பதிவெழுதி என்னத்தை கிழிச்சே, பத்து பைசாவுக்கு பிரயோஜனமா..? என்று கேட்கிறார்கள். இப்படி பதிவெழுதுவதை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தெரியாது பதிவெழுதுவதால் மிகச் சிற்ந்த நட்புகள் கிடைக்கிறது. அந்த நட்புகளின் ஆழம், அதுவும் ஒரே வேவ் லெந்தில் கிடைக்கும் நட்புகள், எந்த விதமான எதிரிபார்ப்பும் இல்லாத நட்புகள். ஒருநாள் அருண்குமார் என்பவரின் பதிவை படித்து கொண்டிருந்த போது அதில் ஒரு கன்னட படத்தை பற்றி எழுதியிருந்தார். எனக்கு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியதால். அவருக்கு எங்கே கிடைக்கும் என்று கேட்டிருந்தேன். அடுத்த நா அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உங்கள் முகவரியை கொடுங்கள் உஙக்ளுக்கு டிவிடியை அனுப்புகிறேன். என்று சொன்னபடியே இரண்டு நாளில் டிவிடி வந்து அந்த படத்தை பார்த்தாகிவிட்டது. இந்த நட்பு எதனால் ஏற்பட்டது.? எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு இங்கே கிடைக்கும் என்று பதில் எழுதிவிட்டு போயிருக்கலாம். இல்லாவிட்டால் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். எதனால் இந்த நட்பு..? பதிவெழுதுவதுனாலேதானே..? அந்த நண்பர் அருண்குமாருக்கு இந்த பதிவின் மூலம் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என்னுடய் மாமியார் வீட்டின் கீழே ஒரு வீட்டில் அடிக்கடி ஒரு பெண்ணின் குரல் அவவளவாக சுருதியில்லாமல் இருந்தாலும் ஒரு ராகமாய் “வாடா மாப்ள.. வாழைப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா..?” என்று வில்லு பட பாட்டை பாடிக் கொண்டேயிருப்பாள். எனக்கு தெரிந்து நான் அங்கிருந்த ஒரு நாளில் பத்து முறையேனும் பாடியிருப்பாள். எனக்குள் இருந்த ஆர்வகுட்டி கிளம்ப.. கீழிறங்கி.. அப்படியே நடப்பது போல் நடந்து வீட்டை க்ராஸ் செய்து, போக, அப்போது அவள் அந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாள். கேட்டேவிட்டேன் அவளின் “ அட நீங்க வேற சர்வேஷப்பா.. என் குழந்தையை தூங்க வைக்கத்தான் இந்த பாட்டு, இந்த பாட்டை விட்டா வேற பாட்டை கேட்டு தூங்க மாட்டா. அதான் வேற வழியில்லாம தெனம் இந்த பாட்டை மனப்பாடம் பண்ணி பாடறேன்.. அது சரி.. நான் அவ்வளவு நல்லாவா பாடறேன்..? என்று கேட்டாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
திண்டுக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது பூட்டுக்கு அப்புறம், தலப்பாக்கட்டு பிரியாணி.. நம்மூரில் முக்குக்கு முக்கு திறந்திருக்கும் தலப்பாக்கட்டு ஒரு டுபாக்கூர்.. ஆனால் திண்டுக்கல்லில் பிரபலம் தலப்பாக்கட்டு இல்லை. பொன்ராம் பிரியாணிதான். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வாசலிலிலேயே ஒரு கடை இருந்தது. பிரியாணி வாங்க சென்ற போது பதினோரு மணிக்குதான் வரும் என்றார்கள். சரியாய் பதினோரு மணிக்கு சென்றால் பத்து போர் லைனில் இருந்தார்கள். விலையை கேட்டேன் மயக்கமே வந்துவிட்டது. ஆஃப் மட்டன் பிரியாணி 96 ரூபாய். நாலு பேருக்கு வாங்கலாம்னு போனவன் ஒரு பாக்கெட் மட்டும் வாங்கி வந்தேன். டிரையின் கிளம்பியதும் பாக்கட்டை பிரித்து ஒரு வாய் உள்ளே வைத்தேன். ம்ஹூம்.. நல்ல சீரகசம்பா அரிசியில் கமகம வாசனையோடு நெய், மற்றும் மசாலாவுடன் சேர்ந்த மட்டனில் சூப்பர்பா.. இன்னும் ரெண்டு பாக்கெட் வாங்காம வந்திட்டோமேன்னு வருத்தபட்டேன். திண்டுக்கல் போனா டோண்ட் மிஸ்…
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஏ ஜோக்
அப்பாவும், மகனும் மிருககாட்சி சாலைக்கு போனார்கள். அப்போது மகன் ஒரு யானையை பார்த்தான்.
மகன்: அப்பா.. அந்த யானையிடம் தொங்குகிறதே அது என்னா..?
