Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Oct 30, 2009

சினிமா வியாபாரம் - 10

திரையரங்க வெளியீடு

வாடகை முறை (Rental)

dharani-vijay ஏற்கனவே சொன்னது போல சென்னை மற்றும் பெரும்நகரங்களில் பெரும்பாலும் சிங்கிள் ஸ்கீரின் எனப்படும் ஒற்றை திரையரங்குகளாக இருந்தாலும், காம்ப்ளெக்ஸ் என்கிற அடுக்கக திரையரங்குகளாய் இருந்தாலும் வாடகை முறைதான் நடைமுறையில் இருக்கிறது. அது ஒவ்வொரு திரையரங்குக்கும், ஏரியா, மற்றும் அரங்கில் ஆட்கள் கொள்ளவை பொறுத்து மாறுபடும். சென்னையில் உள்ள ஒரு சுமாரான ஏசி, டி.டி.எஸ்ஸுடன் உள்ள திரையரங்குக்கு சுமார் ஒரு லட்சம் வரை வார வாடகையாய் வாங்குகிறார்கள் என்று கேள்வி. பகல் காட்சி போன்ற ஒரு காட்சிக்கு ஒரு வாடகையாகவும் வாங்குகிறார்கள். தேவி போன்ற திரையரங்குகளில் வாரத்துக்கு இரண்டரை லட்சம் வரை வாடகை வாங்கியிருக்கிறார்கள். தேவிபாலாவில் நாங்கள் வெளியிட்ட உயிரிலே கலந்தது படத்திற்கு கொடுத்திருக்கிறோம்.

இதில் ஒரு காமெடி என்னவென்றால் அவர்கள் முதல் வார வசூலில் வரும் பணத்தில் இரண்டரை லட்சம் ரூபாயை எடுத்து வைத்து கொண்டு மீதியைதான் தருவார்கள் ஏன் என்று கேட்டால் அதை ‘புரொட்டக்‌ஷன் மணி” என்பார்கள். யாருக்கு என்று கேட்ட போது.. உங்களூக்கு தான் ஒரு வேளை அடுத்த வாரம் வாடகை பணம் கூட வசூல் ஆகவில்லை என்றால் நீங்கள் பணத்துக்காக கஷ்டபட வேண்டாமே.. என்றார்கள்.. இது யாருக்கு புரொடெக்‌ஷன்..??. ஆனால் இப்போதெல்லாம் சில சமயம் சென்னை மற்றும் பெரு நகரங்களில் உள்ள தியேட்ட்ர்களிலும் பர்செண்டேஜ் எனப்படும் சதவிகித முறையில் கூட படங்களை திரையிடுகிறார்கள்.

எம்.ஜி.(Minimum Gurentee)

தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் எம்.ஜியில் (Minimum Gurantee) வாங்குவது போல தியேட்டர் அதிபர்கள் பெரிய படங்களுக்கு இம்முறையில் திரையிடுவார்கள். இப்போது விநியோகஸ்தர் ஒரு படத்தை சுமார் 80 லட்ச ரூபாய்க்கு செங்கல்பட்டு ஏரியாவுக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள். செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் சென்டர் மட்டும் சுமார் 50 தியேட்டர்கள் உண்டு. ரிலீஸ் சென்டர் என்றால் புதிய படங்களை மட்டுமே வெளியிடுகிற திரையரங்குகள். அப்படி ரிலீஸ் சென்டர் என்ற வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், படமாய் இருந்தால் சுமார் 18 தியேட்டரிலிருந்து 25 தியேட்டர்களில் கூட ஒரே சமயத்தில் வெளியிடுவார்கள். அப்போது ஒவ்வொரு தியேட்டர் அதிபரும் தங்கள் ஏரியாவில் இதற்கு முன்பு அந்த நடிகர் நடித்த படங்கள் எவ்வளவு வசூல் செய்தது, இப்போது எவ்வளவு வசூல் செய்யும் என்றெல்லாம் கணக்கு போட்டு, இவ்வ்ளவு வசூல ஆகும் என்று எண்ணும் ஒரு தொகைக்கு அவர் பேரம் பேசி விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொள்வார்.

