Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Jun 29, 2009

கொத்துபரோட்டா – 29/06/09

கல்வியும், மருத்துவமும் வியாபாரம் ஆகிவிட்டது என்பதை அந்த நிறுவனங்களை நடத்துபவர்களே உண்மை என்று ஒத்து கொள்வது போல்  அவர்களுடய நிறுவனங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஸ்பான்ஸர் நிகழ்ச்சி நடத்துவதிலிருந்தே தெரிகிறது. நேற்றைய சன் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் ஸ்பான்ஸர் செய்தது. ஒரு பல்கலைகழகம்  ஏதாவது ஒரு கல்வி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை தயாரித்து புகழ் பெற்ற சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம். ஆனால் இவர்கள் ஒரு சினிமா விழா ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் வியாபாரத்தில் போட்டி அதிகமாகிவிட்டது என்று தானே அர்த்தம்?. மக்களை கவரும் ஒரு நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய பணம் செலவிடும் இம்மாதிரியான நிறுவனங்கள் அப்படி செலவு செய்த பணத்தை, தங்களிடம் சேரும் மாணவர்களிடம் தானே பிடுங்கும்.? என்ன கொடுமடா சாமீ….

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிவி டேலண்ட் ஹண்ட் ஷோக்களில் எனக்கு பல வருடஙக்ளாய் பிடித்த ஒரு நிகழ்ச்சி ஜெயாடிவியில் வரும் ராகமாலிகா  நிகழ்ச்சி. மிக அழகாய் பாலாஜியால் காம்பர் செய்யபட்டு, மிக நீட்டாக பிரசண்ட் செய்யப்படும் நிகழ்ச்சி. வழக்கமாய் வரும் பல நிகழ்ச்சிகளை போல . தோற்பவர்கள், ஜெயிப்பவர்களின் உணர்வுகளை எக்ஸ்போஸ் செய்வதை நம்பாமல் நல்ல திறமையான குரல்களை தெரிவு செய்து  நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, அவர்களின் திறனை வெளிபடுத்த வைக்கிறார்கள். ஹாட்ஸ் ஆப் சுபஸ்ரீ தணிகாசலம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரங்களில் சமீப காலமாய் என்னை மயக்கியது, வோடோபோனின் ஜூஜூ விளம்பரங்களை விட  AXE விளம்பரங்கள்தான் . வோடொபோன் விளம்பரஙக்ள் வேறு வகை.. ஆனால் இந்த் ஆக்ஸ் விளம்பரங்களில் வரும் பெண்களின் எக்ஸ்ப்ரஷன்ஸ் இருக்கிறதே. சூப்பர்ப்.. அதிலும் அந்த பர்கர் ஷாப் பெண் பர்கரில் நம்பர் எழுதும் போது முகத்தில் காட்டும் காமம், வேகம், சிம்ப்ளீ சூப்பர்ப்.  என் நண்பி ஒருத்தி சொன்னாள் அவளுக்கு பிடித்தது அந்த மாதிரி எக்ச்ப்ரஷன்களை புரியாமல் விழிக்கும் இளைஞனின் முகபாவம் தான் பிடிக்கும் என்று. நண்பர் பினாத்தல் சுரேஷ் சொன்னார். ஸ்பெயினில் ஒரு முறை மொத்தமாய் இது எத்தனை ஆக்ஸ் விளம்பரஙக்ள் வந்ததோ அத்தனை விளம்பரஙக்ளையும் ஒரு சேர ஒரு மணி நேரம் போட்டார்களாம். நானும் அவங்க விளமபரத்த நம்பி வாங்கி, பொண்ணுங்க துறத்துராங்களோ இல்லையோ.. மளிகைகடைக்காரன் பில்லு கேட்டு துறத்துரான்.


