இப்போது தமிழில் பெயர் வைத்திருக்கும் படத்திற்கு வரி கிடையாது என்பதால் வரும் பணத்தை அப்படியே பிரித்து கொள்கிறார்கள். இதற்கு முன்னால் இவர்கள் ஒப்பந்தம் போடும் போது கிராஸில் 60-40, அல்லது நெட்டில் 60-40 என்று போட்டு கொள்வார்கள்.
அதென்ன க்ராஸ் என்றால் டாக்ஸுடன் வரும் தொகை (Gross Amount). வரி போக வரும் தொகை நெட்(Net amount). என்று சொல்வார்கள். விநியோகஸ்தரை பொருத்தவரை க்ராஸில் பிரித்தால் அவர்களுக்கு லாபம், அதே சமயம் தியேட்டர்காரர்களுக்கு நெட்டில் பிரித்தால் இரண்டு லாபம், ஒவ்வொரு டிக்கெட் விலையிலும், வரியை கழித்துவிட்டு மீதம் வசூல் ஆகும் தொகையில் அவருடய எம்.ஜி பணத்தை கழிக்கலாம். வரியை பிடித்தால் எப்படி அவருக்கு இரட்டை லாபம் என்று கேட்பவர்களுக்கு, வரியை ஏய்க்கும் தியேட்டர்காரர்களின் தில்லு முல்லுகளை பின்னால் வரும் அத்யாயங்களில் பார்ப்போம்.
அட்வான்ஸ்(முன்பணம்)
ஒரு படத்திற்கு எம்.ஜிக்கு பதிலாய் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது அதே ஐந்து லட்சம் என்று வைத்து கொண்டால். மேற்குறிப்பிட்ட அதே சதவிகித அடிப்படையே ஒப்பந்தத்தில் இருக்கும். ஆனால் வசூல் ஆகும் விநியோகஸ்தர் பங்கில், தியேட்டர்காரர்கள் கொடுத்திருக்கும் ஐந்து லட்சம் வசூல் ஆனபிறகு மேல் வசூல் ஆகும் பணத்தை எம்.ஜிக்கு எவ்வாறு பங்கு பிரித்து கொண்டார்களோ அதே முறையில் பரித்து கொள்வார்கள்.
ஒரு வேளை விநியோகஸ்தருக்கு கொடுத்த ஐந்து லட்சம் வசூல் ஆகவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் தியேட்டர்காரர்களுக்கு ஏதும் பிரச்சனையில்லை. அவர்கள் கொடுத்த ஐந்து லட்சத்தில் எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறதோ, அது போக மீதம் உள்ள பணத்தை விநியோகஸ்தர் திரும்ப கொடுக்க வேண்டும். இதனால் தியேட்டர் அதிபர்கள் லாபம் அடைவார்கள். ஆனால் இந்த மாதிரியான ஒப்பந்தங்கள் எல்லாம் வழக்கமாய் விநியோக துறையில் பேர் பெற்ற கம்பெனியாக இருந்தால்தான். ஏனென்றால் பணத்தை திரும்ப கொடுக்கும் கம்பெனி என்றால்தான் அட்வான்ஸ் கொடுப்பார்கள், அப்படியில்லாத கம்பெனியில் பணத்தை கொடுத்துவிட்டு மீத பணத்தை வாங்க அலையும் தியேட்டர் அதிபர்கள் நிறைய. அதனால் தான் பெரிய விநியோகஸ்தர்கள் படமாய் இல்லாவிட்டால் இந்த ஒப்பந்ததிற்கு தியேட்ட்ர்காரர்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ஆவரேஜ் நடிகர்கள், இயக்குனர்கள் பங்கு பெற்ற படங்களுக்கும், எந்த படத்தை போட்டாலும் மற்ற தியேட்டர்களை விட அதிக வசூலை கொடுக்கும் தியேட்டர்களுக்கு தான் இந்த முறை.
மிக சிறிய படங்களுக்கு ஐந்து லட்சம் போன்ற பணம் இல்லாமல அந்த தியேட்டருக்கான பிரிண்ட் செலவை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் படங்களும் உண்டு. பங்கு எல்லாம் அதே விதிமுறைகள் தான்.
டெர்ம்ஸ் (Terms)
இந்த முறையில் படங்களை தங்களது தியேட்டர்களில் வெளீயிடுவதற்கு எந்த விதமான எம்.ஜி.யோ, அட்வான்ஸோ இல்லாமல் நீ உன் படத்தை என் தியேட்டரில் வெளியீட்டுக்கொள், வருவதை பிரித்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் வெளியிடுவது. பெரும்பாலும் சிறிய படங்களுக்கான நிலைமை இதுதான். பல சிறு படங்கள் விநியோகஸ்தர் கூட இல்லாமல் தயாரிப்பாளரே நேரடியாய் வெளியிடும் படங்களுக்கு இந்த முறையில் தான் ஒப்பந்தம் போடுவார்கள் தியேட்டர்காரர்கள்.. யாருக்கும் பிரச்சனையில்லாத ஒரு முறை.. சில சமயங்களில் தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளருக்கோ, விநியோகஸ்தருக்கோ, அவர்களுடய பங்கை ஒழுங்காய் தராதவர்களும் உண்டு.