அப்பா: அது பேர் தும்பிக்கை
மகன்: முன்னாடியில்லப்பா.. பின்னாடி இரண்டு காலுக்கு நடுவுல் தெரியுதே அது என்ன..?
அப்பா: சற்றே யோசித்துவிட்டு.. அது யானையின் ஆண்குறி என்றார்.
மகன் அதை கேட்டு யோசித்து விட்டு. “அன்னைக்கு ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது அது ஒண்ணுமில்லைன்னு சொன்னாங்க..
அப்பா; ஆமாண்டா மகனே உங்க அம்ம்மாவுக்கு இதெல்லாம் ஒண்ணுமில்லதான் என்றார்.விரக்தியுடன்
ஜோக்
லவ்வுக்கும், 7:29க்கும் பின்னாடி என்ன ஒற்றுமை..?
ரெண்டுத்துக்கும் அடுத்து வரது ஏழரைதான். அதான் ஒத்துமை.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்று ஒரு தகவல்
குஜராத்திலிருது வ்ந்த இரண்டு பேர் நம் மக்களின் நிலைபார்த்து தங்கள் உடைகளை தியாகம் செய்தார்கள். ஒருவர் நம்ம காந்திஜி.. இன்னொருவர் நம்ம நமிதாஜீ
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

88 comments:
அயாம் தி பர்ஸ்ட் ....
உங்கள் வலைப்பூவிற்கு இதுதான் எனது முதல் விஸிட். இந்த இடுகையிலேயே தெரிந்துகொண்டேன் இது தொடரவேண்டிய வலைப்பூ என்பதை! உங்கள் எழுத்தைப் பார்த்தால் அனேகமாக நீங்கள் வா வாத்யாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன் பாட்டை கேட்டுறங்கிய குழந்தையாய் இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது!
திண்டுக்கல் பிரியாணி matter super..
A Joke also..
** பதிவர் அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்
** // அது சரி.. நான் அவ்வளவு நல்லாவா பாடறேன்..? என்று கேட்டாள். //
அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லியிருபீங்கன்னு எனக்கு தெரியும்... ஐ நோ .. ஐ நோ...
** திண்டுக்கல்ல யாரவது பதிவு நண்பர்கள் இருந்த ரெண்டு பொட்டலம் கட்டி அனுப்ப சொல்லுவோமாண்ணே..
** சாரிண்ணே எங்க தாத்தா சாகும்போது 'ஏ ஜோக்' படிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு செத்து போயிட்டாரு...
** காதலை போய் எழரைன்னு சொலீட்டீங்களே .... அது சரி.. எங்க மாதிரி யூத்து மனசு உங்களுக்கு எப்படி புரியும்...
** இன்று ஒரு தகவல் - தென்கச்சி பாத்தாருன்னா நோந்திடுவாறு......
சூப்பர் பதிவு…டெய்லி நான் திறந்து பார்க்கும் பதிவுகளில் உங்களதும் ஒன்று…..ஏ ஜோக் காரத்தை கொஞ்சம் குறைக்கலாமே..அல்லது தனிப் பதிவா போடலாமே..
வேணு கடைய மிஸ் பண்ணிடாதீங்க
ஹைய்யோ ஹைய்யோ:-)))
இன்றையத் தகவல் சூப்பர்:-))))0
இன்று ஒரு தகவலை சைடுல பக்கப்பட்டையில எழுதிவைங்கண்ணே :)))
செம்ம கலக்கல்!
நல்லா இருந்துச்சு புரோட்டா.
அதே போல திருச்சி இனாம் குள்ளத்தூர் ப்ரியாணி, ஆற்காடு ஸ்டார் பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க.
ஏ ஜோக்குக்கு ஏகப்பட்ட தளங்கள் இருக்கே?
பாஸ், உங்க தளத்துல ஏன்?
கேட்கணும் தோணுச்சு கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க.
//இன்று ஒரு தகவல்
குஜராத்திலிருது வ்ந்த இரண்டு பேர் நம் மக்களின் நிலைபார்த்து தங்கள் உடைகளை தியாகம் செய்தார்கள். ஒருவர் நம்ம காந்திஜி.. இன்னொருவர் நம்ம நமிதாஜீ//
அடங்கவே மாட்டீங்களா!!!!
ஆமா, அது என்னங்க அது ஆர்வக்குட்டி, சொல்லவேயில்ல.
திண்டுக்கலில் பொன்ராம் மற்றும் வேணு என்னும் கடையிலும் பிரியாணி சூப்பராக இருக்கும். வேணுவில் குவாண்டிட்டி அதிகமாக இருக்கும். ஆப் பிளேட் பிரியாணியே ஒரு சதுர மில்லி மீட்டர் இடைவெளி இல்லாமல் வயிற்றை நிரப்பி விடும்.