பல நாடுகளில் தடை செய்யப்பட்ட AXE விளம்பரம்
http://www.youtube.com/watch?v=g_ySo29c-Gg&feature=player_embedded

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேனி பஸ்ஸ்டாண்ட் ஜக்‌ஷன் அருகில் நாகர் பரோட்டா கடை என்று ஒரு கடையிருக்கிறது. தேனிக்கு போகிறவர்களோ.. அல்லது அந்த பக்கமாய் தாண்டி போகிறவர்களோ.. தவறாமல் இந்த பரோட்டா கடையை மிஸ் செய்யாதீர்கள்.  அப்படி ஒரு அருமையான பரோட்டா. நன்றாக அடித்து பிசையப்பட்ட மாவு என்று அதனுடய சாப்ட்னஸில் தெரிந்தது. சும்மா பொன் கலரில் சற்றே அதிக எண்ணையுடன் கிரிஸ்பாக.. வந்த பரோட்டாவை, ஒரு கிண்ணம் கிரேவியுடன் ஊர வைத்து வாயில் போட்டால்.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. டிவைன்.
Image0162 

சென்னை என்.எஸ்.சி போஸ் ரோட், தங்கசாலை சந்திப்பில் இரவில் மட்டும் ஒரு கடையின் வாசலில் ஊரில் உள்ள அததனை சேட்டுக்களும், குடும்பம், குடும்பமாய் தெருவில் நின்று கொண்டு இட்லியும், ஊத்தப்பமும் சாப்பிட்டு கொண்டிருந்தால் அது சீனா பாய் கடையாய் தான் இருக்கும்.  அவ்வளவு சூப்பரான டேஸ்ட். இட்லி என்றால் சாதாரண இட்லி இல்லை. மீடியம் சைஸ் இட்லி ஒரு எட்டை  சுடச்சுட ப்ளேட்டில் வைத்து அதன் தலை மேலே இரு இரண்டு கரண்டு உருக்கிய நெய்யை தாராளமாய் ஊற்றி. அதன் மேல் நன்றாய் நைஸாய் அரைத்த மிளகாய் பொடியை தூவி, அதுக்கு தொட்டுக்க வெங்காய தக்காளி சட்னி, புதினா சட்னியும் வைத்து அதில் புரட்டி ஒரு வாய் உள்ளே தள்ளினால்…  ம்ம்ம்ம்..  ”சீனா பாய்  இன்னொரு ப்ளேட் இட்லி”. உள்ளங்கை அளவு ஆனியன் ஊத்தப்பத்துக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.

பின் குறிப்பு : நெய், கொலஸ்ட்ரால், என்பவர்கள் தயவு செய்து சஞ்சீவனத்துக்கு  போகவும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஏ ஜோக்

மகள் : அம்மா என் பாய் ப்ரெண்டை இன்னைக்கு நல்லா ஏமாத்திட்டேன்

அம்மா:  எப்படி?

மகள் :  நான் என் காசை என் பாண்ட் பாக்கெட்டுல ஒளிச்சு வச்சிட்டு கண்டு பிடிக்க சொன்னேன். பாவம் அவன் ரெண்டு மணி நேரம் என் ப்ராவுக்குள்ள கைய விட்டு தேடி தேடி ஏமாந்துட்டான்..

அம்மா: :(?



நீஙக்ள் உறவு கொள்ளும் போது மிகவும் பிடிக்காத மூன்று வார்த்தை எதுன்னு ஒருவனிடம் கேட்டபோது அவன் சொன்ன பதில்

“டியர். நான் வந்தாச்சு” என்றான்.

ஜோக்

டிவி லைவ் ஷோவில் ஒரு நேயரிடம் கொகுப்பாளினி

தொ: வணக்கம், நீங்க எங்கிருந்து பேசறீங்க..?

நே : சைதாப்பேட்டையிலிருந்து..

தொ: அட நானும் சைதாப்பேட்டைதான். எந்த ஏரியா..?

நே : ஜெயராஜ் தியேட்டர் பக்கம் அனு ப்ளாட்ஸ்..

தொ: அட நான் கூட அந்த ப்ளாட்ல தான் இருக்கேன். ப்ளாட் நம்பர் என்ன..?

