Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Jun 8, 2009

கொத்து பரோட்டா – 08/06/09

பகிர்வு

வர வியாழக்கிழமை எனக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். ஒன்ணு நான் எழுதின ஒரு சிறுகதை ( ஒரு பக்க சிறுகதை இல்லை) விகடன்ல வரபோவுதாம், ரெண்டாவது அன்னைக்கு மத்யானம் ஜெயாடிவில ஒரு லைவ் நிகழ்ச்சியில ப்ளாக் பத்தி ஒரு புரோக்ராம் மத்யானம் 12 மணிக்கு வர போவுது. ரொம்ப நாள் கழிச்சு கேமரா முன்னால நிக்க போறேன். ஒரு சந்தோஷபகிர்வு தான் நண்பர்களே.

*************************************************************************
சந்திப்பு

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்'பின் சார்பாக நமக்கு நாமே ஆரம்பித்துள்ள திரைப்பட இயக்கம் மூலமாய் நேற்று “ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்” என்கிற கொரிய திரைப்படம் திரையிடப்பட்டது.  கிம்.கி.டுக் இயக்கிய இந்த படம் உலக அளவில் மிகவும் பெரிய வரவேற்ப்பை பெற்ற படம். நேற்று வந்திருந்த சுமார் ஐம்பது பதிவர்களும், படம் பார்த்துவிட்டு வார்த்தைகளால் எதுவும் சொல்லி, சூப்பர், அட்டகாசம், அருமை என்று பாராட்ட  முடியாத நிலையில் படம் ஏற்படுத்திய  தாக்கம் அவர்களிடையே தெரிந்தது. நர்சிம் என்னிடம வந்து

‘தலைவா.. நீஙக் இந்த மாதிரி படமெடுப்பீங்களா..? என்று கேட்டார்.

“எடுக்க மாட்டேன். ஏன்னா இந்த படம் ஒரு பெயிலியர் படம். நான் ஓடுற படம் தான் எடுப்பேன்” என்றேன் 

உண்மைதான் பதிவர்களே.. உலகமே கொண்டாடுகிற இந்த இயக்குனரின் படங்கள் கொரியாவில் ரெண்டு நாளோ,  ஒரு வாரமோ தான் ஓடும்.

இந்த திரையிடலுக்கு ஹால், ஒளி, ஒலி சாதனங்களை வழங்கி, மற்றும எல்லாவிதமான உதவிகளும் அளித்த கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு நன்றிகள் பல.

**************************************************************************
காதுக்கினிமை
குளிர் 100 என்கிற படத்தின் பாடல்கள் கேட்டேன் புதிய இசையமைப்பாளர் பூபூசாசே என்கிற இளைஞர் இசையமைத்திருக்கிறார். அவரின் இளமை ”ஹிப் ஹாப் பாடலில் தெரிகிறது. மனசெல்லாம் என்கிற பாடல், மெல்ல  கொல்லும் பாடல்,

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும்  கருவாச்சி பாடல் சீக்கிரமே முணுமுணுக்கிற பாடலாய் ஆகும் என்கிற அறிகுறி தெரிகிறது.

மாசிலாமணி படத்தில் ‘டோரா,, டோரா” பாடலும் ஹிட்லிஸ்டில் இருக்கிறது.

மாஸ்கோவின் காவேரி படத்தில் “கோரே. . கொக்கோரே “ என்ற பாடலும் ஹிட்ஸிஸ்டில் வரும்.  படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்.. பாய்ஸ் படத்தில் குண்டு டிரம்மராய் வந்தவர்தான். இவர் ஏற்கனவே இசையமைத்த தெலுங்கு கிக் படம் பாடல்கள் ஹிட்.
****************************************************************
இன்பர்மேஷன்
வேளச்சேரி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர் “SPERM”  எதற்காக இந்த பெயர் என்று கேட்ட போது கடை ஓனர் சொன்னார். “இது ஆண்களுக்கான உடைகள் விற்கும் கடை அதனால்தான் என்றார். எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..
**************************************************************************
ஏஜோக்

செக்ஸ் தெரப்பிஸ்ட்டிடன் சென்ற ஒரு பெண் தன்னை திருப்தி செய்யக்கூடிய ஒரு ஆணை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது. என்றும், இதற்காக தேடி தேடி நொந்து போய்விட்டதாவும், வெளியிலிருந்து பார்த்தாலே ஒரு ஆணின் ”லுல்லா”வின் அளவை கண்டு பிடிக்க முடியுமா என்று கேட்க, தெரபிஸ்ட் ஆணின் கால் பாதங்களை பாருங்கள். அது பெரிசாய் இருந்தால் எல்லாமே பெரிசா இருக்கும் என்று சொன்னார்.

