ஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு

போன வாரம் வியாழன் அன்று ”ஹலோ ஜெயாடிவி” நிகழ்ச்சியில் நேரலையாகவும், மறு ஒளிபரப்பாகவும், நான் பங்கு பெற்ற நேயர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள்.  பல பதிவர்கள் நிகழ்ச்சியில் போன் செய்து கலந்து கொண்டார்கள், பல முயற்சி செய்து, முயற்சி செய்து நொந்து போனதாகவும், சொன்னார்கள். பார்த்தவர்கள்  பாராட்டினார்கள், பலர் வலையேற்ற சொன்னார்கள்.

வழக்கமாய் நான் பங்கு கொள்ளும் பல நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காகவே என்னுடய கணினியில் டிவி டியூனர் கார்ட் வைத்திருக்கிறேன். அந்த சனியன் பிடித்த கார்டு அன்னைக்கு பார்த்து மக்கர் செய்துவிட்டது. (அதானே வேணுங்கிற போது வேலை செய்யாதே.) அந்த கடைசி நேரத்தில், யாரிடம் சொல்லி ரிக்கார்ட் செய்ய என்று ஒன்றும் புரியவிலலை.  மாலை மறு ஒளிபரப்பு வந்த போது கோவை நண்பர் சஞ்செயிடம் சொல்ல, அவர் பதிவர், நண்பர் கும்கியிடம் சொல்லி ரிக்கார்ட் செய்வதாய் சொன்னார்.  அவர் இதற்காக அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து ,வீட்டுக்கு வந்து பதிவு செய்ய ஆரம்பிப்பதற்குள், பத்து நிமிட நிகழ்ச்சி போய்விட்டது. இருந்தாலும் பதிவு செய்து டிவிடியை அனுப்பினார். அந்த அன்பான நெஞ்சுக்கு மிக்க நன்றி.

இதற்குள் தமிழிசை என்றொரு நண்பர் முழு நிகழ்ச்சியையும் வலையேற்றி அதற்கான லிங்க எனக்கு அனுப்பினார். அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதோ அந்த உலக புகழ் நேரலை நிகழ்ச்சி.. ஹி.ஹீ..ஹி




முழுசா..பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நண்பர்களே..


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

Sukumar said…
மீ தி பஸ்ட்.....
ஆஹா ஓஹோ அண்ணே பேஷ் பேஷ்....
அட்டகாசமான நிகழ்சிண்ணே... பின்னீட்டீங்க.....
நிகழ்ச்சியில் நானும் போன் பண்ணி பேசியது ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே...
இன்னும் பல அரங்கங்களில் உங்கள் திறமை வென்றிட வாழ்த்துக்கள்ண்ணே....
(அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா பின்னால யூஸ் பண்ணிக்குவோம் )
என்னண்ணே...சந்தோஷத்துல தூக்கம் வரலயா?? 12.15 மணிக்கு பதிவு போடுரீங்க!!!

:))
ஹை..தல பார்த்துட்டு வரேன்..
பாலா said…
நானும் பார்த்துட்டு வர்றேன்! :)
தல எதிர்ல உக்கார்ந்து இருக்கிற அக்காவ ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க..
நீங்க சொல்லமா வந்து இருக்க மாட்டிங்களே..:))
சகஜமா பேசுறிங்க..எந்த பதட்டமும் இல்லாமல்..
MSK / Saravana said…
பார்த்துட்டு வர்றேன் தல.
வாழ்த்துக்கள்.
பாலா said…
பாத்துட்டேன்........நான் பாத்துட்டேன்...!!!! :) :) :) :) :) :) : :) :)
தல கலக்கள்.. ஆனா டீவில இப்படி நல்ல புள்ள மாதிரியே பேசிறிங்களெ எப்படி தல
பாத்துட்டேன்........நான் பாத்துட்டேன்...!!!! :) :) :) :) :) :) : :) :)
நன்றாகவே நிகழ்ச்சியில் பேசி..விளக்கியுள்ளீர்கள் சங்கர்..வாழ்த்துக்கள்
/இன்னும் பல அரங்கங்களில் உங்கள் திறமை வென்றிட வாழ்த்துக்கள்ண்ணே....//