நே : ஏ1

தொ: ஏங்க கிண்டல் பண்ணாதீங்க.. அது என் ப்ளாட் நம்பர்..

நே : ஏய்.. நான் புருஷந்தான்.. சாவியை எங்க வச்சு தொலைச்ச..?

நன்றி : சஞ்செய்காந்தி..

62 comments:

Sukumar Swaminathan said...

பர்ஸ்ட் ... படிச்சிட்டு வரேன்...

Sukumar Swaminathan said...

** வர வர சன் டி.விய தாக்கி ஜெயா டி.வி.க்கு ஆதரவு அதிகரிச்சுட்டே போகுதே... என்ன விஷயம்... ?

** கொடைகானல்ல வாக்கிங் போகும்போது Axe Effect எதாவது உண்டா ?

rose said...

வேறென்ன ? இப்படியாவது ஜெயாவுக்கு காக்கா பிடிச்சாத்தானே திரும்பவும் மூஞ்சியை காட்டுவாங்க?
அங்கேயும் போய் பிராவில , பன்டியில கை போட்டு தேடுற கதையெல்லாம் சொல்லுவீங்களோ?

Cable Sankar said...

/** வர வர சன் டி.விய தாக்கி ஜெயா டி.வி.க்கு ஆதரவு அதிகரிச்சுட்டே போகுதே... என்ன விஷயம்... ?//

அப்படியெல்லாம் வேற எதுவுமில்ல சுகுமார். நான் தொடர்ந்து பல வருஷங்களா தொடர்ந்து பார்த்துட்டு வர்ற் நிகழ்ச்சி.. அவ்வளவுதான்.

//** கொடைகானல்ல வாக்கிங் போகும்போது Axe Effect எதாவது உண்டா ?//

என்னத்தை எபக்டு.. ஆனா ரஹ்மான் எபக்ட் நட்ந்திச்சு.
//

Cable Sankar said...

/வேறென்ன ? இப்படியாவது ஜெயாவுக்கு காக்கா பிடிச்சாத்தானே திரும்பவும் மூஞ்சியை காட்டுவாங்க?
அங்கேயும் போய் பிராவில , பன்டியில கை போட்டு தேடுற கதையெல்லாம் சொல்லுவீங்களோ//

மிக்க நன்றி ரோஸ் உங்களுக்கு ஜோக் ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி ப்ரோக்ராம் இருந்திச்சின்னா கண்டிப்பா சொல்லுவேன். ரோஸ். சிரமம் மேற்கொண்டு ஒரு ப்ளாகை உருவாக்கி பின்னூட்டம் போட்டதுக்கு மீண்டும் ஒரு நன்றி.. நான் காக்கா பிடிக்கணும்னா, ஜெயாடிவியை, பிடிக்க மாட்டேன்.. சண்டிவியதான் பிடிப்பேன்.

தராசு said...

//இம்மாதிரியான நிறுவனங்கள் அப்படி செலவு செய்த பணத்தை, தங்களிடம் சேரும் மாணவர்களிடம் தானே பிடுங்கும்.? என்ன கொடுமடா சாமீ….//

who will bell the cat??????

முரளிகண்ணன் said...

செமக் காரம்.

rose said...

Cable Sankar said...

/வேறென்ன ? இப்படியாவது ஜெயாவுக்கு காக்கா பிடிச்சாத்தானே திரும்பவும் மூஞ்சியை காட்டுவாங்க?
அங்கேயும் போய் பிராவில , பன்டியில கை போட்டு தேடுற கதையெல்லாம் சொல்லுவீங்களோ//

மிக்க நன்றி ரோஸ் உங்களுக்கு ஜோக் ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி ப்ரோக்ராம் இருந்திச்சின்னா கண்டிப்பா சொல்லுவேன். ரோஸ். சிரமம் மேற்கொண்டு ஒரு ப்ளாகை உருவாக்கி பின்னூட்டம் போட்டதுக்கு மீண்டும் ஒரு நன்றி.. நான் காக்கா பிடிக்கணும்னா, ஜெயாடிவியை, பிடிக்க மாட்டேன்.. சண்டிவியதான் பிடிப்பேன்.
8:01 AM //