அன்று முதல் அந்த பெண் தெருவில் போகும் போது எல்லாம் கால்களையே பார்த்து கொண்டு போக, ஒரு நாள் மிகப்பெரிய பாதத்துடன் ஒருவனை பார்க்க, அவனுடன் பழகி, அன்றைய இரவை அவனுடன் கழித்தாள். காலையில் எழுந்து பார்த்த இளைஞன் பக்கத்தில் அந்த பெண் எழுதியிருந்த  ஒரு லெட்டரை கண்டான். அதில் “ இத்துடன் ஆயிரம் ரூபாய்க்கான செக் இருக்கிறது, தயவு செய்து உன் காலுக்கு ஏற்ற  சரியான சைஸ் ஷூவை வாங்கி மாட்டிக் கொள்ளவும் என்று எழுதியிருந்தது.





நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

59 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் சங்கர், வாழ்த்துக்கள் ஆ.வி சிறுகதைக்காக

டக்ளஸ்....... said...

ஜெயா டீவி மேட்டரை யூடியூப்ல ஏத்தி லிங்க் கொடுங்க தலைவரே..!
எங்களுக்கு வசதியா இருக்கும்.

வாழ்த்துக்கள் சொல்லி சொல்லியே வாய் வலிக்கிது..!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

வித்யா said...

வாழ்த்துகள்.

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள்.

"அகநாழிகை" said...

‘தல‘ போல வருமா ?
வாழ்த்துக்கள் கேபிள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துகள்,ஷங்கர்.
கிம்.கி.டுக் கின் ஸென் கவிதையான அந்தப் படத்தை பெரும்பாலானோரின் ரசனைக்காக எடுத்திருக்க மாட்டார் அவர் என்று நினைக்கிறேன்.

anbudan said...

வாழ்த்துகள்.அண்ணா..கலக்குங்க.

தராசு said...

//வர வியாழக்கிழமை எனக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். ஒன்ணு நான் எழுதின ஒரு சிறுகதை //

வாழ்த்துக்கள் தல, நீங்களும் ஜீப்புல ஏறிட்டிங்க.

டக்ளஸ் சொன்னதை செஞ்சீங்கன்னா எங்களைப் போலுள்ளவர்களுக்கு எதோ உதவி செஞ்ச புண்ணியம் கிடைக்கும்.

வெங்கிராஜா said...

ம்... கலக்குங்க தலீவரே... ப்ரோக்ராம டக்ளசு அண்ணாத்த சொல்றாப்ல யீடீப்-ல போட்டுருங்க..

ஹாலிவுட் பாலா said...

வாவ்.. வாவ்.. வாவ்..! கலக்குங்க சங்கர்..! :)

எனக்கு நாளைக்கு முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். :)

நையாண்டி நைனா said...

present sir.

தண்டோரா said...

கேபிள் டிவியில் வரப் போகுதா?

K.S.Muthubalakrishnan said...

Sir, valthukal

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..

முரளிகண்ணன் said...

\\கேபிள் டிவியில் வரப் போகுதா?

\\

தண்டோரா கமெண்ட் கலக்கல்.

\\எனக்கு நாளைக்கு முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். :)
\\

ஹாலிவுட் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்.


கலக்குங்க கேபிளாரே.

ஜெயா டிவி அந்த நேரம் பார்க்க முடியாது. இந்திய பதிவர்களால்.
அதனால் சிடி வாங்கி வலையேற்றவும்.

அனுஜன்யா said...

வாழ்த்துகள் எல்லாவற்றுக்கும். ட்ரீட் கொடுக்கும் போது மறக்காமல் நம்ம அத்திரியைக் கூட்டிச் செல்லுங்கள் :)

அனுஜன்யா

Sukumar Swaminathan said...

Great News Thala.....!!!! Keep rocking .... !!!1

ராஜா | KVR said...

