நான் கடவுள் - திரைவிமர்சனம்.

தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே..
உடல் ஊனமுற்ற, மனநிலை பிழன்ற, வயதான, பிச்சைகாரர்களின் வாழ்கையில் உள்ள ஆழ் சோகத்தையும், வேறு வழியில்லாமல் தங்களுடய கதி இது தான் என்று ஏற்றுக் கொண்டு, அதற்குள் சந்தோஷமா இருக்க முயற்சிப்பதும், என்று அவர்க்ளின் வாழ்கையை நம் கண்முன்னே அவர்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே நம்மை கதிகலங்க வைத்துவிட்டார் பாலா.

சிறு வயதில் ஜோசியர்களின் பேச்சை கேட்டு காசியில் விட்டுவிட்டு வரப்பட்ட ருத்ரனை தேடி அவனின் அப்பாவும், தங்கையும், காசியில் அலைவதில் ஆரம்பிக்கிறது கதை. ருத்ரன் பிணங்களுடன் வாழும் ஒரு அகோரனாய் மாறியிருக்க, தன்னையே கடவுள் என்று சொல்லி கொள்ளும், எதிரில் வருபவர்கள் நல்லவனா, கெட்டவனா என்று அறியும் ஆற்றல் பெற்றவனாய் ஆங்காரமாய், ஓங்காரத்தோடு நிற்கிறான் ருத்ரன். அவனை தன்னுடன் அழைக்க, ருத்ரனின் குரு போய் எல்லா பந்தங்களையும் அறுத்து வா.. நீ வர வேண்டிய நேரத்தில் உன்னை அழைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
கண் தெரியாத நன்றாக பாட்டு பாடும் ஒரு குருட்டு பிச்சைகாரியை போலீஸ் துணையோடு தங்கள் பிச்சைகார கும்பலில் சேர்த்து கொண்டு பிச்சையெடுக்க, அவளின் மானத்துக்கு ஆபத்து வரும் போது, ருத்ரன் கடவுளாய் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பது கதை.

ருத்ரனாய் ஆர்யா.. உடல் மொழி ஒத்துழைத்த அளவுக்கு கண்கள் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் மனிதரின் டெடிகேஷனை பாராட்ட வேண்டும். கோர்ட்டில் ஜட்ஜுடன் பேசும் காட்சியிலும், போலீஸ் ஸ்டேஷனில் பேசும் காட்சியிலும், சண்டை காட்சிகளிலும் அவரின் ஆக்ரோஷமும், வெறியும் நம்மை பதை பதைக்க வைக்கிறது.

குருட்டு பிச்சைக்காரியாய் பூஜா.. இவருக்கு வாழ்நாளெல்லாம் தேடினால் கூட இப்படி ஒரு பாத்திரம் கிடைக்காது. கொஞம் கூட மிகைப்படுத்த படாத நடிப்பு, முதல் காட்சியிலிருந்து பார்த்த்தும் ஒரு பிச்சைகாரி தெரிகிறாளே தவிர பூஜா தெரியவில்லை. அது அவரின் நடிப்புக்கு ஒரு பானை சோற்று பதம். க்ளைமாக்ஸில் ஏற்கனவே கோரப்பட்டு கிடக்கும் அவரை மேலும் கோரப்படுத்தப்பட்டு அவர் பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். விருது கிடைத்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.
பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார்,சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் உழைப்பு தெரிகிறது.

இளையராஜாவின் இசையில் காசியில் ஆரம்பிக்கும் பாடலும், பிச்சை பாத்திரம் பாடலும் சுகம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மாதா உன் கோயிலில் பாடல் படத்தில் இல்லை. பிண்ணனி இசை சூப்பர் என்று சொல்வது இளையராஜாவுக்கே டார்ச் அடிப்பது போல வழக்கம் போல் ராஜா ராஜாதான்.
ஆர்தர்.எ.வில்சனின் ஒளிப்பதிவு கூடவே வாழ்ந்திருக்கிறது. அதிலும் அந்த சுரஙக் பாழைடைந்த மண்டபத்தில் அவரின் லைடிங்கும், அந்த மண்டபத்தின் டாப் ஆங்கிள் ஷாட்களிலும், சண்டை காட்சிகளில் கூடவே சண்டையிடும் ஒளிப்பதிவையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எக்ஸலண்ட்.

ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் கூர்மை, வசனம் பேசுகிறார்கள் என்கிற உணர்வை எழுப்பிடாத இயல்பான வசனங்கள், ”எத்தனை நாள்தான் இப்படியே பிச்சையெடுக்கிறது. நானும் நாலு உருப்படி வாங்கி உனை மாதிரி ஓனராகவேண்டாமா..?”
போடா.. பிச்சைகாரபயலே என்று ஒருவன் திட்ட, அதற்கு நீ மட்டும் அம்பானி புள்ளையா என்று பேசும் சிறுவனின் மூலம் விளிம்பு நிலை மனிதர்களின் எதிர்கால கனவுகளையும், பொது அறிவையும், க்ளைமாக்ஸில் பூஜா பேசும் வசனங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிகிறார்.
கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர். ஒரு நிலையில் கடவுளை ‘தேவிடியா பையன்’ என்று திட்டுகிறார். ஆனால் அந்த இடத்தில் தவராய் படவில்லை. ஏனென்றால் நமக்கு மிகவும் உரிமையிருக்கும் ஒருவரிடம் மட்டும்தான் அவர்களால் கையாலாகத நிலையில் இருக்கும் போது, ஆற்றாமையில் திட்டுவோம் அதன் வெளிப்பாடுதான் அது. நல்ல நடிப்பு,
அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அவ்வப்போது அடிப்பட்ட பார்வை பார்பதை தவிர ஒன்றும் பெரிசாய் எதுவுமில்லை. அமமாவாக பாரதி பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியாய் ஒன்றுமில்லை.
இப்படி கவனித்து, கவனித்து செதுக்கிய கேரக்டர்களும், காட்சிகளூம், விழலுக்கு இறைத்த நீராய், கதையின் நாயகனுக்கோ, நாயகிக்கோ.. மற்ற கேரக்ட்ர்களுக்கோ எந்தவித தொடர்பில்லாமல் திரைக்கதை நகர்வதால் நமக்கு படத்தோடு ஒட்ட முடியவிலலை. படம் பூராவும், ஒரு பக்கம் கடவுளே நாந்தான் என்று அலறும் ருத்ரன் ஒரு புறம், மறுபுறம் கடவுள் நமக்கு நல்ல வழி காட்ட மாட்டாரா என்று ஏங்கும், கடவுளை நம்பும், நம்பாத விளிம்பு நிலை மனிதர்கள். நான் சாமியில்லை, மேலே உள்ளவன் தான் சாமி என்று ஒரே ஒரு மந்திர உச்சாடனத்திலிருந்து புரிந்து கொள்ளும் சாமியார், வில்லன்களை கொன்று தூக்கி கொண்டு போகும் ருத்ரன் அவர்களின் பிணங்களை என்ன செய்தான்? அகோரனான அவன் கண்டிப்பாய் அவற்றை தின்றிருப்பான். ஏற்கனவே இந்த க்ளைமாக்ஸ் வெளிபட்டுவிட்டதால் வேறு வ்ழியில்லாமல் பாலா பூஜாவை எறித்திருக்கிறார்.
பாலாவின் பலமே அவரின் கதாநாயக கேரக்டர்கள்தான். வழக்கிலிருந்து மாறுபட்ட கேரக்டர்களை உருவாக்கிவிட்டு அதற்கேற்றார்போல் திரைக்கதை அமைப்பது. நான் கடவுள் படத்தில் அவர் ‘மடேலென்று’ சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவலையே முழுக்க, முழுக்க எடுத்திருக்கலாம், எதற்காக ஒரு சூப்பர நேச்சுரல் ருத்ரன் கேரக்டர்? பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ’என் புள்ளைய எனக்கு தெரியாதா” என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள். விளிம்பு நிலை மனிதர்களிடம் இருந்த டீடைய்லான கேரக்டரைஷேசன் ருத்ரனிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை. அதே போல் நாம் டிரைலரில் பார்த்த மொத்த காட்சிகளே காசி காட்சிகள்.. இதிலும் ஏமாற்றமே..