வாடகைக்கு (Hire)
படத்தின் ஒரு பிரதியை மொத்தமாய் வாடகைக்கு எடுத்து கொள்வது. அதாவது படத்தின் ஒரு பிரதியை ஏதாவது ஒரு தியேட்டரில் ஓட்டி வசூல் செய்வது வரைக்கும் தான். பெரும்பாலும் இம்மாதிரியான் ஒப்பந்தம் ரிலீஸுக்கு பிறகு சில எதிர்பார்காமல் ஒடும் படஙகளை கொஞ்சம் முன்னமே போய் தியேட்டர்காரர்களே ஹையருக்கு பேசி.. முடித்து தங்களது தியேட்டரில் வெளியிடுவார்கள். சுமாராய் ஒரு 2 லட்சத்திற்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு வெளியிடப்படும் படம் எவ்வளவு வசூல் செய்தாலும் அது அந்த தியேட்ட்ர் அதிபருக்கே. அதே போல் வரவில்லை என்றாலும் அவருக்கே.. பல சமயங்களில் தியேட்டர் அதிபர்களுக்கு லக்கியாய் அமைவது இம்மாதிரியான ஒப்பந்தங்கள்தான்.
பல சமயங்களில் புதிதாய் திரைப்பட விநியோகத்தில் நுழையும் புதியவர்கள் இந்த முறையில் தங்களுக்கு தெரிந்த தியேட்டரில் முதல், முதலாய் ஏதாவது ஒரு படத்தை போட்டு வியாபாரம் பழகுவது இந்த முறையில் தான்.
மல்டி ப்ளெக்ஸ் எனப்படும் தியேட்ட்ர்களை பற்றியும், அவர்களது ஒப்பந்தஙக்ளை பற்றியும் பின்னால் பார்க்கலாம்.
விநியோகஸ்தர்/தியேட்டர் வசூல் கணக்கெடுப்பு
என்னதான் ஒப்பந்தம் போட்டாலும் தியேட்டரில் எவ்வளவு டிக்கெட், எந்த எந்த காட்சிக்கு, எவ்வளவு ரூபாய் சீட்டு என்று புள்ளிவிவரம் இருந்தால் தானே கணக்கெடுக்க முடியும். அதனால் விநியோகஸ்தர்கள் என்ன செய்வார்கள் என்றால் ஒவ்வொரு ப்ரிண்ட் வெளியிடப்படும் தியேட்டருக்கும் ஒரு ரெப்ரசெண்டேட்டிவ் ஒருவரை கூடவே அனுப்புவார். அவருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளம். அதை தவிர படம் ஓடும் நாள் வரை அவர் அந்த தியேட்டரிலேயே தங்கிக் கொள்ளவும் செய்வார். அல்லது சில பெரிய கம்பெனிகள பக்கத்தில் எதாவது சின்ன லாட்ஜுகளில் தங்க ஏற்பாடும் செய்வது உண்டு.
அவருடய பணி என்னவென்றால் தினமும் காட்சிக்கான டிக்கெட் கொடுக்கும் முன் டிக்கெட்டின் ஆரம்ப நம்பரை குறித்து வைத்து கொள்வார். காட்சிக்கான டிக்கெட் கொடுத்து முடிந்ததும் டிக்கெட்டின் கடைசி நம்பரை குறித்து கொண்டு ஐம்பது ரூபாய் டிக்கெட் இந்த நம்பரிலிருந்து இந்த நம்பர் வரை, நாற்பது ரூபாய் டிக்கெட் இதிலிருந்து இதுவரை என்று எத்தனை டிக்கெட் போயிருக்கிறது என்று எழுதி வைத்து கொண்டு, தியேட்டரிலிருந்தே விநியோகஸ்தருக்கு தொலைபேசி தெரிவிப்பார்.
அதை தவிர தியேட்டர் மேனேஜர், டி.சி.ஆர். எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட் என்று ஒரு ரிப்போர்ட்டை அந்த தியேட்டரின் மேனேஜர் தயார் செய்து ஒவ்வொரு வாரமும் தருவார்.. அதுவும், ரெப் கொடுக்கும் ரிப்போர்டும் ஒத்து போக வேண்டும். 99 சதவிகிதம் ஒத்து போகும். அதை வைத்துதான் தினமும் ஆகும் க்ராஸ் கலெக்ஷன் இவ்வளவு, டாக்ஸ் போக நெட் இவ்வளவு என்று கணக்கெடுப்பார்கள்.
