Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Dec 31, 2008

கொத்து பரோட்டா -31/12/2008

வருஷத்தோட கடைசி கொத்து பரோட்டா.

புதிய பாலம்

முதல்ல நம்ம சென்னையில புதுசா திறந்த மேம்பாலத்தோட படங்கள்






************************************************************************************
வித்யா பவன்

என்னடா எதோ பவன் அது இதுன்னு சொல்றானேன்னு பாக்காதீங்க மக்கா.. இது ஒரு பக்கா மெஸ்.. பேரு தான் சரவண பவன் மாதிரி.. லேக் வீயூ ரோடுல இருக்கிற ஹெல்த் செண்டருக்கு கொஞ்சம் டயகனலி ஆப்போஸிட்ல இருக்கு இந்த மெஸ். இவங்களோட ஸ்பெஷாலிடி.. ரவை பொங்கல், பொடி தோசை, வெஜிடபள் தோசை,தக்காளி தோசை, பொடி வெங்காய ஊத்தப்பம், ரவா தோசை, நெய் பொங்கல் என்று சும்மா பல விதமான அயிட்டங்களை போட்டு தாங்குறாஙக்.. கடந்த பத்து வருஷத்துக்கு மேல இந்த மெஸ் நடந்துட்டு இருக்கு. 10-12 ரூபாய்க்கு தோசை, குறைந்த விலையில் சாப்பாடுன்னு அருமையான மெஸ். ரொம்ப ஹோம்லி... என்ன இடம் தான் ரொம்ப சின்னது. அதுக்கென்னா வாய்க்கு ருசியா, சீப்பா கிடைச்சா எங்க, எப்படியிருந்தா என்னன்னு சொல்றீங்களா..? அதானே.. என்ஜாய்..

**********************************************************************************
புத்தாண்டு கொண்டாட்டங்கள்


புத்தாண்டை வரவேற்க என்ன புரோக்ராம்னு இந்த நிமிசம் வரை நிச்சயமாகவில்லை. மூன்று இடங்களில் அழைப்பு இருக்கிறது. மூன்று பேரின் யாரை தவிர்த்துவிட்டு, வேறு ஒருவரின் அழைப்பை ஏற்று போனால்.. எங்க கூடயெல்லாம் வருவியா..? என்பார்கள். அதனால் ஒரே குழப்பமாய் இருக்கிறது. பேசாமல் வீட்டில் சன்,கலைஞர்,ஜெயா,ஜீ தமிழ்ன்னு செட்டில் ஆகலாமான்னு தோணுது. பார்க்கலாம்.

**********************************************************************************

காணவில்லை
நான் பதிவு ரெகுலரா எழுத ஆரம்பிச்ச நாள்லேர்ந்து என்க்கு பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த ஒரு முதன்மையான வாசகர் ஜூர்கேன் க்ருக்கேர். என்னை பின் தொடர்தவர்களில் முதன்மையானவரும் கூட.. ஆனா என்ன ஆச்சுன்னே தெரியல கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. ஒரு வேளை ரொம்ப பிஸியோ..? என்னவாயிருந்தாலும், இதனால் பதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஜுர்கேன் க்ருக்கேர் என்பவர் உங்களுக்கு எப்போதாவது பின்னூட்டமிட்டால்.. உடனே அவருக்கு தெரிவிக்கவும்.. உங்களை கேபிள் சங்கர் தேடுகிறார் என்று..
************************************************************************************

பதிவுகள்

நான் கடந்த ஐந்து மாதங்களாய்தான் தொடர்ந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்ததிலிருந்து வந்த உற்சாகமான பதிவர்களின் ஆதரவு பின்னூட்டங்கள் என்னை மேலும் எழுத தூண்டியது. எழுத ஆரம்பித்து நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 10,000 ஹிட்ஸ்களுக்கு மேல் தொட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதையெல்லாம் மீறி இந்த மாதம் என்னுடய பதிவு 50,000ஹிட்கள் அடைந்தது மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் மட்டும் 23,000 ஹிட்டுகளை தொட்டிருக்கிறதை நினைத்து மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பதிவுகள் மூலமாய் பல துறையில் வித்தகராய் திகழும் பல புதிய நண்பர்களையும் என்னால் மறக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் பதிவுலகில் ஏற்பட்ட நட்பு வட்டத்தை என்னால் மறக்க முடியாது. மிக குறுகிய காலத்தில் ஏற்பட்ட இந்த நட்பு வட்டம் வருகிற புத்தாண்டிலும் மேலும் நெருக்கமாய் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
***********************************************************************************


எனது நண்பர்கள் அனைவருக்கும், பதிவுலக பதிவர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள எல்லா தமிழ் நெஞ்சங்களுக்கும்

புத்தாண்டு வாழ்த்துகள்

Dec 30, 2008

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire


படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..?


படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான்.

முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவர்களை அங்கஹீனபடுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் தலைவனிடம் மாட்டி கொள்கிறார்கள்.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜமாலின் அண்ணன் மாலிக் முக்கிய ஆளாய் ஆகிறான். தன் தம்பிக்கு அங்கே பிரச்சனை வரும் போது அங்கிருந்து தப்பி, ஓடும் ரயிலில் தப்பி ஆக்ராவுக்கு சென்று கைட், திருட்டு என்று பல பட்டறையாகிறாகள். பின்பு தன் பழைய நண்பியான லதிகாவை தேடி மும்பைக்கு வருகிறார்கள், அவளை ஒரு விபசார விடுதியிலிருந்து காப்பாறுகிறான் ஜமாலின் அண்ணன் மாலிக், ஜமாலுக்கும், லதிகாவுக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், அவனின் அண்ணன் லதிகாவை நான் தான் காப்பாற்றினேன் என்று சொல்லி அவளை அடைகிறான்.

படம் முழுக்க போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி அவனுக்கு பதில் தெரிந்தது என்று ஜமாலின் வாழ்க்கை நடந்த சம்பவஙக்ளின் மூலம் காட்டியிருப்பது. சூப்பர். அதிலும் அனில் கபூர் அவனை போட்டியிலிருந்து விலக்க தவறான ஒரு பதிலை பிரேக்கின் போது சொல்லி, அவனை குழப்ப, அவன் தெளீவாக, ஆப்ஷனில் வேறு பதிலை தேர்ந்தெடுப்பது, வாழ்க்கை அவனுக்கு கற்று தந்த பாடம்தான் அவனை வழிநடத்தி செல்கிறது.

அவன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று போலீஸ் அவனை விடுதலை செய்கிறது, அடுத்த நாள் போட்டியில் அவனுக்கு கேட்கப்படும் கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை,அதனால் தன்னுடய கடைசி ஆயுதமான போன் எ ப்ரண்ட் என்று தனக்கு தெரிந்த ஒரே நம்பரான தன் அண்ணனுக்கு போட, அந்த போனை அவனுடய காதலி லதிகாவிடம் தன் தம்பியுடன் சேர்த்து வைப்பதற்காக தன் முதலாளியின் பிடியிலிருந்து தப்பியோட வைத்து இறக்கிறான்.

இப்போது போன் லதிகாவிடம், ஜாமாலுக்கோ பதில் தெரியாது, அவளுக்காவது தெரிந்ததா..? லதிகாவும், ஜமாலும் ஒன்று சேர்ந்தார்களா..? என்று நம் மனதை உருக்குகிறார்கள்.

ஆங்கில படம் தான் என்றாலும் படம் முழுவதும் விரவிகிடக்கும் ஹிந்தி வசனங்கள், அந்த அந்த காலகட்டங்களில் கேரக்டர்களுக்கும் அவர்கள் நடிகர்களை தேர்தெடுத்த பாங்கும் அசத்தலாயிருக்கிறது. ஜமால், அவன் அண்ணன், லதிகா என்ற மூன்று கேரக்டர்களும் 4 வயது முதல் 18 வயது வரையான நிலைகளில் வருவதால் அதற்கு ஏற்றார் போல சிறுவர்களை தெரிவு செய்திருப்பது அருமை.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாரும் மிக இயல்பான நடிப்பில் நம்மை கட்டி போடுகிறார்கள், தேவ் படேல், கதாநாயகி, இர்பான்கான், சுரப் சுக்லா.

இசை நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். மனுசன் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும் என்ன ஒரு காம்போஸிஷன். இந்த வருட கோல்டன் க்ளோப் அவார்ட்டுக்கு சிறந்த இசையமைப்பாளராய் இவரை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா..? என்று கேள்வி எழுப்பினால் மிகவும் யோசிக்க வேண்டியிருக்கு, இல்லாமல் இல்லை ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாயில்லை என்பதே உண்மை.

Q&A என்கிற பெயரில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலுக்கு, அவரும் சைமன் பிஃபாய் என்பவரும் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இயக்கம் டானி போயலே.. இவரை பாராட்ட வார்தைகளே இலலை. ஏற்கனவே இந்த படம் டொரண்டோ பீப்பிள் சாய்ஸ் அவார்ட்டை வென்றிருக்கிறது. கண்டிப்பாய் இந்த படம் பல உலக பட விருதுகளையும், ஆஸ்கர்களையும் வெல்லும் என்பது நிச்சயம்

Don't Miss it.....

ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை/ பேட்டி
http://moviesblog.mtv.com/2008/12/29/dont-sleep-on-slumdog-millionaire-composer-mia-collaborator-ar-rahman/

Song 1

Song 2

Song 3

Song 4


படத்தின் டிரைலரை பார்க்க..





Blogger Tips -கிங் தெலுங்கு திரை விமர்சனத்துக்கு இங்கே அழுத்தவும்


உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

King - Telugu Cinema Review



ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார்.

இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது.

நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார்.

பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜினியர் சரத்தாகவும் அவரின் அண்ணன் ஸ்ரீஹரியிடமும், த்ரிஷாவிடம் ஆட்டம் காட்டுவது பல படங்களில் பார்த்தாலும் பரவாயில்லை. அதிலும் ஸ்ரீஹரி தப்பு தப்பாய் எதையாவது படம் வரைந்து எப்படி தன் கிரியேட்டிவிட்டி என்று சல்ப்புவது மெம காமெடி ரவுடி.அதே போல் ஒரிஜினல் சரத்தாக வரும் சுனிலின் காமெடியும் சூப்பர்.

இசை தேவிஸ்ரீபிரசாத் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஓம் சாந்தி ஓம் பாணியில் இருக்கிற அழகு தெலுங்கு ஹீரோயின்களை வைத்து பாடும் பாடல் ஒன்றும் பிரமாதமில்லை. என்ன அனுஷ்கா வருவதால் ம்ஹூம்..

இந்த படத்திலும் இயக்குனர் ஸ்ரீனிவைட்லாவுக்கு மிகப் பெரிய பலம் பிரம்மானந்தம்.. படம் பூராவும் மனுசன் இசையமைப்பாளர் ஜெயசூரியாவாக வந்து பின்னி எடுக்கிறார். அதே போல் பல படங்களின் காட்சிகள் பயன்படுத்த பட்டிருக்கிறது.. உதாரணமாய் ரேஸ், கோல்மால், சந்திரமுகி, என்று கலந்துகட்டி விட்டிருக்கிறார். செகண்ட் ஆப்பில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள், டர்ன்கள், அதுவே படத்துக்கும் பலவீனமாகவும் இருக்கிறது. என்ன ஒரு ஆறுதல் என்றால் வழக்கமாய் க்ளைமாக்ஸில் சண்டையில் முடிப்பார்கள், அப்படியில்லாமல் சட்டென்று முடிந்தது ஒரு ஆறுதல்.


மொத்ததில் கிங் ஒரு பக்கா மசாலா..

Dec 29, 2008

ஸ்டேட் ஃபர்ஸ்ட்...


D.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர்.


எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள்.


அவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை..


சென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா
சில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா..? +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க?

கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......

உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Dec 28, 2008

கடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு

கடேசி..கடேசி பதிவர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு பாத்தா.. அதுக்குள்ள பல பேர் எழுதிட்டாங்க.. அந்த காண்டுல, யார்.. யார் வந்தாங்கன்னு கண்டுபிடிக்க, போட்டோ பிடிச்சு வச்சிருக்கேன்.. கண்டுபிடிச்சுக்க திறமையிருக்கிறவங்க.. கண்டுபிடிச்சுக்கங்க.. நம்ம போன்ல இவ்வளவுதான் வந்திச்சு..இதவிட கேவலமா படமெடுக்க முடியாதுன்னு படத்தை பத்தி திட்டணும்னா பின்னூட்டமிட்டு திட்டவும். இல்லாட்டா ஓட்ட குத்திட்டு போகவும்..


தராசு, லக்கிலுக்



கார்க்கி, ஜ்யோவரம்சுந்தர், லக்கிலுக்



லக்கிலுக், கார்க்கி,பாலா,குகன்,..


குகன், காவேரிகணேஷ், அன்பு,(மதுரையிலிருந்து வந்த பதிவர்கள்) வாசகர்கள்,ஸ்ரீவத்சன்



டோண்டு, தாமிரா, அதிஷா, இரண்டுபேர் இடுக்கில் அத்திரி, மற்றும் பலர்...(பேர் தெரியலைன்னா..அப்படித்தான்.)


அக்னிபார்வை, நர்சிம், முரளிகண்ணன்.




பதிவர் சந்திப்பு பதிவுகள்..

அக்னிபார்வை

டோண்டு

குகன்

அத்திரி

உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Dec 27, 2008

கடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008

’லக்கிலுக்கின் புத்தக வெளியீட்டு விழா பார்ட்டி.ஸ்பான்சர்டு பை அதிஷா.. அனைவரும் வரவும்
27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர கும்மாங்குத்துகள்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா தன் தங்கமணியின் துணையுடன் தைரியமாய் துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே துக்கயுரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன்,முரளிகண்ணன், கேபிள் சங்கர்,(யாருய்யா என்னை கேட்கமா பேரெல்லாம் போட்டது) அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். திருமணமாகாமல் இருக்கும் அனுபவசாலிகளும் கலந்து கொள்ளலாம்.

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அதனால் நடுவே தம் அடிக்க போகிறவர்கள் போகலாம்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தையும், சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நாம எதாவது செய்யணும் என்று நர்சிம் தொடங்கி வைத்து எதையாவத் செய்ய ஸ்பான்சர் செய்வார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் நியூ இயர் “where is the party" கொலைவெறியுடன் ஆரம்பிக்க படும்


இரவு 8.30 மணி
முக்கியமான நிகழ்வுகள்
லக்கிலுக் தன்னுடய புத்தக வெளீயீட்டினையொட்டி மிகப்பெரிய பார்ட்டி கொடுப்பதாய் உள்ளார்.. அவரின் புத்தகத்தை வாங்குபவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும்..


க்டோசி பதிவர் சந்திப்புக்கு எல்லாரும் வாங்க.. வந்து கும்மியடிச்சிட்டு போங்க..

இது முழுவதும் முரளிகண்ணனின் பதிவிலிருந்து சுட்டு எடிட் செய்யபட்டது.. ஒரிஜினல் முரளிகண்ணனின் பதிவை படிக்க.. இங்கே அமுக்கவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 26, 2008

Gajini - Hindi film Review


நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..

மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள்.

அமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய..

அசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ரியாஸ்கான் கூட தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்து, இறக்கிறார்.

ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.

இசை ஏ.ஆர். ரஹ்மான். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட். அதிலும் “பெஹக்கா..” ‘குஜாரிஷ்’ பாடல்கள் படமெடுத்திருக்கும், விதம் அருமை.

இயக்குனர் முருகதாஸ், திரைக்கதையில் பெரிதாக எதையும் மாற்றியமைக்கவில்லை, க்ளைமாக்ஸை தவிர, தமிழ் கஜினி க்ளைமாக்ஸை விட இது ஒகே.

மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.


Blogger Tips - "Neninthe" Telugu Film Review



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

பட வரிசை “பத்து”

10- எல்லாம் அவன் செயல்



தெரிஞ்சோ தெரியாமையோ.. பி..சி.. சென்டர்களில் தப்பி தவறி தத்தளித்து தலை தெரிகிறது.

9.சூர்யா


இது எல்லாம் இந்த ஒரு வாரத்துக்குதான் லிஸ்டுல இருக்கும். வேற வ்ழி ரிலீஸ் ஆகியிருச்சு இல்ல..

8.தெனாவட்டு


சன் டிவி மட்டும்தான் ஹிட்.. ஹிட்டுன்னு கூவிட்டிருக்காஙக்.. இது ஒரு சூப்பர் ப்ளாப் படம்..

7.பூ



படம் என்னவோ நல்லாயிருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாலும்.. வருமானம் ஒன்ணும் சொல்லிகிறபடியா இல்ல்.. பல இடங்களில் தியேட்டர்களிலிருந்து படத்த எடுத்துட்டாங்க..

6.பொம்மலாட்டம்


படத்தை ஒரு விதமான நல்ல ஒப்பீனியன் இருந்தாலும், இந்தி டப்பிங் படம் பாக்கிறா மாதிரி இருக்கிறதுனால சென்னை தவிர மற்ற இடங்களில் வருமானம் ஒன்ணுமே இல்லையாம்

5 வாரணம் ஆயிரம்


ரிலீஸான டயத்துல பெரிய ரிப்போர்ட் இல்லாட்டியும் பெரும்பாலான ஏ செண்டர் ஏரியாக்களில் நல்ல வருமானம்.. தப்பிச்சிரும்னு சொல்லிகிட்டிருக்காங்க.. படத்தோட வருமானத்துக்கு முக்கிய காரணம் ஹாரிஸ்..

4 திண்டுக்கல் சாரதி


சன் டிவி உபயத்தால் சுமாரான ஓப்பனிங்.. ஆனால் படத்தை பற்றி அவ்வளவாக நல்ல ரிப்போர்ட் இல்லை.

3 அபியும் நானும்


படத்தை பத்தி நல்ல அபிப்ராயம் இருந்தாலும், மல்டிப்ளக்ஸ், மற்றும் ஏ செண்டர்களில் மட்டுமே போகக்கூடிய சான்ஸ் அதிகம் ... பார்க்கலாம்..

2திருவண்ணாமலை


பேரரசு, அர்ஜுன் இரண்டு பேருக்கும் இது டெஸ்டிங் படம். பி அண்ட் சி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

1 சிலம்பாட்டம்


யுவனின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வியாழன் அன்றே சென்னையின் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி அபவ் ஆவரேஜ் ஓப்பனிங் பெற்றிருக்கிறது. ஆனால் மக்களிடம் அவ்வளவாய் பெரிய ரியாக்‌ஷன் இல்லை. பாடல் இருந்த அளவிற்கு படம் இல்லை என்கிறார்கள்.. பார்போம்.


Blogger Tips -திண்டுக்கல் சாரதி விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 25, 2008

கமலின் அடுத்த படம் A WEDNESDAY...?


கமல தன் அடுத்த படமாக எடுக்க சமீபத்திய சூப்பர் ஹிட்டான ஹிந்தி படமான “A Wednesday" யின் ரைட்ஸை வாங்கியிருப்பதாக தெரிகிறது. ஒரு புதன்கிழமை அன்று ஒட்டு மொத்த மும்பையையும் ஒருவனது பிடியில் வைத்திருந்து, பார்க்கும் நம் மனதை ஒட்டுமொத்தமாக அள்ளிய படம். ஒரு சூப்பர் திரில்லர்.

இந்த படததில் நஸ்ருதீன் ஷா நடித்த கேரக்டரில் கமலும், அனுபம் கேரக்டரில் மம்முட்டியும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை.. அந்த அறிவிப்பு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் உலகளாவிய “உலகநாயகனின்” ரசிகர்களில் ஒருவன்.

டிஸ்கி
இது எனக்கு கிடைத்து வந்த் செய்தியல்ல
இங்கிருந்து வந்தது..

Neninthe - Telugu Film Review


Neninthe- ரவிதேஜா,பூரி ஜெகன்னாத் இணைந்து கொடுத்திருக்கும் பட்ம். சினிமா உலகை சுற்றி பின்னப்பட்ட கதை, இயக்குனராகும் எண்ணத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக, பிரபல டைரக்டர் ‘இட்லி’ விஸ்வநாத்திடம் வேலை பார்க்கிறார்.

தன் குடும்பத்தை காப்பாற்றவும், தன் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் குருப் டான்ஸராக வரும் சந்தியா. கேன்சரில் அவதிபட்டு கொண்டு எங்கே அது தெரிந்தால் தன் மகனின் குறிக்கோள் கலைந்துவிடுமோ என்கிற் எண்ணத்துடன் வாழும் ஹீரோவின் அம்மா, தன் மச்சினியை கூட்டி கொடுக்க கூட தயங்காத மாமா, ஜூனியர் ஆர்டிஸ்ட் அக்கா, ஹீரோயின் மீது வெறி கொண்டு அலையும் தாதா வில்லன. வெறிபிடித்த ரசிகர் மன்ற தலைவன், சூப்பர் ஹீரோ, ஹீரோயின் முமைத்கான். டைரக்டராகும் ஆசையில் தன் பெயரை செந்தில் என்று மாற்றிக் கொண்டு தமிழ் டைரக்டர் என்று அலையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேணு அரவிந்த் என்று எல்லா கேரக்டர்களூம் சினிமாவை சுற்றியே வருகிறது.

ரவிதேஜாவின் கேரக்டர் மிக குழப்பமான கேரக்டராய் வலம் வருவதால் அவரின் குறிக்கோள்கள் நீர்த்து போன மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது. ஹீரோயின் குறைந்த அளவுள்ள ஆடை அணிய மறுக்கும் காட்சியில் ரவிதேஜா பேசும் வசனம் சூப்பர்..
ஹீரோயின் ஷியா.. கிழடு தட்டிய முகம்.. அவரை மிகபெரிய ஹீரோயின் ஆவது கொஞ்சம் ஓவர். அதே போல் தயாரிப்பாளர் தன் படத்தை பற்றி இண்டர்நெட்டில் விமர்சனம் செய்பவர்களை பற்றி கத்தும் காட்சி இயக்குனர் மனதில் நினைத்து இருப்பதை வெளி கொட்டியிருக்கிறார். அதிலும் விமர்சனம் படித்துவிட்டு படம் பார்க்க கூடாது என்கிறார். கிசு கிசு எழுதும் பத்திரிக்கைகள், இணையதளங்களை முமைத்கானின் எபிஸோடில் எதிர்க்கிறார்.

ரசிகர் மன்ற தலைவர் எபிஸோட் அருமை. அந்த ரசிகர் மன்ற தலைவராக வரும் நடிகரின் நடிப்பு அருமை.

சினிமா பற்றிய படம் எடுப்பதில் இரண்டு வழி இருக்கிற்து முழுவதும் அதில் உள்ள பிரச்சனைகளை சொல்லி க்ளாஸாக எடுப்பது ஒரு வழி, இன்னொரு வழி பக்கா கமர்சியலாய் படமெடுப்பது.. இதில் இரண்டு வழியும் இல்லாமல் நடுவாக சென்றிருப்பதால் ஒரே சவ..சவ..

சக்ரியின் இசை சுமார் ரகம், ஷ்யாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவு ஒ.கே. இயக்குனருக்கு தமிழ் சினிமா டைரக்டர்களின் மேல் உள்ள காழ்புணர்ச்சி நன்றாக தெரிகிறது. பொறாமை படுவதை விட்டு படமெடுப்பதை பற்றி யோசிப்பதே மேல்.

