அயன் – திரைவிமர்சனம்

250வது பதிவு


ayan-stills-7

பரபரவென ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? யஹிஹே ரைட் சாய்ஸ் பேபி. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சும்மா தூள் பரக்க அடித்து ஆடியிருக்கிறார்கள்.

கள்ளக்கடத்தல் செய்யும் தாஸின் சகாவான சூர்யா, புத்திசாலி, படிப்பாளி, ஸ்மார்டானவன். ஒவ்வொரு முறையும் அவன் கடத்தி வரும் பொருட்களூக்கு எப்பாடு பட்டாவது எந்த்வித பாதகமில்லாமல் கொண்டு வந்து சேர்ப்பவன். அம்மா மீது பாசக்காரன். அப்பா போன்ற தாஸின் அன்புக்கு கட்டுப்பட்டவ்ன்.
ayan1

தாஸின் புது எதிரியாய் சவுகார்பேட்டை வில்லன், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் போட்டு கொடுக்க, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தாஸும், சூர்யாவும், தப்பிக்க், பரபர கேட் அண்ட் மவுஸ் கேம்.

கேமின் உச்சகட்டமாய் திருடனை வைத்தே திருடனை பிடிக்கும் டெக்னிக் அருமை. காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், தமன்னாவுடன் காதல் செய்வதகட்டும், படம் முழுக்க சூர்யா துள்ளித்திறிகிறார்.
surya

ம்ஹூஹூம்.. ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய்,  கோடை மழையாய், குளிர்கால வெயிலாய்,  தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் முழுக்க, நம்மை உருக்குகிறார். என்னா ஒரு இன்னொசென்ஸ் அவர் முகத்தில். ஆனந்த தாண்டவம் மதுமிதாவுக்காக காத்திருக்கிறேன்.

விஜய் டிவி நண்டுக்கு நல்ல பலமான கேரக்டர், உணர்ந்து செய்திருக்கிறார். என்ன அண்ணன் தன் தங்கையிடம் ஓரிடத்தில் உன்னை ஐயிட்டம்னு நினைச்சிட்டான் என்று சொல்கிறார். படம் முழுக்க அவர் தமன்னாவுக்கு அண்ணன் என்பதைவிட மாமாவாக வைத்திருந்தால் ஏற்றுபுடையதாய் இருந்திருக்கும்
 
படத்திற்கு மிகப்பெரிய பலம் புத்திசாலிதனமான திரைக்கதை, கடத்தல் செய்ய கையாளும் புதிய வ்ழிமுறைகளும், அதிலிருந்து தப்பிக்க செய்யும் வழிமுறைகளும் அருமை. அதிலும் எப்படி தப்பித்தார்கள் என்பதற்க்கு அதற்கான காட்சிகளை ப்ளாஷ்கட்டில் காட்டும் உத்தி நன்றாகவே உள்ளது.
படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு டிவிடி கேட்டு வரும் இயக்குரை காட்டும் இப்படத்தின் இயக்குனர் கிண்டல் செய்திருக்கிறாரா..? அல்லது வருத்தமா..? இரண்டு உணர்வு என்றாலும் தவறானதே. இப்படத்தின் அடித்தளமே ஸ்பீல்பெர்க்கின் “Catch Me If You can”  திரைப்படத்தின்  தழுவல்தான். அதிலும் காங்கோவில் நடக்கும் மயிற்கூச்செரியும்  சண்டைகாட்சி District B13 இன்ஸ்ப்ரேஷன். எதுக்கு அட்வைஸோ, கிண்டலோ,  இயக்குனரே.
Sakkarai sureh
படத்தில் பிரபு, வில்லன் நடிகரின் கணக்காளராக வரும் பரத்வாஜ், கருணாஸ்,  என்று அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லனுக்கு பிண்ணனி குரல் கொடுத்த கோலங்கள் புகழ் அஜய்யின் குரல் செமையாய் செட்டாகியிருக்கிற்து.

ஹாரிஸ் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டிருக்கிறார். வில்லன் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் ஒரு டாம் ஆண்ட் ஜெர்ரி டைப் பிண்ணனி இசை போட்டிருக்கிறார். ஒரே ஒரு பாடல் சுகம், மற்ற்படி சொல்லிக்கிறபடியா இல்லை.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு சூப்பர்ப்.. என்பது சாதாரண வார்த்தை, முக்கியமாய் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட பாடலாகட்டும், காங்கோவில் எடுக்கப்பட்ட சண்டை காட்ச்சிகளாகட்டும் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த, சுபாவின் திரைக்கதை, வசனம் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.அதே போல் ஆண்டனியின் எடிட்டிங்கில் இரண்டாவது பாதியில், கொஞ்சம் நறுக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சன் டிவியின் முதல் நிஜ வெற்றி நடை போடப்போகும் வெளியீடு.