பெரிய நினைப்புத்தான் போங்கோ!
உங்கட காக்கா எல்லாம் சன்னிடம் வேகாது போங்கோ....
யாரோ எழுதின கேவலமான யோக்கையும், கேவலமான வீடியோவையும் போட்டு பொழப்பு நடத்தும் உங்களுக்கு சண் வேற இடம் தரும் என்று நினைப்போ!
சொந்தமா எதாவது செய்ய முயலுங்கள் , காக்கா பிடிக்காமலேயே சண் இடம் தரும்..

அக்னி பார்வை said...

இந்த வாரம் கொத்து பரோட்டாவிலி ‘பரோட்டா ஸ்பேஷ்லா!”, நாகர் ஹோட்டலை பற்றி சொன்னேன்.....

ஏ ஜோக் சூப்பர்

ஜெட்லி said...

//டியர். நான் வந்தாச்சு” என்றான்.
//

சூப்பர் சங்கர் அண்ணே...
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

MayVee said...

நன்றி Cable Sankar

( வழக்கமாய் இந்த மாதிரி பதில் சொல்விங்க ; அதனால நானே இந்த மாதிரி பின்னோட்டோம் போடுறேன் , இப்ப என்ன செய்விங்க)

டக்ளஸ்....... said...

முதல் பத்தி படிச்ச உடனே நம்ம வால்பையன் ஞாபகம்தான் வந்துச்சு..!
இதே கல்வி, மருத்துவம் வியாபாரம் மேட்டர்தான் மதுர லாட்ஜில சும்மா சூடு பறந்துச்சு..!
:)

கார்க்கி said...

ரைட்டு..

ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவா ..

biskothupayal said...

படிச்சிட்டுன்...

வண்ணத்துபூச்சியார் said...

கல்வி வியாபாரம் போட்டியா..??? கடும் போட்டி தல..

ஏஜெண்ட் வைத்து வெளியூர்களில் பிற மொழிகளில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஹோட்டலில் ரூம் போட்டு ஆள் பிடிக்கிறார்கள் என்கிறார் நண்பர் ஒருவர்.

எவன் எப்படி போனா எனக்கென்ன..?? எல்லாத்தையும் காசாக்கும் சன் டிவிக்கு எந்த கவலையுமில்ல...

ஆனா சன் நியூஸில் ""வியாபாரமாகு கல்வி"" அப்படின்னு சிறப்பு பார்வையும் போடுவாங்க..



கார சார பரோட்டா..

குடந்தை அன்புமணி said...

கொத்து பரோட்டா நல்லா இருந்தது. டீ.விக்கு சென்ஸார் தேவையோ இல்லையோ இணையத்துக்கு தேவை போலிருக்கு... ம்... நடத்துங்க...!

Truth said...

:)

நர்சிம் said...

அங்கங்க வெட்டுக் குத்தா இருக்கே..இங்க நார்மல் பதிவுன்னு நம்ம்ம்பி படிச்சா..பின்னூட்டத்துல அடி வெளுத்தல் நடக்குதா?..ம்

D.R.Ashok said...

Axe effect
Manchiwala effect
பிங்க் நிற ரிப்பன் அனிந்த பெண்னும்.. வலதுபக்கம் குதிரையால் உறிஞ்சப்படும் பெண்னும்.
சூப்பருங்கன்னா....

KaveriGanesh said...

அண்ணே,

அதெல்லாம் வியாபாரம்னு எப்பவோ மைன்ட் செட் ஆயிரிச்சு.நீங்க தான் கல்வி சேவைன்னு நினைத்து கொள்கிறீர்கள்.



நே : சைதாப்பேட்டையிலிருந்து..

தொ: அட நானும் சைதாப்பேட்டைதான். எந்த ஏரியா..?