இப்படி எழுதுவது எல்லாமே உங்களின் படங்களை எங்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய உரிமையில்தான்.
எப்போதுமே நான் என்கிற வார்ததை அகந்தையை கொடுத்து, அவனை சரிக்கவும் செய்யும்.
அது “நான் கடவுள்” பாலாவுக்கும் பொருந்தும்.
நான கடவுள் - யாருக்காக..?????
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
//சரியா சொன்னீங்க.
விமர்சனம் அருமை.
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!
=================
உங்க விமர்சனத்தை “அஜித்” படிச்சா என்ன நினைப்பார்? அதையும் ஒரு பதிவா போடுங்க.
// பாலாவின் பலமே அவரின் கதாநாயக கேரக்டர்கள்தான். வழக்கிலிருந்து மாறுபட்ட கேரக்டர்களை உருவாக்கிவிட்டு அதற்கேற்றார்போல் திரைக்கதை அமைப்பது. நான் கடவுள் படத்தில் அவர் ‘மடேலென்று’ சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். //
ஒன்று சரியில்லை என்று சொல்லவும் தைரியம் வேண்டும். எல்லோரையும் போல் படத்தை ஆஹா, ஓஹோ என்று புகழாமல் நடுநிலையாக எழுதியுள்ளீர்கள்.
படம் எப்போதாவது (நிச்சயமா இன்னும் 5 மாசம் கழிச்சுதான்) உங்க நினைவு வராம இருக்காது
அது “நான் கடவுள்” பாலாவுக்கும் பொருந்தும். "
Edho..ezhudhanamnu ezhudha koodaadhu..
Did you see Bala as a head weighted person any time ?
Pathetic review !
படத்தை பார்த்த இளையராஜா ஒரு நாள் முழுக்க பேசலன்னு சொன்னாங்களே. அதெல்லாம் உடான்ஸா?
:(
\
நான கடவுள் - யாருக்காக..?????
\
பாத்துட்டாப்போச்சு..
நாளைக்குச் சொல்றேன் உங்க விமர்சனம் சரியான்னு... :-)))
நன்றி முரளி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
நல்ல வேளை அஜித் எஸ்கேப்..
புரியல ராகவன்/.
ராத்திரியே போட்டிருக்கணும்.. கொஞசம் லேட்.. நன்றி நர்சிம்.
பாத்துட்டு வந்து கருத்து சொல்றேன்....!
Did you see Bala as a head weighted person any time ?
Pathetic review !//
எழுதணும்னு எழுதல.. மனசு நொந்து எழுதறேன். எவ்வளவு செலவு.. எவ்வளவு பேரோட உழைப்பு இப்படி வேஸ்ட் ஆகியிருக்கு. தான் எடுப்பதுதான் என்று நினைத்த் எடுத்த்து படம் முழுவதும் தெரிகிறது..
நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்.. அவுட் ஸ்டாடிங்கா.. இல்லையான்னு..
:(//
உஙகளுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இளையராஜா.. பார்த்து அழுத படம், பேசாத படம் எல்லாமே.. சூப்பர் ப்ளாப் என்று..
கண்டிப்பா உஙக விமர்சனததை எதிர்பார்க்கிறேன். படிக்ககூடாதுன்னு நினைச்சு படிச்சதுக்கு நன்றி.. பரிசல்.
ஒரு வேளை, டைரடக்கரு, " நீ நடிக்கவெல்லாம் வேண்டாம்...., சும்மா வந்து நில்லு, அழு, நட, போ. மற்றதை எல்லாம் ரசிகர்கள், பதிவர்கள் அதிலும் குறிப்ப கேபிளாரு, உண்மைதமிழன் லக்கி லுக் போன்றவர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று சொல்லி இருப்பாரோ?????
/*நான கடவுள் - யாருக்காக..?????*/
நல்ல படம், வந்த படம், வராத படம், நொந்த படம், மொந்தை படம், மொக்கை படம், மொழி மாற்று படம் என்று எல்லா படத்தையும் பார்த்து எங்களை காப்பாற்றும் நீங்கள் தான், எங்களுக்காக.
அப்படியா லக்கி நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லுங்க..