ஒரு கணக்குக்கு பதினைந்து தியேட்டர்களில் வெளியிடப்போகும் படத்துக்கு, ஒவ்வொரு தியேட்டருக்கும் சுமார் ஐந்து லட்சம் எம்.ஜி என்று வைத்து கொள்ளுங்கள்.. பதினைந்து தியேட்டருக்கு எழுபத்தியைந்து லட்ச ரூபாய் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்துவிடுகிறது. மீத இருக்கிற ஐந்து லட்சம் ரூபாய்தான் அவர்கள் முதலாக இருக்கிறது. மேலும் படத்துக்கான போஸ்டர்கள், அது இது என்று செலவுகள் ஒரு சில லட்சஙக்ள் ஆனாலும், அவர்கள் கையிலிருந்து போடும் தொகை மிக சொற்பமானதாகவே தெரியும் ஆனால் அதுவல்ல உண்மை.

ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு பெரிய படத்தை வெளியிட முடியுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நிச்சயமாய் முடியாது. பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு படம் ஆரம்பித்தவுடனேயே சில சமயம் வியாபாரம் பேச் ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் அவர்களுடய முந்தைய படம் ஹிட்டாகியிருந்தால் நிச்சயம் போட்டா போட்டி நடக்கும். அப்படி போட்டி இருக்கும் பட்சத்தில், விநியோகஸ்தர்கள் முன் பணமாய் ஒரு சில லட்சங்களை கொடுத்துக்கூட வைத்து விடுவார்கள். இல்லையேல் ஒரு கோடி ரூபாய் படத்திற்கு சில தயாரிப்பாளர்கள் முன் பணமாய் சில லட்சத்தையும், ஆடியோ ரிலீசுக்கு முன் சில லட்சஙக்ளையும், ரிலீஸ் அன்று மீதம் இருக்கிற பணத்தை கட்டி படத்தின் பிரதியை எடுப்பார்கள்.

இம்மாதிரியான சமயங்களில் சில பெரிய படங்கள் ஆறு மாதம் கூட தயாரிப்பில் இருக்கும். அப்போது விநியோகஸ்தர்கள் கொடுத்திருக்கும் முன்பணத்துககான வட்டியை கணக்கில் இட்டால் உங்களுக்கு புரியும்.
madura1

ஒரு நடிகரின் படம் முந்தைய படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டால், அடுத்த பட தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்தான். அப்படித்தான் விஜயின் கில்லி திரைப்படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான நேரம். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர், தயாரிப்பாள்ர் மாதேஷ் விஜய்யை வைத்து ‘மதுர்’ என்கிற படத்தை ஆரம்பிக்க பூஜை போட்டிருக்க, பூஜை போட்டவுடன் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை பேச போன என் நண்பர் ஒரு அவர் சொன்ன விலையை கேட்டு மிரண்டு போய் வந்துவிட்டார். அவரை போலவே மேலும் பல விநியோகஸ்தர்கள் திரும்ப, கில்லி படம் ரிலீஸ் ஆனது.

அப்படத்தின் மாபெரும் வெற்றி.. அதே மதுர படத்திற்கும் மாதேஷுக்கு பெற்றுதந்த செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமைக்கான பணம் எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல். இதற்கு முன்பு மாதேஷ் அவர்கள் விநியோகஸ்தர்களிடம் கேட்ட தொகை வெறும் 75 லட்சங்கள். இதுதான் சினிமா. சரி திரையரங்கு அதிபர்களூக்கும் விநியோகஸ்தர்களுக்குமான எம்.ஜி விஷயத்துக்கு வருவோம்.

அப்படி ஐந்து லட்ச ரூபாய்க்கு தியேட்டரில் போடப்படும் ஒப்பந்தம். சதவிகித முறையில் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் பிரித்து கொள்வார்கள். அதாவது.. முதல் வாரத்தில் அறுபது சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கும், மீதம் 40 சதவிகிதம் தியேட்டர்காரர்களுக்கும் என்றும், அடுத்து வரும் வாரங்களில் 55-45, அதற்கு அடுத்து வரும் வாரங்களில் 50-50 என்ற முறையில் பிரித்து கொள்வார்கள்.

இதில் விநியோகஸ்தர்களுக்கான சதவிகிதத்தில் அவர்களின் ஐந்து லட்ச ரூபாய் வசூல் வரும் வரை அவர்கள் விநியோகஸ்தர்களுக்கு கணக்கு மட்டும் கொடுத்தால் போதும். எப்போது அவர்களின் ஐந்து லட்சத்தை அவர்கள் வசூல் செய்துவிடுகிறார்களோ.. மீதி வரும் வசூல் எல்லாம் அவர்களின் ஒப்பந்தப்படி ஆளுக்கு 50-50 என்று பிரித்து கொள்வார்கள்..