தலப்பாகட்டி தன் கிரீடம் இழந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
//பதிவெழுதி என்னத்தை கிழிச்சே, பத்து பைசாவுக்கு பிரயோஜனமா..? என்று கேட்கிறார்கள்.//
என்னை கூட ரொம்ப பேர் கேட்டாங்க அண்ணே....
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.
//ஆமாண்டா மகனே உங்க அம்ம்மாவுக்கு இதெல்லாம் ஒண்ணுமில்லதான் என்றார்.விரக்தியுடன்
//
கலக்கிட்டிங்க ஜி
ஆமாங்க.....
பதிவுலகில் பல தரப்பட்ட மக்களை சந்திக்க முடிகிறது ....
பிறகு திருச்சி யில் இனம்புதூர் பிரியாணி தான் பிரபலம் ....
இந்த மாதிரியான ஏ ஜோக் எல்லாம் நாங்க பால்வாடி படிக்கும் வயசில் கேட்டாச்சு .... புதுசா எதாவது சொல்லுங்க
\\குழந்தையாய் இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது!\\
ஜோக்க விட, இதுக்குத்தான்பா நல்லா சிரிச்சேன். நன்றி ஜெகநாதன்
இன்னா, குஜராத்லேர்ந்து ஆட்டோ அனுப்பமுடியாதுங்குற தைரியமா..?
இதுக்கு முன்னாடியே, இத வேற யாரோ சொல்லிக் கேட்ருக்கேன்.
சங்கர் சார்,
ஏ ஜோக் இந்த கொத்து பரோட்டாவில் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.
ஏ ஜோக் எனக்கும் பிடிக்கும், ஆனாலும் இப்படி பொதுவில் சொல்லும்போது இன்னும் கொஞ்சம் காரம் கம்மியானதை மட்டுமே அல்லது இலை மறைகாயாக உள்ளதை மட்டும் எழுதினால் நன்றாக இருக்கும்.
உங்கள் பதிவை தொடர்ந்து வாசிக்கும் உரிமையில் கேட்கிறேன்.
பிரியாணி, தாலாட்டு பாட்டு மேட்டர், ஓகே..... காந்திஜி, நமீதாஜி பரவாயில்லை. ஆனா, அந்த "A" ஜோக் தனியா போடலாமே.....
பிரியாணியோட மசாலா வாசனைய விட, இது கொஞ்சம் தூக்கலா இருக்கு...... மேட்டர் ஒன்னும் சீரியஸ் இல்ல... பாத்து பண்ணுங்க "தல"
தல,
திண்டுக்கல்ல வேணு பிரியாணிதான் டாப் என்பது எனது தாழ்மையான கருத்து. வேணு ஓட்டல் பிரியாணியும், கோலா உருண்டையும் நினைச்சாலே வாயூறுது.
அந்தப்பக்கம் ஒரு முறை போய் வரலாமா ?
மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு வந்தா அல்ரெடி ஏகப்பட்ட பின்னூட்டம். எனிவே 12 நாள் மெக்கா பயணத்தில் இருந்து திரும்பி வந்ததும் நான் போடும் முதல் பின்னூட்டம் :)
//பிறகு திருச்சி யில் இனம்புதூர் பிரியாணி தான் பிரபலம் //
சிறு மாற்றம் மேவிண்ணா...அது இனாம்புதூர் பிரியாணி அல்ல, இனாம்குளத்தூர் பிரியாணி.
//தல,
திண்டுக்கல்ல வேணு பிரியாணிதான் டாப் என்பது எனது தாழ்மையான கருத்து. வேணு ஓட்டல் பிரியாணியும், கோலா உருண்டையும் நினைச்சாலே வாயூறுது.
//
ஆமாம் வாசு அண்ணன் சொல்வதுதான் சரி என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
:)
//** காதலை போய் எழரைன்னு சொலீட்டீங்களே .... அது சரி.. எங்க மாதிரி யூத்து மனசு உங்களுக்கு எப்படி புரியும்...
//
யார்ப்பா இவ்ளோ தில்லா எங்க கேபிள் அண்ணாத்தய யூத் இல்லன்னு சொல்றது!!!!
உண்மையைச் சொன்ன சுகுமார் சாமிநாதன் அண்ணனுக்கு நன்றி
:))))))))))))
வாய்விட்டு சிரித்தேன்
/உங்கள் வலைப்பூவிற்கு இதுதான் எனது முதல் விஸிட். இந்த இடுகையிலேயே தெரிந்துகொண்டேன் இது தொடரவேண்டிய வலைப்பூ என்பதை! உங்கள் எழுத்தைப் பார்த்தால் அனேகமாக நீங்கள் வா வாத்யாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன் பாட்டை கேட்டுறங்கிய குழந்தையாய் இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது//
உங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி ஜெகன்நாதன்.. அதென்னா குழந்தை மேட்டர்.. ஏற்கனவே நான்ரொம்பவே யூத்து.. ஆனாலும் நீங்க என்னைஇனமும் யூத்தா பாக்க கூடாது..”:)
உள்ளேன் அய்யா...
