Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Oct 16, 2009

சினிமா வியாபாரம்-8

வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் கேபிள் சங்கரின் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இப்போது விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகை10-15 சதவிகதத்திலிருந்து 5-10 சதவிகிதமாய் தயாரிப்பாளர்களால் குறைக்கப்பட்டுவிட்டது.. ஏன் என்றால் விநியோகஸ்தர்களின் நேர்மையின்மையே ஆகும். பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே இப்போது பத்து சதவிகிதம் எல்லாம். சிறிய விநியோகஸ்தர்களுக்கு இப்போதெல்லாம் ஐந்துதான். அது எப்படி அவர்கள் தவறான கணக்கை கொடுத்து தயாரிப்பாளர்களை நோகடிக்கிறார்கள் என்பதை வரும் அத்யாயங்களீல் பார்க்கலாம்.

சுய வெளீயீடு.

சில சமயம் மேலே சொன்ன எந்த முறையிலும் சில படங்கள் விற்பனையாகாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.. அது பெரும்பாலும் புது முகங்கள் நடித்த, சிறு முதலீட்டு படங்களுக்கும், ஏற்கனவே ஒரு படம் நடித்து வெற்றி பெறாத நடிகர்கள் நடித்த படத்திற்கும் தான் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்.. அப்போது வேறு வழி கிடையாது.. ஒன்று விநியோக துறையில் உள்ளவர்கள் யாராவது ஒரு பெரிய விநியோகஸ்தர்களை அணுகி வெளியிட வேண்டும்.. இல்லையென்றால் இதற்கான மீடியேட்டர்களையும், நேரடியாய் தியேட்டர்களையும், அணுகி அந்த தயாரிப்பாளரே நேரடியாய் வெளியிடுவார்.

இது படம் தயாரிப்பதை விட கஷ்டமான விஷயம். ஏற்கனவே பெரிய அனுபவமில்லாமல் தயாரிப்பில் அவஸ்தைபட்டிருக்கும் அவர், மீண்டும் கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல இந்த துறையில் இறங்க வேண்டும். பெரும்பாலும் அவர்களே நேரடியாய் வெளியிடும் பட்சத்தில் மீடியேட்டர்கள் பெரிதாய் அடித்துவிடுவார்கள்.

அதைவிட கொடுமை என்னவென்றால் தியேட்டரில் வசூல் கணக்கை பார்பதற்காக, விநியோகஸ்தர்கள் தங்கள் சார்பாக ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு ஆளை போட்டிருப்பார்கள், அவர்தான் விநியோகஸ்தர்களுக்கான சரியான் டிக்கெட் விற்பனையை சொல்வார்கள். சில சமயம் தியேட்டர் மேனேஜர் அவர்களையும் கையில் போட்டுக் கொண்டு லவுட்டி விடுவதும் உண்டு.. விநியோகஸ்தர்களுக்கே இந்த கதி என்றால், புதிதாய் இதில் இறங்கும் தயாரிப்பாளர் எவ்வளவு அவஸ்தை படுவார் பாருங்கள். அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
kadalkottaiee0

இவ்வாறு சுயவெளியீடு செய்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்கள் எதிர்பார்தத வசூலை விட அதிகம் செய்த கதை நிறைய.. உதாரணமாய். பிரபல் விநியோகஸ்தர் சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரிப்பில் வான்மதி படத்திற்கு பிறகு காதல் கோட்டை தயாரித்து வெளியிட இருந்த நேரத்தில் அதை வாங்க வந்த விநியோகஸ்தர்கள் விலை அதிகம் என்று பின்வாங்கிவிட, வழக்கமாய் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டுமே விநியோகம் செய்து வந்த பாண்டியன், தமிழகம் முழுவதும் தானே ரீலீஸ் செய்தார். பிறகு நடந்தது வரலாறு..

ஒரு காலத்தில் மிகப்பெரிய வெற்றி படமான ஒரு தலை ராகம் படம் கூட தயாரிப்பாளரே முதலில் வெளியிட்ட படம் என்று தான் தகவல்.

திரைப்பட வெளியீடு..

