Ad Space

To Advetise in this space do contact @sankara4@gmail.com

Mar 2, 2009

கொத்து பரோட்டா- 02/03/09

ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு செய்தி, ஆக்ராவில் ஒரு காளை மாடு வெறி பிடித்தார் போல் எல்லோரையும் தாக்கி கொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் பலியானார். இன்னும் சிலர் காயமுற்றிருப்பதாகவும், தெரிவித்துவிட்டு  அந்த காளை மாட்டின் அட்டகாசங்களை காட்டினார்கள். மாடு ஒருவரை கொன்றுவிட்டதால் வெறிபிடித்த மக்களின் செயல்கள் மனிதர்கள்தான் அட்டகாசம் செய்ததாக தெரிகிறது. ஒளிபரப்பான காட்சிகளில் மாடு ஏதும் அட்டகாசம் பண்ணியதாய் தெரியவில்லை, அந்த காளை மாட்டை சுற்றி பத்திருபது பேர் கையில் பெரும் கழியுடன் அதை அடித்து கொண்டிருந்ததனர். இன்னும் சிலரோ அதன் தலையில் கயிற்றை கட்டி இழுக்க முயற்சிக்க, அந்த காளை மாடு, பயந்து திமிரி இரும்பு தடுப்புகளை எல்லாம் உடைத்தபடி எதிர்த்தது.  கடைசியாய் போலீசார் வந்து ப்ளூகிராஸ் போன்ற அமைப்பினரையோ, அல்லது வனத்துறையினரையோ, அழைத்து காளையை அடக்காமல், அதை சுட்டு கொன்றார்கள். அதிலேயும் காளையின் பின்பக்கமாய் நின்றபடி.. அதை தொலைக்காட்சியில் வேறு காட்டினார்கள். என்ன கொடுமை சார் இது..?
--------------------------------------------------------------------------------------------------------------------

enathugeethai ஆசிரியர்  ஐந்தாம் வகுப்பு சிறுவர்களுக்கு கம்சனின் கதையை பற்றி சொல்ல,  அந்த கதையில் ஒரு அசரீரி தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை அவனை அழிக்கும் என்றதால், தேவகி , வசுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்கு  பிறந்த எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றான் என்று சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு  பையன் எழுந்து ‘சார்..  கம்சனுக்கு தான் எட்டாவது குழந்தை பிறந்தா தன்னை கொன்னுடும்னு தெரியுமில்ல, சார்.. எட்டாவது குழந்தை பிறக்கிற்வரைக்கும் வெயிட் ப்ண்றாதுக்கு பதிலா, அவங்க ரெண்டு பேரை தனி, தனி ஜெயில்ல போட்டிருக்கலாமில்ல. என்றான் பதிவுலக நண்பர் எழுத்தாளர் குகனின்எனது கீதை” என்கிற புத்தகதிலிருந்து.. 
-------------------------------------------------------------------------------------------------------------------


சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த  செய்தி, வரதட்சணை கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜெயில் தண்டணை அடைந்த ஒருவர், தன் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்த்வுடன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா..? தன் மேல் குற்றம் சுமத்திய தன் மனைவி, மாமனார் மேல் புகார் கொடுத்து அவர்களுக்கும் தனககு கொடுத்த தண்டனையை வாங்கி கொடுத்தார். சட்டப்படி வரதட்சணை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்ற விசயத்தை கையிலெடுத்த அவர், தன்னை வரதட்சணை வாங்கியதற்காக தண்டனை கொடுத்த நீதிமன்றத்தின் மூலமே அவர்களுக்கும் தண்டனை வாங்கி கொடுத்தார். இனிமே வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பேன் என்று பயமுறுத்துபவர்களுக்கு, இந்த தீர்ப்பு வரப்பிரசாதம்.சட்டம் எல்லோருக்கும் ஒண்ணுதானே..  தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


ரொம்ப நாளா கவிதை எழுதணும்னு ஆசை, இந்த மாதிரி கொத்து பரோட்டாவுல எழுதினா தனியா திட்ட மாட்டாங்கன்னு நினைப்பிலே எழுதிட்டேன்.
love_by_princessambrosia

காதல்
என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்...

எப்படி நம்ம கவிதை..???
------------------------------------------------------------------------------------------------------------------------



”ஏ- ஜோக்ஸ்”

ஒரு பெண் மெடிக்கல் ஷாப்பில் போய் உங்களிடம் எக்ஸ்ட்ரா லார்ஜ் காண்டம் இருக்கிறதா? என்று கேட்டாள், கடைக்காரர் இருக்கு எத்தனை பாக்கெட் வேணூம் என்று கேட்க, யாரவது வாங்க வருவாங்க இல்ல அவங்ககிடட கேட்டு சொல்றேன் என்றாள்.