/திண்டுக்கல் பிரியாணி matter super..
A Joke also..//
நன்றி விஜய் ஆனந்த..
/** பதிவர் அருண்குமாருக்கு வாழ்த்துக்கள் //
:)
** // அது சரி.. நான் அவ்வளவு நல்லாவா பாடறேன்..? என்று கேட்டாள். //
அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லியிருபீங்கன்னு எனக்கு தெரியும்... ஐ நோ .. ஐ நோ...//
ஒரு யூத் மனசு ஒரு யூத்துக்குதானே தெரியும் ச்குமார்.
//** திண்டுக்கல்ல யாரவது பதிவு நண்பர்கள் இருந்த ரெண்டு பொட்டலம் கட்டி அனுப்ப சொல்லுவோமாண்ணே.//
சூடா சாப்டாதான் நல்லாருக்கும்.. போய்ட்டு வ்ந்திருவோமா...
//** சாரிண்ணே எங்க தாத்தா சாகும்போது 'ஏ ஜோக்' படிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு செத்து போயிட்டாரு...//
அவரு தான் போயிட்டாரே. அவரு டாவு கட்ட கூடாதுனுகூட சொன்னாரு நாம கேட்டோமா..?:)
//** காதலை போய் எழரைன்னு சொலீட்டீங்களே .... அது சரி.. எங்க மாதிரி யூத்து மனசு உங்களுக்கு எப்படி புரியும்...//
இப்பத்தானே முத வரில யூத்தான என்னை புரிஞ்ச்ட்டு.. இருந்தீங்க.. அப்புற்ம். கல்யாணம் பண்ணி பாருடி.. அது ஆறரையா.. ஏழரையான்னு தெரியும்..
** இன்று ஒரு தகவல் - தென்கச்சி பாத்தாருன்னா நோந்திடுவாறு....//
எதுக்கு.. இன்பர்மேஷன் இஸ் வெல்த்னு சுஜாதா சொல்லிருக்காரு.. தெரியுமா...:)
/சூப்பர் பதிவு…டெய்லி நான் திறந்து பார்க்கும் பதிவுகளில் உங்களதும் ஒன்று…..ஏ ஜோக் காரத்தை கொஞ்சம் குறைக்கலாமே..அல்லது தனிப் பதிவா போடலாமே.//
நன்றி ராஜா.. ஏஜோக் காரம் கொறைக்கணுமா..இல்ல தனி பதிவா போட்டு ஏத்தணுமா..?
இன்னும் சாபிடல வேணுகடையில.. செல்வா..
மிக்க நன்றி துளசி கோபால்.
/இன்று ஒரு தகவலை சைடுல பக்கப்பட்டையில எழுதிவைங்கண்ணே :)))
செம்ம கலக்கல்//
போட்டுட்டா போச்சு..
/நல்லா இருந்துச்சு புரோட்டா.//
நன்றிண்ணே..
//அதே போல திருச்சி இனாம் குள்ளத்தூர் ப்ரியாணி, ஆற்காடு ஸ்டார் பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க.//
ஸ்டார் பிரியாணி பத்தி ஒரு தனி பதிவே போடணும்..
//ஏ ஜோக்குக்கு ஏகப்பட்ட தளங்கள் இருக்கே?
பாஸ், உங்க தளத்துல ஏன்?
கேட்கணும் தோணுச்சு கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க.
//
இதில தப்பா என்னங்க இருக்கு.. நிறைய பேர் ரசிக்கிறாஙக்..
/அடங்கவே மாட்டீங்களா!!!!
ஆமா, அது என்னங்க அது ஆர்வக்குட்டி, சொல்லவேயில்ல//
எதுக்கு அடங்கணும்.. அது என்னன்னு கேட்கிறீங்கல்ல.. அதான் ஆர்வக்குட்டினே.. தராசண்ணே..
/திண்டுக்கலில் பொன்ராம் மற்றும் வேணு என்னும் கடையிலும் பிரியாணி சூப்பராக இருக்கும். வேணுவில் குவாண்டிட்டி அதிகமாக இருக்கும். ஆப் பிளேட் பிரியாணியே ஒரு சதுர மில்லி மீட்டர் இடைவெளி இல்லாமல் வயிற்றை நிரப்பி விடும்.
தலப்பாகட்டி தன் கிரீடம் இழந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
//
மனுசன் பிரியாணி பத்தி எழுதினாலும்.. லிஸ்ட் போடுறாரேய்யா.. அடுத்த முறை வேணு கடைக்கி போயிர வேண்டியதுதான் முரளி.
ந்ன்றி ஜெட்லி.
/ஆமாங்க.....
