திரையரங்குகளில் வெளியீடு..
தயாரிப்பாளர் படத்தை முடித்து, வெளியீட்டு தேதியையும் அறிவித்து, படத்தை ஏரியா வாரியாக விற்பனையும் செய்தாயிற்று. அத்தோடு அவர்களது வேலை முடியவில்லை.. தியேட்டருக்கான போட்டோகார்டுகள், போஸ்டர்கள், பத்திரிக்கையாளர்கள் காட்சி, பத்திரிக்கை விளம்பரம் என்று பல வேலைகள் அவர்களுக்கு இருக்கிறது. படததை மக்களிடையே கொண்டு செல்ல, டிவி விளம்பரங்கள், பேட்டிகள் என்று பல விதங்களில் படத்தின் மார்கெட்டிங்குக்காக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செலவு செய்யாத படங்கள் மக்களிடயே சென்றடைவது மிகவும் கஷ்டமான விஷயம்.. எனவே இக்காலத்தில் அது மிக முக்கியம்.
உதாரணத்திற்கு உன்னை போல் ஒருவன் படத்தை எடுத்து கொள்ளுங்கள், படம் வெளியாவதற்கு முன் பாடல் வெளியீட்டில் ஆரம்பித்து, டிவீ, மற்றும் பத்திரிக்கை மீடியாக்களில் கவரேஜ் செய்ய ஆரம்பித்து, மெல்ல, சின்ன,சின்ன பத்து செகண்ட் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வெளியாகி படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பை ஏறப்டுத்தியிருக்க, அதனுடய வெளிப்பாடு படத்தின் முன்பதிவில் தெரிந்தது.
பின்பு படம் வெளியாகி நல்ல ரிப்போர்டை கொண்டிருந்தாலும், அதை மேலும் உற்சாகபடுத்த, கதாநாயகன் கமல் எல்லா டீவிகளிலும் பேட்டிகள், கலந்தாய்வுகள் என்று தொடர்ந்து கலந்து கொண்டு, மேலும் படத்தை பற்றிய விஷயங்களை பேச அதனால் மேலும் படத்தை பார்க்க கூட்டம் கூடியதை மறுக்க முடியாது.. இந்த காலங்களில் இம்மாதிரியான அக்ரசிவ் மார்கெட்டிங் என்பது மிக மிக அவசியம்.. பெரிய படங்களுக்கே.. இம்மாதிரியான மார்கெடிங் விஷயங்கள் தேவையாய் இருக்கும் போது, சிறிய படங்களுக்கு எவ்வளவு தேவை என்று பாருங்கள். இது எல்லாம் தயாரிப்பாளரின் வேலைகளில் முக்கிய பங்காகும். தாரை வார்த்து கொடுக்கும் பெண்ணுக்கு புகுந்த வீட்டில் போய் நன்றாக வாழ, எல்லா வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருவதை போல..
சின்ன படங்களுக்கான மார்கெட்டிங் உதாரணம் என்றால் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களை சொல்லலாம். ஒன்று சுப்ரமணியபுரம். படம் வெளிவருவதற்கு முன்பே வித்யாசமான கவர்ந்திழுக்கும் பேப்பர் விளம்பரங்கள் தொடர்ந்து எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவர வைத்தார்கள். பின்பு. படத்திற்கு சம்மந்தமேயில்லாத ஒரு அல்ட்ரா மார்டன் பாடலை.. ஒளிப்பதிவு செய்து எல்லா டீவி சேனல்களுக்கும் கொடுத்து இம்மாதிரியான் படம் ஒன்று வெளிவர இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். அந்த எதிர்பார்ப்பு படத்தை வாங்க வந்த விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட, படத்தின் ஏரியா எம்.ஜியிலேயே போனது.
இன்னொரு படம் ‘சிலந்தி” மிக சிறிய படமான, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியான படம்.. சுமார் 45 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட அந்த பட்த்திற்கு, எல்லா பத்திரிககைகளிலும், கதாநாயகியின் கிட்டத்தட்ட அரைநிர்வாண படத்தை போட்டு, காதல் காட்சிகளில் கதாநாயகன் அங்கே தொட்டுவிட்டார், இங்கே தொட்டுவிட்டார் என்பது போன்ற விஷயங்களை தயாரிப்பு பக்கமே வெளியே விட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்ன படத்திற்கு நல்ல ஓப்பனிங்கை தந்து சுமார் 1 கோடி ரூபாய் வசூல் செய்தது.
திரையரங்கு வெளியிடல்
சிட்டி சென் டர் ஐநாக்ஸ் மால்
படத்தை வாங்கிய விநியோகஸ்தர் வெளியீட்டு தினத்தை நிர்ணயத்தவுடன் பரபரப்பாக படத்துக்கான தியேட்டர்களை புக் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பெரிய படமாய் இருந்தால் நிறைய பார்வையாளர்களை கொள்ளும் தியேட்டர்களை முன் பதிவு செய்து வைக்க வேண்டும். தியேட்டர் முன்பதிவு செய்வது என்பது எல்லா ஏரியாக்களிலும் படத்தை பொறுத்தது என்றாலும். சென்னை மற்றும் பெரிய நகரங்களில் விநியோகஸ்தர்கள் வாடகை கொடுத்துத்தான் புக் செய்ய வேண்டும்.