சினிமாவை பற்றியே படம் முழுவதும் இருப்பதால், சினிமாவின் மீது வெறி கொண்ட ரசிகர்களூக்கும், சினிமா சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு அவர்கள் அளவுக்கு ரிலேட் செய்ய முடியுமா.. என்று தெரியவில்லை..

Dec 23, 2008

Luckylookகின் விழா..


நமது தோழர் லக்கிலுக் அவர்கள் எழுதிய “விளம்பர உலகம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா, கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு குட்டி பதிவர் சந்திப்பு போலவே இருந்தது.

சரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன். மிக சொற்பமான கூட்டமே இருந்தது. லக்கி ரொம்ப நல்ல பிள்ளையாய் உட்கார்ந்திருந்தார். திரு.வள்ளியப்பன் அள்ள அள்ள பணம் நூலாசிரியர் அவர்கள் நூலை வெளியிட்டு பேசினார்.

பதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த,மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்..

விளம்பர உலகம் புத்தகத்துடன் மால்கம் எக்ஸ் என்ற ஓரு புத்தகத்தையும் அறிமுக படுத்தினார்கள். கேள்வி நேரத்தில் லக்கிலுக்கிடம் மீடியா சம்பந்தமான பல கேள்விகள் கேட்கபட்டன. அவரும், வள்ளியப்பன் சாரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்து கூறினார்கள். கேள்விகள் தேவையில்லாமல் திசைமாறி விளம்பர உலகின் அரசியல், நுண்ணரசியல் என்று கேனத்தனமாய் போனது.

அதில் முக்கியமான ஒரு கேள்வி.. ஏன் கருப்பான பெண்களை விளம்பர உலகம் வரவேற்பதில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ.. கேள்விகள்..

சரி ஒரு அட்டு பிகரை வைத்து விளம்பரம் எடுத்தால் நீங்கள் பாப்பீங்களா..? என்று பதிலுக்கு லக்கி கேட்பார் என்று பார்த்தேன். மேடையில் இருந்ததால் நல்ல பிள்ளையாய் வாய்மூடி கமுக்கமாய் இருந்துவிட்டார் போலும். கூட்டம் முடிந்ததும் வெளியே நான் லக்கியிடம் நீங்கள் இந்த மாதிரியான பதிலை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்று சொன்னேன். அதையே பா.ராகவன் வழிமொழிந்தார்.

அந்த மொட்டை மாடி கூட்டத்தில் அடுத்த புத்தகமான மால்கம் எக்ஸ் பத்தி கேள்வி கேட்பவர்கள் ரொம்ப குறைவாகவே இருந்தார்கள். அதிலும் அவரை பற்றி விட இஸ்லாம் அது இது என்று உட்டாலக்கடி அடித்து கொண்டிருந்தார்கள். அப்போது நர்சிம் ஒரு மாபெரும் கேள்வியை கேட்டு எல்லாரையும் திகைக்க வைத்தார் .. அது என்னவென்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பா.ராகவன் அவர்கள் அதற்கு ஒரு மாதிரியான் பதிலும் சொன்னார்.ஒரு நண்பர் இஸ்லாமில் பிரிவுகள் இல்லை என்று ஒன்றை சொல்லி மாட்டிக் கொண்டார்.

அந்த உருளைகிழங்கு சிப்ஸ் சூப்பர். ஹாட்சிப்ஸா..? அந்த பனிவிழும் மொட்டைமாடியில் அந்த சிப்ஸ், காபி சூப்பர்.. நேற்று காராசேவாம்.

அதுசரி இந்த புத்தகத்தை எழுதியது யாரோ யுவகிருஷ்ணாவாமே..? எனக்கென்னவோ.. லக்கிலுக்ன்னே.. வச்சுருக்கலாமோன்னு தோணுது....

வாழ்த்துக்கள் நண்பரே.. மென் மேலும் உங்கள் எழுத்து பணி வளர்க..

நேத்து போட்டோ எடுத்த மகானுபாவன்கள் யாராவது ரெண்டு போட்டோ இருந்தா இணையத்துல போடுங்க.. நானும் சுட்டு போட்டுர்றேன்.

சூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....

அந்த சகோதர கடை ஓனர்கள், நடத்திய விஷயங்கள் ஒன்றும் புதுசில்லை. ஏனென்றால் இதுக்கு முன்னாலே இவர்கள் கடை நடைத்திய போது அவர்களின் பல ஏரியாக்களில் கடை ஆரம்பிக்கும் போது அதை இப்போது எதிர் கடையில் நிர்வாகம் பார்த்து கொண்டிருக்கும், அவரை வைத்துதான் சகோதரர்கள் ஆரம்பிப்பார்கள். அவரும் அங்கு திறமையாய் கடை நடத்தி அந்த கடையை நெ.1 என்று கொண்டு வந்தவுடன் அவரை மீண்டும் வேறு ஊரில் கடை நடத்த அனுப்பி வைப்பார்கள்.

பின்பு அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.. அவரிடம் எந்த காரணத்தை கொண்டும் திரும்பவும் அவர்களின் கடை நடத்தும் தொழிலுக்கு வரக் கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கி கொண்டு அவரை விரட்டி விட்டதாகவும் ஒரு விஷயம் உண்டு. இதற்கு அப்போது அந்த குடும்பத்தின் பெரியவரின் ஆசியுடன் தான் நடத்த பட்டது.

அதை வைத்துதான் பெரியவர் தனியாய் கடை ஆரம்பித்ததும், சரியாய் அந்த நிர்வாகியை கூட்டி கொண்டு வந்தது, சகோதர கடைகாரர்களூக்கு பீதீயை கிளப்பிவிட்டது. நிர்வாகிக்கும் சரியான ஆதரவு பெரியவர் தந்ததால் ஒரே வருடத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் புதுக் கடையை கொண்டுவந்துவிட்டார். புதுசாய் எல்லா பெரிய கம்பெனி சரக்கும் பெரியவர் நடத்தும் கடைக்கே போக, வேறு வழியில்லாமல் சகோதர கடைகாரர்கள் டவுசர் அவிழ்க்க வேண்டியாதாய் போயிற்று, இல்லாவிட்டால் இவர்களாவது புது சரக்கை விலை கொடுத்து வாங்கற்தாவது..

என்னதான் கண்கள் பனித்து, இதயம் கனத்து, ரவுண்டாய் பெற வேண்டியதை பெற்று, சேர்ந்தாலும், பெரியவர் இவர்களை மீண்டும் நம்புவதாய் தெரியவில்லை.. பிரிச்சது பிரிச்சதுதான் அவங்க அவங்க கடை, அவங்க அவங்க யாவாரம்னு பெரியவ்ர் தெளிவா இருக்கிறதுனால.. சகோதர கடைக்காரங்க.. ஆடிப் போயிட்டாங்க.. சேர்ந்ததுனால, எல்லாத்தையும் ஒண்ணாக்கிடலாம்னு நினைச்சிகிட்டு இருந்த நினைப்புல மண் விழுந்த மாதிரி ஆயிருச்சு.. பெரியவர் மன்னிப்பு கேட்க வச்ச விஷயம்..

இவங்களுக்கு போட்டியா மதுரையில அவங்க மாமா அரம்பிச்ச சரக்கு போடற் கடையில இவங்க கடை சரக்கு இப்போ கிடைக்கிறதாவும் பேசிக்கிறாங்க.. ஆன மதுரைக்கார மாமா கடைய இருக்கிறபடி நடத்த போறதாதான் பேச்சு..

அதே போல இங்க மாமா ஆதரவோட நடக்குற சரக்கு போடற வியாவாரத்தை திரும்ப எடுக்க பாக்குறாய்ங்க..

இப்போதைக்கு அவ்வளவுதான்

Dec 22, 2008

திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்



தாழ்வுமனப்பான்மையுள்ள ஒருவனை பற்றிய கதை. தான் கருப்பாக இருப்பதால் பல பெண்களால் நிராகரிகப்பட்ட சாரதிக்கு திடீரென சிகப்பான ஒரு தேவதை போன்ற வசந்தா மனைவியாகிறார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை வைத்து கொண்டாடமுடியாமல், தன் தாழ்வு மனப்பான்மையால், அவளை சந்தேகித்து, மனநிலை பாதிக்கப்பட்டு அவதிபட்டு பின்பு மருத்துவத்தினால் சரியாகி சந்தோசமாக வாழ்கிறான் சாரதி.

கதை இவ்வளவுதான், ஆனால் அதை சொல்வதற்கு ரொம்ப நேரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மளையாளத்தில் சீனிவாசன் நடித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தின் தமிழாக்கம் தான். அதை அப்படியே எடுத்திருப்பதனால் இந்த படமும் ஒரு பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறது. காட்சியமைப்புகளில், வசனங்களில், நடிப்பில் என்று எல்லா விஷயங்களிலும்.

பல காட்சிகள் காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிகிறது. அதிலும் ஆரம்ப காட்சியில் கருணாசை யானை தூக்கி கொண்டு போவது, மிகவும் நீளமான போர் காட்சி, அதே போல் அவர் தன் மனைவியை எப்போது தன் தம்பியுடன் சந்தேகித்தாரோ.. எப்போது நடிகர் அஜித்குமார் தன் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் செய்ய போனாரோ.. அப்பவே அவருக்கு மனநிலை முத்திவிட்டது என்று நமக்கு புரிகிறது. அதற்கு அப்புறம் தேவையில்லாமல், வள,வளவென்று இழுத்து கொண்டு நம்மையும் பைத்தியம் பிடிக்க வைக்கிறார்கள். படத்தில் ஆளாளுக்கு நிறைய நாடக பாணியில் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த பாத்திரத்துக்கு சரியான ஆளாய் இருக்கிறார் கருணாஸ்.. பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். கார்திகா அழகாய் இருக்கிறார், அவ்வப்போது அழகாய் வெட்கப்படுகிறார். அழுகிறார். அம்மா சரண்யா வழக்கம் போல்.. அதாரது புதுசா தங்கச்சி.. நல்லாத்தான் இருக்காங்க.. எம்.எஸ்.பாஸ்கர் எப்போதாவது காமெடியாய் பேசி, மற்ற நேரங்களில் நிறைய பேசுகிறார்.

தினாவின் இசையில் அவ்வப்போது வரும் குத்துபாடல்கள், சன் டிவி புண்ணியத்தால் நகரு நகரு பாடல் ஹிட்டாகிவிடும்.. அந்த சோகப்பாடல் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.. அவுட்டோர் காட்சிகளில் ஓரே பிளீச்..

சன் டிவியின் பலம் இம்மாதிரி சராசரி படத்தை அபவ் ஆவரேஜ் படமாக்கும் என்று தெரிகிறது.


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

இலவசம்


என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னு முடிவு செஞ்சப்புறம் இலவசமா எந்த ஐடியாவும் வரமாட்டேங்குது.. நம்மாளுங்க இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம் டிவி, இலவச நிலம், இலவச பொங்கல், இலவச தீபாவளின்னு ஒரே இலவச மயம்தான்.

நம்ம ஜெயலலிதா போன ஆட்சியில, என்ன பண்ணாங்க.. கோயில்ல தினமும் மத்யானம் இலவச சாப்பாடு போட்டாங்க. அங்க இங்க கொஞ்சம் நஞ்சம் வேலை பார்த்து சம்பாதிச்சிகிட்டிருந்த அடிப்படை வேலை செய்பவர்கள், வேலை செய்யறத விட்டுட்டு, ஒரு வேளை சாப்பாடு நிச்சயம்க்கிற நிலையில வேலையை விட அவங்களுக்கு வேறு என்ன காரணம் வேண்டும்.