பதிவுலகில் பல தரப்பட்ட மக்களை சந்திக்க முடிகிறது ....
பிறகு திருச்சி யில் இனம்புதூர் பிரியாணி தான் பிரபலம் ....
இந்த மாதிரியான ஏ ஜோக் எல்லாம் நாங்க பால்வாடி படிக்கும் வயசில் கேட்டாச்சு .... புதுசா எதாவது சொல்லுங்க
//
ஆமாம் மாயாவி..
திருச்சி பிரியாணி இன்னும் சாப்பிடல..
என்னாது பால்வாடியிலேவா.. பிஞ்சில பழுத்ததுக்கெல்லாம். ஜோக் எப்படி சொல்றதாம்.
/ஜோக்க விட, இதுக்குத்தான்பா நல்லா சிரிச்சேன். நன்றி ஜெகநாதன்
இன்னா, குஜராத்லேர்ந்து ஆட்டோ அனுப்பமுடியாதுங்குற தைரியமா..?
இதுக்கு முன்னாடியே, இத வேற யாரோ சொல்லிக் கேட்ருக்கேன்//
யோவ்.. உனக்கு மட்டும் புரிஞ்சி சிரிச்சா என்ன அர்த்தம்.. எனக்கும் சொல்லு.. அபுறமா ஆட்டோ அனுப்பு..
கொத்து பரோட்டா
பிரெஷ் பரோட்டா :)))) நன்று
/சங்கர் சார்,
ஏ ஜோக் இந்த கொத்து பரோட்டாவில் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.
ஏ ஜோக் எனக்கும் பிடிக்கும், ஆனாலும் இப்படி பொதுவில் சொல்லும்போது இன்னும் கொஞ்சம் காரம் கம்மியானதை மட்டுமே அல்லது இலை மறைகாயாக உள்ளதை மட்டும் எழுதினால் நன்றாக இருக்கும்.
உங்கள் பதிவை தொடர்ந்து வாசிக்கும் உரிமையில் கேட்கிறேன்.//
காரத்தை குறைக்க முயற்சி செய்கிறேன். அப்படி காரம் குறைத்தால் ஜோக் நீர்த்து போய்விடுகிறது..ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜோக்குகளை தமிழ் படுத்தி அதன் சாரம் குறையாமல், தகுந்த வார்த்தைகளை போட்டு எழுத பிரயத்தனபட்டுதான் எழுதுகிறேன். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
/பிரியாணி, தாலாட்டு பாட்டு மேட்டர், ஓகே..... காந்திஜி, நமீதாஜி பரவாயில்லை. ஆனா, அந்த "A" ஜோக் தனியா போடலாமே.....
பிரியாணியோட மசாலா வாசனைய விட, இது கொஞ்சம் தூக்கலா இருக்கு...... மேட்டர் ஒன்னும் சீரியஸ் இல்ல... பாத்து பண்ணுங்க "தல"
//
மேலே சொன்ன பதிலே ரிப்பீட்டு கோபி.. மிக்க நன்றி உஙக்ள் கருத்துக்கும் வருகைக்கும்.
/தல,
திண்டுக்கல்ல வேணு பிரியாணிதான் டாப் என்பது எனது தாழ்மையான கருத்து. வேணு ஓட்டல் பிரியாணியும், கோலா உருண்டையும் நினைச்சாலே வாயூறுது.
அந்தப்பக்கம் ஒரு முறை போய் வரலாமா ?//3
எப்ப போலாம்.. ஆனா பாடிட்டே போனா நல்லாருக்கும் இல்ல..??:)
தலைவா...வேணு பிரியாணிதான் டாப்..பொன்ராமும் சுவைத்திருக்கிறேன்..(வேணு பிரியாணி கடை முதலாளி சமீபத்தில் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்..அவர் குடும்பத்திற்கு என் இரங்கல்கள்...)
/மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு வந்தா அல்ரெடி ஏகப்பட்ட பின்னூட்டம். எனிவே 12 நாள் மெக்கா பயணத்தில் இருந்து திரும்பி வந்ததும் நான் போடும் முதல் பின்னூட்டம் :)//
மிக்க நன்றிண்ணே.. பயணம் எல்லாம் நல்லபடியா இருந்திச்சா..? உங்கள தேடி தராசண்ணே பதிவே போட்டுட்டாரு..
//பிறகு திருச்சி யில் இனம்புதூர் பிரியாணி தான் பிரபலம் //
இன்னும் சாப்பிடலைன்ணே..
//சிறு மாற்றம் மேவிண்ணா...அது இனாம்புதூர் பிரியாணி அல்ல, இனாம்குளத்தூர் பிரியாணி.
//தல,
திண்டுக்கல்ல வேணு பிரியாணிதான் டாப் என்பது எனது தாழ்மையான கருத்து. வேணு ஓட்டல் பிரியாணியும், கோலா உருண்டையும் நினைச்சாலே வாயூறுது.