சில சமயங்களில் இந்த ரெப்புகளும், தியேட்டர் ஊழியர்களும் கைக்குள் கை போட்டுக் கொண்டு, தியேட்டர் டிக்கெட் கணக்குகளில் தில்லாலங்கடி செய்வதும் உண்டு. இம்மாதிரியான சமயங்களில் சில விநியோகஸ்தர்கள் திடீர் செக்கப் செய்வதும் உண்டு. அந்த செக்கப்பில் மாட்டி கொள்ளும் விஷயங்களும் நடந்துதிருக்கிறது. எவ்வாறு அப்படி திருடுவார்கள் என்றால் டிக்கெட்டை கொடுக்காமல் கூப்பனை கொடுத்து உள்ளே விடுவது, அல்லது, எதுவுமே இல்லாமல் ஆட்களை உள்ளே அனுமதிப்பது போன்ற செயல்களால் இது சாத்தியப்படும். கூப்பன் என்றால் எந்த விதமான அனுமதி கட்டண விஷயங்களும் பிரிண்ட் செய்யப் படாது இருக்கும் அனுமதி சீட்டு. தியேட்டர்களில் ஒரிஜினல் டிக்கெட்டுக்கு பதிலாய் இதை கொடுத்து தான் வரி ஏய்ப்பு செய்வார்கள். அரசுக்கு இவர்கள் வரி ஏய்ப்பு செய்தாலும் விநியோகஸ்தர்களுக்கு நேர்மையாய் உள்ள தியேட்டர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு..
டிஸ்கி: மேலே சொன்ன டெக்னிக்கல் விஷயங்கள் புரிபடவில்லையென்றால் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரிய படுத்தவும். மேலும் தெளிவாக விவரிக்க முயற்சிக்கிறேன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

21 comments:
It's nice blog content Greeeting for you Nice to meet you
visit to our blog if you want
ஏ அப்பா!,
இவ்வளவு விசயம் இருக்கா???
விளக்கமான பதிவு கேபிள்
தில்லாலங்கடி.. இங்கதான் ஸ்டார்ட் ஆகுதா???
சுவாரசியம்!! :)
மேல வேற எதுவும் கேக்காதீங்க! :(
அண்ணே,
கலக்கறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க
:))
வியாபாரம் நல்லா இருக்கு, என்ன ஆச்சு இளயராஜா பற்றிய பதிவு
அரசுக்கு இவர்கள் வரி ஏய்ப்பு செய்தாலும் விநியோகஸ்தர்களுக்கு நேர்மையாய் உள்ள தியேட்டர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு..///
இப்படி ஒரு நேர்மையா?
சுவாரசியம்... வியாபாரம் நல்லா இருக்கு... இன்னும் நிறைய எழுதுங்க...
கலக்கலா போய்ட்டு இருக்கு.
அலெக்சா ரேங்கிங் 80,000 ஐ நெருங்குதே!
வாழ்த்துக்கள்.
முடிந்தால் தொடரவும்...
http://www.yetho.com/2009/11/blog-post_06.html
ரொம்ப குழம்புதுங்க. எனக்கு புரியலை. அப்பீட் ஆகிக்கிறேன் இந்த தொடர்லயிருந்து.
சுவாரஸ்ய தகவல்கள்
//தமிழில் பெயர் வைத்திருக்கும் படத்திற்கு வரி கிடையாது என்பதால் வரும் பணத்தை அப்படியே பிரித்து கொள்கிறார்கள்//
indha idathla 'kalaijarukku nandrinnu' yen podala?
இதெல்லாம் இருக்கட்டும்
நானும் கேக்கணும்ன்னு இருந்தேன்
எங்க போச்சு தலைவரே இளையராஜா வோட தொடர் பதிவு ?????????
மிகவும் எதிர்பார்ப்புடன்............
-ரசிகன் சுரேஷ்
அருமையான விளக்கங்களுடன் சுப்பர் பதிவு, தொடருங்கள்.
அண்ணே இப்போ நான் ஒரு படத்த எடுத்து விநியோகம் பண்ணனும்னா என்ன செய்ய வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் எண்ணப் போன்றவர்கள் எடுத்து ரிலீஸ் செய்ய எவ்வளவு செலவாகும்.
Keep Going.. Cable Jee..
கடைமடையென திரைப்பட வியாபார தகவல்களை தரும் அண்ணன் கேபிளாருக்கு நன்றிகள்.
நல்ல தகவல்கள்.
இந்த தொடரினால், உங்களுக்கு 'தயாரிப்பாளர்' கிடைச்சுடுவார் போல?
நல்லது நடந்தா சரி.
http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html
எங்க ஊர்ல first class டிக்கெட் இன்னும் 12.50 அப்டின்னு தான் பிரிண்ட் ஆகி இருக்கு ... ஆனா 50 ரூபாய்க்கு குறையாமல் விக்கிறாங்க இதெல்லாம் யார் ஆட்டைய போடுவ..
http://peenamoodi.blogspot.com/
நல்ல பதிவுங்க சார்! சினிமா வியாபாரத்த தெருஞ்சுக்க நினைப்பவர்களுக்கு அசத்தலான கட்டுரைகள். சின்ன புக்கா கூட போடலாம்.
Post a Comment