அயன் - நயன்



Blogger Tips -கொத்துபரோட்டா 03/04/09 படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

shabi said…
என்னா இதுக்கு மேல ஒரு நல்ல படம் எப்டி சார் எடுப்பீங்க நீங்க போய் சொல்லி குடுங்க
shabi said…
பாட்டு எல்லாம் சூப்பர் நீங்க எப்டி ஒரு பாட்டுதான் நல்லா இருக்குன்னு சொல்ரிங்க வில்லு/ஏகனுக்கு இது ஒரு நல்ல படம்.னான் சூர்யா/ஹாரிஸ்/kv ரசிகர் இல்ல.
பாலா said…
//மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். //

’கனா கண்டேன்’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சங்கர். ஆனா அது வெற்றிப்படமா? வேற மாதிரி படிச்ச நியாபகம்!

விமர்சனம் கலக்கல்!!! ஆனா சூர்யா பத்தி ஒரே லைன்ல சொல்லி முடிச்சிட்டீங்க. :-(
//என்னா இதுக்கு மேல ஒரு நல்ல படம் எப்டி சார் எடுப்பீங்க நீங்க போய் சொல்லி குடுங்க/
ஷாபி விமர்சனம் படிக்காமயே பின்னூட்டம் போடுவீங்க போலிருக்கு. நான் நல்லாருக்க்னுதானே சொல்லியிருக்கேன். பாட்டு மட்டும்தான் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. ஒரு வாட்டி முழுசா படிச்சிருங்க..
This comment has been removed by the author.
Raju said…
என்னா லேட்டு..அடுத்த தடவை வேமா வரணும் OK.
போயி உக்காருங்க!
புதுசா ஒரு டிஸ்கஷன் அதனால் நேத்து சாயங்காலம்தான் பார்த்தேன் அதாணுங்க லேட்டு,போய் உட்காரட்டுங்களா..டக்ளஸண்ணே
Unknown said…
காலையில் உங்க பதிவுல தான் முதல்ல விமர்சனம் தேடி வந்தேன் (தமிழ்மணம் போகாமல் நேரடியாகவே), ஆனால் இல்லை. உங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் போட்டுட்டாங்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கிங்க போல :-)
இப்பல்லாம் எந்தப் படத்தை பார்த்தாலும் ஒரு ஆங்கிலப் படத்தைச் சொல்லி அதோட தழுவல்னு சொல்லிடறீங்க. இருங்க குசும்பன்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்றேன்!

கனா கண்டேன் சூப்பர்ப்பான படம். அப்படி ஒரு வில்லனை (பிருத்விராஜ்) யாரும் காட்டவில்லை. ஆனால் அது வெற்றிப் படமா?

இன்னொரு விஷயம்..

கே.வி.ஆனந்த் என் நண்பர்!
Suresh said…
சுப்பர் காலையிலே 4 மணிக்கு எழுந்து ஒரு விமர்சணம் எழுதி போட்டேன் .. பார்த்து சொல்லுங்கள்
சும்மா சொல்லவில்லை பரிசல் நான் சொல்வது நிஜம். வேண்டுமானால் படத்தை பாருங்கள். அப்புறம் அந்த பைட் சீனை லிங்கை கொடுக்கிறேன் சொடுக்கி பாருங்கள். நான் அதை குறையாக கூறவில்லை. படத்தில் வரும் காட்சிகளில் அதை சொல்லி கிண்டலோ, வருத்தமோ பட்டிருக்கிறார்கள். அது எதற்கு என்றுதான். வேறொன்றுமில்லை. உங்க நண்பருக்கு வாழ்த்து சொல்லுங்கள். பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார். கனா கண்டேன் ஆவரேஜ் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம்.
Anonymous said…
படம் எனக்குப் பிடிக்கவில்லை!. சூர்யா வழக்கம் போல கலக்கல். இடைவேளைக்குப் பின்னர் இஇஇழுழுழுவை மாதிரி ஒரு உணர்வு!. கனாக் கண்டேன் நன்றாக இருந்தது.!
butterfly Surya said…
படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு டிவிடி கேட்டு வரும் இயக்குரை காட்டும் இப்படத்தின் இயக்குனர் கிண்டல் செய்திருக்கிறாரா..? ////