நன்றி சுகுமார்

(அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா
பின்னால யூஸ் பண்ணிக்குவோம்//

:)
/தல எதிர்ல உக்கார்ந்து இருக்கிற அக்காவ ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க..
நீங்க சொல்லமா வந்து இருக்க மாட்டிங்களே..:))//

ஹி..ஹி.. நம்மள பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சுப்பா..
/சகஜமா பேசுறிங்க..எந்த பதட்டமும் இல்லாமல்.//

நன்றி கவுதம்.
/பாத்துட்டேன்........நான் பாத்துட்டேன்...!!!! :) :) :) :) :) :) : :) :)//

எப்படி இருந்திச்சுன்னு சொல்லவேயில்லையே..பாலா..
/நன்றாகவே நிகழ்ச்சியில் பேசி..விளக்கியுள்ளீர்கள் சங்கர்..வாழ்த்துக்கள்
//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்..
/தல கலக்கள்.. ஆனா டீவில இப்படி நல்ல புள்ள மாதிரியே பேசிறிங்களெ எப்படி தல
//

நன்றி அக்னிபார்வை..
நான் நல்ல புள்ள தானே அக்னி..
/என்னண்ணே...சந்தோஷத்துல தூக்கம் வரலயா?? 12.15 மணிக்கு பதிவு போடுரீங்க!!!

:))//

காலையில ஒரு முக்கியமான வேலையிருக்கு.. அதுனாலதான் ராத்திரியே போட்டுட்டேன். அண்ணே....
நன்றி சரவணகுமார், ச்சின்னப்பையன்.
சங்கர்,

என் போன்றவர்களால் நேரடியாக பார்க்க வாய்ப்பே இல்லை எனும் நிலையில், இது போன்ற பதிவேற்றத்தில் பார்க்க வழி செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்வமாய் இருந்தாலும், அலுவலகத்தில் இயலாது. மாலைக்காக காத்திருக்கிறேன், உங்களின் கலக்கலை கான...

பிரபாகர்.
மேவி... said…
:-)


sema handsome aa irukkinga
//இதோ அந்த உலக புகழ் நேரலை நிகழ்ச்சி.. ஹி.ஹீ..ஹி//

நல்ல நிகழ்ச்சிதானே சார்... அப்புறம் என்ன சிரிப்பு வேண்டி கிடக்குது?

இதுபோல அடிக்கடி நிகழ்ச்சிகளை தங்கள் வலைப்பூவில் ஒளிபரப்புங்கள் நண்பரே...!
இரவு நிச்சயம் பார்த்து விடுகின்றேன்,
வலையேற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.
Suresh said…
ஆபிஸில் பார்க்க முடியாது வீட்டில் பார்த்துவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வாழ்த்துகள் தலைவா
வாழ்த்துகள்...:-)
வாழ்த்துகள் கேபிள்.. மாலை பார்த்துவிட்டு சொல்கிறேன்
Raju said…
\\இரவு நிச்சயம் பார்த்து விடுகின்றேன்,\\

ச்சீ..ச்சீ நைட் பாக்குற அளவுக்கு அதுல ஒன்னுமே இல்லையே..!