நே : ஜெயராஜ் தியேட்டர் பக்கம் அனு ப்ளாட்ஸ்..

தொ: அட நான் கூட அந்த ப்ளாட்ல தான் இருக்கேன். ப்ளாட் நம்பர் என்ன..?

நே : ஏ1


சான்ந்தி வீட்டுஅட்ரெஸ் கொடுத்த்துக்கு ரொம்ப தாங்ஸ்

மயில் said...

ங்கர நாராயணன் அண்ணா,

தயவு செய்து அந்த you tube விளம்பரம் எடுத்துடுங்க. please

குறை ஒன்றும் இல்லை !!! said...

ராக மாலிகா மட்டும் அல்ல.. SPB அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியும் அருமையாக இருக்கும்.. அவர் சொல்லும் கருத்துகள் யாரையும் புண் படுத்தும் படி இருக்காது..

நர்சிம் said...

நன்றி சங்கர்ஜி.. நீக்கியதற்கு..

Anbu said...

:-))

லக்கிலுக் said...

பதிவின் முதல் பகுதி கருத்து விளம்பரப் பார்வையில் முற்றிலும் தவறானது. உலகமயமாக்க சூழலில் Branding-இன் அவசியம் என்னவென்பதை தண்டோராவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சமூகப் பார்வையோடு இவ்விஷயத்தை அணுகுகிறேன் என்று சொல்வீர்களேயானால் நீங்கள் தொழிலே நடத்த முடியாது.

பின்னூட்டங்களில் விவாதிக்கக் கூடிய அளவுக்கு சிறிய மேட்டர் இதுவல்ல என்பதால் நேரில் விவாதிக்கலாம்.

லக்கிலுக் said...

பதிவின் முதல் பகுதி கருத்து விளம்பரப் பார்வையில் முற்றிலும் தவறானது. உலகமயமாக்க சூழலில் Branding-இன் அவசியம் என்னவென்பதை தண்டோராவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சமூகப் பார்வையோடு இவ்விஷயத்தை அணுகுகிறேன் என்று சொல்வீர்களேயானால் நீங்கள் தொழிலே நடத்த முடியாது.

பின்னூட்டங்களில் விவாதிக்கக் கூடிய அளவுக்கு சிறிய மேட்டர் இதுவல்ல என்பதால் நேரில் விவாதிக்கலாம்.

மயாதி said...

காலையில் உங்கள் தளம் வாசித்தேன், அப்போது முதல் இரண்டும் நல்லவிடயங்களாக இருந்தது,
மூன்றாவது வீடியோ பார்ப்போம் என்று கிளிக் பண்ண முன்னமே , என் அக்கா வந்து அந்த படத்தின் முகப்பில் திறந்த மார்போடு இருந்த பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டார்.
அவருக்கு அது ஒரு விளம்பரம் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு நவீனத்துவம் அடையாதவர், அதனால், திட்டத் தொடங்கிவிட்டார், சிறு பிள்ளைகள் (அக்காவின் பிள்ளைகள்) இருக்கும் வீட்டில் இப்படியான படங்கள் பார்க்கிறேயே வெட்கமில்லையா என்று வேறு கேட்டுவிட்டார்?

அப்போது உங்கள் தளத்தை மூடி விட்டு இப்போது மீண்டும் , இதை உங்களிடம் சொல்ல வேண்டும் போல இருந்ததின் காரணமாக வந்து சொல்கிறேன்.

தயவு செய்து இவ்வாறான விடயங்கள் நீங்கள் போடும் போது ஒரு முன்னறிவித்தல் கொடுத்தால் நாங்கள் பொது இடங்களில் கொஞ்சம் கவனமாக இருப்போம்.

நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

சாதா ஜோக் நல்லாயிருந்தது. அப்புறம் கொத்துபுரோட்டாவே ஒரு புரோட்டாவை பாராட்டுகிறதே.. அடடே..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்புறம் என்ன மாதிரி விடீயோ அது? ஆபிஸ்லயும் தெரியாது. இனி வீட்லயும் பாக்க முடியாது (ஊட்ல வந்துட்டாங்க).. சை என்ன ஒலகமடா இது?