இந்த கொடுமை வேறயா ..????
//இந்த கொடுமை வேறயா ..????//
ஹீ..ஹி.ஹி
//படம் எனக்குப் பிடிக்கவில்லை!. சூர்யா வழக்கம் போல கலக்கல். இடைவேளைக்குப் பின்னர் இஇஇழுழுழுவை மாதிரி ஒரு உணர்வு!. கனாக் கண்டேன் நன்றாக இருந்தது.!//

எனக்கு படம் பிடித்திருந்தது. நீஙக்ள் சொன்னது போல் செகண்ட் ஆப் கொஞ்சம் இழுவைதான்.. கத்திரி போடலாம்.விஜய். ந்னறி உங்கள் வருகைக்கும், கருத்தூகும்
http://www.youtube.com/watch?v=vToKQ5QwTD0
District B13 chasing scene
வஜ்ரா said…
சூரியா ஒரு பிள்டிங்க் ஜன்னலிலிருந்து மற்றொரு ஜன்னலுக்குத் தாவுவது காமிரா ஆங்கிள் முதற்கொண்டு The Bourne Ultimatum படத்திலிருந்து எடுத்தது மாதிரி இருந்தது.
Unknown said…
//சுப்பர் காலையிலே 4 மணிக்கு எழுந்து ஒரு விமர்சணம் எழுதி போட்டேன் .. பார்த்து சொல்லுங்கள்

//

படிச்சிட்டேன் சுரேஷ்.. ஆனா ஏதோ ப்ராப்ளம் பின்னூட்டம் போடறதுக்கு.. நல்லாருக்கு உங்க விமர்சனம்.
மேலே உள்ள கமெண்ட் என்னுடயதுதான் சுரேஷ்..
//சன் டிவியின் முதல் நிஜ வெற்றி நடை போடப்போகும் வெளியீடு.//

:-)))
Prabhu said…
intha varusathila vantha muthal nalla padamnu ninaikiren... enna director sir...
இவ்வளவு தூரம் நீங்கள் சொல்லி இருப்பதால் கண்டிப்பாகப் படம் பார்க்கிறேன்,ஷ்ங்கர்.
வணக்கம் சங்கர், எனக்கு முதல் பாதியில் Blood Diamond உம், இரண்டாவது பாதியில் Maria full of Grace உம் தான் நியாபகம் வந்தது. நீங்கள் சொன்னதுபோல harris- re recording இல் சொதப்பித்தான் இருக்கிறார்.பாடல்களிலும். மேலும் நீங்கள் சொன்னதுபோல அந்த Flashback உத்தி நல்ல விஷயம் அனால் படம் நெடுக அதையே கையாண்டிருக்கிறார். ஆனால் கேமரா வாய்ப்பே இல்ல, அட்டகாசம். கதையை கதைகளத்தை திருடலாம். தொழில்நுட்பம். நிச்சயமாக தமிழ் சினிமா அடுத்தகட்டத்தை எட்டிவிட்டது.
சூர்யா, வழக்கம் போல பின்னி பெடலெடுத்துட்டார். அப்புறம் தமன்னா ம்ம்ம் என்ன சொல்ல (எதோ சிந்தி பொன்னாமா? கலர் மட்டும் கண்ணா விட்டு போகமாட்டேங்குது)
"வாழ்த்துகள் கே. வீ சார். ஐயா பரிசல் சொல்லிடுங்க"
I watched that Youtube. It's really Fantastic.
Thank You For Publishing Hot Spot Photo
மேவி... said…
nalla irukku padam .....
thanjai gemini said…
நான் படம் பாக்கல விமர்சனமும் படிக்கல எப்பவும் படம் பாக்காம விமர்சனம், trailer எதுவும் பாக்கமாட்டேன் அப்பறம் கமென்ட்டுறேன்
படம் பார்காததால் கடைசி மட்டும் தான் படித்தேன் கண்டிப்பாக பார்ப்பேன் அதற்கு முன் ஒரு விசயம் ஹிஹிஹி HOT SPOT செம கலக்கல்
நான் இன்னும் படம் பார்க்கல.. விமர்சனம் படிச்சிட்டுத்தான் படம் பார்க்கணும்னு இருந்தேன். கைல துட்டு லேது..