ஒரு காலத்துல குங்குமம் புக் வாங்கினா புக் விலையவிட அவங்க கொடுக்கிற இலவச பொருட்களின் விலை அதிகமா இருக்கும். அதனால அந்த புத்தகம் நம்பர் ஓன்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. அவங்க சொன்ன பின்னாடி இன்னொரு பத்திரிக்கை நாங்களும் நம்பர் ஒன்னுன்னு சொல்றாங்க. அவங்களும் ஒரு சர்வே ரிசல்ட் வச்சிருக்காங்க. இதுல கடைசியில வாங்குற நமக்கு கிடைக்கிறது என்னன்னா.. அஞ்சு ரூபா புக்கை கொஞ்சம், கொஞ்சமா.. பதினைஞ்சு ரூபாய் ஆக்கிருவானுங்க.. நாமளும் பழக்க பட்டு போய், கொடுத்து தொலைவோம்.

அத விடுங்க நம்ம வூட்டுல, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு ஃபிரையிங் பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச ஃபிரையிங் பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது ’பான்’ தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு வீட்டுல சொல்லி தப்பிச்சேன்.. இதை முன்னமே ஒழுங்கா பாத்து வாங்கியிருந்தயானா இந்த அலைச்சல் இல்லையில்ல என்று அன்பு அட்வைஸ் வேறு.

இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது.

"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்." என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது. அந்த ஃபரையிங் பேனோட விலை ஒரு ஐந்நூறு ரூபாய் இருக்குமா..? அதுக்கு 25*500=12500 செலவு. இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது.

இப்படித்தான் போனில் ஒரு மிகப்பெரிய பேங்க் ஓன்று எனக்கு கால் செய்து நீங்கள் எங்களது முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் உங்களுக்கு இலவசமாய் ஓரு இன்சூரன்ஸ் பாலிசி தருகிறோம்.. என்கிறார்கள், சரிம்மா அது பத்தின டீடைல் எல்லாத்தையும் எனக்கு மெயில் அனுப்புங்க..ன்னு சொன்னா.. அதெல்லாம் சொல்ல மாட்டாங்களாம். போன்லதான் சொல்வாங்களாம். நாம அத கேட்டு ஓகேன்னு சொன்னா.. நம்ம கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துப்பாங்களாம்.. சரின்னு சொன்ன மறு விநாடி நம்ம அக்கவுண்டிலேர்ந்து பணம் எடுத்த அப்புறம் அவ்வளவுதான் அந்த போன் பேசின அம்மணிய எப்படி பிடிக்கிறது.. அவளை பொறுத்த வரைக்கும் ஒரு பாலிசி ஓகேயாயிருச்சு.

எனக்கு தெரிஞ்சு உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு ஆதாயம் இல்லாமல் இருக்காது.இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசம், இலவசம் என்று பழகிப் போய் நாம் போடும் ஓட்டுக்கும் காசு இலவசமாய் தருகிறார்கள் என்று அதையும் வாங்கி கொண்டு ஓட்டை போடுகிறோம்.

காசை தண்ணீர் குடத்துக்குள்ளிருந்தும், பேப்பரின் நடுவிலிருந்தும், கொடுத்தினால் தங்கள் நன்றியுணர்வை வெளிகாட்ட, நாம் அவர்களூக்கு ஓட்டு போடுகிறோம். ஆனால் உங்களால் ஜெயித்து வருபவர்கள் என்ன நினைப்பார்கள், காசை வாங்கிட்டு ஓட்டு போட்டவனுங்களுக்கு என்னத்தை செய்யறது.. வந்த வரைக்கும் அடிக்கத்தான் பாப்பாங்க.. அதனால் வருகிற இடைதேர்தல்ல உங்களுக்கு யாராவது எதையாவது இலவசமாய் கொடுத்தா..??

வாங்கிக்கங்க.. ஆனா யோசிச்சு, வேற ஒரு நல்ல ஆளை செலக்ட் பண்ணுங்க.. இலவசமா எதையாவது கொடுக்கறவனுக்கு நாம ஒன்ணும் நன்றி கடன் பட்டுகிட்டிருக்க வேணாம்.

ஏதோ என்னால முடிஞ்சது இலவசமா ஐடியாத்தான் கொடுக்க முடியும்..


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 19, 2008

அபியும் நானும்.. திரை விமர்சனம்


ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி மனசை அள்ளுற படம் பாத்து. கிட்டதட்ட ஒவ்வொரு அப்பாவும், அதிலேயும் பெண்ணை பெத்த அப்பாவா இருந்து, படம் பார்த்துட்டு அழலைன்னா, நான் என் பேர மாத்திக்கிறேன். பிள்ளைய பெத்த என்னையே கலக்கிருச்சுன்னா..

ஊட்டியில் ஒரு பார்கில் ஒரு பெண் குழந்தையுடன் வரும் பிருதிவிராஜிடம், தன் மகளை பற்றி சொல்வதாய் ஆரம்பிக்கிறது கதை.. என்ன ஒரு இயல்பான கதை சொல்லல் பாணி.. பிரகாஷ்ராஜ் ஒரு பெண்ணுக்கு தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார்.

சாதாரணமாய் பார்த்தால் எல்லா பெண்ணை பெற்ற அப்பனுக்கு நடக்கும் நிகழ்வுதானே எதற்காக இவ்வளவு எக்ஸாசிரேஷன் என்று கேட்பவர்கள், ப்ளீஸ்.. நீங்கள் வேறு படத்திற்கு போகவும்..

உளவியல் ரீதியாய் ஒரு தகப்பனுக்கும், மகளூக்கும் அவள் பிறந்ததிலிருந்து, அவனுக்கும், அவளுக்கும் நடக்கும் நிகழ்வுகளே படம்.. எவ்வளவு யதார்தமான காட்சிகள், பெண்ணை ஸ்கூல் சேர்க்க, இண்டர்வியூவுக்கு தயாராவதிலிருந்து, சீட் கிடைத்து, அவளை பள்ளிக்கு அனுப்பும் காட்சி, பின்னர் தன் பெண் ஒரு பிச்சைகாரனை வீட்டிற்கு கூட்டி வந்து அவனுக்கு வேலை போட்டு கொடுக்க சொல்ல, பெண் சொல்லிவிட்டாளே என்று பெயரே இல்லாத ஒருவனுக்கு ரவிசாஸ்திரி என்று பெயர் வைத்து வீட்டில் வேலை கொடுக்க, அவனை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு செல்கையில் அவன் கண்கலங்கி.. பேசும் காட்சி, என்று சொல்லி கொண்டே போகலாம்..

தன் மகளின் பதினைந்தாவது வயதில் I know what I do என்பதை கேட்கும் தகப்பனுக்கு எப்படியிருக்கும்?.. அவன் உணர்வு எப்படி இருக்கும் என்று உணர்ந்தவர்களுகே புரியும்.

திரிஷா.. அன்பான அப்பாவுக்கேற்ற அழகான, புத்திசாலித்தனமான பெண், குறையில்லாத நடிப்பு. அப்பா எப்போ சொன்னதை ஞாபகம் வைத்து கொண்டு, நட்ட நடு ஏரியில், அவருக்கு பர்த்டே விஷ் செய்து அவரை கத்த சொல்லும் காட்சி, யப்பா..

பிச்சைகாரனாய் வந்து வீட்டின் ஒருவனாய் மாறும் வெள்ளிதிரை முஸ்தபா வாழ்நாள் கேரக்டர், பல இடங்களில் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார்.

கணவணையும்,பெண்ணையும் புரிந்து கொண்டு இயல்பான அம்மா ஐஸ்வர்யா, க்ளைமாக்ஸ் காட்சிகளில் சூப்பர்ப்.

இந்த படத்தில் வரும் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம். செகண்ட் ஆப் கொஞ்சம் இயல்பை மீறின காட்சிகளும், கொஞ்சம் மெதுவாக போகும் போக்கையும் மீறி படம் முடிந்து வெளிவரும் போது கண்ணீரை துடைத்து கொண்டு, இந்நாள் வரை உங்களையே உணராத தகப்பனாய் இருந்திருந்தால்.. உங்கள் பெண்ணை தேடி கொண்டு போவீர்கள்..

அலட்டாத ஒளிப்பதிவு,அருமையான இசை, அதிராத எடிட்டிங், என்று பங்கு பெற்ற அத்துனை கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை செவ்வனே அளித்திருக்கிறார்கள்.

மிக இயல்பான நகைச்சுவையான வசனங்கள், யதார்தமான காட்சிகள் என்று நம் மனதை கொள்ளையடிக்கிறார். இயக்குனர் ராதாமோகன். ஹாட்ஸ் ஆப்.
வழக்கமாய் நான் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்கிற தலைப்பில் சில படங்களை பற்றி எழுதியிருக்கிறேன். இதோ அப்படி ஒரு படம் அபியும்.. நானும்.. வெளியே வந்த பின்பும், உங்கள் மனதை விட்டு அகலாத படம்.

படத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்கடி சொல்லும் வார்த்தை Life is beautiful. படம் பார்த்தபின் நானும் அதைத்தான் உணர்ந்தேன்.


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 18, 2008

சிலம்பாட்டம் - திரைவிமர்சனம்



மீண்டும் ஒரு பக்காவான ஃபார்முலா மசாலா படம். காளை படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவ்ந்திருக்கும் படம். முழுக்க, முழுக்க ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டருக்காக சிம்பு நிறையவே உழைத்திருக்கிறார்.

நன்றாக ஆடுகிறார்.. சண்டை போடுகிறார், அவ்வப்போது நடிக்கவும் முயற்சிக்கிறார், பழைய விரல் வித்தைகளை மீண்டும் எடுத்துவிடுகிறார், தனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்பதற்காகவே, தமிழ், தெலுங்கு, இந்தி என்று பேசுவதற்காக, ஒரு டுபாகூர் காட்சியமைத்து, அதில் பில்லா காஸ்டியூமில் வலம் வருகிறார்.

அம்மாஞ்சியாய் தன் தாத்தாவால், சாப்பாட்டில் கூட உப்பு, காரம் சேர்காமல் வளர்க்கபடும் பேரன் சிம்பு, எங்கே அவனுக்கு சுரணை வந்துவிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடுமோ என்று தாத்தா பயப்படுகிறார்.

அவரை சுற்றி, சுற்றி வளைய வரும் சனாகான்.. சும்மா சொல்ல கூடாது நல்ல பெங்களூர் தக்காளி மாதிரி பளபள், தள தளன்னு இருக்காங்க.. ம்ஹூம்..

அவரை ஏன் இப்படி வளர்கிறாருன்னு நமக்கு டென்சன் ஏறிக்கிட்டே இருக்கிறதா.. டைரக்டர் நினைச்சிகிட்டு இன்னும் ரெண்டு சீன் வச்சு நம்ம படுத்துறாரு. இதெல்லாம் நாங்க பாட்ஷாவிலேயே பாத்துட்டம்னு சொன்னாலும் புரியாது போலருக்கு. திடீருன்னு அம்மாஞ்சிக்கு வீரம் வந்து ஒரு சூப்பர் பைட் போட்டு நம்ம நிமிர்ந்து உட்காரவைக்கிறார். ஆனா அது பைட்டுக்கு மட்டும் இல்ல.. அப்பாடா ஒரு வழியா இண்டர்வெல் விடப் போறாங்கன்னு தெரிஞ்சு ரெடியாகறுத்துக்காக..

இப்படி போயிட்டிருந்த கதையில, ப்ளாஷ் பேக்கில், அம்மாஞ்சி விச்சுவின், அப்பா தமிழ் அதுவும் சிம்பு, வழக்கம் போல ஒரு தமிழன் பாட்டு பாடி சுயபுராணம் பாடிட்டி, இரண்டு குடும்பம், பகை, அதுல ப்ரச்சனை, என்று பரபரப்பாக போகிறது. அதில சிறுவனின் பழிவாங்குதல் அதிர்சியூட்டத்தான் செய்கிறது. அதில் இனிமையானது சிநேகா, சிம்பு, காதல் காட்சிகள், அந்த நடுஇரவும், ஓடுகிற டிரைனும், அந்த டனலும் அதை ஒளிப்பதிவு செய்த மதிக்கு பாராட்டுகள். இளையராஜாவின் குரலில் வரும் பாடல் சூப்பர்.