சரி.. படத்தை தயாரித்தாகிவிட்டது, அதை முன் அத்யாயங்களில் சொன்ன ஏதோ ஒரு முறையில் விற்பனையும் செய்தாகிவிட்டது. அத்துடன் ஒரு தயாரிப்பாளரின் வேலை முடியவில்லை. படத்தை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். சரியான நேரம் என்றால். உதாரணமாய் என்னதான் தான் எடுத்த படம் நல்ல படமாய் இருந்தாலும் ரஜினி படமோ, கமல் படமோ ரிலீஸாகும் நேரத்தில் புதுமுகங்கள் நடித்த படத்தையோ, அல்லது அவ்வளவாய் பிரபலமில்லாத நடிகர்கள் நடித்த படத்தையோ ரீலீஸ் செய்வது, சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வதை போல..

நல்ல படம் என்னதான் ஓடும் என்றாலும்.. மிகப்பெரிய நடிகர்கள நடிக்கும் படத்தைதான் மக்கள் முதலில் பார்க்க விரும்புவார்கள். அப்படியிருக்கும் போது, சின்ன படங்களை பார்க்க ஆளில்லாமல காத்தாட, படம் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்காமல் போய் தோல்வி படமாய் ஆகிவிட வாய்ப்பு உள்ளது.

அதே போல் பண்டிகை காலங்களுக்கு முன் வெளியாகும் சிறு படங்கள், மிக சிறப்பாய் இல்லாவிட்டால் சரியான வரவேற்பை பெறாது.. ஏனென்றால்.. அந்த சமயங்களில் மக்களின் கவனமெல்லாம், பண்டிகைக்கான செலவுகள், புத்தாடை, விழாவுக்கு ஊருக்கு போவது என்று ஏகப்பட்ட விஷயங்களில் அவர்களின் கவனம் இருக்கும், செலவுகளுக்கும் பஞ்சமில்லாத நேரம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு என்னதான் இருந்தாலும் அதற்குரிய கவனம் பெற்று விடும்.. மற்ற படஙக்ளுக்கு நிச்சயமாய் வரவேற்பு கிடைப்பது அரிதே..

அதற்காக எந்த படமுமே பெரிய நடிகர்கள் நடித்து வெளிவந்த நேரத்திலோ, அல்லது பண்டிகை காலங்களுக்கு முன் வெளீயான படம் வெற்றி பெற்றதேயில்லையா என்று கேட்டீர்களானால்.. ஆம் வெற்றி பெற்றிருக்கிறது.. ஒரு பொங்கலுக்கு முன்னால் டிசம்பர் கடைசியில் வெளியான விஜயின் காதலுக்கு மரியாதை பல தியேட்டர்களில் பொங்கல் வரை என்கிற ஒரு அக்ரிமெண்டில் போடப்பட.. படம் பொங்கல தாண்டியும் வெள்ளி விழா கொண்டாடியது.
varalaru5bt3

ஒரு தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வந்த சமயம் அப்போது பெரிய நடிகராய் இல்லாது இருந்த ஜீவா நடித்த ஈ ப்டம் பெரிய படங்களோடு வந்தது.. ஆனால் வந்த படங்களில் ஈ பெரிய வெற்றி பெற்றது.. என்பதை மறுக்க முடியாது.. மீண்டும் சொல்கிறேன். இம்மாதிரியான சிறப்பான படங்கள் மட்டுமே சில விஷயங்களை உடைத்து வெற்றி பெரும்..

படத்தை வாங்கிய விநியோகஸ்தர் எவ்வாறு திரையரங்குகளில் படத்தை வெளீயிட ஒப்பந்தமிடுகிறார்?.. என்ன நடைமுறை விஷயங்கள் இருக்கிறது.. அது என்ன பொங்கல் வரை, தீபாவளி வரை, என்பது போன்ற பல விஷயங்கள் எக்ஸிபிஷன் எனப்படும் திரையங்கு பற்றிய விஷயங்களில் இருக்கிறது. அதை வருகிற அத்யாயங்களில் பார்ப்போம்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

36 comments:

Sukumar Swaminathan said...

