வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்

சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான கதையும், அதை அழகாய் படமெடுத்தால் போதும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும்,என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு.
தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் விளையாடப்படும், ஸ்பான்ஸர்கள் யாருமில்லாமல் சீந்துவாரற்ற நிலையில் உள்ள விளையாட்டான கபடிதான் அது. சிறு வயதிலிருந்தே கபடி மீது வெறி கொண்டு விளையாடும் கிராமத்து இளைஞர்கள், ஊருக்குள்ளேயே வெண்ணிலா கபடி குழு என்று ஒரு குழுவை ஆரம்பித்து, பக்கத்து ஊரில் விளையாடி தோற்பதுமாய் இருப்பவர்கள், தங்களது ஊர் திருவிழாவை முன்னிட்டு, பக்கத்து ஊர் டீமை தோற்கடிக்கும் நேரத்தில் சண்டையில் முடிகிறது. திருவிழாவுக்கு வரும் மதுரைக்கார பெண்ணிடம் காதல் கொள்கிறான் மாரி என்கிற் மாரிமுத்து, திருவிழா முடிந்ததும் ஊருக்கு செல்கிறாள் அவள். மீண்டும் அடுத்த திருவிழாவுக்கு வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறாள்.

அதற்குள் மதுரையில் ஒரு கபடி போட்டி நடப்பதாய் தெரிய அதில் கலந்து கொள்ள இவர்கள் கிளம்புகிறார்கள். கடைசி நேரத்தில் டீமில் ஒருவர் வர முடியாமல் போக, செண்ட் ஆப் பண்ண வந்த டீக்கடை அப்புகுட்டியை தூக்கி கொண்டு போகிறது டீம்.

கடைசி நிமிடத்தில் ஒரு டீம் கலந்து கொள்ள முடியாமல் போகிற நேரத்தில் ஏற்கனவே இவர்களின் விளையாட்டை ஊரில் பார்த்த கோச் கிஷோகுமார் இவர்களை சேர்த்து கொள்ள, எப்படி கப்பை ஜெயிக்கிறார்கள், என்ன என்ன தடைகள் வருகிறது, மாரியின் காதல் என்னவாயிற்று என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குநர் சுசீந்தரனை பாராட்டியே ஆகவேண்டும், நீட்டான திரைக்கதை, இயல்பான வசனங்கள், வாய்ஸ் ஓவரிலேயே மண்ணின் வாசத்தை காட்டும் திருவிழா காட்சி உத்திகள், ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான ஆட்களை தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளார். புது கல்யாண பார்டியாக வருபவர் மனதை கொள்ளை கொள்கிறார்.அதிலும் அவர் பரோட்டா கடை போட்டியில் அழுகுணி ஆட்டமாடும் கடைகாரனிடம் மீண்டும் போட்டியை ஆரம்பிக்க சொல்லுமிடம் சூப்பர்.

சரண்யா மோகன் அழகாயிருக்கிறார். அவ்வளவாக வசனமே பேசாமல் அழகழகான பாவாடை தாவணியில் நடக்கிறார், ஓடுகிறார்.. மற்றபடி பெரிதாய் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமில்லை.
கோச்சாக வரும் கிஷோருக்கு அருமையான கேரக்டர்.. திருநெல்வேலி ஸ்லாங்கில் பேசியபடி வரும் அவரின் பார்வை ஒன்றே பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. ஊருக்கு போக வைத்திருக்கும் காசை பிடிங்கிக் கொண்டு நீங்க ஜெயிச்சாத்தான் ஊருக்கு போக முடியும் என்று சொல்லி அவர்களை ஏற்றி விட்டு ஆடவைக்கும் முறை ஷார்ப். வழக்கமாய் இமமாதிரியான நேரத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் உறையாற்றுவார்கள். அதை தவிர்த்திருப்பது நன்றாகவே உள்ளது.
சின்ன சின்ன கேரக்டரில வரும் ஊர்கார பெரியவர், அவரது மகள்,அப்புகுட்டியின் மாமியார், ப்து பெண், குண்டு பையனின் அப்பா, என்று பல கேரக்டர்களை நம் முன்னே வளைய வர விட்டிருக்கிறார்கள்.
லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் கபடி காட்சிகளில் கூடவே ஒடுகிறது கேமரா..
விக்கு வினாயக்ராமின் மகன் செல்வ கணேஷின் இசை ஒகே ரகம். பிண்ணனி இசை பரவாயில்லை ஆங்காங்கே கடம் கேட்கிறது. ஒரு பாடல் ஓகே.
படத்தில் குறையே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, இருக்கிறது மெதுவாய் செல்லும் காதல் காட்சிகள், சுப்ரம்ணியபுரம் பாதிப்பு காதல் காட்சி நெடுகிலும், அதே சுண்ணாம்பு அடித்த புது சுவர்கள், அவள் நடக்க, இவன் நடக்க, இவ்ள் சிரிக்க, அவனும் சிரிக்க, அ.. ஓட, இ..ஓட என்று படத்தை முதல் பாதியில் கொஞ்சம் ஓட்டத்தான் செய்கிறார்கள். க்ளைமாக்ஸ் பெரிதாய் ஒட்டவில்லை. கதையில் கபடி மேட்ச் முடிந்ததுமே படம் முடிந்து விட்டது அதற்கு அப்புறம் காட்டப்படும் க்ளைமாக்ஸை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