//படம் எப்போதாவது (நிச்சயமா இன்னும் 5 மாசம் கழிச்சுதான்) உங்க நினைவு வராம இருக்காது//
புரியல ராகவன்/.\\
படம் எப்போதாவது பார்க்கும் போது ...
ஹி...ஹி... பார்க்கும் போது --- இந்த இரண்டு வார்த்தைகளும் விட்டு போச்சு...
சாரி நைனா.....
கவனிக்காம நடந்திடுச்சு...
thanks,
thamizhstudio.com
மிக்க நன்றி ஆதவன். கண்டிப்பாக மின்னஞ்சல் செய்கிறேன்.
ஒரு வேளை, டைரடக்கரு, " நீ நடிக்கவெல்லாம் வேண்டாம்...., சும்மா வந்து நில்லு, அழு, நட, போ. மற்றதை எல்லாம் ரசிகர்கள், பதிவர்கள் அதிலும் குறிப்ப கேபிளாரு, உண்மைதமிழன் லக்கி லுக் போன்றவர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று சொல்லி இருப்பாரோ?????
/*நான கடவுள் - யாருக்காக..?????*/
நல்ல படம், வந்த படம், வராத படம், நொந்த படம், மொந்தை படம், மொக்கை படம், மொழி மாற்று படம் என்று எல்லா படத்தையும் பார்த்து எங்களை காப்பாற்றும் நீங்கள் தான், எங்களுக்காக.
அஹம் பிரம்மாஸ்மி..
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
//
ஹா..ஹா.. என்னடாது இன்னும் ந்ககலு நையாண்டிய காணோமேன்னு நினைச்சேன். உங்களை போலவே ஒரு பிச்சைகார பையனை உலவ விட்டிருக்காரு பாலா படம் முழுவதும்.
கண்டிப்பா இந்த ஓடக்கூடாதுன்னு யாருமே சொல்லல. ஓடினா சந்தோசபடுற முதல் ஆள் நாந்தான். ஆனால் நிஜம் என்னன்னா கிட்டதட்ட 15 கோடி செலவுல எடுக்கபட்ட இந்த படம் மிக மோசமான் ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. இம்மாதிரியான படங்களை மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தால் இந்த ஓப்பனிங்கே மிக பெரிய வெற்றி.. படம் உலக பட ரேஞ்சில் இருக்கிறது என்றாலும், நான் ஏற்கனவே சொன்னது போல் பல உலக படஙக்ள வணிக ரீதியாய் தோல்வி படங்களே...
அவ்வளவு, கொடுமை படுததுற காரெக்டர் ஒண்ணு இருக்கா?????
ஆமா சாமி... நக்கல் பண்ணுனா... உடனே பிச்சைக்கார பய என்று சொல்லிறதா...
ஆமா... தமாஸுக்கு தானே, சொல்றீங்க...
ஆமா... தமாஸுக்கு தானே, சொல்றீங்க...//
அட நீங்க வேற உங்கள போல ஒரு நையாண்டியான கேரக்டரை வச்சிருக்காருன்னுதான் சொன்னேன். உங்களை பிச்சைகாரன்னு சொல்வேனா.. அழுவாதீங்க. அழுவாதிங்க.. நைனா..
இல்லை கொஞச நாள் ஆகும்..
7:25 PM//
நன்றி சத்திஷ்குமார். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
ட்ரை பண்ணுகிறேன். அனுராக் காஷ்யாப் நடித்த படம் தானே.. பார்கணும்.
Bala is the great personality......Also I like the movie...
Bala is the great personality......Also I like the movie...//
நிச்சயமாக அனானி.. ஆனால் அதை முழுமையாய் கொடுக்கவில்லை என்ப்துதான் குறை. உஙகளுக்கு படம் பிடித்ததை போல் என்ககும் பல இடங்களில் படம் பிடித்தது. அதை நான் பாராட்டியும் இருக்கிறேன். மொத்தமாய் பார்க்கும் போது தான் கொஞ்சம்...???
visit my blog2009.... www.5setia.blogspot.com
ஆனாலும் ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. ரொம்ப ஆணி புடுங்குறீங்களோ..????