அயாம் தி பர்ஸ்ட்.....

தராசு said...

very interesting.

கலக்குங்கண்ணே.

தீபாவளி வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

இந்த வாரம் மிகவும் சுவாரஸ்யம்.

எவனோ ஒருவன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

தமிழ்நெஞ்சம் said...

fantastic quote

//ஆனால் வந்த படங்களில் ஈ பெரிய வெற்றி பெற்றது.. என்பதை மறுக்க முடியாது.. மீண்டும் சொல்கிறேன். இம்மாதிரியான சிறப்பான படங்கள் மட்டுமே சில விஷயங்களை உடைத்து வெற்றி பெரும்..

Sivakumar K said...

Happy Diwali .....

ஊடகன் said...

தலைவா........ நீங்கள் சொல்வதும் சரிதான்.....ஆனால்,

இன்று பெரிய நடிகர்களின் பெரிய படங்களை விட, சிறிய நடிகர்களின் சிறய படங்களே ஓடுகிறது.....

வரலாறு வந்த நேரத்தில் ஈ, வல்லவன், போன்ற படங்கள் வந்தது....

வரலாறு BOX-OFFICE- இல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.......
ஈ படமும் மிக பெரிய வெற்றியை அடைந்தது.........

சமீப காலமாக எந்த படமும் நல்லா இருந்தாலும் 100 நாள் ஓடுவதில்லை, ஆனால் ஓட்டுகிறார்கள்.
ஏனெனில் படம் வந்த 30 நாளிலே போட்ட காசை எடுத்து விடுகிறார்கள்...அதிக திரை அரங்குகளில் வெளியிடுவதாலே இந்த நிலை,,,,,,,,,,,,,,,

வரலாறு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தும் நாள் ஒட்டவில்லை.... இதுவே விஜய், சிம்பு போன்றவர்களின் படம் இந்த அளவு வெற்றியடிந்தால் வெள்ளி விழா கொண்டாடி விடுவார்கள்.........

ஆனால் ஈ படம் ஜீவாவின் அப்பாவின் கட்டுபாடிலே 100 நாள் ஓடியது.......

மருதமூரான். said...

சினிமாவின் தயாரிப்பு, விநியோக சூட்சுமங்களை விவரமாக சொல்கிறீர்கள். சினிமா எடுத்து வெற்றி பெறுவதென்பது மிகப்பெரிய சாதனையாகவே கருதப்பட வேண்டும் போல இந்த பதிவை வாசிக்கும் போது தோன்றுகிறது.

பின்னோக்கி said...

சில் படங்களை ஒரு வாரம் ரிலீஸ் செய்துவிட்டு எடுத்துவிடுவார்கள். அப்புறம் சில காலம் கழித்து மறுபடியும் வெளியிட்டு அந்த மாதிரி சில படங்கள் வெற்றியடந்திருக்கிறதா ? அதைப்பற்றியும் எழுதுங்கள்.

எனக்கு தெரிந்து ஒரு படம், ரிலீஸ் ஆனது. ஒரு வாரத்தில் எடுத்துவிட்டார்கள். பிறகு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் வைத்து சில காட்சிகளை சேர்த்து, குறைத்து வெளியிட்டார்கள். படத்தின் பெயர் கும்மாளம் என நினைக்கிறேன். அதைப்பற்றியும் எழுதுங்கள்.

சஹானா beautiful raga said...

//சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வதை போல//

இப்ப எல்லாம் இத தான் எல்லாரும் செய்யறாங்க, வியாபாரம் நல்லா பண்ணறீங்க,

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

Nice post

வெண்பூ said...

வித்தியாசமான செய்திகள், தெளிவான தகவல்கள்.. நன்றி கேபிள்..

kanagu said...

romba interesting ah irundhudu na.. :)

iniya deepavali nalvazthukkal :)

Karthick Krishna CS said...

வரலாறு படம் ஓடிச்சா இல்லையா??...

ஆண்மை குறையேல்.... said...

Boss, I want to talk to u abt this. Can I mail u?

கார்க்கி said...