ஒரு இசையமைப்பாளர் முதல் முறையாய் ஒரு படத்துக்கான இசையை அமைத்துவிட்டு, அதன் தயாரிப்பாளரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்க, அதற்கு தயாரிப்பாளர்  அவர் இசையமைத்தது, ஒரு ஃபோர்ன் படத்துக்கு என்று சொல்ல, நொந்து போன இசையமைப்பாளர், வேறு வழியில்லாமல் படம் ஓடும் தியேட்டருக்கு தலையில் தொப்பியுடன், கூலிங்க்ளாஸ், மங்கி குல்லாவை போட்டு தன்னை மறைத்து கொண்டு தியேட்டரில் போய் படத்தை பார்த்தார், அவருக்கு அருகே ஒரு ஜோடி படம் பார்த்து கொண்டிருந்தது. படத்தில் ஆண், பெண் மட்டுமின்றி, நாய் போன்ற மிருகங்களை வைத்து படமெடுத்திருக்க, நொந்து போன இசையமைப்பாளர், பக்கத்தில், அமர்ந்திருந்த ஜோடிகளிடம் நான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என் இசையை கேட்பதற்காக வந்தேன் என்று சொல்ல, ஜோடி அசுவாரசியமாய் நாங்கள் எங்கள் நாயை பார்க்க வந்தோம் என்றனர்
---------------------------------------------------------------------------------------------------------------------


படித்ததில் பிடித்தது
பினாத்தல் சுரேஷின் ‘அவன் அவள் கெமிஸ்ட்ரி” அறிவியல் புனைக்கதையை படிக்க அழுத்தவும்



Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை/span> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

50 comments:

ஷண்முகப்ரியன் said...

எல்லா இடத்திலும் ஓட்டுப் போட்டு விட்டேன் ஷங்கர்.

அத்திரி said...

வழக்கம் போல் கொத்து பரோட்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை

அத்திரி said...

//காதல்
என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்...

எப்படி நம்ம கவிதை..???//

ஹிஹிஹி...........)))))))))

Cable Sankar said...

/எல்லா இடத்திலும் ஓட்டுப் போட்டு விட்டேன் ஷங்கர்.//

மிக்க நன்றி சார்.. அது சரி பரோட்டா நல்லா இல்லையா..?

அத்திரி said...

//அமர்ந்திருந்த ஜோடிகளிடம் நான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என் இசையை கேட்பதற்காக வந்தேன் என்று சொல்ல, ஜோடி அசுவாரசியமாய் நாங்கள் எங்கள் நாயை பார்க்க வந்தோம் என்றனர்//

ஹாஹாஹாஹா..........

Cable Sankar said...

//ஹாஹாஹாஹா........../

என்ன அத்திரி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க போலருக்கு.. நன்றி அத்திரி

Cable Sankar said...

கவிதைக்கு கருத்து போடச் சொன்னா. வெறும ஹி..ஹி..ஹி..ன்னா என்ன அர்த்தம்..

நல்லாருக்குன்னுதானே.? நன்றி அத்திரி..

Cable Sankar said...

எப்படியெல்லாம் நம்மளையே பாராட்டிக்க வேண்டியிருக்கு.??

கார்க்கி said...

//எப்படி நம்ம கவிதை..??//

எங்க எங்க எங்க.. கவிதை எங்க??????????

:)))))))) கலக்கல் தல

Cable Sankar said...

நான் எழுதிய கவிதையில் கரைந்து போய்விட்டு, கவிதையை தேடும் கார்க்கிக்கு நன்றி.. ஹிஹி..ஹி.

அறிவிலி said...

//ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..//

முப்பதாயிரத்துல என்னோடது 30 இருக்கு...

//ரொம்ப நாளா கவிதை எழுதணும்னு ஆசை, இந்த மாதிரி கொத்து பரோட்டாவுல எழுதினா தனியா திட்ட மாட்டாங்கன்னு நினைப்பிலே எழுதிட்டேன்//

நீங்க பதிவுல எழுத
நாங்க பின்னூட்டத்துல திட்ட,
நாங்க பதிவுல எழுத
நீங்க பின்னூட்டத்துல திட்ட,
நமக்கு நாமே திட்டிக்கிற
வலைதான்,
வலை பூ

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா

Anbu said...

உங்களோட கவிதை ரொம்ப அழகாக உள்ளது அண்ணா

இராகவன் நைஜிரியா said...

