Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

May 8, 2009

கொத்து பரோட்டா – 08/05/09

சத்யராஜும், கவுண்டமணியும் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால் அந்த இடத்தில் கிண்டலுக்கும் நக்கலுக்கும் பஞ்சமேயிருக்காது. அப்படி ஒரு படப்பிடிப்பில் நானும் அவர்களுடன் நடித்து கொண்டிருந்த போது, ஷாட்டுக்கு இடையே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கவுண்டர் : ‘ஏம்பா.. நாளைக்கு நான் சூட்டிங்கு வர மாட்டேம்பா..:

சத்யராஜ்: “ஏன்?”

கவுண்டர் : “செக் பவுன்ஸ் ஆயிருச்சு.. அப்புறம் என்ன மசுத்துக்கு நடிக்கணும்?”

சத்யராஜ் : “அண்ணே… நீங்க வீட்டுல போய் என்ன செய்ய போறீங்க..? சும்மாதானே இருக்க போறீங்க.. அதுக்கு இங்க இருந்தாலாவது நம்ம ரெண்டு பேரும் பிஸியா இருக்கிறோம்னு சொல்லிகலாமில்லையா.. ஏன்னா எனக்கு கூட பவுன்ஸ் ஆயிருச்சு..” என்றார்.

****************************************************************************************************
திரையில் வெள்ளை போர்டில் கருப்பு எழுத்துக்களில் AIDS என்று எழுதபட்டிருக்க, அதை ஒரு கை 12 பிரேமில் அழிக்க, கடைசியாய் ஒரு கேப்ஷன் “USE RUBBER TO ERASE AIDS”  மிக குறுகிய செகண்டுகளில் அருமையான கருத்தை வெளிபடுத்திய  ஒரு குறும்படம். சத்யம் தியேட்டர்காரர்கள் தயாரித்திருக்கும் இந்த படம் அவர்களுடய திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் காட்டுகிறார்கள். சூப்பர்ப்… அருமையான Concept. Excellent Execution.

*****************************************************************************************************

நீ காதலை பற்றியும் கல்யாணத்தை பற்றியும் படிக்க வேண்டுமானால், தனிதனியாய் இரண்டு புத்தகங்களை படிக்க வேண்டும் – ஆலன் கிங்

கல்யாணம் என்பது பேங்கில் பணம் போடுவது போல், ஆனால் எவ்வளவு  பணம் போட்டாலும், எடுத்தாலும் நமக்கு இண்ட்ரஸ்ட் இழப்பு நிச்சயம்.
*****************************************************************************************************
சமீப காலமாய் நம் பதிவர்கள் பல பேர் பல மீடியாக்களில் கலக்கி வருகிறார்கள். எம்.எம்.அப்துல்லா சொல்ல சொல்ல இனிக்கும் என்கிற திரைபடத்தில் ஒரு பாடலை குத்தியிருக்கிறார்.  நன்றாகவே பாடியிருக்கிறார். இப்பாடல் நன்றாக படம்பிடிக்க பட்டிருந்தால் நிச்சயம் ஹிட். நர்சிம், அதிஷா, லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணா, போன்றவர்கள் பிரிண்ட் மீடியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுக்கென்று தனி முத்திரைகளை பதிவுலகில் பெற்றவர்கள். அவர்களின் எழுத்து மென் மேலும் சிறக்க வாழ்த்துவோம்.   எதிர்காலத்தில் நிறைய பதிவர்கள் பல துறைகளில் வெற்றி பெரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் இவர்களின் முதல் அடியே மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாய் அமையும் என்பது நிச்சயம்.

********************************************************************************************

ஏ ஜோக்

ஒர் இளம் பெண் தன் முத்ல் திருமணத்தின் மூலம் 13 குழந்தைகளை பெற்றாள், இரண்டாவது திருமனத்தின் மூலம் 10 குழந்தைகளையும், மூன்றாவது திருமணத்தின் மூலமாய் ஏழும், நான்காவது திருமணதின் மூலமாய் ஐந்து குழந்தைகளையும் பெற்று ஒரு நாள் இறந்தாள்.
அவளின் சவ அடக்கத்தின்  போது ஓருவர் “ அட்லீஸ்ட் இப்போதாவது அவர்கள் ஒன்றாய் இணைந்தார்களே? என்று சொல்ல, அருகிலிருந்தவர்,

” எந்த கனவருடன் இணைவாள் இவள்?”

அதற்க்கு முதலாமவர் “ நான் இணைந்தது என்று சொன்னது அவள் கணவர்களை பற்றியல்ல. அவளுடய கால்களை” என்றார்.


டீன் ஏஜ் பெண் தன் தாயிடம் “ என் ப்ரண்ட் ரீட்டா சொல்கிறாள். ஆண்கள் தங்கள் உறுப்பை வைக்கும் இடத்திலிருந்துதான் குழந்தை பிறக்கும் என்று அது உண்மையா..? என்று கேட்க, அம்மா, “ஆமாம் என்று சொல்ல..” மகள் “ அப்படின்னா எனக்கு குழந்தை பிறக்கும் போது என் பல் இடிக்காதா”?” என்று கேட்டாள்





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

47 comments:

ரவிச்சந்திரன் said...