மிஸ்டர் அனானி.. நான் எங்கே ஆய்வு செய்திருக்கிறேன். கண்டிப்பாக முட்டாள்தனமான ஆரோகணம்தான். நீங்கள் விமர்சனத்துக்கு இசையை பற்றி எழுதியது. கசப்பு கடை. .. அதென்ன கசாப்பு கடையா..? முத்ல்ல கரெக்டா டைப் அடிங்க அப்புறம் ஆரோகணம், அவரோகணம் பத்தி பேசலாம் எழுதலாம்.
oru murai paarthuttaa pochu..
oru murai paarthuttaa pochu..//
எந்த ஊர்ல இருக்கீங்க சிம்பா.. இல்ல ரொம்பத்தான் ஆணி புடுங்குறீங்களா..?
correcta sonneenga!
ilamnadigargal kaevalamaa nadichha balavukku enna vanthathu atha vimarsanam/padam odama seiyathan naam irukkomae!!
நீங்க என்ன சொல்ல வர்றீங்க மகேஷ். தமிழ்லேயே சொல்லுங்க.. இல்ல புரியறமாதிரி சொல்லுங்க..
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா..
இளம் நடிகர்கர்கள் கேவலமா நடிச்ச பாலாவுக்கு என்ன வந்தது.. அத விமர்சனம்/ படம் ஓடாம செய்யத்தான் நாம இருக்கோமே..?
கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்க சார்..
இருந்தாலு ம் ரொம்ப நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
தமிழ்ல டைப் பண்ண கத்துகிட்டேன்!! தமிழாக்கம் பண்ணதுக்கு நன்றி!! :)
தலைவா.. தமிழாக்கம் செய்யல.. நீங்க எழுதினதை அப்படியே டைப் செஞ்சேன்.. நீஙக் தான் இப்ப தமிழ்ல டைப் பண்ண ஆரம்பிச்சீட்டீங்க இல்ல.. மொதல்லேர்ந்து என்ன சொல்ல வந்தீங்கன்னு சொல்லுங்க சாமி..
and that too at this budget. It could have been taken with half of that money had the director first written a good script and then added the elements that would
make the film. It is a cross between some ideas of Bala and
some characters and scences from
Jayamohan's novels. So this cross
is neither a horse, nor an ass,
nor a mule. Bala should reinvent himself.If the product after three years of labor is like this not even God can help the producers.
Good or bad, first thing a film needs is a solid script with a
story.Directors who forget this
will fail to impress the viewers.
தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே..
////
இது போதுமே நன்பா
இனி விமர்சணம் எதற்க்கு
பணம் , பணம் , பணம் தயரிப்பாளார் எல்லாம் லாபம் கிடைக்கும் ஆனாலும் இல்லை என்பார்கள் காரணம் அவர்களுக்கு நிறைய வேண்டும் கோடி கோடியாய்
5 போட்டு 50 வேண்டும்
அது கிடைக்காவிட்டால் தோல்வி என்பார்கள்
ச்சே ஒரு ரேப் சீன் மிஸ்ஸாகி விட்டதே! ஏற்கனவே கிழிந்து தொங்கும் அம்சவல்லியின் சட்டையை இன்னும் கொஞ்சம் கிழித்து காட்டும் பொழுது 'ருத்ரன்' வந்து அவளை காப்பாற்றுவது போல் காட்சி அமைத்திருந்தால் - கொஞ்சம் கிளிகிளுப்பாகவும் கொஞ்சம் ஹிரோத்தனமும் கலந்து கட்டி ரவுண்ட அடிக்க பாவம் பாலாவுக்கு தெரியவில்லை, அவர் தாண்டவனை வெறும் காசுக்கு அலையும் போக்கிரியாய் உருவாக்கிவிட்டார்.
இனி விமர்சணம் எதற்க்கு
பணம் , பணம் , பணம் தயரிப்பாளார் எல்லாம் லாபம் கிடைக்கும் ஆனாலும் இல்லை என்பார்கள் காரணம் அவர்களுக்கு நிறைய வேண்டும் கோடி கோடியாய்
5 போட்டு 50 வேண்டும்
அது கிடைக்காவிட்டால் தோல்வி என்பார்கள்//
அது மட்டும் போதாது நண்பா.. அப்படி கலை நோக்கில் படமெடுப்பவர்கள்.. தன் சொந்த காசில் எடுக்க வேண்டும்.