//வர வியாழக்கிழமை எனக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். ஒன்ணு நான் எழுதின ஒரு சிறுகதை ( ஒரு பக்க சிறுகதை இல்லை) விகடன்ல வரபோவுதாம், ரெண்டாவது அன்னைக்கு மத்யானம் ஜெயாடிவில ஒரு லைவ் நிகழ்ச்சியில ப்ளாக் பத்தி ஒரு புரோக்ராம் மத்யானம் 12 மணிக்கு வர போவுது. ரொம்ப நாள் கழிச்சு கேமரா முன்னால நிக்க போறேன். ஒரு சந்தோஷபகிர்வு தான் நண்பர்களே//

வாழ்த்துகள்!!!

//அதில் “ இத்துடன் ஆயிரம் ரூபாய்க்கான செக் இருக்கிறது, தயவு செய்து உன் காலுக்கு ஏற்ற சரியான சைஸ் ஷூவை வாங்கி மாட்டிக் கொள்ளவும் என்று எழுதியிருந்தது.//

:-))))))))))))))

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள். ஆனந்த விகடன் & ஜெயா டிவி இரண்டிற்கும்.

ஏ ஜோக் சுமார் ரகம்.

ஜூன் 22 அன்று சென்னை வருகின்றேன். தங்களைச் சந்திக்க வேண்டும். தங்களின் மொபைல் நம்பரை raghavannigeria@gmail.com க்கு அனுப்பவும்.

கோபிநாத் said...

ஆகா!!!..லிங்கை கொடுக்க மறந்துடாதிங்க.

வாழ்த்துக்கள் தல ;)

பார்சா குமார‌ன் said...

வாழ்த்துகள்.

அக்னி பார்வை said...

///வர வியாழக்கிழமை எனக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். ஒன்ணு நான் எழுதின ஒரு சிறுகதை ( ஒரு பக்க சிறுகதை இல்லை) விகடன்ல வரபோவுதாம், ரெண்டாவது அன்னைக்கு மத்யானம் ஜெயாடிவில ஒரு லைவ் நிகழ்ச்சியில ப்ளாக் பத்தி ஒரு புரோக்ராம் மத்யானம் 12 மணிக்கு வர போவுது. ரொம்ப நாள் கழிச்சு கேமரா முன்னால நிக்க போறேன். ஒரு சந்தோஷபகிர்வு தான் நண்பர்களே.

////

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் ஷங்கர்.

தமிழ்நெஞ்சம் said...

வாழ்த்துகள்

வினோத்குமார் said...

வாழ்த்துகள் நண்பரே!...

நம்ம அனைவரின் ப்ளாக்க பத்தி நல்லா எடுத்து சொல்லுங்க...

நாலு பேரு வந்து படிக்கட்டும்

நேசன்..., said...

Waiting eagerly for that Thursday......advance wishes!

Sudhar said...

http://www.telugucinema.com/c/publish/moviereviews/kick_moviereview.php

about Kick music - S.S.Thaman

"He has shown his weakness in music department once again. Music director S S Thaman (Malli Malli fame) has badly done his job. Neither the songs nor the recording is impressive. It is extensively shot in Malaysia and the production values are good."

Kanna said...

வாழ்த்துக்கள்.. தல

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

(சத்யராஜ் பாணியில்).. உங்களுக்கு வாழ்த்துச்சொல்லி வாழ்த்துச்சொல்லியே நா ஓஞ்சுடுவேன் போலிருக்கே.!

வாழ்த்துகள் தல.!

Cable Sankar said...

நன்றி முரளி பத்மநாபன்..
நன்றி டக்ளஸ்.. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

Cable Sankar said...

நன்றி நட்புடன் ஜமால்,
வண்ணத்துபூச்சியார்,
வித்யா.. அவர்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

Cable Sankar said...

/‘தல‘ போல வருமா ?
வாழ்த்துக்கள் கேபிள்.

‘அகநாழிகை‘
//
மிக்க் நன்றி தலைவரே.. மிக்க நன்றி..

Cable Sankar said...

/வாழ்த்துகள்,ஷங்கர்.
கிம்.கி.டுக் கின் ஸென் கவிதையான அந்தப் படத்தை பெரும்பாலானோரின் ரசனைக்காக எடுத்திருக்க மாட்டார் அவர் என்று நினைக்கிறேன்.