நம்மாளுக ரொம்பத்தான் கடைமை உணர்ச்சியோட இருக்காக..!
எல்லாருமே ஆபீஸ் அவர்ஸ்ல பாக்க மாட்டாங்க போல.
நன்றாகச் செய்திருக்கிறீர்கள் கேபிள். வாழ்த்துக்கள்
biskothupayal said…
கடைசில கேபிள் ஜோக் சொல்ல்விங்கனு பாத்தேன் சொல்லவேஇல்ல


இந்த வர விகடன் கதை இதுக்கு முன்னாடி படிச்சமடிரி இருக்கு blog ல எழுதன கதைய
ராஜன் said…
அருமையாகவும், விளக்கமாகவும், தெளிவாகவும் பேசியுள்ளீர்கள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
தலைவா,

பார்த்துவிட்டுக் கருத்துத் தெரிவிக்கிறேன். பதிவர் சந்திப்பு பற்றி விரிவான பதிவு எழுதியிருக்கிறேன். வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ....
அண்ணே எந்த படத்துக்கெல்லாம் திரைக்கதை எழுதி இருக்கீங்க?
தெரிஞ்சிக்கலாமா?
நல்லா சொல்லியிருக்கீங்க!
Anbu said…
அண்ணா நானும் பார்த்துவிட்டேன்..மிக அருமையாக உள்ளது..
FunScribbler said…
super interview!:)
மிக அருமையாக உள்ளது.... வாழ்த்துகள்...
Unknown said…
ஒரே ஒரு பிரச்சினை அண்ணே... நம்ம வழமையான பஞ்ச்.. அதாங்க ‘ஏ' ஜோக் இல்லையே
காம்பையரிங் பண்ண பொண்ணு நல்லா கேள்வி கேட்டாங்க!
ம்... ம்... நல்லா நடக்கட்டும்!

( எப்படிங்க, இதெல்லாம்? ;) )
வாழ்த்துக்கள் தல.. இனி ஜெய டிவி புகழ்னு பேருக்கு முன்னாடி போட்டுக்கலாம். :)

டிவியில் பார்ப்பதை விட அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது இணையம்.. :(
Anonymous said…
வெளக்கமா ஓட்டுக் கேக்கத் தெரியுதுல்ல! தமிழ்மணக் கருவிப் பட்டை எங்கேண்ணே?
நேத்து ,முழுசா பாத்தேன். மிகத்தெளிவா பேசறீங்க.அழகா இருக்கீங்க சீக்கிரம் ஹீரோவா நடிக்கலாம் நீங்க.
அழகா சிரிச்ச முகத்தோட பேசியிருக்கீங்க... சூப்பர்...
Thamira said…
ஆபிஸ்ல தெரியாது. வீட்ல நெட் புட்டுகிச்சு.. எப்பதான் பாக்கப்போறேனோ.. அடச்சே..
/:-)


sema handsome aa irukkinga//

நல்லா சத்தமா சொல்லுங்க.. மாயாவி.. ஹே.. நான் ஹாண்ட்சம், நான் ஹாண்ட்சம்.. ஹி.ஹி.ஹி
@பிரபாகர்
பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்

@லொல்லு சபா..
நன்றி
@முத்துராமலிங்கம்
மிக்க நன்றி

நன்றி, யூர்கேன் க்ருக்கர், டோன்லி, சுரேஷ்

நன்றி கார்க்கி, டக்ளஸ், முரளிகண்ணன்.

நன்றி பிஸ்கோத்துபயல், ராஜன், ஸ்ரீ,
கதிர், அன்பு, அன்புடன் அருணா, தமிழ்மாங்கனி, மணிப்பக்கம்,
/ஆபிஸ்ல தெரியாது. வீட்ல நெட் புட்டுகிச்சு.. எப்பதான் பாக்கப்போறேனோ.. அடச்சே..//

இப்படித்தான் தேவையான போது எதுவும் விளங்காது.. :(
/ஒரே ஒரு பிரச்சினை அண்ணே... நம்ம வழமையான பஞ்ச்.. அதாங்க ‘ஏ' ஜோக் இல்லையே
//

சொன்னேன்.. ஆனா லைவ்ல இல்ல...
/வாழ்த்துக்கள் தல.. இனி ஜெய டிவி புகழ்னு பேருக்கு முன்னாடி போட்டுக்கலாம். :)//