தெய்வமே!!! வரலாறு ஹிட்டுதான் என்றாலும் சென்னையிலே அது 100 நாளை தாண்டவில்லை. ஈ தான் பெரிய வெற்றி என்றால் தல ரசிகர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இப்ப இதை ஆதாரமாக காட்டுவேன்.

400 ஃபாலோயர்ஸூக்கு வாழ்த்துகள். நான் 380 தொட்டபோது 340 தான் உஙக்ளுடையது. எனக்கு முக்கி முக்கி இப்பொதுதான் 393 ஆகியிருக்கு. வலையுலகில் இப்போது உங்க சீசன். கலக்குங்க பாஸ்.

VISA said...

தலைவரே...நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி படங்களுக்கு உங்க விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்.

விசா

ஹாலிவுட் பாலா said...

தீபாவளி வாழ்த்துக்கள் சங்கர்! :)
==

இனிமே நாள் கணக்கில் ஓட்டும் ‘கதை’யெல்லாம் படத்தின் வெற்றியை குறிக்காது-ன்னு எல்லோருக்கும் தெரிஞ்ச பின்னும், 100-200 எல்லாம் கொண்டாடிகிட்டு இருக்காங்க.

T.V.Radhakrishnan said...

கலக்குங்க.

தீபாவளி வாழ்த்துக்கள்

Cable Sankar said...

@சுகுமார்
நன்றி.. போய் கல்யாணம் பண்ணிட்டு புள்ளை குட்டிகளை படிக்க்வை..

@தராசு
நன்றி..

@எவனோ ஒருவன்
மிக்க நன்றி

@

Cable Sankar said...

@தமிழ் நெஞ்சம்
மிக்க நன்றி

2சிவகுமார்
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிவகுமார்

Cable Sankar said...

/தலைவா........ நீங்கள் சொல்வதும் சரிதான்.....ஆனால்,

இன்று பெரிய நடிகர்களின் பெரிய படங்களை விட, சிறிய நடிகர்களின் சிறய படங்களே ஓடுகிறது.....//

உண்மைதான்.

//வரலாறு வந்த நேரத்தில் ஈ, வல்லவன், போன்ற படங்கள் வந்தது....

வரலாறு BOX-OFFICE- இல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.......
ஈ படமும் மிக பெரிய வெற்றியை அடைந்தது.........

சமீப காலமாக எந்த படமும் நல்லா இருந்தாலும் 100 நாள் ஓடுவதில்லை, ஆனால் ஓட்டுகிறார்கள்.
ஏனெனில் படம் வந்த 30 நாளிலே போட்ட காசை எடுத்து விடுகிறார்கள்...அதிக திரை அரங்குகளில் வெளியிடுவதாலே இந்த நிலை,,,,,,,,,,,,,,,

வரலாறு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தும் நாள் ஒட்டவில்லை.... இதுவே விஜய், சிம்பு போன்றவர்களின் படம் இந்த அளவு வெற்றியடிந்தால் வெள்ளி விழா கொண்டாடி விடுவார்கள்.........//

இப்போதெல்லாம் நூறு நாள் எல்லாம் இலக்கில்லை.. வசூல் மட்டுமெ குறியீடு.. அதனால் வரலாறு ஹிட்டே..

//ஆனால் ஈ படம் ஜீவாவின் அப்பாவின் கட்டுபாடிலே 100 நாள் ஓடியது.......
//

அப்படி சொல்ல முடியாது ஊடகன்.

Cable Sankar said...

@மருதமூரான்
ஆமாம் சினிமா ஒன்றும் விளையாட்டில்லை

@பின்னோக்கி
கும்மாளம் வெளியான போதே தோல்வி அடைந்த படம்.. அதன் பிறகு வெளியாகவில்லை.. நீங்கள் சொல்வது போல் நடந்ததில்லை.. முதல் சில வாரஙக்ளில் தியேட்ட்ரிலிருந்து வெளியேற்றபட்ட படம் மெல்ல மவுத்டாக்கினால் வலுவடைந்து மேலும் பல செண்டர்களில் ஓடியிருக்கிறது.