காமெடி என்கிற பெயரில் குசு, குண்டி போன்றவற்றை பேசி நம்மை இம்சை பண்ணும் சந்தானத்துக்கு அது காமெடியில்லை என்று யாராவது சொல்ல மாட்டார்களா..?

அதே போல் கருணாசின் காமெடி.. அவர் மைண்ட் வாய்ஸில் பேச என்னுவதை, உடனே மற்றவர்கள் பேசி முடிக்கும் காமெடி சூப்பர். மனுசன் அவ்வளவா பேசாமயே காமெடி பண்ணியிருக்காரு. ஆன இதுக்கு க்ரெடிட் டைரக்டரைதான் சாரும்..

படத்தின் மிகப் பெரிய பலம் யுவன், ஏற்கனவே ஹிட் சார்டில் பாடல்கள் எல்லாமே நி முந்தி, நான் முந்தின்னு போயிட்டுருக்கு. பிரபுவை இப்படி ஓரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நடிக்க வைக்கணும்னு ஏதாவது வேண்டுதலா..? தவிர்கலாமே.. பிரபுசார்..

சிம்பு தன்னை அடுத்த ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் வட்டத்துக்குள் வர ரொம்ப நாளாவே போராடுறாரு. பஞ்ச் டையலாக், மற்ற நடிகர்களை வச்சு துதி பாடறதுன்னு எல்லா வழக்கமான் விஷயங்களையும் படத்துல வச்சிருக்காங்க.. ஆனா ஒரு விஷயம் ரொம்ப சொதப்பல

சிலம்பாட்டம் - குத்தாட்டம்

படித்ததில் பிடித்தது
வேண்டுதல்

திரைப்படம் எடுக்கணும்
தொலைகாட்சி
தொடங்கணும்
பத்திரிகை நடத்தணும்,
பாராளுமன்றம் போகணும்
மந்திரியாகணும்
மாநிலம் ஆளணும்
கடவுளே! என்னை
அடுத்த ஜென்மத்திலாவது
முதல்வரின் பேரனாக்கு!

திரு. ஏ.பி.வள்ளியப்பன் குமுதத்தில் எழுதிய கவிதை.


Blogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 17, 2008

நிதர்சன கதைகள்- 2 "தேவர் மாப்பிள்ளை"

50,000 ஹிட்ஸ் நன்றி..நன்றி.. நன்றி

அகிலனை திரும்ப பார்ப்பேன் என்றே நினைக்கவில்லை. அகிலன் ஒரு காலத்தில் என்னுடய உதவியாளன். மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து சினிமா ஆசையால், சென்னைக்கு ரயிலேறி வந்தவன். எனக்கு காப்பிரைட் செய்வதற்காக ஆள் தேடிக் கொண்டிருந்தபோது என் நண்பரான ஒரு பிரபல எழுத்தாளர் அவர் கம்ப்யூட்டர் வாங்கிவிட்டதால் இவனை என்னிடம் அனுப்பி வைத்தார். நல்ல குண்டு குண்டான கையெழுத்து.. அதைவிட என் கற்பனையின் ஓட்டத்திற்கு நான் சொல்லும் விஷயங்களை அப்படியே படியெடுத்தது போல் எழுதிவிடுவான்.

அகிலன் கொஞ்ச நாளாய் கள் குடித்த நரி போல் இருந்தான். அவ்வப்போது என்னிடமிருந்து என்னுடய மொபைலை வாங்கி மிஸ் கால் கொடுத்து வெளியே போய் பேசுவான். பேசிவிட்டு வரும் பொழுது கண்ணெல்லாம் பல்பாய் வருவதை நான் பார்த்திருக்கிறேன். சரி பையன் எதிலோ மாட்டிகிட்டான் என்று முடிவு செய்து கொண்டேன். அதுக்கப்புறம் டிஸ்கஸனில் லவ் சீன் பேசினால் சும்மா உருகி, உருகி பேசுவான்.

நடுவில் ஒரு நாள் ஒரு வாரம் லீவு கேட்டு ஊருக்கு போய்விட்டு வந்தான். போய் வந்ததிலிருந்து அவன் சரியேயில்லை. ஒரு நாள் ராத்திரி ரொம்ப நேரமானதால் என்னுடய அறையிலேயே படுத்து கொள்ள சொன்னேன். நடு ராத்திரியில் ஏதோ கிசுகிசுவென குரல் கேட்டு என்வென்று பார்த்தால் அகிலன் என்னுடய போனில் பேசிக் கொண்டிருந்தான். குரலில் அழுகை..

“நா வேணும்னா.. உங்கப்பன் கால்ல விழுந்தாவது கெஞ்சட்டுமா..?”

“நாங்களூம் மனுசங்க தானே..?”

“வேற வழியேயில்லையா.. நி வேணும்னா ஊரைவிட்டு ஓடிவந்திட்றியா..?”

“கஷ்டமோ.. நஷ்டமோ.. உன்னை நான் ராணி மாதிரி வச்சிப்பேன்.”

“அய்யோ... சாவறதுக்கா... இவ்ளவு சொல்றேன்.?”

“சரி.. வச்சிர்றேன்.. யாரோ வர்றாங்க..”

என்று சொல்லியபடி போனை கட் செய்து திரும்பி என்னை பார்த்தான்.

“சாரி சார்.. உங்க போனை யூஸ் பண்ணிட்டேன்..” என்று தலைகுனிந்தபடி என்னிடம் போனை கொடுத்துவிட்டு நகர முற்பட, நான் அவனை தடுத்து..

“என்னடா அகிலா.. என்ன பிரச்சனை.?”

அகிலனுக்கு பிரச்சனை அவன் காதல்தான். தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த அவனுக்கும், தேவர் இனத்தை சேர்ந்த ஓரு பெண்ணுக்கும் காதல். அவர்கள் காதலிப்பது,பெண்ணின்
அம்மாவுக்கு தெரியும். இப்போது அப்பாவுக்கு தெரிந்துவிட்டது. தேவனுக்கு மானம்தான் முக்கியம்..என்று வெறிபிடித்தார் போல் பெரிய ப்ரச்சனை செய்து, அந்த பெண்ணை வெட்டி போட முயற்சித்திருக்கிறார்.

ஊருக்குள் காதல் பிரசச்னை தெரிந்து ஜாதி சண்டை வரை போய்விட்டது. வேறு வழியில்லாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டு ஓடி வந்துவிட்டான். இப்போது அந்த பெண் யாருக்கும் தெரியாமல் தினமும் அழுதபடி அர்த்தராத்திரியில் போன் செய்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு ஓடி வா என்றாலும் வர பயம்.. ஊருக்கு திரும்பவும் போனால் இவன் உயிரோடு திரும்ப முடியாது. ஒரே குழப்பமான நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகி, இரண்டு நாட்களில் திருமணம்..

“என்ன பண்ண போறே அகிலன்.?”

“தெரியல.. சார்.. அவ இல்லாம நா உயிரோட இருக்க மாட்டேன்.”

“போடா..முட்டாக்... சாவறதுக்கா லவ் பண்ணே..? எனக்கு தெரிந்த போலீஸ் ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். நான் வேணும்னா பேசட்டுமா..?”

அகிலன் அழுதபடி தலையாட்டியபடி

“அதெல்லாம் ஒண்ணும் வேலைக்காவாது சார்.. வெறிபிடிச்சவங்க.. என்று சொல்லிவிட்டு அழுதபடி வெளியே போனான்.

அதன் பிறகு அகிலன் துவண்டு விட்டான். ரெண்டு நாளாய் ஆளே வரவில்லை.அந்த பெண்ணின் கல்யாணத்தன்று, முட்ட, முட்ட குடித்துவிட்டு, திரும்ப திரும்ப “நாங்க.. என்ன தப்பு செஞ்சோம்.. நாங்க என்ன தப்பு செஞ்சோம்”னு புலம்பிகிட்டேயிருந்தான். எதாவது செய்துக்க போறான்னு பயந்து என் நண்பன் ஒருவனை அவன் ரூமிலேயே விட்டுட்டு போனேன். அவன் அசந்து இருக்கிற சந்தர்பத்தில பிளேடினால் கையை அறுத்து கொண்டான். நண்பன் உடனே பார்த்ததால் அவனை காப்பாற்ற முடிந்தது.

அதன் பிறகு அவன் இரண்டு முறை இதே போல் தற்கொலை முயற்சி செய்ய, அளவு கடந்த டிப்ரசனில் கொஞ்சம் மனநிலை பாதிக்க, அவனை சமாளிக்க முடியாமல், கூட துணையோடு ஊருக்கு கொண்டு போய் விட்டு வந்துவிட்டோம். அதன் பிறகு அவ்வப்போது ஊரிலிருந்து அவனின் அம்மா போன் செய்வார்கள்.. பின்பு அதுவும் நின்றுவிட்டது. இது நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. மறுபடியும் இப்போதுதான் அவனை பார்க்கிறேன்.

“என்ன அகிலன் .. எப்படி இருக்கே..?”

இப்போது கொஞ்சம் குண்டடித்திருந்தான்.

“நல்லா இருக்கேன் சார்.”

“என்ன பண்றே..?”

“ஒரு சீரியலுக்கு டயலாக் எழுதிகிட்டிருக்கேன் சார்..”

சினிமாவில் சாதிக்க வந்து விட்டு சர்வைவல் பிரச்சனையில் பல துடிப்பான் இளம் இயக்குனர்கள் செட்டிலாவது இங்கேதான்.

“அப்புறம்.. அம்மா எப்படி இருக்காங்க?”

“நல்லாயிருக்காங்க சார்.. ?”

அவனின் திருமணத்தை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்ற யோசித்தபடி

“அது சரி கல்யாணம் ஆயிருச்சா..?”

”கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிருச்சு.”

காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்தவன்.. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது எவ்வளவு நிதர்சனம்.

“வெரிகுட்.. வெரிகுட்.. யாரு பொண்ணு..?”

“அதே பொண்ணுதான் சார்.”

எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்சியாகவும் இருந்தது.. எப்படி அதே பெண். அவளுக்கு தான் ஏற்கனவே..

“என்ன சார்.. இப்படி ஸ்டன் ஆயீட்டீங்க.. அதே பொண்ணுதான் சார்.. அவளுக்கு அவங்க அப்பன் பார்த்து கட்டி வச்ச மாப்ளை கல்யாணமாகி ஒரு வருஷத்துல ஆக்ஸிடெண்டுல இறந்துட்டான்.. இத கேட்டதிலிருந்து நான் துடிச்சி போயிட்டேன்.திரும்பவும் போய் பொண்ணு கேட்டேன்.. மாட்டேன்னுதான் சொன்னாங்க..ரொம்ப கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சேன்.

“அந்த பொண்ணுக்காக செத்துரலாம்னு இருந்தவன் சார் நான், எல்லாரும் நான் ஏதோ பெரிய விஷயம் செஞ்சிட்டதா சொல்றாய்ங்க.. ஆனா நான் காதலிச்ச பொண்ணு வாழ்க்கையிழந்து நிக்கிறப்ப அவளுக்கு ஆதரவா இருக்கிறது எனக்கென்னவோ பெரிசா தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இப்போ மாசமா இருக்காங்க சார். அந்த ஊருல எல்லாரும் தேவரு மாப்ளன்னுதான் என்னை கூப்புடுறாய்ங்க.. ஒரு நாள் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும் சார்..” என்றான்.

அகிலனை பார்க்க பெருமையாய் இருந்தது.. இப்போ எங்கே போனது உன் ஜாதி மானம் என்று அந்த பெண்ணின் தகப்பனிடம் கேட்க தோன்றியது.

“கண்டிப்பா வரேன் அகிலன்..” என்றேன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

கொத்து பரோட்டா- 17/12/08- லக்கிலுக்கின் அறிவிப்பு, மெஸ், டக்கீலா, டாஸ்மாக்..