பாலபாரதி அண்ணே.. ஊருக்கு ஒரு தல தான்.. அது நீஙக் மட்டும்தான்.. ரொம்ப நன்றிண்ணே..
/வெளக்கமா ஓட்டுக் கேக்கத் தெரியுதுல்ல! தமிழ்மணக் கருவிப் பட்டை எங்கேண்ணே/./

ஏன் அங்கயேதானே இருக்கு.. விஜய்..
/நேத்து ,முழுசா பாத்தேன். மிகத்தெளிவா பேசறீங்க.அழகா இருக்கீங்க சீக்கிரம் ஹீரோவா நடிக்கலாம் நீங்க//


ரொம்ப நன்றி குடுகுடுப்பை.. பாவம் பாக்க போறது ஜனங்க தானே..?
/காம்பையரிங் பண்ண பொண்ணு நல்லா கேள்வி கேட்டாங்க//

வாலுக்கு என்னவோ.. அந்த பொண்ணு மேல ஒரு கண்ணாவே இருக்காரூ..
நன்றி சரவணக்குமரன்.
Suresh said…
பாத்து விட்டேன் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க ;) நல்ல கேள்விகளை விட நல்ல பதிலகள் உங்களிடம் இருந்து ;) ரொம்ப சந்தோசம் தலைவா மென் மெலும் நீங்கள் வளார வாழ்த்துகள்
m said…
that's was a nice interview!
கிரி said…
வாழ்த்துக்கள் சங்கர்
சிரித்த முகத்துடன், மிகவும் எளிமையான தமிழில் ஒரு அருமையான பேட்டி..
வாழ்த்துக்கள் சங்கர்!!

என்ன, பேட்டி முடிஞ்சு கிளம்பும்போது நம்ம வழக்கமான "லுல்லா" ஜோக்க எடுத்துவிட்ருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்.. :)
பாசகி said…
அண்ணே இப்பதான் பார்த்தேன். 10 நிமிசம்தான் பார்த்தான் முழுசா பாக்கமுடியல. ஆனா cool-ஆ பேசறீங்க சூப்பர் :)
Rafiq Raja said…
வாழ்த்துகள் சங்கர். இரண்டு வாரங்களாக நண்பர்கள் வலைப்பூவில் உலவ முடியாத அளவிற்கு வேலை. அதனால் தான், உங்கள் டிவி பிரசன்னத்தை பாராட்ட நேரமாகி விட்டது.

இரண்டு மூன்று நாட்களாக விட்டு விட்டு மொத்த நேர்முகத்தையும் பார்த்து ரசித்தேன். பரபரப்பு இல்லாமல் சகஜமாக உங்கள் பதில்களை கூறிய பாணி அலாதி.

// (அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா
பின்னால யூஸ் பண்ணிக்குவோம்//
சிரிச்சு மழுப்புனா விட்டுருவோமா.... பதில பதிவா போட்டா எல்லோரும் தெரிஞ்சுப்போமுல்ல :)

//ஹி..ஹி.. நம்மள பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சுப்பா.. //
அப்ப சொல்லிட்டீங்களா... சரி அந்த பொண்ணு ப்ளாக் அட்ரஸா தெரியபடுத்துங்க ;)

// /ஒரே ஒரு பிரச்சினை அண்ணே... நம்ம வழமையான பஞ்ச்.. அதாங்க ‘ஏ' ஜோக் இல்லையே
//

சொன்னேன்.. ஆனா லைவ்ல இல்ல...//

இதெல்லாம் ரொம்ப ஓவரு... ஆமா சொல்லிபுட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ....

ரஃபிக் ராஜா
காமிக்கியல்
Sambar Vadai said…
Cable Sankar,

I read this and saw the video today only. Excellent. Your interview was good and simple language and flow. Good that you did not try to speak in written tamil and used normal speech tamil.

the lady also interviewed well.

All the best..!

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.