சென்னையில் எல்லா தியேட்டர்களுக்கும் வாடகை இருக்கிறது. உதாரணமாய் கமல்/ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், மிக பெரிய ஓப்பனிங்கை எதிர்பார்க்கும் விநியோகஸ்தர் ரசிகர்கள் அனைவரும் முடிந்த வரை முதல் வாரத்திலேயே பார்க்கக்கூடிய வகையில் பெரிய தியேட்டர்களாகவும், அல்லது ஒரே காம்ப்ளெக்ஸில் இரண்டு தியேட்டர்களாகவும், போட்டு ஒரே வாரத்தில் பெரிய வசூலை பார்க்க புக் செய்வார்கள். அப்படி புக் செய்யப்படும் தியேட்டர்களுக்கான வாடகை பணத்தை முன் கூட்டியே இரண்டு வாரங்களுக்கு கொடுத்துவிட வேண்டும். பல தியேட்டர்கள் பில்லில் ஒரு வாடகையும், தனியே மிச்ச வாடகையை பில் இல்லாமலும் வாங்கி கொள்வார்கள்.. நாம் முன் பணம் கொடுக்கும் போது பில் இல்லாமல் கொடுக்கப்படும் “பி’ அமெளண்ட் எனப்படும் கணக்கில் வராத பணத்தை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும்.
ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு நல்ல தியேட்டர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். வசதி குறைவான தியேட்டர்களிலோ, அல்லது, செக்ஸ் படங்கள் ஒடிய தியேட்டர்களிலோ படத்தை வெளியிட்டால், ஏற்கனவே அந்த திரையரங்கின் மேல் இருக்கும் வெறுப்பின் காரணமாய் அங்கே போகவே மாட்டார்கள். சில சுமார் படங்கள் கூட நல்ல தியேட்டரில் வசூல் கொடுப்பது இதனால்தான்.
உதாரணமாய் தசாவதாரம் படம் சென்னை உட்லெண்ட்ஸ் தியேட்டரிலும் வெளீயானது.. அதே சமயம் அருகில் உள்ள சத்யம் திரையரங்கினுளும் வெளியானது. சத்யமில் வசூல் செய்ததை விட, குறைவாகவே உட்லெண்ஸில் வசூல் ஆனது. ஓடிய நாட்களும் குறைவு.. ஏன் ஒரு வெற்றி பெற்ற படம், கம்பேரடிவாக பார்த்தால் அனுமதி கட்டணமும் குறைவாய் இருக்கும் தியேட்டரில் நிறைய நாட்கள் ஓடி வேண்டிய படம். அருகே உள்ள சத்யம் தியேட்டரில் அதிக நாள் ஓடியது.? இத்தனைக்கும் சத்யமில் அனுமதி கட்ட்ணம் அதிகம் இருந்தாலும் பார்வையாளனுக்கு அவ்ர்கள் செய்து தரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஏசி, ஒலி போன்ற வசதிகளுக்காக நல்ல தியேட்டரில் மக்கள் அதிக செலவு செய்தாவது படம் பார்க்க விரும்புகின்றனர். எனவே நல்ல படம் நன்றாக ஓட நல்ல தியேட்டர்கள் தேவை.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

31 comments:
கலக்கல் கேபிளாரே
தூள் கிளப்பறீங்க தலைவரே,
very very interesting.
தொடர்ந்து எழுதுங்கள்.
Top Hit Matter ....
Sir, intersting !!!!!!
சிறப்பாக உள்ளது.... தொடர்ந்து எழுதவும் .... நன்றி
கேபிள்..ரோசாவின் பதிவை படித்திருப்பீர்கள்.தான் ஜீயோவை அடித்தது சரிதான் என்ற மனநிலைக்கு மற்றவர்களை கொண்டு வரும் முயற்சியில் தொடர் பதிவுகளாக இட்டு கொண்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஜீயோ ரோசாவை அடித்திருந்தாலும் இதே கண்டனக்குரல்தான் எழுந்திருக்கும் என்பதை கொலைகார கூட்டத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.அவர் பதிவில் பின்னூட்டம் மறுக்கப்படுகிறது.இதை சுமார் 1200 பேர் படிப்பார்கள் இங்கு இடுகிறேன்.மன்னிக்கவும்
இந்த பாகத்தில் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிருக்கீங்க....
இப்படி எல்லா பார்முலாவையும் ஓப்பனா சொல்றீங்கலே... இதை படிச்சி நானே உங்களுக்கு போட்டியா "டிஸ்ட்ரிபியூட்டர்" ஆயிட்டா.. என்ன பண்ணுவீங்க...ஙே...!!!!.