50,000 ஹிட்ஸ் நன்றி..நன்றி.. நன்றி
தஞ்சாவூர் மெஸ்
சென்னையில் நாக்குக்கு ருசியாய் சாப்பிட அலையும் பேச்சிலர் நண்பர்கள் ஓரு இடத்தை காட்டுகிறேன். மேற்கு மாம்பலத்தில் ‘தஞ்சாவூர் மெஸ்’ என்று ஓரு சிறிய மெஸ் இருக்கிறது. தோசையில் கொஞ்சமாச்சும் எண்ணை பசையுடன் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா..? இல்லையென்றால் காய்ந்து கருவாடாகாத தோசை சும்ம்ம்ம்ம்மா.. மொறு, மொறுன்னு.. கூடவே பொடி தோசையா கேட்டா.. இன்னும் சூப்பர்.. வழக்கமா எல்லா மெஸ்லேயும், பொடி தோசைன்னா.. நல்லா அரைச்ச மிளகாய் பொடியைத்தான் போடுவாங்க.. இங்க அய்யரு வீட்டு மிளகாய் பொடி கணக்கா.. சும்மா நறநறன்னு பல்லுல இடறுற மாதிரி பொடி.. அதிலேயும் நெய் பொடின்னா கேட்கவே வேணாம்.
அதே போல மத்யான சாப்பாட்டுல வத்தகுழம்பு.. ம்ம்ம்ம்ம்..
தஞ்சாவூர் மெஸ் அட்ரஸ்:36/15, சுப்பாரெட்டி தெரு,மேற்கு மாம்பலம்.


டக்கீலா..

ரொம்ப நாளாகவே.. அந்த சரக்கை அடித்து பார்க்க வேண்டும் என்று ஓரே ஆசை.. அது ரெண்டு நாளைக்கு முன்புதான் நிறைவேறியது.. டி.சி.மேனரில் உள்ள “Bunker’s” பப்பில் அடித்தேன்.. ஏற்கனவே ஓரு பிக்சர் டிராட் பீர் அடித்த பின்பு.. வேறு எதையாவது அடிக்கலாம்னு யோசிச்சப்ப மெனுகார்டில் டக்கீலாவை பார்த்தேன்.. அதை பார்த்ததும்.. ஷகீலாவை .... பார்த்தவன் போல் உற்சாகமாகி.. ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன்.. ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன்.. ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான்.. எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது.. ’அப்படியே சாப்டணும்னு’ என் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல.. ஒரே ஷாட்டில் அடித்தேன்..

நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கிய சரக்கு.. உடனடியாய் கீழே போய் ஓரு தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று எழும்ப, உடனடியாய்.. உப்பை எலுமிச்சையில் தோய்த்து.. நாக்கில் வைத்து தேய்க்க.. சூப்பர்..

டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்.. (ஒரிஜினல் டக்கீலாவின் படம் கிடைக்காததால்..ஹி..ஹி..ஹி..)

டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியர்கள் வருகிற 26ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த போகிறார்களாம். அவர்களுக்கு 8 மணி வேலை நேரமும், பணி நிரந்தரமும் வார விடுமுறைகளும் தேவை, என்பதற்காக, இந்த வேலை நிறுத்த போராட்டம்.

பணி நிரந்தரம் இல்லாமயே.. M.R,P யை விட அநியாய விலைக்கு இவர்கள் லாபம் சம்பாதித்து கொண்டிருப்பவர்கள், அதை தட்டி கேட்டால்.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ என்பவர்கள்.. இன்னும் பணி நிரந்த்ரம் செய்ய் பட்டுவிட்டால் அவ்வளவு தான். அவர்கள் சொன்னது தான் சட்டமாகிவிடும்.

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகம் வைத்து விற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது மினிமம் ஐந்து ரூபாய் பீருக்கும், இரண்டிலிருந்து, ஐந்து ரூபாய் வரை மற்ற ஹாட் சரக்குக்கும் என்று பிக்ஸ் செய்து விட்டார்கள்.. இவர்களை கேட்க ஆளேயில்லையா..?

லக்கிலுக்கின் அறிவிப்பு
நண்பர் லக்கிலுக் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். நாட்டு மக்களூக்கு ஒரு முக்கியமான செய்தியை பாஸ் செய்ய சொல்லி.. அது என்னன்னா..?? (எத்தனை “ன்”?)

2009 வ்ருடத்திய டாஸ்மாக் விடுமுறை நாட்கள்.

ஜனவரி 26 &30,
மார்ச் 22
மே 1
ஆகஸ்ட் 15
செப்டம்பர் 3,14
அக்டோபர் 2,8
நவம்பர் 9

அதனால ப்ளான் பண்ணி தண்ணியடிக்கவும் என்று நம் சக டமாரு கொமாருகளூக்கும், பாரு நிவேதிதாக்களுக்கும், காண்டு கஜேந்திரன்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் சொல்ல சொன்னார். சொல்லிட்டேன் தல..

என்னது இது இந்த கொத்துபரோட்டா பூராவும் ஒரே மப்பா இருக்கு..?

அது ஒண்ணுமில்லை உங்க ஆதரவோட நம்ம பதிவு 50,000 ஹிட்ஸை தொடப்போகுது.. அதுவும் கடந்த ஐந்து மாதமாத்தான் தொடர்ந்து எழுதிகிட்டிருக்கேன். அந்த கொண்டாட்டம்தானோ..? நன்றியெல்லாம் 50,000 வந்த பிறகு..




Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 16, 2008

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.


இருக்கிற கெட்டவர்களையெல்லாம் சட்டத்தின் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அவர்களை விடுதலை செய்து, பின்பு அவர்களை கொல்கிறார் கதாநாயகன் எல்.கே. அவனின் பேருக்கு விளக்கமாய் Licence to Kill என்று சொல்லபடுகிறது.

ஏற்கனவே மலையாளத்தில் வந்து சக்கை போடு போட்ட “சிந்தாமணி கொலை கேஸ்” என்கிற படத்தின் தமிழாக்கம்தான். மளையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் ஓரு புதுமுகம்.. பார்பதற்கு இவரும் ஆஜானுபாகுவாய்.. மலையாள ஹீரோ போலவே இருக்கிறார். என்ன நடிக்கத்தான் வர மாட்டேன்கிறது.. எப்போது பார்த்தாலும் க்ளோசப் காட்சிகளில் எதிரே யாரோ சிரிப்பு காட்டி கொண்டிருப்பதை அடக்கி கொண்டு சீரியஸாய் பார்பது போலிருக்கிறது.. கொஞ்சம் உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள்.. அவர் எப்படி இருப்பார் என்று புரியும்..

சிந்தாமணி என்கிற ஓரு ஏழை பெண் மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் சீட் கிடைத்து வருகிறாள். அங்கே காலேஜில் இருக்கும் ஸ்பைஸ்கேர்ள் என்று அழைக்கபடும் 9 பெண்கள் அவரை ராகிங் செய்து.. நம்ம ஊர் நாவரசன் போல் துண்டு துண்டாய் அறுத்து கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எல்.கே எவ்வாறு வெளி கொண்டு வருகிறான். அந்த ஒன்பது பெண்களையும் கொன்றானா..? உண்மையான குற்றவாளி யார்..? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

படத்திற்கு தேவையேயில்லாத வடிவேலுவின் காமெடி ட்ராக்.. பார்ட்டிக்கும் சரக்கு குறஞ்சிருச்சோ.. ஹீரோவின் கேரக்டரை சொல்கிறேன் பேர்விழி என்று ஓவர் பில்டப் செய்தற்க்கு பதிலாய் நேராக சிந்தாமணி விசயத்துக்கு வந்திருந்தால் இன்னும் கிரிஸ்பாக படம் இருந்திருக்கும். புது ஹீரோவுக்கு இவ்வளவு பில்டப் அவசியமா..?

என்ன செய்வது பணம் போடுவது அவர்.. படத்துல டுயட், காதல்னு தான் எதுவும் இல்ல.. இது கூட இல்லைன்னா எப்படி.? வடிவேலுவின் காமெடியை விட, கொலை செய்ய போகும் பொது கூட வக்கீல் கோட்டை போட்டு கொண்டு போகும் எல்.கே.. படு காமெடி.

இராஜ ரத்தினத்தின் கேமரா துல்லியம்.. பிண்ணனி இசை ஆங்காங்கே பரபரப்பு, பல இடங்களில் டிவி சீரியல்.. படத்தில் சுகன்யா, மணிவண்ணன், சங்கிலி முருகன், ஆஷிஷ்வித்யார்தி, நாசர், ரகுவரன் என்று நடிகர்கள் கூட்டம் ஏகப்பட்டதாய் இருக்கிறது. யாரும் மனதில் நிற்கவில்லை.. மனோஜ் கே.ஜெயன் மட்டும் பரவாயில்லை.

பிரபாகரின் வசனம் பல இடங்களில் மலையாளத்திலிருந்து டிரான்ஸுலேஷன் செய்தது போல் இருக்கிறது.. ஒரே கொழ.. கொழ.. இயக்குனர் ஷாஜி கைலாஷ் போன்ற சிறந்த டெக்னிஷியன்களின் தயவால்.. இன்னொரு ஜே.கே.ரித்தீஷ் ஆக வேண்டிய ஆர்.கே.. மயிரிழையில் தப்பியிருக்கிறார்.

எல்லாம் அவன் செயல்..



Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 15, 2008

சாரு நிவேதிதாவின் “ராஸலீலா”


சாருவின் பேரை சொன்னாலே பல பேருக்கு கோபம் வருகிறது.. வக்கிரம் பிடித்தவன், ஆபாசமாய் எழுதுபவன், திமிர் பிடித்தவன் என்று பல பேர் பல விதமாய் கூறுகிறார்கள்..

எனக்கு சாருவை கோணல் பக்கங்கள் மூலமாய்தான் அறிமுகம். பல முறை புத்தக கண்காட்சிகளில் அவரது 0 டிகிரி நாவலை வாங்க எடுத்து வைத்து பின்பு ஏனோ வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு அவரது இணைய பக்கத்தின் மூலம் தொடர்ந்தேன்.

சமீபத்தில்தான் அவரது ராஸ்லீலா புத்தகம் என்னுடய நண்பர் ராஜ் மூலமாய் கிடைத்தது. இதுவரை நாவல் என்ற ஓரு கட்டத்துக்குள் எழுதப்பட்ட பல விஷயங்களை கட்டுடைத்திருக்கிறார். சாரு..

கண்ணாயிரம் பெருமாள் என்கிற கேரக்டர் மூலமாய் ஓரு மனிதனின் வாழ்க்கையில் அவன் காணும், அனுபவிக்கும் பல விஷயங்களின் தொகுப்பை நீங்கள் நாவல் என்று எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால், கட்டுரை தொட்ராய் எடுத்து கொள்ளுங்கள்.. ஒரு முறை படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டீர்கள்..

உலகத்தில் மிக போதையான விஷயம் எதுவென்று தெரியுமா..? குடி, சிகரெட், பெண், அபின், கஞ்சா, இன்னும் எத்தனையோ.. அதையெல்லாம் விட போதையானது சாருவின் “ராஸலீலா”. கட்ந்த ஓரு வாரமாய் 655 பக்க நாவலை, நானும் எனது நண்பரும் விடாமல் போட்டி போட்டு கொண்டு எங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து படித்து முடித்தோம்.. ராஜ போதை.

போதை என்று வந்த பிறகு நல்லது, கெட்டது என்று பாகுபடுத்த முடியாது. அதுபோலத்தான் சாருவின் எழுத்தும், சிலபல இடங்களில் ‘சரோஜாதேவியை’ மிஞ்சும் பக்கங்கள், இன்னும் சில இடங்களில் கொஞ்சம் அருவருப்பும் தரக்கூடிய விஷயங்கள் இருந்தாலும், பல இடங்களில் ஒரு அருமையான நண்பனை போல நம் கூடவே பேசிக் கொண்டிருக்கிறார்.