நீங்க சினிமால நச்சிருக்கீங்களா..? :)

Anonymous said...

//சமீப காலமாய் நம் பதிவர்கள் பல பேர் பல மீடியாக்களில் கலக்கி வருகிறார்கள். //

<-

?

:(

keerthi said...

/அப்படின்னா எனக்கு குழந்தை /?பிறக்கும் போது என் பல் இடிக்காதா”/

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ................கேபிள்

வால்பையன் said...

செமஹாட்டு மச்சி!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நாங்க பதிவுலேந்து சினிமாவுக்கு போன ஆளு. நீங்க சினிமாவுலேந்து பதிவுலகம் வந்த ஆளு. விரைவில் நான் உங்க படத்துலயும் பாடனும் :)

அப்பாவி தமிழன் said...

தலைவா நீங்க நடிச்சு இருக்கீங்களா ?

தராசு said...

//எதிர்காலத்தில் நிறைய பதிவர்கள் பல துறைகளில் வெற்றி பெரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் இவர்களின் முதல் அடியே மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாய் அமையும் என்பது நிச்சயம்.//

வழி மொழிகிறேன்

K.S.Muthubalakrishnan said...

RED HOT Jokes

பிரியமுடன்.........வசந்த் said...

//சமீப காலமாய் நம் பதிவர்கள் பல பேர் பல மீடியாக்களில் கலக்கி வருகிறார்கள். எம்.எம்.அப்துல்லா சொல்ல சொல்ல இனிக்கும் என்கிற திரைபடத்தில் ஒரு பாடலை குத்தியிருக்கிறார். நன்றாகவே பாடியிருக்கிறார். இப்பாடல் நன்றாக படம்பிடிக்க பட்டிருந்தால் நிச்சயம் ஹிட். நர்சிம், அதிஷா, லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணா, போன்றவர்கள் பிரிண்ட் மீடியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுக்கென்று தனி முத்திரைகளை பதிவுலகில் பெற்றவர்கள். அவர்களின் எழுத்து மென் மேலும் சிறக்க வாழ்த்துவோம். எதிர்காலத்தில் நிறைய பதிவர்கள் பல துறைகளில் வெற்றி பெரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் இவர்களின் முதல் அடியே மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாய் அமையும் என்பது நிச்சயம்.//

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நமிதா..! said...

joke...?



::)

கார்த்திகைப் பாண்டியன் said...

கேபிள்.. படத்துல வேற நடிச்சு இருக்கீங்களா? அந்த "A" ஜோக்ஸ்.. அநியாயத்துக்கு ஓவர்..

டக்ளஸ்....... said...

:-))))

முரளிகண்ணன் said...

காரசாரமான புரோட்டா

நையாண்டி நைனா said...

present sir.

கடைக்குட்டி said...

செமங்க :-)

Anonymous said...

This week jokes are 'AAAAAAAAAAAAAAAAAAAAAAAAA'
--Raja

சுரேந்திரா said...

காம(மெ)டி!!

ராஜன் said...

என்னமோ போங்க....

தீப்பெட்டி said...

//முரளிகண்ணன் said...

காரசாரமான புரோட்டா//

பச்சை மிளகா(?) கூடிருச்சு அதான்...

ச்சின்னப் பையன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

கோபிநாத் said...

தல எந்த படம்னு சொல்லவேல்ல..

வழக்கம் போல பரோட்டா நல்ல சுவை ;)

அக்னி பார்வை said...

கொத்துபரோட்டாவுக்காக ஏ ஜோக் தேஇ போடுகிறீர்களா? இல்லை ஏ ஜொக்கிற்க்காக கொத்து பரோட்டா போடுகிறீர்களா?

எப்படி கேட்டேன் பத்தீங்களா

வித்யா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

shabi said...

படம் பேரு என்னா உங்க photo போடுங்களேன்

புருனோ Bruno said...

//சூப்பர்ப்… அருமையான Concept. Excellent Execution.//

வழிமொழிகிறேன்

அதே நேரம்

ரப்பர் என்பது ஆணுறை என்று புரியாதவர்கள் / தெரியாதவர்கள் இந்த விளம்பரத்தை புரிந்து கொள்வார்களா

Cable Sankar said...

//
நீங்க சினிமால நச்சிருக்கீங்களா..? :)

//

ஆமாம் ரவிசந்திரன்..கிட்டதட்ட 95 திரைபடங்களில் சிறு சிறு வேடங்களிலும், 100க்கும் மேற்பட்ட சீரியல்களில் நல்ல கேரக்டர் ரோல்களிலும் நடித்திருக்கிறேன்.

Cable Sankar said...

//<-

?

:(
//

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் அனானி..?

Cable Sankar said...

//ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ................கேபிள்
//

நீங்க சொல்லாட்டி என்ன கீர்த்தி.. நான் சொல்றேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
//செமஹாட்டு மச்சி!//
நன்றி வால்பையன்.