மயில் said...

thank you very much for removing that. other wise as usual your parotta is nice.

அபுஅஃப்ஸர் said...

அண்ணே 15 வருஷத்துக்கு முன்னரே கல்வி வியாரபபோச்சு...

வால்பையன் said...

கடைசியாக இருப்பது ஏ.ஜோக்கா
இல்ல B.ஜோக்கா?

pappu said...

எந்த ஊரு போனா எங்க சாப்பிடனும்னு உங்ககிட்டதான் கேட்டு தெரிஞ்சுகனும் போல

அமர பாரதி said...

கொத்து பரோட்டா இந்த வாரம் அருமை.

//“டியர். நான் வந்தாச்சு” என்றான்.// சில வாக்கியங்களை ஆங்கிலத்திருந்து தமிழில் மொழி பெயர்த்தால் அதன் உயிரோட்டம் போய் விடும். இது அதில் ஒன்று.

Cable Sankar said...

/நன்றி Cable Sankar //

தப்பா நினைக்காதீங்க..மாயாவி.. கொஞ்ச நாளா வேளை ஜாஸ்தி.. அதுனால சுருக்கமா எழுத வேண்டியதா போச்சு. கோச்சுக்காதீங்க.. அண்ணே..

Cable Sankar said...

அப்படியா முரளி..

Cable Sankar said...

/பெரிய நினைப்புத்தான் போங்கோ!
உங்கட காக்கா எல்லாம் சன்னிடம் வேகாது போங்கோ....
யாரோ எழுதின கேவலமான யோக்கையும், கேவலமான வீடியோவையும் போட்டு பொழப்பு நடத்தும் உங்களுக்கு சண் வேற இடம் தரும் என்று நினைப்போ!
சொந்தமா எதாவது செய்ய முயலுங்கள் , காக்கா பிடிக்காமலேயே சண் இடம் தரும்.//

யோக்கு எல்லாமே யாரோ சொல்லத்தான் வரும்.. வீடியோ.. பெரிய விளம்பரக்காரன் எடுத்தது.. அதான் கேவலமா இருக்கில்ல்ல அப்புறம் எதுக்கு வந்து பாக்கணும்.. உங்கட வேளைய பாத்துட்டு போகலாமில்ல.. சும்மா பொறாமை பொச்செரிப்புல எதையாச்சும் எழுதணுமேன்னு புதுசு.. புதுசா ஐடி கிரியேட் பண்ணிட்டு.. வ்ந்து எதையாவது பினாத்துவதை நிறுத்திக்கொள்ள்வும்.. உங்களுக்கு பிடிக்காத விடயம் ஏதாவது இருந்தால்.. எவ்வளவோ பதிவர்கள்.. மயில்.. மயாதி போன்றவர்கள்போல் எடுத்து சொல்லுங்கள். ஏற்புடையதெனின் மாற்றிக் கொள்கிறேன். நாளை ஒரு புதுஐடி தருவிச்சுட்டு.. வேற பேர்ல எழுத வேணாம். மீண்டும் நன்றி..

Cable Sankar said...

/இந்த வாரம் கொத்து பரோட்டாவிலி ‘பரோட்டா ஸ்பேஷ்லா!”, நாகர் ஹோட்டலை பற்றி சொன்னேன்.....

ஏ ஜோக் சூப்பர்

9:31 AM//

நன்றி அக்னிபார்வை..

Cable Sankar said...

/முதல் பத்தி படிச்ச உடனே நம்ம வால்பையன் ஞாபகம்தான் வந்துச்சு..!
இதே கல்வி, மருத்துவம் வியாபாரம் மேட்டர்தான் மதுர லாட்ஜில சும்மா சூடு பறந்துச்சு..!
:)//

அலோவ்வ்வ். நீங்க மதுரைலாட்ஜுல இதைப் பத்திதான் ரூம் போட்டு பேசினீங்கன்னு சொல்றத நம்புறேன்.:)

Cable Sankar said...