Cable Sankar said...

@சஹானா
அப்படியில்லை. வாழ்த்துக்கு மிக்க நன்றி உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்

@நைனா
நன்றி

@வெண்பூ
மிக்க நன்றி

@கனகு
விஸ்யூத சேம்


@கார்த்திக் கிருஷ்னா
வரலாறு ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்

@ஆண்மை குறையேல்
நிச்சயமாக மெயில் செய்யுங்கள்.

@

Cable Sankar said...

@கார்க்கி
வரலாறு பெரிய ஹிட்தான். நூறு நாட்கள் எல்லாம் ஒரு அளவு கோலே இல்லை சில வருடங்களாய். வரலாறு ரொம்ப காலம் ப்ரொடக்‌ஷனிலேயே இருந்தததால் பட்ஜெட் அதிகம்.

ஈ பட்ஜெட் சிறியது அதில் அது வசூல் செய்தது அதிகம் அந்த முறையில் அதுவ்ம் ஹிட்தான்

உங்கள் வாழ்த்துக்கு மிக்க்நன்றி

@விசா
நன்றி விசா

Cable Sankar said...

@ஹாலிவுட்பாலா
அதானே பாலா..

@ராதாகிருஷணன்
நன்றி சார். தீபாவளி வாழ்த்துக்க்ள்

கார்க்கி said...

//வரலாறு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தும் நாள் ஒட்டவில்லை.... இதுவே விஜய், சிம்பு போன்றவர்களின் படம் இந்த அளவு வெற்றியடிந்தால் வெள்ளி விழா கொண்டாடி விடுவார்கள்//

ஊடகன், வரலாறுக்கு பின் வந்து 100 நாட்கள் ஓடிய பரமசிவன்,திருப்பதி(ஆல்பர்ட்), கிரீடம், பில்லா(சங்கம்) எல்லாம் நிஜமாவே 100 நாள் ஓடி வரலாறு படத்தின் வரலாற்றை முறியடித்ததோ என்னவோ!!!!

D.R.Ashok said...

Interesting தலைவரே...

நமக்கு daily deepavali தான் இருந்தாலும் வாழ்த்துகள்.

மங்களூர் சிவா said...

Interesting.

மங்களூர் சிவா said...

தீபாவளி வாழ்த்துக்கள்

அருண்மொழிவர்மன் said...

//பிரபலமில்லாத நடிகர்கள் நடித்த படத்தையோ ரீலீஸ் செய்வது, சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வதை போல..
, சின்ன படங்களை பார்க்க ஆளில்லாமல காத்தாட, படம் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்காமல் போய் தோல்வி படமாய் ஆகிவிட வாய்ப்பு உள்ளது//

பார்த்திபனின் புதிய பாதை கூட இப்படி வெளியாகி வெற்றி பெற்றா படம். இது பற்றிய அவரது விளாம்பரம், பின்னர் வெற்றி விழாவில் ரஜினி சொன்னது எல்லாம் பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்தில் இருக்கின்றது..........

Cable Sankar said...

@kaarki
/ஊடகன், வரலாறுக்கு பின் வந்து 100 நாட்கள் ஓடிய பரமசிவன்,திருப்பதி(ஆல்பர்ட்), கிரீடம், பில்லா(சங்கம்) எல்லாம் நிஜமாவே 100 நாள் ஓடி வரலாறு படத்தின் வரலாற்றை முறியடித்ததோ என்னவோ!!!!


பில்லா தவிர எல்லா படமுமே ஓட்டப்பட்டதுதான் கார்க்கி

Cable Sankar said...

/
நமக்கு daily deepavali தான் இருந்தாலும் வாழ்த்துகள்.
//

அசோக்..நீங்க சொன்ன மாதிரி நமக்கெள்ளாம் தினந்தோறும் திபாளி.

Cable Sankar said...

@மங்களூர் சிவா
நன்றி
@அருண்மொழி வர்மன்
நன்றி

[v] said...

Really Good Post and usefull for the fresher in cinema industry.

[v] said...

Really Good Post and usefull for the fresher in cinema industry.