இதெல்லாம் வசூல் ஆகும் போதுதான். அதே சமயம் கொடுத்த ஐந்து லட்சம் கூட வசூல் ஆகவில்லை என்றால் விநியோகஸ்தர்களுக்கு கவலையில்லை.. ஏனென்றால் ஐந்து லட்சத்திற்கு குறைவாக வந்தால் எம்.ஜி எனப்படும் மினிமம் கேரண்டி என்ற முறையில் நஷ்டம் அவர்களை சாராது.

அட பரவாயில்லையே விநியோகஸ்தர்களுக்கெல்லாம் கொள்ளை லாபம் போலருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு.. இந்த மாதிரி எம்.ஜி எல்லாம் விநியோகஸ்தர்கள் பெரும் விலை கொடுத்து வாங்கும் பெரிய நடிகர்கள், இயக்குனர் படங்களுக்குத்தான். மற்றவர்களுக்கெல்லாம் வேறு கதை.

இப்போது தமிழில் பெயர் வைத்திருக்கும் படத்திற்கு வரி கிடையாது என்பதால் வரும் பணத்தை அப்படியே பிரித்து கொள்கிறார்கள். இதற்கு முன்னால் இவர்கள் ஒப்பந்தம் போடும் போது கிராஸில் 60-40, அல்லது நெட்டில் 60-40 என்று போட்டு கொள்வார்கள்.

அதென்ன க்ராஸ் என்றால் டாக்ஸுடன் வரும் தொகை (Gross Amount). வரி போக வரும் தொகை நெட்(Net amount). என்று சொல்வார்கள். விநியோகஸ்தரை பொருத்தவரை க்ராஸில் பிரித்தால் அவர்களுக்கு லாபம், அதே சமயம் தியேட்டர்காரர்களுக்கு நெட்டில் பிரித்தால் இரண்டு லாபம், ஒவ்வொரு டிக்கெட் விலையிலும், வரியை கழித்துவிட்டு மீதம் வசூல் ஆகும் தொகையில் அவருடய எம்.ஜி பணத்தை கழிக்கலாம். வரியை பிடித்தால் எப்படி அவருக்கு இரட்டை லாபம் என்று கேட்பவர்களுக்கு, வரியை ஏய்க்கும் தியேட்டர்காரர்களின் தில்லு முல்லுகளை பின்னால் வரும் அத்யாயங்களில் பார்ப்போம்.

26 comments:

vijay said...

நிறைய செய்திகளை உள்ளடக்கி வரும் நல்ல தொடர். வாழ்த்துக்கள்.

Jana said...

சிறப்பான ஒரு தொடர் தெரியாத பல விடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் நண்பரே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க... தொடர்ந்து எழுதுங்க ..

பின்னோக்கி said...

படத்துல குத்துபாட்டு வரும் போது கோவமா வரும். ஆனா, இவ்வளவு வியாபாரம், இவ்வளவு மக்கள் இதுக்கு பின்னாடி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை. அதையும் மீறி டைரக்டர் படம் எடுத்து வெளியிட்டு நல்ல பேர் வாங்கனும்னா எவ்வளவு கஷ்டம்னு புரியுது. இந்த வியாபார கஷ்டங்கள் தான் பார்முலா படங்கள் வர வைக்கிறது என நினைக்கிறேன்.

ஆண்மை குறையேல்.... said...

த‌ல‌... இவ்ளோ மேட்ட‌ர் கீதா? பேஜாராகீதே...

பித்தன் said...

roma nalla pathivu, thodarungal

KaveriGanesh said...

பங்கு சந்தையில் டெக்னிக்கல் அனாலிசிஸ், ஃபன்டமன்டல் அனாலிசிஸ் இரண்டு இருக்கும், பங்குகளை பற்றி முழுமையாக கற்றுகொள்ள.அதை போல் இருக்கிறது, உங்களூடைய திரைபடம் வியாபாரம் பாடங்கள்.

ஏன் இந்த டாபிக்கில் நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு ஓரு கருத்தரங்கம் நடத்தக்கூடாது?

K.S.Muthubalakrishnan said...

Sir,

Quite intersting," ya dil mange more"

தண்டோரா ...... said...

கண்டேன் கேபிளை

Punnakku Moottai said...

Hello Cable,

Good! Good!! Good!!!