//
ஆமாம் வாசு அண்ணன் சொல்வதுதான் சரி என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
:)//
:)
/யார்ப்பா இவ்ளோ தில்லா எங்க கேபிள் அண்ணாத்தய யூத் இல்லன்னு சொல்றது!!!!
உண்மையைச் சொன்ன சுகுமார் சாமிநாதன் அண்ணனுக்கு நன்றி
:))))))))))))//
முத சப்போர்ட் பண்ணிட்டு.. இரண்டாவதுல கவுத்திட்டீங்களேண்ணே..
நன்றி அது ஒரு கனாக்காலம்.
வாங்க வண்ணத்து பூச்சியாரே..
/தலைவா...வேணு பிரியாணிதான் டாப்..பொன்ராமும் சுவைத்திருக்கிறேன்..(வேணு பிரியாணி கடை முதலாளி சமீபத்தில் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்..அவர் குடும்பத்திற்கு என் இரங்கல்கள்...)//
இதோபார்டா.. இங்க ஒரு தகவல்.. எப்ப போலாம் வேணு பிரியாணி சாப்பிட..
அடுத்த மாதம் பதிவர் சந்திப்பு திண்டுக்கல்லில் வைத்துக் கொள்ளுவோமா? நண்பர்களை சந்திச்ச மாதிரியும் ஆச்சு, பிரியாணியை ஒரு கை பார்த்தமாதிரியும் ஆச்சு.
//குஜராத்திலிருது வ்ந்த இரண்டு பேர் நம் மக்களின் நிலைபார்த்து தங்கள் உடைகளை தியாகம் செய்தார்கள். ஒருவர் நம்ம காந்திஜி.. இன்னொருவர் நம்ம நமிதாஜீ//
அடடா.. நல்ல ஒப்பீடல்.
போருர் சிக்னல் டு கிண்டி சாலையில சிக்னலிலிருந்து நாலுகடை தள்ளி ஒரு ஆற்காட் பிரியாணிக்கடை இருக்கு, இருக்கும். நான் 2004ல் அங்கிருந்தபோது இருந்தது. பிரியாணிக்கு க்யூல நிப்பாங்கன்னா பாத்துக்குங்க.
அப்பறம் என்னுடைய பூக்கடைரவியை படிச்சிட்டீங்களா?
ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குறதால ஒரு கடைல சாப்பிட்டுட்டு உடனே ஆஹா.. ஓஹோன்னு சொல்லிடறதா..?
பெரியார் சிலை பக்கத்துல தலப்பாகட்டி நாயுடு கடை ஒண்ணு இருக்கு.. அங்க போய் சாப்பிட்டு பாரு தெரியும்..
வேலைக்குப் போனோமா? வேலையை முடிச்சோமா, வந்தோமான்னு இல்லாம.. திங்கற அயிட்டம் எங்க நல்லாயிருக்குன்னு மோப்பம் பிடிச்சிட்டு வந்தா.. எப்படியா திரையுலகம் வாழும்..?!!!
கர்மம்.. கர்மம்.. கர்மம்..
//அடடா.. நல்ல ஒப்பீடல்.
போருர் சிக்னல் டு கிண்டி சாலையில சிக்னலிலிருந்து நாலுகடை தள்ளி ஒரு ஆற்காட் பிரியாணிக்கடை இருக்கு, இருக்கும். நான் 2004ல் அங்கிருந்தபோது இருந்தது. பிரியாணிக்கு க்யூல நிப்பாங்கன்னா பாத்துக்குங்க.
அப்பறம் என்னுடைய பூக்கடைரவியை படிச்சிட்டீங்களா?//
இன்னும் படிக்கலைபாலாஜி.. படித்து விட்டு சொல்லிவிட்டு.
//ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குறதால ஒரு கடைல சாப்பிட்டுட்டு உடனே ஆஹா.. ஓஹோன்னு சொல்லிடறதா..?//
தலைப்பா கட்டி மார்கெட்டு போய் நாளாவுது அண்ணே..
//பெரியார் சிலை பக்கத்துல தலப்பாகட்டி நாயுடு கடை ஒண்ணு இருக்கு.. அங்க போய் சாப்பிட்டு பாரு தெரியும்..//
அங்கயும் சாப்ட்டு இருக்கிறேன்.
//வேலைக்குப் போனோமா? வேலையை முடிச்சோமா, வந்தோமான்னு இல்லாம.. திங்கற அயிட்டம் எங்க நல்லாயிருக்குன்னு மோப்பம் பிடிச்சிட்டு வந்தா.. எப்படியா திரையுலகம் வாழும்..?!!!//
சாப்டாம... இருந்து நீங்க மட்டும் என்ன வாழவச்சீட்டீங்க..?:)
கர்மம்.. கர்மம்.. கர்மம்//
கமகமகம
அண்ணா ,
அருமையான தகவல்கள்.அதுவும் கடைசி இன்று ஒரு தகவல் எப்புடி இப்படி !