யார் சொன்னது தயாரிப்பாளர்கள் பொய் சொல்வார்கள் என்று.. பாலாவை வைத்து படம் தயாரித்தவர்கள் திரும்பவும் படமெடுக்க வருவதற்குள் கண்ணு முழி பிதிங்கிடும்.
சேது தயாரிச்சவர்.. அடுத்த படம் தயாரிக்க கிட்டதட்ட 8 வருஷம் ஆயிருச்சு.
நந்தா படம் தயாரிச்ச அமெரிக்க புரொடியூசர்கள்.. அதுக்கு அப்புறம் அமீர் படம் பண்ணாங்க அவ்வளவு தான்
பிதா மகன் பண்ணின வி.ஏ.துரை.. இன்னும் எழுந்திருக்கவேயில்லை..
இதோ ஒரு ஆடு.. கே.எஸ். சினிவாசன். எனக்கு தெரிஞ்சு இவரு கூட கூடவோ குறையவோ.. மயிரிழையில் தப்பிச்சிட்டாருன்னுதான் பேசிக்கிறாஙக.. ஆனா வாங்குன விநியோகஸ்தர்கள் நிலைமை.. ஓன்னூம் சொல்றதுகில்லை.
போக்கிரி, நாயகன்,சிலம்பாட்டம் கூட ஓடலாம். ஆனா மற்ந்துருவாஙக்.. ஆனா நீங்க என்ன நினைச்சாலும் இந்த படம் ஓடாது..
Good or bad, first thing a film needs is a solid script with a
story.Directors who forget this
will fail to impress the viewers.//
சரியா சொன்னீங்க அனானி.. திரைகதையால் இப்படம் தோல்வியடைகிறது..
நான் ரேப் சீன் போய்விட்டது, ஒரு குத்து பாட்டு போய்விட்ட்து என்று வருந்தவில்லை.. இயல்பாய் படமெடுக்கிறேன் என்று முற்பட்டால் முழுசாய் முக்காடு போடாமல் காட்டவேண்டும். இம்மாதிரியான கூட்டங்களில் இயல்பாகவே இருக்கும் பாலியல் உணர்வு மேலிடதன்மை அதிகமாகவே இருக்கும். பூஜா ஒன்றும், புதிதாய் பிச்சையெடுப்பதற்கு வந்தவரில்லை.. ஸோ.. இப்பவாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
From, KSB (KL. Malaysia)
அது எப்படி இயல்பாகவே இருக்கும் 'பாலியல் உணர்வு'?!!
முருகன் பாத்திரம் தான், தாண்டவன் 'வயசுக்கு வந்திட்டியா' என்று கேட்டவுடன் 'அவள வச்சு குச்சுள் கட்டியா பாக்க போறீங்க, எப்படி பாடறnnu கேளுங்க மொதலாளி' என்று பொட்டில் அடித்தார் போல் கூறி விடுகிறானே! அப்புறமும் என்ன சந்தேகம் உங்களுக்கு அந்த கதாபாத்திர உருவாக்கத்தில்? அவன் அவர்களை வைத்து 'பாலியல்l தொழில்' செய்ய வில்லை, பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிப்பது தான் அவனது முதல் நோக்கம். அவன் தன் வாழ்வாதரத்துக்காக தேர்ந்தெடுத்து கொண்ட 'தொழில்' அதுதான். பிச்சை எடுக்க மறுக்கும் பெண்ணை 'குறுக்கு' ஒடித்து சம்மதிக்க வைப்பது தான் அவனுக்கு தெரியுமே தவிர, ஓடிப்பதற்கு முன் ஒரு தடவை அவளை 'மேட்டர்' செய்வோம் என்று நினைபவன் அல்ல. தனது பாலியல் தேவைகளை வேறெங்கேனும் தீர்த்து கொள்ளும் அல்லது ஒரு தார முறையில் மிகுந்த நம்பிக்கை உடையவனாக கூட இருக்கலாம் அந்த 'தாண்டவன்'. அப்படி ஒரு தார முறையில் பற்று உள்ளவர்கள் கூட தாம் மேலாதிக்கம் செய்யும் பெண்களிடம் இப்படி சில சில்லறைதனமான கேள்விகளை கேட்டு தமது உள்வக்கிரங்களுக்கு வடிகால் தேடி கொள்பவராய் கூட இருப்பார்கள்.