If I continue reading your post on this 'Cinema Business', I am sure I will be dragged into this business. You are presenting it so good, that leaves a temptation.

Would you recommend me invest my hard earned savings of Rs. 25 Lakhs in this business without knowing any bit of it? Stand on my shoes to advise me please.

Regards,

Bala.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

அருமையாகப் போகிறது ஜி.

பரிசல்காரன் said...

புண்ணாக்கு மூட்டை என்ற நக்கலான பெயரிலிருந்தாலும் அவரது பின்னூட்டமே நீங்கள் எத்தனை பேருக்கு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி!

கலக்குங்க!

கார்க்கி said...

தல, நான் கேள்விப்பட்டது.உண்மையா என சொல்லுங்கள். ஒரு சில நடிகர்கள் மட்டுமே, தஙக்ளது முந்தைய படம் ஃப்ளாப் என்றாலும் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தேவையில்லை என்ற ஸ்டார் அந்தஸ்து பெற்றவர்களாம். முன்பு ரஜினி,கமல்,விஜய்காந்த், விஜய், அஜித் என்றார்கள். அது மாதிரி இன்னும் இருக்கிறதா? ஆமெனில் சூர்யா அதில் சேர்ந்துவிட்டாரா? விஜய்க்கு இப்போதைக்கு என்ன மவுசு? மூன்று தோல்விப்படஙக்ள் என்பதால் வினியோகஸ்தர்கள் குறைத்து கேட்கிறார்களா?

ஜெட்லி said...

இவ்ளோ மேட்டர் இருக்கா??

ராஜன் said...

அருமை... தொடருங்கள்...

KaveriGanesh said...

//ஏன் இந்த டாபிக்கில் நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு ஓரு கருத்தரங்கம் நடத்தக்கூடாது? //


இதைபற்றியும் யோசியுங்கள்...ரெண்டாவது ஆளா நானும் கலந்துக்கொள்ளுவேன்... முதல் ஆள்...KaveriGanesh ஆக இருக்கலாம்.

க.பாலாசி said...

சினிமா பற்றிய நிழல் தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

நர்சிம் said...

மெருகு கூடியிருக்கிறது எழுத்தில்.சில இடங்கள் முன்பு வேறு மாதிரி எழுதிவீர்கள்.இப்பொழுது வார்த்தை வசமாக வருகிறது.

கலக்குங்க தொடர்ந்து.

T.V.Radhakrishnan said...

நல்ல தொடர்

The EMPEROR said...

Hi,
I am also planing to invest in cine field(Mainly Distribution Line).kindly help me.
Thanks
By
Premkumar
premkumar2184@gmail.com

sriram said...

யூத்து,
கடந்த மூணு பாகங்களில் நெறய வித்தியாசம் தெரிகிறது, முந்தைய பகுதிகள் படிக்க ஆரம்பிச்ச உடனேயே முடிந்து விட்ட மாதிரி இருக்கும், இப்போல்லாம் ஒரு Complete Feeling கிடைக்கிறது.
படிக்கும் போது எனக்கு தோன்றியது அப்படியே நர்சிமுக்கும் - ஆச்சர்யம்..
தொடர்ந்து கலக்குங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செ.சரவணக்குமார் said...

அருமை, தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வரவேண்டிய தொடர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கியின் கவலையை பாத்தீங்களா தலை.?

(டாபிக் to the core ரொம்பவும் தொழில் சார்ந்ததா இருக்குதே.. தூக்கம் வந்துறப்போவுது. இடையிடையே ஏதாவது காமெடி, பாட்டு, பைட்டு போடுங்க..)

kanagu said...

விஷயம் நிறையா இருக்கு அண்ணா இந்த பதிவுல... ஏதோ கொஞ்சம் புரிஞ்சுது,,,

மங்களூர் சிவா said...

nice.

புலவன் புலிகேசி said...

தொடருங்கள் நண்பரே.....நெறய தெரிஞ்சிக்கணும்.........

shortfilmindia.com said...

@vijay
நன்றி

@ஜனா
மிக்க நன்றி ஜனா

@குறை ஒன்றும் இல்லை
மிக்க நன்றி

@பின்னோக்கி

எந்த ஒரு இயக்குனருக்கும் வர்தக வெற்றியை வைத்தே அவரின் எதிர்காலம் நிச்சயக்கப்படுகிறது.

@ஆண்மை குறையேல்
பின்னே சும்மாவா