// காதல்
என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்... //

உங்கள் வச்சு என்னையும்
என்ன வச்சு உங்களையும்
நாமே பின்னிக்கிற
வலைத்தான்
இந்த வலைப்பூ...

ஹி..ஹி... வேற ஒன்னுமில்ல... ஒரு எசப்பாட்டுத்தேன்...

இராகவன் நைஜிரியா said...

// ஜோடி அசுவாரசியமாய் நாங்கள் எங்கள் நாயை பார்க்க வந்தோம் என்றனர் //

இஃகி, இஃகி...

இராகவன் நைஜிரியா said...

// ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. //

அதுல 300 நம்முதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க //

குத்திட்டோமில்ல...

இராகவன் நைஜிரியா said...

// பினாத்தல் சுரேஷின் ‘அவன் அவள் கெமிஸ்ட்ரி” அறிவியல் புனைக்கதையை படிக்க அழுத்தவும் //

அப்பாலிக்கா படிச்சிட்டு வரேன்

செல்வேந்திரன் said...

பத்திரிகை செய்தி: 'அட!'

பரிசல்காரன் said...

என்ன கார்க்கி காக்டெய்ல், நீங்க கொத்து பரோட்டான்னு இன்னைக்கு பின்றீங்க...

அப்புறம் அந்தக் கவிதை..

நல்லா இல்லன்னு சொல்லல..

நல்லா இருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்றேன்!

ஸ்ரீ..... said...

கவிதை கலக்கல். தொடர்ந்து கலக்குங்க.

ஸ்ரீ....

தமிழ் பிரியன் said...

கொத்துப் பரோட்டா மாதிரி இருக்கு!

pappu said...

இயக்குனரே,
திடீரென என்ன கவிதைனு விஷப்பரிட்சையெல்லாம்.ஹா.. ஹா...
நல்லாதான் இருக்கு. திடீர்னு தோணுமோ, இல்ல உக்கார்ந்து யோசிப்பீங்களோ?

ச்சின்னப் பையன் said...

வழக்கம் போல் கொத்து பரோட்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை....

Cable Sankar said...

//வழக்கம் போல் கொத்து பரோட்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை....//

ரொம்ப நன்றி ச்சின்னப்பையன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//இயக்குனரே,
திடீரென என்ன கவிதைனு விஷப்பரிட்சையெல்லாம்.ஹா.. ஹா...
நல்லாதான் இருக்கு. திடீர்னு தோணுமோ, இல்ல உக்கார்ந்து யோசிப்பீங்களோ?/
மல்லாக்க படுத்துட்டு.. பப்பு.. இல்லாட்டா கவிதையெல்லாம் சாதாரணமா வருமா..?

Cable Sankar said...

//கொத்துப் பரோட்டா மாதிரி இருக்கு!//

ரொம்ப நன்றிங்க தமிழ்பிரியன்..

Cable Sankar said...

//கவிதை கலக்கல். தொடர்ந்து கலக்குங்க.

ஸ்ரீ....//

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..?

Cable Sankar said...

//அப்புறம் அந்தக் கவிதை..

நல்லா இல்லன்னு சொல்லல..

நல்லா இருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்றேன்!//

சரி..சரி.. எழுதல.. இனிமே கவிதை எழுதல.. அவ்வளவுதானே.. ஓகேயா.. நன்றி..

Cable Sankar said...

//பத்திரிகை செய்தி: 'அட!'//

நன்றி செல்வேந்திரன்.. இது உங்க்ள் முதல் வருகையா..?

Cable Sankar said...

//அதுல 300 நம்முதுங்க...//

ரொம்ப நன்றிஙக் இராகவன்..

Cable Sankar said...

//நீங்க பதிவுல எழுத
நாங்க பின்னூட்டத்துல திட்ட,
நாங்க பதிவுல எழுத
நீங்க பின்னூட்டத்துல திட்ட,
நமக்கு நாமே திட்டிக்கிற
வலைதான்,
வலை பூ//

இப்படி தான் நானும் கவிதை எழுதனுமா..? அறிவிலி

Cable Sankar said...

நன்றி அறிவிலி..

Cable Sankar said...

//உங்களோட கவிதை ரொம்ப அழகாக உள்ளது அண்ணா//

நிசமாத்தான் சொல்றியா அன்பு..?

அபுஅஃப்ஸர் said...

//காதல்
என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்...

எப்படி நம்ம கவிதை..???
//

கவிதை அருமை
எப்படி தல இப்படியெல்லாம்

காதலுக்கு புது விளக்கம்..?

அபுஅஃப்ஸர் said...