இப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் பாலா அந்த பாத்திரத்தை ஒரு பாலியல் வேட்க்கை உடையவனாக உருவாக்க வில்லை. அந்த வேட்க்கை உங்கள் மனதில் மட்டும் தான் இருக்கிறது.
என்னது? இதுல அசீத் நடிச்சிருந்தா நல்லா காமெடியா இருக்கும் ..
நல்லவேளை பாலா மட்டுமல்ல நாமெல்லாம் எஸ்கேப்.
நல்லவேளை பாலா மட்டுமல்ல நாமெல்லாம் எஸ்கேப்.//
:):):)
இப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் பாலா அந்த பாத்திரத்தை ஒரு பாலியல் வேட்க்கை உடையவனாக உருவாக்க வில்லை. அந்த வேட்க்கை உங்கள் மனதில் மட்டும் தான் இருக்கிறது.//
படத்தில் சொன்னதைவிட உங்களுக்கு நிறைய புரிந்திருக்கிறது. ஒன்று நீங்கள் பாலாவிடம் உதவியாளராய் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதமும் சூட்டிங்கில் வேடிக்கை பார்த்திருக்க வேண்டும்..
அல்லது பாலா உங்களது நெருங்கிய நண்பராய் இருந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர் மனதில் உருவாக்கிய கேரக்டர்களை பற்றி இவ்வளவு தெளீவாய் கூற் முடியாது..
ஆனால் என் மன வக்கிரத்தை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. Iam a Bad Man
ஆனா இது மாதிரி விமர்சனம் படிச்சிட்டு வருங்கால இயக்குனர்கள் எல்லாம்.திரும்பவும் ஹீரோ கைல அருவா குடுக்க ஆரம்பிசிடுவாங்களோனு பயபுடுறேன். தப்பா எடுத்துகாதீங்க சகா.
முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றி ஜெமினி.. நிச்சயமா நான் அதிகம் தெரிஞ்சவன் இல்ல.. இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியிருக்குது நிறைய.. நான் பாலாவை மிகவும் மதிக்கும் ஒருவன். ஆனால் விமர்சனம் என்று எழுதும்போது.. சரியாக என்னுடய கருத்துகளை சொல்லவேண்டும் என்று நினைக்கிறவன். எனக்கு பிடிக்கிறது என்பதற்காக சும்மா சொம்பு அடிக்க கூடாது என்று நினைகிறவன்.. அதனால் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாய் உலகில் மிக சிறந்த இயக்குனருள் பாலாவும் ஒருவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. ந்ன்றி ஜெமினி..
/////பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ’என் புள்ளைய எனக்கு தெரியாதா” என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. /////
அப்படி சொல்லிட முடியாதுங்க.
நம்மளையே எடுத்துக்கங்க. ஐஷ்வர்யா ராய், குஷ்பூ மாதிரி ஆளுகளின் சின்ன வயசுப் படம் பாத்தா, டக்னு அடயாளம் தெரியுதுல்ல.
அப்பா, அம்மாக்கு கண்டிப்பா தெரியும் தன் குழந்தையை.
இது மாதிரி காலத்தால் அழியாத நாவல்கள் படமா வர்றதுக்கு வாய்ப்புகள் குறைஞ்சிடும்னு பயபுடுறேன்.don't mistake me sir

விமர்சனம் ரொம்ப அருமை.
ஆனா நீங்க ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
உங்களை தவிர வேற யாரும் படத்துல இருக்கற சிறிய குறைகளை சுட்டிக்காட்டவே இல்லை.
நன்றி,
சபரிநாதன்
பெங்களூர்.
ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:
"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".
(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)
1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).
திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.
இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.
பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.
http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html
ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.
இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.
தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -
"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.
இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.
அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.
நான் அப்படித்தான் பார்க்கிறேன்.