வாழ்வில் வெகு ஜனங்கள் அவ்வளவாக சந்திக்காத, அல்லது கவனிக்காத மனிதர்கள், வித்யாசமான கேரக்டர்கள், பெங்குலா, மணி, திவ்யா, பெளசியா, என்று உணர்வுகளின் உச்சபட்சமான கேரக்டர்கள்.

அவர் லா மெரிடியன், பாஷா, போன்ற பார்கள், டிஸ்கோ,தாய்லாந்து பற்றி எழுதியிருக்கும் விஷயங்களை,அங்கே சென்றவர்களிடம் கேட்டு பாருங்கள் அவரின் எழுத்தின் உண்மை புரியும்.. எவ்வளவு ஆழமான, தீர்கமான அப்சர்வேஷன்.

இரண்டு நாட்களுக்கு முன் போஸ்ட் ஆபீசுக்கு போக நேர்தது. அங்கிருந்த பணம் கட்டும் க்யூவில் நின்றபடி எதையோ யோசிக்க ஆரம்பிக்க, சாருவின் ‘ராஸலீலை’யில் வரும் போஸ்டாபீஸ் கேரக்டர்களை தேட ஆரம்பித்தேன். அதுதான் அவரது எழுத்தின் வெற்றி.

சாருநிவேதிதாவின் “ராஸலீலா” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்



Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 14, 2008

Rab Ne Bana di Jodi - Review


படம் ஆரம்பித்ததும், அம்ரிஸ்டரின் தங்க கோயிலையும், அம்ரிஸ்ட்ரின் தெருக்களையும், காட்டும் போது, சரி எதையோ காட்ட போகிறார்கள் என்று நிமிர்ந்து உட்கார தோன்றுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் ஓரு சாதாரண “ஆம் ஆத்மியாய்” தன் அழகான மனைவியோடு இறங்க.. ஓரு பெரிய வீட்டின் முன் தானே உள்ளே சென்று ஓரு மணமகளை வரவேற்க்கும், சாங்கியங்களை செய்து அவளை வரவேற்று, அவளுக்கு கீழே ஓரு அறையை ஓதுக்கி, மேலே கண்டா முண்டா சாமான்கள் அறையை பயன் படுத்தும் ஷாருக்கானை பார்த்ததும், இன்னும் நிமிர்ந்து உட்கார, ஓரு சாதாரண ஸ்மார்ட் இல்லாத ஒருவன் எப்படி இவ்வளவு அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்தான் என்று ஃபளாஷ் பேக் ஆரம்பித்ததும், தொய்ய ஆரம்பிக்கிறது.

தன்னுடய் புரபஸ்ரின் மகளான தானியாவின் திருமணத்துக்கு போயிருக்கும், சுரீந்தர் சகாய் (ஷாருக்), அங்கே தானியாவை பார்த்து பிரம்மித்து நிற்க, அவருக்கு வர இருக்கும் மணமகன் ஓரு விபத்தில் இறந்து போக, புரபஸர் தன் மகள் தானியாவை, ஷாருக்குக்கு கைபிடித்து கொடுத்து விட்டு, இறந்து விடுகிறார். பின்பு ஷாருக் தானியாவை மணந்து அம்ரிஸ்டர் திரும்புகிறார். தன்னை விருப்பமில்லாமல் திருமணம் செய்த மனைவியின் அன்பை பெற, மிகவும் யூத்புல்லான ஓரு இளைஞனாக மாறி, தானியா விரும்பிய சூப்பர் டான்ஸ் ஜோடி போட்டியில் அவருக்கு ஜோடியாய் சேரும் அளவிற்கு மாறிவிடுகிறார். ஓரு கட்டத்தில் தானியாவுக்கு ஒரே குழப்பம், தான் விரும்புவது ராஜ் யையா அல்லது சுரீந்தரையா..? என்று. முடிவு எல்லோரும் எதிர்பார்த்த முடிவே.

கொட்டுகிற மழையில் நினைந்தபடி, பைக்கில் வரும் ராஜூம், தான்யாவும்,அந்த நிமிடங்களை சந்தோஷமாய் கழிக்க, அதே ராஜ், சுரீந்தராக வரும் போது மழையை பார்த்தபடி நிற்கும் தானியாவிடம், ஜன்னல் கதவை சாத்திக்கோ.. இல்லேன்னா தண்ணி உள்ளே வந்து தரையை நினைச்சிடும் என்னும் காட்சியில் இருவரது ரியாக்‌ஷன்களும் அருமை.

சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு ஆதித்யா சோப்ரா இயக்கியிருக்கும் படம், கடைசியாய் அவர் இயக்கிய படம் “மொகப்தியான்’. மீண்டும் ஓரு தில்வாலே தில்ஹனியா லே ஜாயேங்கே.. வாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வருபவர்களுக்கு ஏமாற்ற்மே மிஞ்சும்..

ஒரு பெண்ணிற்கு மீசை இல்லாவிட்டால் தன் கணவனை அடையாளம் தெரியாது என்பதை நீங்கள் ஏற்று கொண்டால், உங்களால் கொஞ்சமாவது ரசிக்க முடியும். ஆங்காங்கே சிற்சில காட்சிகள் நம் மனதை கொள்ளையடித்தாலும், ஓன்றுமேயில்லாத திரைக்கதையில் மூணு மணி நேரம் வெறும் ஷாருக்கானையும், எப்போது பார்த்தாலும் ’க்ளிவேஜை’ காட்டியபடி நம்மை கட்டிப்போடும் அனுஷ்கா சர்மாவை எவ்வளவு நேரம்தான் பார்பது. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.. ஹி..ஹி.ஹி

படம் முழுவதும் ஷாருக் மிக அழகான சின்ன, சின்ன,ரியாக்‌ஷன்களில் சுரீந்தராக அழகான நடிப்பு, அதே சமயம் ஆர்பாட்டமான, காமெடி கலந்த பாடி லேங்குவேஜில் ராஜ் ஆக நடிக்கும் போது அவர் அலட்டும் அலட்டல் இருக்கிறதே.. சூப்பர். வழக்கபடி வினய் பதக் கலக்குகிறார்.

சலீம்- சுலைமானின் இசையில் “ஹோலே..ஹோலே’ என்ற பாடல் மட்டுமே ஹிட் ரகம். பிண்ணனி இசை பரவாயில்லை. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு கதையை மீறாமல் இயல்பாய் இருக்கிறது. அதிலும் அந்த பொற்கோயிலின் வெளிப்புறமும், அம்ரிஸ்டரின் வீதிகளும் அற்புதம். மேக்கப் துறை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஓரு அழகான விக்கை ஷாருக்கானுக்கு ரெடி பண்ண முடியவில்லையோ..?

வெறும் ஷாருக்கானை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்..



Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 12, 2008

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்


ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓரு பாரதிராஜாவின் படம்.. வழக்கமான கிராமம் இல்லை, தேவதைகள் இல்லை.. இது ஓரு திரில்லர் படம். அதிலும் சினிமா உலகத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.. என்று பலமாய் எதிர்பார்த்து உட்கார்ந்தால்..

புகழின் உச்சியில் இருக்கும் டைரக்டர் ராணா.. அவர் ஓரு எக்ஸென்டிரிக். என்று எல்லாராலும், ஏன் அவரின் மனைவியினாலேயே சொல்லப்படுபவர்.. அவரின் படப்பிடிப்புகளின் நடுவில் நடக்கும் கொலைகள், அதை கண்டுபிடிக்க வரும் சி.பி.ஐ அபிசர் அர்ஜுன். அவரின் காதலி கவிதாயினி அனிதா. ராணாவின் புது கதாநாயகி திரிஷ்னா.. இவர்களை சுற்றி வரும் திரைக்கதை..

படம் ஆரம்பத்திலிருந்து ஜம்ப் கட்டில் கதை சொல்லும் முறையில் பாரதிராஜாவின் இளமை தெரிகிறது.. ஏனோ தெரியவில்லை.. சினிமா இயக்குனர்களின் கதை என்றாலே ஏதோ அவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போல, படத்தின் இயக்குனர்கள் ஃபீல் பண்ணுவது, தங்களுக்கு கிடைக்காத அதிகாரத்தை அட்லீஸ்ட் படத்திலாவது காட்டிக் கொள்வோமே என்ற ஆசையோ..

நானா படேகர் நன்றாக நடித்துள்ளார் என்று சொன்னால்.. சூரியனுக்கே டார்ச் அடித்த மாதிரி.. ஆனால் அவர் இந்த படத்தில் அப்படி என்ன நடித்துவிட்டார் என்று கேட்டால்.. சொல்வதற்கு ஒன்றுமில்லை.. அர்ஜூன் கேரக்டரும் அது போலத்தான் பெரிதாய் அலட்டி கொள்ளாமல் நடித்திருக்கிறார்.. திரைக்கதையில் அவரின் கேரக்டருக்கு தேவையான அழுத்தம் கொடுத்திருந்தாலும் ஏனோ தெரியவில்லை. மனதில் ஒட்டவில்லை..

படம் முழுவதும் இந்தியில் எடுக்கப்பட்டிருக்கிறது.. அதனாலோ என்னவோ.. நிறைய இடங்களில் பேசுபவர்களின் லிப் சின்க் இல்லாமல் இருக்கிறது. படத்தின் கதையை சொன்னால் அது படம் பார்பவர்களை பாதிக்கும் என்பதால்... நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹிமேஷ் ரேஷ்மையாவின் இசையில் ”செக்..செக்’ என்ற பாடல் பரவாயில்லை ரகம்.. கண்ணனின் கேமராவும் ஓகே. பிண்ணனி இசை மாண்டி.. நன்றாக இருக்கிறது. படத்தில் பல இடங்களில் அபத்தமான காட்சிகள் இருக்கிறது. அர்ஜூன் காதலியாய் வருபவர் ஏற்கனவே லிப் சின்க் இல்லாமல் பேச, பல இடங்களில் கண்களீல் வழியும் கண்ணீருடன், அவர் அழுகிறாரா, அல்லது சிரிக்கிறாரா என்று ஓரே குழப்பம்.. கதாநாயகிகளை நடிக்க வைத்த பாரதிராஜாவா.. இவர்களை இயக்கியிருக்கிறார். ரஞ்சிதா..அம்சமாய் இருக்கிறார்.. நன்றாகவும் நடித்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், ஓரு வித்யாசமான ஓரு திரில்லரை பார்த்திருக்க முடியும்..

பொம்மலாட்டம் - கார்டூன்



Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 10, 2008

கலைஞர் அரசின் சாதனைகள்


கடந்த அதிமுக அரசை விட தற்போது ஆட்சி நடத்தும் திமுக அரசு சாதனைகளை மட்டுமே செய்து வருகிறது.. என்கிறார்கள் திமுகவினரும், திமுக தலைவர்களூம், சரி என்று யோசித்து பொதுமக்களில் ஓருவனாகிய நான் அவரின் சாதனைகளை பட்டியலிட முயல்கிறேன்.

1 ஓரு ரூபாய்க்கு அரிசி

நிச்சயமாய் இது ஓரு சாதனைதான்.. அதிலும் நல்ல குவாலிடி அரிசி கொடுக்கிறார்கள். அதற்காக 25 ரூபாய் கொடுத்து வாங்கும் அரிசியை கம்பேர் செய்ய கூடாது.. நான் உபயோகிக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இதனால் எதிர்கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது நிச்சயமாய் திமுக அரசின் சாதனையே..

2. இலவச டிவி

இதுவும் நிச்சயமாய் சாதனையே.. நல்லதோ கெட்டதோ.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறார் கலைஞர். என்ன டிவியை வாங்கி 1500 முதல் 2000 வரை வாங்கிய சூட்டோடு விற்கபடுகிறது. இப்படி விற்கப்படுவதால் அதிகம் பலனடைந்தவர்கள் மேன்ச்னில் வசிக்கும் இளைஞர்கள். ஆளுக்கு 400-500 போட்டால் ஒரு கலர்டிவி கிடைத்துவிடுவதால்.. டிவிடியில் கில்மா படங்கள் அமோக விற்பனையாம்..