இப்ப செலவை வைச்சிட்டீரே கேபிளாரே..! ஒழுங்கு மருவாதையா டிக்கெட்டு எங்கிட்டாச்சும் ஏற்பாடு பண்ணிக் கொடும்..!
//அதற்கு முன் ஒரு விசயம் ஹிஹிஹி HOT SPOT செம கலக்கல்//


எல்லாம் ஒரு நண்பர் கொடுத்த பட்ம் கொடுத்து புண்ணியம் பண்ணினாரு.. நீஙக் சந்தோஷமாயிருந்தா அதுவே என் சந்தொஷம்.
//nalla irukku padam .....//

ஹாட் ஸ்பாட் படம் தானே மாயாவி.
நன்றி ஷங்கர் உங்கள் விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும்
எனக்கும் ப்ளட் டயம்ண்ட் ஞாபகம் வந்தது. ஆனா மரியா புல் ஆப் கிரேஸ் தெரியவில்லை. ந்ன்றி முரளி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
//இவ்வளவு தூரம் நீங்கள் சொல்லி இருப்பதால் கண்டிப்பாகப் படம் பார்க்கிறேன்,ஷ்ங்கர்.//

நிச்சயமாய் பாருங்கள் சார். ஒண்ணும் பழுதில்லை.
//nalla padamnu ninaikiren.//

அப்படின்னும் சொல்ல முடியாது பப்பு. ஒரு மசாலா ஹிட்
அது சரி தெலுங்கு பில்லா பார்த்து விட்டிர்களா அந்த பட விமர்சனமும் ஆவலுடன் எதிர்பார்கிறேன் - நன்றி
Sir ,

i expect your review yesterday night, but u failed in future dont be late . nice review and film
பாலா said…
அட.. இப்பதான் ஒன்னு நோட் பண்ணுறேன்.

//ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் ஏறியதை உணரலாம்.//-ன்னு நான் Fast & Furious- விமர்சனத்தை முடிச்சிருக்க,

//ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? // -ன்னு நீங்க ஆரம்பிச்சி இருக்கீங்க..!

வாவ்..!! :)
Jackiesekar said…
மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சன் டிவியின் முதல் நிஜ வெற்றி நடை போடப்போகும் வெளியீடு. //


அப்படின்றிங்க அப்ப சரியாத்தான் இருக்கும் கேபிள்
அப்போ படம் பாக்கலாங்குறீங்க.... இதோ கிளம்பிட்டேன்
படத்த கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துகிறேன்!!

வாழ்த்துக்கள் 250 வது பதிவிற்கு !!
சங்கர் சார் படத்தின் ஸ்பீட் ப்ரேக் பாடல்கள் தான், மற்றபடி படம் நன்றாக உள்ளது... என்னுடைய பார்வையை நாளை பதிவக சொல்லுகிறேன்...சொல்ல நிறைய உள்ளது..

சந்திப்பில் சந்திப்போம்
கேபிள் சங்கருக்கு 250 எல்லாம் ஒரு நம்பரா? நாங்க ஆயிரம், லட்சமில்ல எதிர்பார்க்கிறோம்...

:)))))))))))))
//கே.வி.ஆனந்த் என் நண்பர்!
//

கே.வி.ஆனந்தின் நண்பர் பரிசல்காரன் என் நண்பர்

:)
//கே.வி.ஆனந்தின் நண்பர் பரிசல்காரன் என் நண்பர்

:)//

ஆமாம்
//கேபிள் சங்கருக்கு 250 எல்லாம் ஒரு நம்பரா? நாங்க ஆயிரம், லட்சமில்ல எதிர்பார்க்கிறோம்...

:)))))))))))))//

மிக்க நன்றி அக்னிபார்வை..
நன்றி ஜீவன்.. நன்றி பிரேம்குமார்
நன்றி.. ஹாலிவுட் பாலா, ஜாக்கி சேகர், முத்து பாலகிருஷ்ணன்.
//ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய், கோடை மழையாய், குளிர்கால வெயிலாய், தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் முழுக்க, நம்மை உருக்குகிறார். என்னா ஒரு இன்னொசென்ஸ் அவர் முகத்தில். ஆனந்த தாண்டவம் மதுமிதாவுக்காக காத்திருக்கிறேன். //

தமன்னாவுக்காகவே படம் பாத்திருப்பீங்க போல
அண்ணே 50 அடிச்சாச்சு
250க்கும் வாழ்த்துக்கள்
//தமன்னாவுக்காகவே படம் பாத்திருப்பீங்க போல//
பின்னே..
//250க்கும் வாழ்த்துக்கள்

//

நன்றி அத்திரி.. உஙகள் வாழ்த்துக்கும், வருகைக்கும்.
R.Gopi said…
Shankar

I think "AYAN" screenplay & dialogues are by writer SUBA (Suresh & Balakrishnan). They have written a story named "MAADIPPADI KUTRANGAL". This movie is inspired by that story or fully adapted from that story.

