு எதிர்பார்தேன்.
அடங்கொக்கமக்கா..இதெல்லாம் ஒரு கதையான்னு.. கவுண்டர் ஸ்டைல்ல கேக்கலாம்.
ராஜேஷ்குமார், கொஞ்சம் பட்டுகோட்டைபிரபாகர், முடிவின் twistல் சுஜாதா or director cable sankar தெரிகிறார்.
கிளைமாக்ஸ் ல அவர் இன்னொறு பொண்ணு மேல கை போடுவார்ன்னு நெனச்சேன் ஆனா விசு மேலையே போடுறாரே.. அங்க கொண்டு போயா ட்விஸ்ட் வைப்பாங்க
இந்த கதை பிடித்திருக்கிறது ((-
கொல்றியேண்ணே...!
தல,
யோசனை -2 (சேர்க்க மறந்துட்டேன்)
இந்த மாதிரி கதையின் முடிவை பாதி பேர்(முக்கால்வாசி?) யூகித்து விடுவார்கள்.முடிவ மாத்திக்கொடுங்க
இல்லேன்னா முடிவ யூகிக்க முடியாதபடிபில்ட்அப் கொடுத்து
இந்த முடிவ கொடுங்க.
ஹே! சேட்டா மனசலாயி?
பஸ் ஸ்டாண்ட் பார்டியா.... கதை அருமை.....
அடங்கொக்க மக்கா...........
katie-ஓகே...
சிவனைத் தவிர்த்திருக்கலாமே...
உண்மையில் கதை நன்றாக இருக்கு நண்பரே..
//உடலில் பொட்டு துணி கூட இல்லாமல் ஷாம்பெயின் மார்பகத்துடன் நின்று..//
//அவள் கையை ஆட்டி, ஆட்டி பேசும் போது, லேசாய் அதிர்ந்த மார்பகங்களை பார்க்க, பார்க்க உடல் வெப்பமானது//
என்ற வசனங்கள் ): ):
//உனக்காக..” என்று ஜெர்கினை வாங்கி போடுவதற்கு முன் அதை ஆழ்ந்து முகர்ந்து பார்பதை பார்த்து//
என்பதிலேயே சாமியார் அந்தமாதிரிஆள் என்பதை அனுமானிக்கமுடிகின்றது.
மொத்தத்தில் கதை நல்லாத்தான் இருக்கு...
அட அப்படியா சேதி?!
//இவர் பேச, பேச என்னுள் கேட்டிக்களும், லிசாக்களும், அம்மணமாய் ஓட//
இந்த வரிக்கு ஒரு சபாஷ்.
மத்தபடி கதையின் நடை அருமை தான். ஆனால் முதல் இரண்டு மூன்று பாராக்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் உங்களிடமிருந்து நிறைய படித்துவிட்டதால் அத்தனை வியப்பாக இல்லை. இந்த கதையை வேறு விதமாக எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து. மேலும் ஒரு ஆண் ஆணுடன் சல்லாபிப்பதும் காமம் தானே? எனிஹவ் கதைக்கரு அருமை.....நடை கூட ஓ.கே. ....பட் ஆவரேஜ் தான்.
மேலும் காமம் என்பதை விட பெண் பித்து என்பதை அழுத்தமாக சொல்லியிருந்தால் இன்னும் கூடுதல் பலமாக இருந்திருக்கும். ஏனென்றால் சாமியார் பெண்களிடமிருந்து தன்னை காப்பாற்றி வைத்திருந்தாலும் ஆண்களிடத்தில் புஸ் ஆகிவிடுகிறார்.
உடனே யாராவது "சாமியார் புஸ் ஆகவில்லை....உஸ் ஆகிவிட்டார்" என்று யாராவது பின்னூட்டம் போடக்கூடும் என்பதால் நானே சொல்லிவிட்டேன் ஹீ ஹீ ஹீ.....
//“காமத்தை வென்றதால் தான் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்.”//
ஏதோ சொல்ல வர போறிங்கன்னு நிமுந்து உக்காந்தா...
நொம்ப கஷ்டம்... ஏமாத்திபுட்டீங்களே
// எம்.எம்.அப்துல்லா said...
என் மனதில் தோன்றுவதை அப்படியே நான் எழுதினால் இந்தக் கதையை எழுதிய உங்களைவிட்டுவிட்டு பின்னூட்டம் போடும் என்னை குறிவைத்து பலர் செயல்பட வாய்ப்பிருப்பதால்....