படம் வருவதற்கு முன்பே ஓரளவுக்கு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது, தியேட்டரில் முதல் காட்சியில் இயக்குனர்கள், பாலாஜி சக்திவேல், நா. முத்துக்குமார், அமீர், அவரது சீடர்கள், இசையமைபாளர் பூ குமரன், லிங்குசாமி மற்றும் பல பிரபல டெக்னீஷியன்கள் வந்திருந்ததே படத்தின் எதிர்பார்புக்கு ஒர் சாட்சி..
வெண்ணிலா கபடி குழு - வெற்றி கூட்டணி.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
விசய் படத்திலெல்லாம் முழுக்க ஓட்டத்தான் செய்றாங்க.......
அதுக்கு இது பரவாயில்லை?
கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள் அத்திரி.. நன்றாக இருக்கிறது.
தியேட்டரில் பார்க்கவும்.. நன்றி கவுதம்
படிகாதவன் தப்பா விட்ட வில்லை இப்படி கபடி விளையாடிடாவுசரை கிழித்த சங்கர் வாழ்க!!!
''என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு''
வாழ்த்துகள் சங்கர் நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் முதல் படம் 'எங்க ஊரு கேபுள்காரன்' எப்பொது வரும்??
புதுவை சிவா
இம்மாதிரியான படங்களுக்கு தான் விமர்சனங்களும், மவுத் டாக்கும் வேண்டும், அதனால்தான் உடனடி விமர்சனம்..
நன்றி அபுஅப்சர்
விரைவில் நீங்கள் டைரக்ட் பண்ண வேண்டும் என்பதே என் ஆசை.
எப்படி அண்ணா எல்லா படமும் வெகு சீக்கிரமாகவே பார்க்கிறிங்க?
ஜெகபதிபாபு,கல்யாணி நடித்தது...
இது போல் வந்துள்ளது.
இதே மாதிரி மொத நாளே, மொத ஷோவே படத்தை பார்த்துட்டு ஒரு பதிவைப் போட்டுட்டு திருப்தியாயிரலாம்..
இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டுமப்பா..
முருகன் அமோகமா கவனிக்கிறான் போலிருக்கு..
படத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.. மறந்திட்டேன்..
படத்தைப் பார்த்திட்டு அப்புறமா சொல்றேன்..
இதே போல குறை நிறைகளோட உள்ள படத்தைதான் ஷபி.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
இது என் கடமை சார்.. இம்மாதிரியான சின்ன படங்கள் ஓடினால் தான் நல்ல திரைப்படஙக்ள் வெளிவரும் என்பது என் நம்பிக்கை.. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி சார்..
நிச்சயமாய் முரளி.. படம் பார்த்துட்டு உங்க கருத்தை தவறாம சொல்லுங்க..
அண்ணே பார்த்துவிட்டு கண்டிப்பாய் எனக்கு உங்கள் கருத்துகளை சொல்லவும்..
நன்றிங்கண்ணா...
//
எங்க ஊரு கேபுள்காரனா..? விரைவில்.. தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறேன்.
நன்றி அசோக், முடிந்தால் இந்த விமர்சனத்தை படிக்க சொல்லுங்களேன். நீங்களும் படத்தில் ஏதோஒரு கேரக்டரில் நடித்திருக்கீர்களா..?
கில்லியின் கதை கபடி ஆடுவது கிடையாது.. கபடி ஆட போகும் இடத்தில் நடந்த பிரச்சனைகள்.. ஆனால் சென்னை28, இந்த படமும், முழுக்க,முழுக்க விளையாட்டை சுற்றியே பின்னப்பட்ட கதை..ரவி சார்.
விரைவில் நீங்கள் டைரக்ட் பண்ண வேண்டும் என்பதே என் ஆசை.//
மிக்க நன்றி அன்பு.. உஙகள் ஆசையும், என் ஆசையும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்..
ஜெகபதிபாபு,கல்யாணி நடித்தது...
இது போல் வந்துள்ளது.//
என்ன படம்.. எனக்கு தெரிந்து அப்படி நினைவில்லை.. படம் பேர் தெரிந்தால் நன்றாக இருக்கும்..
/நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் முதல் படம் 'எங்க ஊரு கேபுள்காரன்' எப்பொது வரும்??/
LOL...
குப்பை படங்களுக்கு ஒவர் பில்ட் அப் கொடுத்தாலும் ஓடாது என இன்னும் சில மர மண்டைகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது..
திருந்தட்டும்.
வாழ்த்தும் நன்றியும்.
புரியவில்லையே...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
வாய்ஸ் ஓவர் ன்னா இன்னா தல
புரியவில்லையே...//
சாரி தல.. மிஸ்டேக் ஆயிருச்சு.. சரி பண்ணிடறேன்.. சுட்டி காட்டியமைக்கு நன்றி..
நன்றி ராதாகிருஷ்ணன் சார்..
Lee?
அந்த படத்தை நான் பார்க்கவில்லை.. பரிசல்
வண்ணத்துபூச்சி,,
ராம்
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
அப்போ படத்துக்கு டிக்கட் போட வேண்டியது தான்
தமிழில் மவுலி இயக்கி அஸ்வினி நாச்சப்பா நடித்த 'அஸ்வினி" கூட விளையாட்டை வைத்து எடுத்த படம்தான்
நடராஜன்
படத்தின் காதல் காட்சிகளின் நீளத்தை தவிர்த்தால் படம் அருமை அருமை...
எதிர்பாராத முடிவு... மொத்தத்தில் திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய படம்.
நடராஜன்//
அட ஆமாமில்ல.. பரிசல் சொன்ன மாதிரி லீ கூட ஸ்போர்ட்ஸ் பேஸ்டு படம் தான்.. நன்றி நடராஜன்.
நடராஜன்//
அது தெலுங்கில் எடுத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்.