ம்ம்ம் உங்க படத்தை நானே விநியோகிக்கலாமென்ரிருக்கிறேன், எப்படி ஒகெ வா
/கேபிள்..ரோசாவின் பதிவை படித்திருப்பீர்கள்.தான் ஜீயோவை அடித்தது சரிதான் என்ற மனநிலைக்கு மற்றவர்களை கொண்டு வரும் முயற்சியில் தொடர் பதிவுகளாக இட்டு கொண்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஜீயோ ரோசாவை அடித்திருந்தாலும் இதே கண்டனக்குரல்தான் எழுந்திருக்கும் என்பதை கொலைகார கூட்டத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.அவர் பதிவில் பின்னூட்டம் மறுக்கப்படுகிறது.இதை சுமார் 1200 பேர் படிப்பார்கள் இங்கு இடுகிறேன்.மன்னிக்கவும்
//
தேவையில்லாமல் ரோசா.. பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார்.. ரோசா.. வுக்கான பதில் சொல்கிறேன்.
தொடர் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது கேபிள்ஜி. இப்போது கொத்துபரோட்டாவை விட இதுதான் ரொம்ப பிடித்துப் போயிற்று.
தொடர் நன்றாக போய்கொண்டிருக்கிறது. வாரமிருமுறை எழுதங்களேன்
வூட்லண்ட்ஸ் பற்றி நீங்கள் கூறிய கருத்து நூறு
சதவிதம் உண்மை ஜி... நான் பேராண்மை முதல்
நாள் அங்கு தான் பார்த்தேன்... ஏ.சியே போடவில்லை...
எல்லாம் புது விஷயம் தல
ஆருமை நண்பரே...தொடர்நது கலக்குங்க...நல்லா இருக்கு..
கலக்கல், தூள்.....
//காதல் காட்சிகளில் கதாநாயகன் அங்கே தொட்டுவிட்டார், இங்கே தொட்டுவிட்டார் என்பது போன்ற விஷயங்களை தயாரிப்பு பக்கமே வெளியே விட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.//
ஓ...இப்படியும் நடக்குதுங்களா....சரிதான்..
நடிகர்கள் like ஷாம் , பாலா அடிக்கடி மயிர் இலையில் உயிர் தப்புறதும் இந்த publicityku தான .......
கலக்கல்
கலக்கல் கேபிள்...
விறு விறு நடை... ஜெட் வேகம்.. சூப்பர்...
யூத்து
ஜூப்பர் பதிவு, இந்த வரிசையிலேயே இந்த பதிவுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, காரணம் படித்தவுடன் ஒரு நிறைவு இருந்தது, Imean ஒரு டாபிக்கை முழுவதுமாக படித்த நிறைவு.
இப்பத்தான் பகுதி 8 மறுபடியும் படிச்சேன்
அதில் ‘’சுய வெளீயீடு// படித்துவிட்டு சிரிச்சேன், நீங்க தயாரிப்பாளர் தானே “படத்தை” வெளியிடுவதிப் பத்திதானே சொன்னீங்க? :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Superb.Keep it up
இங்கே மெர்சண்டைஸ் என்ற விளம்பரமும் ரொம்ப பிரபலம் சங்கர்.
குழந்தைகள் படம் வரும்போது, McDonalds, Burger King-ங்கில் எல்லாம், கிட்ஸ் மீல் வாங்கும் போது, பொம்மை கொடுப்பாங்க.
இப்ப கூட, Transformers 2 டிவிடி-யோட, ஒரு ரோபோட் பொம்மையை வச்சி கொடுக்கறாங்க.
----
அப்புறம்.. இங்க படம் வரும் முன் தான்.. எல்லா நடிகர்களும், டிவியின் லேட் நைட் ஷோ முன்னாடி ஆஜர் ஆய்டுவாங்க. படம் வந்த பின்னாடி.. அது எக்கேடு கெட்டுப் போனா என்ன??? :) :) :)
நல்ல உபயோகமான தகவல். புத்தகமாக வெளியிடலாமே?
திரையரங்கின் முக்கியத்துவம், நானும் பல வேளைகளில் நினைத்துப்பார்ப்பதுண்டு. சூப்பர், அடுத்தடுத்த பகுதிகளையும் எதிர்பார்க்கிறேன்.
நல்ல பதிவு.
/நல்ல உபயோகமான தகவல். புத்தகமாக வெளியிடலாமே?
//
அதுக்கு தான் எழுதி முடிக்க போறேன். ப்ளாக்குல கொஞ்சமாத்தான் ரிலீஸ் பண்றேன்.. சார்.. உங்க நம்பர் வேணும்.
//எனவே நல்ல படம் நன்றாக ஓட நல்ல தியேட்டர்கள் தேவை.//
Truth.
பின்னிட்டீங்க தல
@நன்றி விசா
@புலவன் புலிகேசி
மிக்க் நன்றி
@நன்றி விசா
@புலவன் புலிகேசி
மிக்க் நன்றி
Post a Comment