மீ த எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்//
இப்படியே எஸ்கேப்பாகிக் கொண்டிருக்கும் அப்துல்லா கண்டிக்கப்படுகிறார்.
கேபிள் அண்ணே,
பாதியிலேயே ஒருவழியா யூகிக்க முடிகிறது. ஆனாலும் to be honest, கடைசி வரிகள் ஒரு twist தான்.
உங்க கிட்ட இருந்து நெறய எதிர் பார்க்குறோம்.
நல்ல நடை, ரசித்தேன்! ;)
நல்லாயிருக்கு ஜீ.
நான் கடைசி வரை யூகிக்கவில்லை.
// VISA said.. உடனே யாராவது "சாமியார் புஸ் ஆகவில்லை....உஸ் ஆகிவிட்டார்" //
ரிப்பீட்டு... :)
நல்லா இருக்கு. சாமியாரும் மனுசன் தானே! சரி அத விடுங்க. அப்புறமா கடசில என்ன தான் ஆச்சு??? அத சொல்லுங்க பாஸ்
ஹையா...,
இது என்னோட ஃபேவரிட் நிதர்சனமாயிடுச்சி!! என்ன இது.. நீங்களும்... 18+ எழுத ஆரம்பிச்சிடுவீங்க போல இருக்கே! :) :)
எதோ.. நடக்கப் போவுதுன்னு எதிர்பார்ப்பு இருந்ததே தவிர.. இதை எக்ஸ்பெக்ட் பண்ணலை.
அட்வைஸ் சொல்லி முடியும்னு நினைச்சேன். அல்ட்ரா மார்டனா முடிஞ்சிருக்கு! :)
கலி முத்திடுச்சு
செம கலக்கல் தல .. இதை யாரோ ஒருவரை மனதில் வைத்து எழுதியது மாதிரி இருக்கு.
அடங்கொய்யால! இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ். அந்த ஷாம்பெயின் மேட்டர் சுஜாதாகிட்ட சுட்டதுதான? பட், அதனால என்ன? நல்லாருக்கு. குஜால்டியாவும் இருக்கு.
ஆதினம் ஒரு ”பின்”நவீனத்துவவாதின்னு சொல்லுங்க!
ரொம்ப நல்லாருக்கு
முடிவு நான் எதிர்பார்த்ததுதான்
கதை அருமை.
//வால்பையன் said...
ஆதினம் ஒரு ”பின்”நவீனத்துவவாதின்னு சொல்லுங்க! //
இது தான் வாலோட வால் தனங்கிறது.
சூப்பர் வாலு :-))))
கேபிள்ஜீ, பாலு மகேந்த்ரா இதை குறும்படமாக எடுக்க ஆசைப்படலாம். தலைப்பை பெண்ணாசை கொல் என்று மாற்றினால் கதை முடியும் போது இம்பாக்ட் ஜாஸ்தியாக இருக்கும்!
http://kgjawarlal.wordpress.com
ரைட்டு.....
//ஆதீனம் மெதுவாய் சிரித்து “ சிவன் உள்ளிருக்கும் போது குளிர் தெரியாது. இருந்தாலும் கொடு.. உனக்காக..” என்று ஜெர்கினை வாங்கி போடுவதற்கு முன் அதை ஆழ்ந்து முகர்ந்து பார்பதை பார்த்து, //
ஜீ.. நானும் அதத்தான் நெனச்சேன் .. டீத்தூலு,டோப்பு, மருந்து, பொட்டணம், சிவன்..ன்னு நிறையச்சொல்லுவாங்க ...
["அய்யய்யோ.. நான் நல்லா புள்ள ஜீ.. என் சின்ன வயசுல, எங்கூட்டுக்கு எதுத்தாப்புல ஒரு வீட்டுல ஒரு அண்ணன் இருந்தாப்புல.. அமெரிக்கன் காலேஜ்' ல படிச்சிட்டு இருந்தாப்புல.. நல்லா Intelligent.. ஆனா.. இதுக்கு பழக்கமாயிடாரு.. அவரக்கடசீல மெண்டல் ஆஸ்ப்பத்திரி வண்டி' ல தூக்கி ப்போட்டு கொண்டு போனாங்க.. என்னிக்குமே அதிர்ந்து பேசாத அவரு அன்னிக்கு போட்ட கூச்சல்,. அந்த நேரத்திலையும் என்ன ஒரு ஒழுக்கம் (பேச்சில்).. மானத்த வாங்கிடீங்களே' ன்னு எல்லாரையும் பாத்து ஒரு பார்வை.. அவர்' லாம் அப்படி இருக்க வேண்டிய ஆளே இல்ல ஜீ.. சேது படம்' லாம் உண்மை தான் ஜீ.. மதுரை' ல கொள்ளப்பேர பாக்கலாம்."].