Hope its clear to you now. May be you can read that novel / story - MAADIPPADI KUTRANGAL.

Even, K.V.Anand enquired with writers SUBA about the similarity in their story and the movie CATCH ME IF YOU CAN is what i read in one of their novels, long before.
//CATCH ME IF YOU CAN //

மிக்க நன்றி கோபி.. உங்கள் தகவலுக்கு.. கேட்ச் மீ ஃப்யூ கேன் படம் இன்னும் நம்மிடயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரது நிஜக்கதை. படமாய் வெளிவருவதற்கு முன்பே அவருடய வாழ்க்கையை பற்றி புத்தகமாய் வெளிவந்திருக்கிறது. மே..பி. படத்தின் இன்ஸ்ப்ரேஷனாய் இல்லாமல் புத்தகத்தின் இன்ஸ்பரேஷனாய் கூட இருக்கலாம். ஆனால் நான் அதை குறை கூறவில்லை. படத்தில் குறைகூறுவது போல் காட்சியமைத்திருந்ததினால்தான் சொன்னேன். மிக்க நன்றி கோபி..
http://nchokkan.wordpress.com/2009/01/03/pkp/#comment-383

நேற்று படம் பார்த்து விட்டதால் மீள்பதிவு போல் மீள் மறுமொழி

//தவிர, சுபாவின் கதைகள் பல ஆங்கில நாவல்களின் அப்பட்டமான காபி என்று என் கல்லூரி நண்பர்கள் சொல்லக் கேள்வி, நான் சாட்சி பார்த்தது இல்லை!//
எனக்கென்னவோ இது அதிகப்படியாக தோன்றுகிறது.
சுபா, இந்திரா சௌந்திரராஜன், பி.கே.பி, ராஜேஸ்குமார் எழுத்துக்களை 20 வருடங்களாக வாசித்து வருகிறேன்.
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களின் காப்பி உள்ளது போல் தெரியவில்லை
இப்படி பொத்தாம் பொதுவாக கூறுவதற்கு பதில்
இந்த ஆங்கில நாவல் - இந்த தமிழ் நாவல் என்று ஒரு 5 உதாரணங்களை அடுக்கினால் நலம்
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களில் இருந்து அதிகம் காப்பி அடித்த தமிழ் எழுத்தாளர் யாரென்று கூறினால் ஐகாரஸ் பிரகாஷ் கோபித்துக்கொள்வார் :) :) :)
இந்திரா சௌந்திரராஜன் ஒரு இருபது வருடம் கழித்து எழுதியிருந்தால் அவரை ரௌலிங்கின் காப்பி என்று கூறியிருப்பார்கள்
சுபா நாவல்களின் பின்னால் அவர்களின் அபார உழைப்பு தெரியும்.
அவர்களும், பி.கே.பியும் சேர்ந்து நடத்தில் பாக்கெட் நாவலில் அவர்கள் புகுத்திய உத்திகள் பல
சில componentsகளில் வெகுஜன பத்திரிகைகளை விட அவர்கள் முன்னால் நின்றனர் என்று கூட சொல்லலாம்
Anonymous said…
customs officer dont know about cocaine doll and surya explaining him with the help of net , i really laughed a lot, by the way cus. off. going to sue kvanand and co
vall paiyen said…
"புருனோ Bruno said...
சுபா நாவல்களின் பின்னால் அவர்களின் அபார உழைப்பு தெரியும்.
அவர்களும், பி.கே.பியும் சேர்ந்து நடத்தில் பாக்கெட் நாவலில் அவர்கள் புகுத்திய உத்திகள் பல
சில componentsகளில் வெகுஜன பத்திரிகைகளை விட அவர்கள் முன்னால் நின்றனர் என்று கூட சொல்லலாம்"

எனக்கு தெரிந்து பாக்கெட் நாவல் ஐ நடத்தி வருபவர் அசோகன் தவிர அந்த காலத்திலேயே தமிழிலில் வேலை வாய்ப்பு தொடர்பான மாத பத்திரிகை jobguidlines நடத்தியவரும் அவர் தான். 20 வருடங்களாக மாத நாவல்கள் படித்து வரும் உங்களுக்கு இது தெரியாதது ஆச்சர்யம் தான்

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.