/ரைட்டு..

ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவா ..//


வாங்க சகா.. நீங்க நல்லவரா.. கெட்டவரா..?

Cable Sankar said...

/சூப்பர் சங்கர் அண்ணே...
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.//

ரொம்ப நன்றிண்ணே..

Cable Sankar said...

/கொத்து பரோட்டா நல்லா இருந்தது. டீ.விக்கு சென்ஸார் தேவையோ இல்லையோ இணையத்துக்கு தேவை போலிருக்கு... ம்... நடத்துங்க...!//


உஙக கருத்து ஏற்றுக் கொள்ளபட்டது..

Cable Sankar said...

/பதிவின் முதல் பகுதி கருத்து விளம்பரப் பார்வையில் முற்றிலும் தவறானது. உலகமயமாக்க சூழலில் Branding-இன் அவசியம் என்னவென்பதை தண்டோராவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சமூகப் பார்வையோடு இவ்விஷயத்தை அணுகுகிறேன் என்று சொல்வீர்களேயானால் நீங்கள் தொழிலே நடத்த முடியாது.

பின்னூட்டங்களில் விவாதிக்கக் கூடிய அளவுக்கு சிறிய மேட்டர் இதுவல்ல என்பதால் நேரில் விவாதிக்கலாம்.
//

பிராண்டிங் என்பது புரிந்தாலும்.. இவர்களின் போட்டி யாரிடம் போய் நிற்கும் என்பதன் காரணத்தை சொல்லவே இந்த பதிவு.. நீஙக்ள் சொன்னது போல பின்னூட்டத்தில் பேச வேண்டிய விசயம் இல்லைதான்.

கோபிநாத் said...

\\கொத்துபரோட்டா\\

சாப்பிட்டுவிட்டேன் ;)

செல்வேந்திரன் said...

நடக்கட்டும்

Cable Sankar said...

/நடக்கட்டும்//

என்ன நடக்கட்டும்..?

Cable Sankar said...

/Axe effect
Manchiwala effect
பிங்க் நிற ரிப்பன் அனிந்த பெண்னும்.. வலதுபக்கம் குதிரையால் உறிஞ்சப்படும் பெண்னும்.
சூப்பருங்கன்னா...//

எனனாது குதிரையால் உறிஞ்சப்படுமா..? உனக்கு மட்டும் வித்யசமா ஏதாவது புரியுதா..? நன்றி அசோக்

Cable Sankar said...

/சான்ந்தி வீட்டுஅட்ரெஸ் கொடுத்த்துக்கு ரொம்ப தாங்ஸ்//

காவேரி கணேஷண்ணே.. சாந்தி வீட்டுஅட்ரஸ் அது இல்ல.. தப்பா கதவ தட்டி மாட்டிகிராதீங்க..

அரவிந்தன் said...

//பாலாஜியால் காம்பர் செய்யபட்டு, மிக நீட்டாக பிரசண்ட் செய்யப்படும்//

அன்பின் சங்கர்,

ஆங்கில வார்த்தைகளை முடிந்த வரையில் அப்படியே தமிழில் எழுதுவதை தவிர்க்கவும்.அப்படியே எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் குறைந்தபட்சம் ஆங்கில வார்த்தைகளை அடைப்புகுறியிட்டு எழுதவும்.

நீங்கள் எழுதிய ஆங்கில வார்த்தைகளை அறியாதவர்கள் அதை எப்படி எடுத்துகொள்வர் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.?

பேசும்போது ஆங்கில வார்த்தைகளை இடையிடையே பயன் படுத்தினால் கேட்பவர்கள் புரிந்து கொள்வர்.

ஆனால் எழுத்தின் இடையில்,”காம்பர்” மற்றும் “நீட்டாக” என்று எழுதினால் குழப்பம் வராதா..?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Cable Sankar said...