Good One.. Keep Going..
//வால்பையன் said...
ஆதினம் ஒரு ”பின்”நவீனத்துவவாதின்னு சொல்லுங்க!// ஆகா.. ஆகா.. ஆகாகா..இது தான் பின்நவீனத்துவமா.. வால் ஜீ.. அப்படியே இந்த கட்டுடைத்தல்' ன்னு சொல்லுவாய்ங்கள்ள.. அதையும் என்னன்னு சொல்லிர்ரது..
//VISA said...
//இவர் பேச, பேச என்னுள் கேட்டிக்களும், லிசாக்களும், அம்மணமாய் ஓட//
இந்த வரிக்கு ஒரு சபாஷ். //
தெரியாத்தனமா.. லிசா ங்கறத, விசா' ன்னுட்டு.. படிச்சுட்டேன்.. ஹி.. ஹி.. லந்து..
cable sir.. matra nanbargal sonna maari amarar sujatha sir kadha maari thaan eruku.. great work sir.. indha type stories ,kaththi mela nadakara mari.. just miss agierunda vera rangela poirukum.. valarga thangaladhu narpani..
யூத்து
நெறய பேர் நெறய மாதிரி சொல்லிட்டாங்க, எனக்கு கதை ரொம்ப பிடிச்சிருந்தது, என்னால் முடிவை யூகிக்க முடியவில்லை. ஆரம்பம், நடை, ட்விஸ்ட் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்தது.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சிவ சிவா நாராயணா
:))))
படித்தேன், ரசித்தேன் உங்கள் நடையை! ஓரளவு முடிவை ஊகிக்க முடிகிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நல்லா இருக்கு, ஆனா முடிவுதான்...........
@ஸ்ரீ.கிருஷ்ணா
:)
@கே.ரவிஷங்கர்
நன்றி..
முடியல தலைவரே..
@ராஜன் ராதா மனாளன்
நன்றி
@சந்துரு
அப்படியா..???
@எம்.எம்.அப்துல்லா
அது என்னவோ சரிதாண்ணே.. என்னையெ காய்ச்சு எடுத்துருவாங்கன்னு நினைச்சேன்.. அப்படியெலலம் ஒண்ணும் நடக்கல்..:)
@இளவட்டம்
சாமி..கண்ணை குத்திர போவுது.
@காவேரி கணேஷ்
:)
@அசோக்
எதையாவது ஒண்ணை சொல்லுங்க.. ஒரே ஆள் எப்படி டாக்டரா, எஞ்ஜினியரா, வக்கிலா இருக்க முடியும்..?
@பேநாமூடி
நன்றி
பின்ன எங்க போய் வைக்க..?
@சுகுணாதிவாகர்..
நன்றி தலைவரே
@ராஜு
ஏன் பிடிக்கலையா..?
@கே.ரவிஷங்கர்
எனக்கு தெரிந்து முக்கால்வாசி பேர் அல்ல. கால்வாசி பேர் தான் இந்த ட்விஸ்டை யூகிக்க முடியும்னு நினைச்சிட்டு இருந்தேன்..:(
@பித்தன்
நன்றி
@அகல்விளக்கு
சிவன் என்பதற்கான அர்த்தம் பற்றி பின்னூடத்தில் சொல்லியிருகிறேன்னே..
@ஜனா
நன்றி நண்பரே
@தண்டோரா
ஏன் பின்னூட்டத்தை டெலிட் பண்ணிட்டீங்க. கதை பிடிக்கலையா..
@விசா..
நிச்சயமாய் நீஙக்ள் கூட வேறுவிதமாய் ட்ரை பண்ணுங்கள்.. ஆனால் சண்டிவி விமர்சனம் மாதிரி தொனிக்கிறது.
@விசா
புஸ். விஸ் நல்லாருக்கு
@அசோக்
நான் எனன் கருத்து கந்தசாமியா.?