வழக்கம்ப்போல கொத்துப்பரோட்ட சூப்பருங்க‌

Cable Sankar said...

//கவிதை அருமை
எப்படி தல இப்படியெல்லாம்

காதலுக்கு புது விளக்கம்..?//

அதெல்லாம் தானா வருது..

Cable Sankar said...

//வழக்கம்ப்போல கொத்துப்பரோட்ட சூப்பருங்க‌//

நன்றி அபுஅஃப்ஸர்..

ஹாலிவுட் பாலா said...

NHM Work aagalai.. appaalikkaa varren.

Cable Sankar said...

//NHM Work aagalai.. appaalikkaa varren.//

வாங்க..வாங்க.. வெயிட் பண்றேன்.பாலா

ஹாலிவுட் பாலா said...

’ஏ’ க்ளாஸ் ‘ஏ’ ஜோக்.. சங்கர்..! ஹா.. ஹா...!

அப்புறம் அந்த எனது கீதை.. மேட்டர்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேற எங்கயோ படிச்சிருக்கேன். அது Mr. குகனோட சரக்குன்னா... என்னோட வாழ்த்துகள். சில விசயங்கள் மட்டும் நம்ம நினைவுக்கு அப்பப்ப வருமில்லையா... அந்த ‘கதை’ அதுமாதிரி. மறக்க முடியாதது.

அப்புறம்.. கவிதைய.. கொத்து பரோட்டால மட்டும் எழுதுங்க. இல்லைன்னா.. நாங்க எல்லாம் சேர்ந்து உங்களை கொத்திடுவோம்.!! :-))))

பட்டாம்பூச்சி said...

//எப்படி நம்ம கவிதை..??//

ஒரு கவிஞன் உதயமாகிறான்....லாலாலலா!!!!(தாவணிக்கனவுகளில் வரும்,"ஒரு நாயகன் உதயமாகிறான்" என்ற மெட்டில் பாடிக்கொள்ளுங்கள் ஹிஹிஹி:))))

தமிழன்-கறுப்பி... said...

பரோட்டா நல்லாருக்கு!
அதுல அந்த படம்தான் சூப்பரு..:)

முரளிகண்ணன் said...

சுவையான கொத்து புரோட்டா

Cable Sankar said...

//அப்புறம்.. கவிதைய.. கொத்து பரோட்டால மட்டும் எழுதுங்க. இல்லைன்னா.. நாங்க எல்லாம் சேர்ந்து உங்களை கொத்திடுவோம்.!! :-))))
//
அது தெரிஞ்சு தானே கும்பல்ல போட்டிருக்கேன். பாலா.

Cable Sankar said...

//சுவையான கொத்து புரோட்டா

//

நன்றி முரளி..

Cable Sankar said...

//பரோட்டா நல்லாருக்கு!
அதுல அந்த படம்தான் சூப்பரு..:)//
ஏதாவது ஒன்ணு நல்லாருக்கணுமில்ல.. அதான் நன்றி த்மிழன் கருப்பி

முரளிகண்ணன் said...

\\ஒரு இசையமைப்பாளர் முதல் முறையாய் ஒரு படத்துக்கான இசையை அமைத்துவிட்டு, அதன் தயாரிப்பாளரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்க, அதற்கு தயாரிப்பாளர் அவர் இசையமைத்தது, ஒரு ஃபோர்ன் படத்துக்கு என்று சொல்ல\\

தலைவரே ஒரு சந்தேகம்.

பட காட்சிகளைப் பார்க்காம இசை அமைச்சாரா இசை அமைப்பாளர்?

சரி சிச்சுவேசன் சொல்லி பாட்டு வாங்கியிருந்தாங்கன்னா, போர்னோ படத்தில எப்படி சாங்?

சரியான சந்தேகத்தோடு

முரளிகண்ணன்

Cable Sankar said...

//தலைவரே ஒரு சந்தேகம்.

பட காட்சிகளைப் பார்க்காம இசை அமைச்சாரா இசை அமைப்பாளர்?

சரி சிச்சுவேசன் சொல்லி பாட்டு வாங்கியிருந்தாங்கன்னா, போர்னோ படத்தில எப்படி சாங்?

சரியான சந்தேகத்தோடு

முரளிகண்ணன்//

ஏ ஜோக்குகெல்லாம் நதிமூலம்,ரிஷிமூலம் பார்க்க்கூடாது தலைவரே.. என்ன ஒரு கொலவெறி.. ??

இனியவன் said...

இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். அருமையாக எழுதுகின்றீர்கள்.

வாழ்த்துக்கள்.