/சாதா ஜோக் நல்லாயிருந்தது. அப்புறம் கொத்துபுரோட்டாவே ஒரு புரோட்டாவை பாராட்டுகிறதே.. அடடே.//

அட இது நல்லாருக்கே ஆதி..

Cable Sankar said...

நன்றி சொன்னதுக்கு நன்றி தலைவரே..

Cable Sankar said...

/கடைசியாக இருப்பது ஏ.ஜோக்கா
இல்ல B.ஜோக்கா//

வெறும் ஜோக் வால்பையன்..

Cable Sankar said...

/ராக மாலிகா மட்டும் அல்ல.. SPB அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியும் அருமையாக இருக்கும்.. அவர் சொல்லும் கருத்துகள் யாரையும் புண் படுத்தும் படி இருக்காது//

ஆமாம் குறையொன்றுமில்ல.. நன்றி

Cable Sankar said...

கொத்து பரோட்டா இந்த வாரம் அருமை.

//“டியர். நான் வந்தாச்சு” என்றான்.// சில வாக்கியங்களை ஆங்கிலத்திருந்து தமிழில் மொழி பெயர்த்தால் அதன் உயிரோட்டம் போய் விடும். இது அதில் ஒன்று.//


நன்றி அமரபாரதி.. நீங்கள்சொன்ன கூற்று உண்மையே..

Cable Sankar said...

/அப்புறம் என்ன மாதிரி விடீயோ அது? ஆபிஸ்லயும் தெரியாது. இனி வீட்லயும் பாக்க முடியாது (ஊட்ல வந்துட்டாங்க).. சை என்ன ஒலகமடா இது//

வாங்க ஆதீ ஒரு நாள் பூரா ஆக்ஸ் ஆட் எல்லாத்தையும் டிவிடி போட்டு வச்சு பாத்திரலாம்.

அரவிந்தன் said...

என்ன சங்கர்,

உடனுக்குடன் பதில் போடறிங்க இந்த நேரத்துல இன்னும் தூங்கலியா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

பிரசன்னா said...

இந்த தடவ ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப சுமார்தான்..
சங்கரோட ரேஞ்சுலையே இல்லையே..

T.V.Radhakrishnan said...

சூப்பர் சங்கர்

Cable Sankar said...

/ஆங்கில வார்த்தைகளை முடிந்த வரையில் அப்படியே தமிழில் எழுதுவதை தவிர்க்கவும்.அப்படியே எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் குறைந்தபட்சம் ஆங்கில வார்த்தைகளை அடைப்புகுறியிட்டு எழுதவும்.

நீங்கள் எழுதிய ஆங்கில வார்த்தைகளை அறியாதவர்கள் அதை எப்படி எடுத்துகொள்வர் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.?

பேசும்போது ஆங்கில வார்த்தைகளை இடையிடையே பயன் படுத்தினால் கேட்பவர்கள் புரிந்து கொள்வர்.

ஆனால் எழுத்தின் இடையில்,”காம்பர்” மற்றும் “நீட்டாக” என்று எழுதினால் குழப்பம் வராதா..?
//

கவனத்தில் கொள்கிறேன். அரவிந்தன்.. சுட்டி காடியமைக்கு நன்றி..

Cable Sankar said...

/இந்த தடவ ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப சுமார்தான்..
சங்கரோட ரேஞ்சுலையே இல்லையே..//

கொஞ்சம் காரத்தை கொறச்சுக்கலாமேன்னுதான் பிரசன்னா.. விடுங்க அடுத்த வாரம் பின்னிருவோம். நன்றி

Cable Sankar said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

பிரசன்னா said...

//இந்த தடவ ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப சுமார்தான்..
சங்கரோட ரேஞ்சுலையே இல்லையே..//

///கொஞ்சம் காரத்தை கொறச்சுக்கலாமேன்னுதான் பிரசன்னா.. விடுங்க அடுத்த வாரம் பின்னிருவோம். நன்றி///

ஹேய்ய்ய்ய்.. சிங்கம் களமிறங்கிருச்சேய்ய்....