@தராசு
நன்றி.. உங்க எதிர்பார்ப்பை முடிஞ்ச அளவுக்கு ரீச் ஆக ட்ரை பண்ணுறேன்.
@மணிப்பக்கம்
நன்றி
@எவனோ ஒருவன்
நன்றி..
@அன்புடன் மணிகண்டன்
:)
2
@ரவிகுமார் திருப்பூர்
அது உஙக் கற்பனைக்கு
@ஹாலிவுட் பாலா
ஒவ்வொரு கதையும் உங்க பேவரிட் ஆவது நினைத்து சந்தோஷமாய் இருக்கிறது.. நான் வளர்கிறேனே மம்மி..
@நான் கடவுள்
அட ஆமாமில்ல
@ரோமிபாய்
யாரையும் அல்ல
@பப்பு..
நீங்க சுஜாதா படிச்சிருக்கீங்க. :)
@வால்பையன்
ஹா..ஹா..
@பிஸ்கோத்துபயல்
நன்றி..
@ரோஸ்விக்
நன்றி
@ஜவஹர்
அவரு ஏன் இதை எடுக்கணும் நானே எடுப்பேனே. நலல் தயாரிப்பாளர் கிடைச்சா..?
@அத்திரி
என்ன ரைட்டு..?
@
@வனிலா
நீங்க்ள் ஒருவர்தான் சரியாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்..
@சாண்டோ மகரான்
அப்படி இருந்தா, அவர் எழுதுற லெவலுக்கு எழுதியிருந்தா எனக்கு சந்தோஷமே..
@ஸ்ரீராம்
எல்லா புகழும் இறைவனுக்கே.
@மங்களூர் சிவா
நன்றி
@மயிலாடுதுறை சிவா
நன்றி தலைவரே
@என்.உலகநாதன்
என்ன பண்றது நிதர்சனத்தை ஒத்துக்க தானே வேண்டியிருக்கு.
இந்தக் கதைக்கு என்ன பின்னூட்டம் இடுவது என்று யோசிக்க ஒருநாள் ஆனது ஷங்கர்.
பிறகு பாலாவுக்கு எழுதியதையே உங்களுக்கும் பேஸ்ட் செய்து விட்டேன்.
ஷண்முகப்ரியன், November 6, 2009 1:58 AM
நீண்ட பின்னூட்டம் என்று பயந்து விடாதீர்கள் பாலா!
எது ஆபாசம், என்பதை ஆழமாக விவாதிக்கும் 'Irwing Wallace ' எழுதிய ‘Seven Minutes' என்ற நாவலில் வரும் சுவாரஸ்யமான காட்சி இது.
’Seven Minutes' என்ற தனது நண்பன் பதிப்பித்த நாவலை, ஆபாசம் என்று அமெரிக்க அரசாங்கம் தடை செய்துவிட, அதனை எதிர்த்து வாதாடுவான் கதாநாயகன்.
’தணிக்கை செய்கிறார்களே அதிகாரிகள், அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் கெட்டுப் போயிருக்க மாட்டார்களா?அப்படி அவ்ர்கள் கெட்டுப் போயிருந்தால் மற்ற புத்தகங்களைத் தணிக்கை செய்யும் தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள் என்று ஆகி விடும்.ஆனால் அதே பதவியில் அவர்கள் வருடக் கணக்கில் பணியாற்றுகிறார்களே,எப்படி?அப்படி அவர்கள் கெட வில்லையானால் மற்றவர்கள் மட்டும் எப்படிக் கெட்டுப் போவார்கள் என அவர்கள் சொல்லலாம்?’ இது நாயகனின் வாதம்.
‘படித்த, முதிர்ந்த மன நிலை கொண்ட தணிக்கை நடுவர்களைப் பற்றியது அல்ல இங்கே பிரச்சினை.
சுமாராகப் படித்த, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சாமான்ய நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டு விடக் கூடாது என்பதே தணிக்கைச் சட்டங்களின் நோக்கம்!’ என்பார் அரசுத் தரப்பு வக்கீல்.
ஒரு சாமான்ய,இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடுத்தரப் பெண்ணை ஜூரிகள் அழைத்து எது ஆபாசம் என்று தீர்மானிக்கும் முடிவை,
அவள்து தீர்ப்புக்கு விட்டு விடுவார்கள்.
அவளிடம் நாயகன் மூன்று புத்தகங்களில் இருந்து செக்ஸியான சீன்களை வாசித்துக் காட்டுவான்.