பிரமாதம் .
தலைவர் பவர் அப்படி
பதிவெழுதி என்னத்தை கிழிச்சே, பத்து பைசாவுக்கு பிரயோஜனமா..? என்று கேட்கிறார்கள்.
இப்படி பதிவெழுதுவதை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தெரியாது பதிவெழுதுவதால் மிகச் சிற்ந்த நட்புகள் கிடைக்கிறது.
எதனால் இந்த நட்பு பதிவெழுதுவதுனாலேதானே
உண்மையான உண்மை .
//மகன் அதை கேட்டு யோசித்து விட்டு. “அன்னைக்கு ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது அது ஒண்ணுமில்லைன்னு சொன்னாங்க..
அப்பா; ஆமாண்டா மகனே உங்க அம்ம்மாவுக்கு இதெல்லாம் ஒண்ணுமில்லதான் என்றார்.விரக்தியுடன்
//
பையன் விளங்கிருவன்.
ஹா ஹா நல்ல ஜோக்.
நல்லாத்தான்யா.. எழுதிறீங்க
// நாலு பேருக்கு வாங்கலாம்னு போனவன் ஒரு பாக்கெட் மட்டும் வாங்கி வந்தேன். //
ஆமா, அப்ப அத அந்த 3 பேரு மத்தியிலேயே சாப்பிட்டீங்க... எறிஞ்சு போயிருப்பாங்களே :)
முகம் காணா நண்பர்களின் நட்பு இப்படி பட்ட வலைப்பூகளிள் கிடைக்கும் வரை தாரளமாக தொடரலாம் நம் எழுத்துபணியை சங்கர்... அந்த விஷயத்தை ஆமோதிப்பதற்கு சொட்டுகள். :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
கொத்து புரோட்டா, பிரியாணி, வாழைப்பழம்னு பின்னுறீங்களேய்யா!
அண்ணே கொத்துபரோட்டா கலக்கல்
/////குஜராத்திலிருது வ்ந்த இரண்டு பேர் நம் மக்களின் நிலைபார்த்து தங்கள் உடைகளை தியாகம் செய்தார்கள். ஒருவர் நம்ம காந்திஜி.. இன்னொருவர் நம்ம நமிதாஜீ/////
இதெயெல்லாம் ரோம் போட்டு யோசிக்கிறிங்களோ?
தேனி புரோட்டா, திண்டுக்கல் பிரியாணி பத்தியெல்லாம் நீங்க எழுதீட்டா நாங்க என்ன எழுதுறதுண்ணே.....
இங்க ஒரு பிரியாணி டிஸ்கஷனே போய்கிட்டிருக்குதே.. நா போய் வெண்பூவை கூட்டிக்கிட்டு வர்றேன், அப்புறம் பேசிக்கிறேன்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.. நானும் அருண்குமார் மாதிரிதான்.. நண்பர்கள் உதவின்னு கேட்டா சட்டுனு செஞ்சு முடிச்சுட்டுதான் அடுத்தவேலை பார்ப்பேன்
(இன்னும் இங்க குசும்பன், பரிசல் வரவில்லையல்லவா? வரமலிருப்பார்களாக.. ஹிஹி..)
யோவ் சங்கரு... இந்த சாப்பாட்ட பத்தில்லாம் எழுதாதீரு... ஃபிறிட்ஜ் சாப்பாட்ட சூடாக்கி சாப்புடுற நமக்கெல்லாம் கடுப்புகளை கிளப்பிக்கிட்டு... பொன்ராம் புரியாணி.. தலப்பாகட்டு புறியாணின்னுட்டு
/ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குறதால ஒரு கடைல சாப்பிட்டுட்டு உடனே ஆஹா.. ஓஹோன்னு சொல்லிடறதா..?
பெரியார் சிலை பக்கத்துல தலப்பாகட்டி நாயுடு கடை ஒண்ணு இருக்கு.. அங்க போய் சாப்பிட்டு பாரு தெரியும்..
வேலைக்குப் போனோமா? வேலையை முடிச்சோமா, வந்தோமான்னு இல்லாம.. திங்கற அயிட்டம் எங்க நல்லாயிருக்குன்னு மோப்பம் பிடிச்சிட்டு வந்தா.. எப்படியா திரையுலகம் வாழும்..?!!!
கர்மம்.. கர்மம்.. கர்மம்//
உண்மைத்தமிழன் அண்ணே..நீ ஒருக்கா மதுரையில கேப்டன் கல்யாணத்துக்கு பிரியாணி சாப்பிட போய்..உங்களை ரவுண்டு கட்டினது நெனைப்பு வருதுண்ணே....