//அண்ணே நாங்க பதிவுலேந்து சினிமாவுக்கு போன ஆளு. நீங்க சினிமாவுலேந்து பதிவுலகம் வந்த ஆளு. விரைவில் நான் உங்க படத்துலயும் பாடனும் :)//

நீங்க பாடாமையா..கண்டிப்பா நீங்க பாடுறீங்க.. அப்துல்லா..

Cable Sankar said...

//தலைவா நீங்க நடிச்சு இருக்கீங்களா ?//

ஆமா தலைவா.. நன்றி அப்பாவி தமிழன்.

நன்றி முத்து பாலகிருஷ்ணன், தராசு..அவர்களுக்கு

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பிரியமுடன் வசந்த், நமீதா..வுக்கும்..

Cable Sankar said...

//கேபிள்.. படத்துல வேற நடிச்சு இருக்கீங்களா? அந்த "A" ஜோக்ஸ்.. அநியாயத்துக்கு ஓவர்..

//

ஆமாம் பாண்டியன்.. அப்புறம் அப்படியில்லைன்னா அது ஏ ஜோக் இல்லைன்னு சொல்லிருவாங்க..

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி டக்ளஸ், கடைகுட்டி, முரளிகண்ணன், நையாண்டி நைனா.. அவர்களுக்கு.

Cable Sankar said...

ராஜன் ,சுரேந்திரா, தீப்பெட்டி அவர்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

Cable Sankar said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபிநாத், சின்னப்பையன். அவர்களுக்கு

Cable Sankar said...

//கொத்துபரோட்டாவுக்காக ஏ ஜோக் தேஇ போடுகிறீர்களா? இல்லை ஏ ஜொக்கிற்க்காக கொத்து பரோட்டா போடுகிறீர்களா?

எப்படி கேட்டேன் பத்தீங்களா

//

என்னா ஒரு மடக்கு மடக்கிட்டீங்க அக்னி..

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஷாபி, வித்யா.. அவர்களுக்கு

Cable Sankar said...

//வழிமொழிகிறேன்

அதே நேரம்

ரப்பர் என்பது ஆணுறை என்று புரியாதவர்கள் / தெரியாதவர்கள் இந்த விளம்பரத்தை புரிந்து கொள்வார்களா
//

புருனோ.. எனக்கென்னவோ.. சத்யம் தியேட்டர் வரும் ஆட்களுக்கு புரியும் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த படம் அங்கு திரையிடுவதற்காகவே எடுக்கப்பட்டதாய் சொன்னார்கள்.

Cable Sankar said...

விவேக் இந்த ரப்பர் மேட்டரை வைத்து ஒரு காமெடி சீனே பண்ணியிருக்கிறார்.புருனோ

Chill-Peer said...

'சிறப்பு திருமண கொத்து'- சிறப்பு

இந்த ரப்பர் மேட்டர், டாக்டர் சொன்னதுக்கு பிறகுதான் புரிந்தது.

இவ்ளோ அப்பாவியா இருக்கியே நீ - நான் என்னைச் சொன்னேன்.

வெங்கிராஜா said...

பகிர்ந்ததற்கு நன்றி! அப்துல்லா அண்ணன் வளமாகப் பாடவும், கேபிள் அண்ணன் திடமாக இயக்கவும்! எல்லோரும் சொல்லி வச்சு இந்த பதிவு போடுறீங்களா? வரிசையா வால், பரிசல்.. இப்போ கேபிள்! சத்யம்.. ம்ஹும்.. மெட்ராசுக்கு சீக்கிரம் வரணும்!

pappu said...

பாவம் அந்த பொண்ணுக்கு இது வரைக்கும் ஒரு நல்ல சான்ஸ் யாரும் க்ஒடுக்கல போல!

Cable Sankar said...

//பாவம் அந்த பொண்ணுக்கு இது வரைக்கும் ஒரு நல்ல சான்ஸ் யாரும் க்ஒடுக்கல போல!

//
:):)

Cable Sankar said...

//பகிர்ந்ததற்கு நன்றி! அப்துல்லா அண்ணன் வளமாகப் பாடவும், கேபிள் அண்ணன் திடமாக இயக்கவும்! எல்லோரும் சொல்லி வச்சு இந்த பதிவு போடுறீங்களா? வரிசையா வால், பரிசல்.. இப்போ கேபிள்! சத்யம்.. ம்ஹும்.. மெட்ராசுக்கு சீக்கிரம் வரணும்!

//

வாங்க.. வெங்கிராஜா..

ஜெட்லி said...

உங்கள் கொத்து அருமை....
தொடர்ந்து உங்கள் பரோட்டாவை ருசிக்க காத்து கொண்டு இருக்குறேன்.

குசும்பன் said...

கொத்துபரட்டோ அருமை!

அப்புறம் நர்சிம் ஹீரோவா நடிக்கும் விசயத்தையும் சொல்லி இருக்கலாம்!
(சிரிப்பான் போட வில்லை ஆகையால் மேட்டர் படு சீரியஸ்)

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல்.

வாழ்த்துகள்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நாயுடு மெஸ்ல கொத்து புரோட்டா சாப்ட்ட உணர்வு. அருமை.

கடைசி 2 ஏ ஜோக்குகளும் எனக்கு புரியவில்லை.