அந்தப் பெண்மணி, இதெல்லாம் ஆபாசம் இல்லை என்று கூறிக் கொண்டே வருவாள்.
பிறகு நான்காவது புத்தகத்தைப் பிரித்து அதிபயங்கர செக்ஸ் சீன் ஒன்றை வாசித்துக் காட்டுவான் ஹீரோ.
‘அய்யோ! என்று காதை மூடிக் கொண்டு முகம் சுளிக்கும் அந்தப் பெண் ‘உடனடியாக இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்பாள்.
ஹீரோ அமைதியாகச் சொல்லுவான்.
‘கனம் நீதிபதி அவர்களே! முதலில் நான் படித்த மூன்று புத்தகங்களும் ஆபாசம் என்று அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டவை.நான்காவது நான் படித்த புத்தகம், ‘HOLY BIBLE'! இந்த சாமான்யப் பெண்மணியின் முடிவை ஏற்று,மற்ற புத்தகங்களின் மீதிருக்கும் தடையை நீக்கி விட்டு, பைபிளைத் தடை செய்து விடலாமா?’ என்பான்!
கோர்ட்டே எழுந்து கைதட்டும்.
பார்ப்பவனது பார்வையில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது,பாலா.
உடல்களுக்குள்ளேயே வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் தேடுபவர்கள், செக்ஸிலும் வக்கிரமான,வன்முறையான முடிவுகளுக்கே வருவார்கள்.
ஷண்முகப்பிரியன், உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. நறுக்கென்று சொல்ல வேண்டிய விஷயங்களை கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொல்ல அவசியம் ஏற்பட்டால் ஒரு சின்ன element of doubt இருக்கிறது என்று மனோதத்துவம் சொல்கிறது. சரியா?
http://kgjawarlal.wordpress.com
முடிவு எதிர்பார்த்தேன் ஜீ :)
உங்கள் எழுத்துநடைக்காகவே இக்கதை வெற்றி பெறட்டும் வாழ்த்துகள்.
நல்ல கதை... அருமையான 'நச்' .... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//முடிவு எதிர்பார்த்தேன் ஜீ :)
உங்கள் எழுத்துநடைக்காகவே இக்கதை வெற்றி பெறட்டும் வாழ்த்துகள்.//
நன்றி நிலாரசிகன்..
//நல்ல கதை... அருமையான 'நச்' .... வெற்றி பெற வாழ்த்துக்கள்...//
நன்றி ராம்குமார்- அமுதன்.. உங்கள் பின்னூட்டத்திற்கும், முதல் வருகைக்கும்..
நல்ல "பின்"ஊட்டம் கதையிலேயே இருக்கிறது என்பதால்,
நான் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கிறேன்.
Naughty -யாக இருதாலும் நச்சுனு இருக்கு.வாழ்த்துக்கள்
தல,,.
இந்த கதை (http://holyox.blogspot.com/2007/10/347.html) படிச்சதால,உங்க கதையின் முடிவையும் எளிமையா கனிச்சுட்டேன்.ஆனா எழுத்து நடை நன்று..
நச் 2009 போட்டிக்கு எழுதியதுன்னு சொல்லவே இல்ல..?
http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html
nalla pathivu
என்னத்த சொல்ல.? அவ்வ்வ்..
(அப்புறம் ஷண்முகப்பிரியனின் பின்னூட்டக்கதை அழகு.!)
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நச் திருப்பம். கதையின் மூலம் ஆசைக்கு ஆன்மிகம் தடை போடுவதில்லை மாறாக மடை மாற்றுகிறதுன்னு ஒரு பொருள் எடுத்துக்கலாமா ?
ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)
http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html
அட்டகாசம் தலைவா. அந்த கார் போகிற மாதிரி கதை போகிறது. என்ன வேகம்.. என்ன நடை..
இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க இங்கே கிளிக்கவும் :
http://veeduthirumbal.blogspot.com/
மோகன் குமார்
தல, சர்வேசன் டாப் 20 லிஸ்ட் போட்டுருக்கார். அதில் உங்க கதை, பெஸ்கி, ஆதி, முரளி கண்ணன் மற்றும் என் கதையும் செலெக்ட் ஆகியிருக்கு
ஹ ஹ ஹா. நல்ல நச். வாழ்த்துக்கள்.
Post a Comment