/அண்ணா ,
அருமையான தகவல்கள்.அதுவும் கடைசி இன்று ஒரு தகவல் எப்புடி இப்படி !
பிரமாதம் //
நன்றி இது நம்ம ஆளூ.
நன்றி நர்சிம்..
/தலைவர் பவர் அப்படி//
நன்றி கார்க்கி..
நன்றி.. இது நம்ம ஆளு..
நன்றி.. அசோக்,,
நன்றி ரபீக் ராஜா..
நன்றி ஜானிவாக்கர்,
நன்றி பிஸ்கோத்துபயல்ல்..
/கொத்து புரோட்டா, பிரியாணி, வாழைப்பழம்னு பின்னுறீங்களேய்யா!//
பசிக்கு இருக்கட்டுமேன்னுதான் வெங்கிராஜா..
/தேனி புரோட்டா, திண்டுக்கல் பிரியாணி பத்தியெல்லாம் நீங்க எழுதீட்டா நாங்க என்ன எழுதுறதுண்ணே.....
//
நீங்க சென்னை வந்து இங்கருக்கிற் கடைய பத்தி எழுதுங்க.. வெயிலான்
/இதெயெல்லாம் ரோம் போட்டு யோசிக்கிறிங்களோ//
ரோம் போட்டு இல்ல ரூம் போட்டு.. யோசிக்கிறோம்.. அக்னிபார்வை..
நன்றி அபுஅப்ஸர்.
பெங்களூர் அருணை நண்பனாக கொண்டதால் பலருக்கு எதிரியாக வேண்டியிருக்கும்!
பத்திரமா பார்த்துகோங்க!
(அனுபவபட்டவன் சொல்றேன்)
/இங்க ஒரு பிரியாணி டிஸ்கஷனே போய்கிட்டிருக்குதே.. நா போய் வெண்பூவை கூட்டிக்கிட்டு வர்றேன், அப்புறம் பேசிக்கிறேன்.//
அதானே வெண்பூ இல்லாமா பிரியாணி டிஸ்கஷனா..?
/அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.. நானும் அருண்குமார் மாதிரிதான்.. நண்பர்கள் உதவின்னு கேட்டா சட்டுனு செஞ்சு முடிச்சுட்டுதான் அடுத்தவேலை பார்ப்பேன்//
:)
/யோவ் சங்கரு... இந்த சாப்பாட்ட பத்தில்லாம் எழுதாதீரு... ஃபிறிட்ஜ் சாப்பாட்ட சூடாக்கி சாப்புடுற நமக்கெல்லாம் கடுப்புகளை கிளப்பிக்கிட்டு... பொன்ராம் புரியாணி.. தலப்பாகட்டு புறியாணின்னுட்டு
//
சரி கீத் அட்லீஸ்ட் படிச்சாவது பசியாறிக்கலாமில்ல..
/உண்மைத்தமிழன் அண்ணே..நீ ஒருக்கா மதுரையில கேப்டன் கல்யாணத்துக்கு பிரியாணி சாப்பிட போய்..உங்களை ரவுண்டு கட்டினது நெனைப்பு வருதுண்ணே...//
அட ஆமாம் தண்டோரா.. ஆனாலும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி..
/பெங்களூர் அருணை நண்பனாக கொண்டதால் பலருக்கு எதிரியாக வேண்டியிருக்கும்!
பத்திரமா பார்த்துகோங்க!
(அனுபவபட்டவன் சொல்றேன்//
:( எனக்கு எதுவுமே புரியலை வால்பையன்..
SMS கலக்கல் தல ;)
// “ அட நீங்க வேற சர்வேஷப்பா.. என் குழந்தையை தூங்க வைக்கத்தான் இந்த பாட்டு,//
வெளங்கிரும். நல்ல வேள அந்தப் புள்ள வில்லு படத்த போடச்சொல்லி அடம்புடிக்கல.
வழக்கம் போல இந்த வட்டமும் சாப்பிடற இடம் ஒண்ணு சொல்லிட்டீங்க!
ஜோக்கு வழக்கம் போல ம்ம்ம்....
அதெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமில்லதான்.
கொத்துபுரோட்டா மாதிரி நானும் ஒண்ணு ட்ரை பண்ணியிருக்கேன். வந்து பாருங்க!
ஹா ஹா ஹா .. நமீதா ஜோக் சூப்பர் ..
கலக்கிட்டிங்க
நன்றி கோபிநாத்.
நன்றி ராதாகிருஷ்ணன்சார்.
நன்றி எதிரொலி
நன்ரி ராஜராஜன்
Shankar Sir,
Parotta arumai
அருமை
நன்றி முத்துபாலகிருஷ்ணன், ஷண்முகம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
என்ன சார் நன்றி எல்லாம் சொல்லிகிட்டு.
ஜோக்ஸ் எல்லாம் சூப்பரப்பு
Post a Comment