10:51 AM//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷண்முகபிரியன் சார்.. நீஙக்ள் சொன்னது போல் பெரும்பாலோரின் ரசனைக்காக எடுக்க பட்ட படமல்ல தான் அவரது எல்லா படமும் அப்படித்தான் இருக்கிறது சார்..

Cable Sankar said...

/ம்... கலக்குங்க தலீவரே... ப்ரோக்ராம டக்ளசு அண்ணாத்த சொல்றாப்ல யீடீப்-ல //

கண்டிப்பா முயற்சி செய்கிறேன் வெங்கிராஜா..

Cable Sankar said...

நன்றி அன்புடன், தராசு.. ஆகியோருக்கு

Cable Sankar said...

/வாவ்.. வாவ்.. வாவ்..! கலக்குங்க சங்கர்..! :)

எனக்கு நாளைக்கு முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். :)

11:20 AM//

வாழ்த்துக்கள் பாலா.. நீங்கள் அமெரிக்காவிலேயே இருக்க கடவது.

Cable Sankar said...

நன்றி நைனா..

Cable Sankar said...

புரோக்ராமே கேபிள் டிவியில தான் வரப்போவுது.. தண்டோரா..

Cable Sankar said...

நன்றி முத்து பாலகிருஷ்ணன், நர்சிம் ஆகியோரின் வாழ்த்துக்களுக்கு

Cable Sankar said...

/கலக்குங்க கேபிளாரே.

ஜெயா டிவி அந்த நேரம் பார்க்க முடியாது. இந்திய பதிவர்களால்.
அதனால் சிடி வாங்கி வலையேற்றவும்.

11:47 AM//

முயற்சி செய்கிறேன் முரளீ.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

Cable Sankar said...

நன்றி அனுஜன்யா..

Cable Sankar said...

சுகுமார் சுவாமிநாதன், ராஜா, நைஜீரியா இராகவன்.. ஆகியோரின் வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க் நன்றி

Cable Sankar said...

விக்னேஷ்வரி, தமிழ்நெஞ்சம், பார்ச்சா குமரன், அக்னிபார்வை, ஆகியோரின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Cable Sankar said...

நேசன், கண்ணா, ராதாகிருஷ்ணன் சார்.. ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Cable Sankar said...

/He has shown his weakness in music department once again. Music director S S Thaman (Malli Malli fame) has badly done his job. Neither the songs nor the recording is impressive. It is extensively shot in Malaysia and the production values are good."//

சுதர்.. தெலுகுசினிமா.காமிற்கு அப்படி தோன்றியிருக்கலாம், என் என்ணம் இப்படி.. அவ்வளவுதான். பாட்டு நல்லா இல்லாம படம் ஹிட்டாகாது.. சுதர்.

Cable Sankar said...

/(சத்யராஜ் பாணியில்).. உங்களுக்கு வாழ்த்துச்சொல்லி வாழ்த்துச்சொல்லியே நா ஓஞ்சுடுவேன் போலிருக்கே.!

வாழ்த்துகள் தல//


நன்றி தலைவரே..

பிரேம்ஜி said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ....

Chill-Peer said...

50 வாழ்த்துக்கள்...

Cable Sankar said...

நன்றி பிரோம்ஜி.. சில்.பீர்... உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

அத்திரி said...

அண்ணே வாழ்த்துக்கள்.........கொத்து பரோட்டோ ரொம்ப நாளைக்கப்புறம் களை கட்டியிருக்கு..

அத்திரி said...

அண்ணே வாழ்த்துக்கள்.........கொத்து பரோட்டோ ரொம்ப நாளைக்கப்புறம் களை கட்டியிருக்கு..

அத்திரி said...

அண்ணே வாழ்த்துக்கள்.........கொத்து பரோட்டோ ரொம்ப நாளைக்கப்புறம் களை கட்டியிருக்கு..

வெண்பூ said...

வியாழக்கிழமைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்...

biskothupayal said...

எழுத்தாளர் சங்கரநாராயணன் அண்ணனனுக்கு

வாழ்த்துகள்!

Suresh said...

வாழ்த்துகள் நண்பா , சீக்கிரமே நீங்கள் நல்லதொரு படத்தை இயக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை,

ஜெயா டிவி வீடியோ யூ டியூபில் ஏத்துங்க

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


நன்றி
தமிழர்ஸ்

செல்வேந்திரன் said...

என்னது ஓடுற படம்தாம் எடுப்பீங்களா?!