3 ரேசனில் சமையல் பொருட்கள்

இதுவும் நல்ல முயற்சியே..அதிலும் விஜயகாந்த் போன்ற சிறு தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் குறைந்த விலையில் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
பாராட்ட பட வேண்டிய விஷயம்.

4 டாஸ்மாக்

சென்ற ஆட்சியினால் தற்போதைய அரசுக்கு வைத்த ஆப்பு.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருப்பதால். தலைவர் ஆட்சிக்கு வந்தும் அதை தனியார் வசம் எடுக்க முடியவில்லை.. இந்த விஷயத்தில் தலைவருக்கு தோல்வியே என்றாலும். அரசுக்கு மிகப் பெரிய வருமானம் இதிலிருந்து தான் வருகிறது.

என்ன சென்ற ஆட்சியில் பாட்டிலில் போட்டிருக்கும் விலைக்கே வாங்கினோம்.. இப்போது எல்லாம் அவர்கள் சொல்கிற விலையில் வாங்க வேண்டியிருக்குது. எதாவது கேட்டால், உன்னால முடிஞ்சத பாத்துக்க என்கிறார்கள். அந்த அளவுக்கு தான் தமிழக அரசின் சட்டம்.. எல்லாம் கட்டிங் செயல்..

5 மக்கள் சேவையில் துரிதம்

ஆம் சன் டிவிக்கு இவர்களுக்கும் பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு தங்கள் அரசின் செய்திகள் இருட்டடிப்பு செய்ய பட்டுவிடும் என்கிற காரணத்தால்.. மக்கள் சேவைக்காக ஆரம்பிக்க பட்ட கலைஞர் டிவி ஓரே வருடத்தி இரண்டாவது இடத்தை பிடிக்க, இதை மக்கள் சேவையில் துரிதம் என்பதை விட எப்படி சொல்வதாம்?

6 தமிழில் பேர் வைத்தால் வரிவிலக்கு

இப்படி பட்ட சலுகைகளை அறிவித்து.. தமிழிலேயே விளக்கம் சொன்னால்தான் அர்த்தம் தெரியும் பெயர்களை வைத்து இம்சை செய்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபமே தவிர அரசுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை.. இதனால் நஷ்டம் அடைந்தது.. யாரென்றால் கமர்சியல் டேக்ஸ் ஆபிசர்ஸ்கள்தான். பின்னே வாரத்துக்கு நாலாயிரமும், ஸ்பெஷல கட்டிங் 2500 யாருக்கு லாஸ்..

7 சினிமா தியேட்டர்களில் குறைந்த அனுமதி கட்டணம்.

சினிமா தியேட்டரிகளில் மல்டிப்ளக்ஸ் எனப்படும் தியேட்டர்களில் அதிக பட்சமாய் 120க்கும், மற்ற தியேட்டர்க்ளில் அதிகப்படியாய் 50 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று அரசின் சட்டம் சொல்கிறது.. ஆனால் சிங்களில் தியேட்டர்களில் கூட புது படத்துக்கு குறைந்த பட்சம்..70 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கிடையாது. இதற்கும் டி.சி.டி.ஓவிற்கு கட்டிங் போகும்.

8 சட்டம் ஓழுங்கு..

அது மிக சரியாய் இயங்குவதாய் சொல்கிறார்கள். மேலே சொன்ன டாஸ்மாக் கடை ஆட்கள் தன் உதாரணம்.. அரசியல்வாதிகளின் ஆதரவில் பல கடைகளில் பார் நடத்துவதால், மேலே கேட்டால் ரவுடியிசமும், அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை.. சென்னையில் ச்ட்டம் ஓழுங்கு மிக அருமையாய் இருக்கிறது.


9 தொடர் மின்வெட்டு

இதற்கு நமது அரசு பொறுப்பாகாது.. ஏனென்றால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகமாய் மின்வெட்டு இருப்பதால்.. அவர்களை விட சத்விகித முறையில் நம் கழக் ஆட்சியில் குறைவாகவே மின்வெட்டு என்பதே உண்மை (ஆற்காடு பாராட்டுவாராக)

10 ரவுண்டாய் செட்டில்மெண்ட்

பேரன்கள் ரவுண்டாய் கொடுக்காத காரணத்தினால், தன் பிள்ளையை வைத்து ஓரு ஆட்டம் ஆடி வாங்க வேண்டியதை ரவுண்டாய் வாங்கி விட்ட காரணத்தினால்.. தலைவரின் அடுத்த வேளை சோத்துக்கு பஞ்சம் வராது என்பதே இன்னுமொரு அருமையான விஷயம்.

ஏதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்களை தொகுத்திருக்கிறேன். நீங்க யார் வேணும்னா தொடங்கலாம். அவங்களுக்கே தெரியாம ஏதாவது சாதனை செஞ்சி விட்டு போயிருந்துச்சுன்னா, நாம எடுத்து கொடுத்தாப்ல இருக்குமுல்ல..

என் சாதனைகள்


நான் எழுதிய மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்திற்கு மகேஷ், சரண்யா தியேட்டரில் மற்றும் சிலர் என்று எழுதியிருந்தேன்..

இந்த வார குமுதத்தில் அவர்களும் அந்த பட விமர்சனத்திற்கு மகேஷ், சரண்யா மற்றும் பலர்.. தியேட்டரில் சிலர் என்று எழுதியிருந்தார்கள்.

என்னவோப்பா.. நாமளூம் குமுதம் லெவலுக்காவது யோசிக்கிறதே பெரும் சாதனை தானே..?
என்ன சொல்றீங்க..?

விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்


Blogger Tips -முத்தம் - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,



உங்க ஓட்டை தமிலிஷ்லையும், தமிழ் மணத்துலேயும் குத்திட்டு போங்க..

கொத்து பரோட்டா..10/12/09 - சாரு நிவேதிதா, தீவிரவாதிகள் , பூ


என் நண்பன் ஓருவன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை மிகுதியாய் உள்ளவர். அவன் ஓரு முறை எனக்கு போன் செய்து அர்ஜெண்டாய் ஓரு லெதர் ஸ்பெஷலிஸ்டை பார்க்க வேண்டும் என்றும் தன் தங்கையின் கணவர் வேறு ஊரிலிருந்து கிளம்பிவிட்டதாகவும் சொன்னார்.

எனக்கு ஓன்றும் புரியவில்லை..

”எதுக்குடா.. லெதர் ஸ்பெஷலிஸ்ட்..?”
என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதிலை கேட்டு சிரி..சிரி என்று சிரித்தேன்..

அவன் கேட்டது ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்..
*******************************************************************

அதே நண்பன் இன்னொரு நாள் ரெயில்வே டிக்கெட் நிலவரம் பற்றி எப்படி கேட்பது என்று என்னிடம் கேட்டான்.

‘அதில ஓரு கால் செண்டர் நம்பர் இருக்கும், அதில டயல் செஞ்சா, அவங்களே ஆட்டமேடிக்கு வாய்ஸ் உன்னை வழிநடத்தும்னு அதுக்கு அப்புறம் ஓரு “பீப்” சத்தம் வரும் உன் டிக்கெட் நம்பரை போட்டா.. நிலவரத்தை சொல்லும்னு சொன்னேன்.

உடனே பக்கதிலிருந்த போனை எடுத்து டயல் செய்ய ஆரம்பித்தான்.. அப்போது என்னக்கு போன் வந்ததால் நான் பேசிவிட்டு திரும்பிய போதும் அவன் போனை காதில் வைத்திருந்தான்

‘என்னடா தெரிஞ்சுதா..?

”நி சொன்னா மாதிரி ஓரு பொண்ணு பேசிச்சு.. ஆனா பீப் சத்தம்தான் வரல.. “

“என்னடா சொல்றே.. “

“ஆமாடா.. பீப் சத்தம்னா ”மா’ன்னு தானே சத்தம் வரும். அது வரல என்றான்.

***************************************************************************

பூ படத்திற்கான ஓட்டெடுப்பில்

கவிதை என்று - 28 பேரும்
ஓகே என்று - 7 பேரும்
ஸ்லோ என்று - 8 பேரும்
கல்யாணமான பெண்ணின் காதல் பிடிக்கவில்லை என்று -9 பேரும் சொல்லியிருக்கிறார்கள்.

நான் ஆணாதிக்கம் பதிவு எழுதுவதற்கு முன்னால் நான்காவது பதிலுக்கு ஓட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.. ஆனால் அதற்கு பிறகு ஓட்டுகள் விழவில்லை.. நான் அந்த பதிவை ஒட்டெடுப்புக்கு பிறகு எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்ன இருந்து என்ன.. நான் கேள்விபட்ட வரை பூ சென்னை போன்ற நகரங்களை தவிர பெரிதாய் மலரவில்லை..

****************************************************************************

நமது பதிவுலகில் சில இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகளில். மும்பை பிரச்சனையில் தீவிரவாதிகள் இந்துக்கள் என்ற ஓரு பிரசாரத்தை சொல்லிவருகிறார்கள். சமீபத்தில் ஓரு பதிவில் அவர்கள் இஸ்லாமியர்கள் தான் ஆனால் அவர்களின் தாய் தந்தையர் இந்துக்கள் என்றிருக்கிறார்கள்.. இவ்வளவு தூரம் அவர்களின் குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள்.. தாக்குதலுக்கு முன்போ.. அல்லது இப்பவோ.. நமது அரசுக்குகோ.. அல்லது பாகிஸ்தானுக்கோ செய்திகளை கொடுத்தால். பாவம் ”இந்து’ தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாமிய மக்களின் உதவியில் இந்தியாவை காப்பாற்றிய புண்ணியம் உங்களை வந்தடையும்.. இன்ஷா அல்லா..

********************************************************************************

சமிப நாட்களாய் நான் சாருநிவேதிதாவின் ‘ராஸலீலை’ படித்து வருகிறேன். பல தரபட்ட உணர்வுகளை என்னுள் எழச் செய்கிறார் சாரு.. இதற்கு முன்னால் அவரின் கோணல் பக்கங்கள் படித்திருக்கிறேன்.. அதில் அவரின் துணிச்சலும், சில சமயம் தெரியும் அபத்ததையும் மீறி ஓரு சிறந்த எழுத்தாளர் தெரிகிறார். புத்தகத்தை பற்றி முடித்தவுடன்..

*****************************************************************************

Dec 8, 2008

சாமிடா.. திரை விமர்சனம்


சாமிடா.. பேப்பரில் வந்த விளம்பரங்களை பார்த்து, ஏதோ காசியில் முழுக்க, முழுக்க, எடுத்த படம் என்கிறார்களே.. வித்யாசமான கதை இருக்கும் என்று எதிர்பார்த்து போகும் ரசிக கண்மணிகளூக்கு ஓர் எச்சரிக்கை. இது சாதாரண ரவுடி கேங்வார் கதை. அதற்கு தேவையில்லாமல் காசி சாயம் பூசியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பத்தில் ஓரு மகா குண்டு அம்மா ஒருவரை சிறையிலிருந்து விடுதலை செய்கிறார்கள் வாரணாசி ஜெயிலிலிருந்து.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது ப்ளாஷ்பேக்.. 12 வயதான பெண், சிகப்புவிளக்கு ஏரியா, விபசாரம், நாயக்கருக்கு பதிலாய் முதலியாரின் பையன், எதிர் கும்பலின் சதி, அதனால் கணவன் மரணம், வழியில் தமிழ் சிறுவனை பார்த்து அவனை மகனாய் ஏற்று கொள்வது, அவன் வளர்ந்து வலது கரமாவது.. என்று ஏற்கனவே நாயகன் படத்தில் பார்த்த காட்சிகளை.. சுறுக்கி ஓரு ஓப்பனிங். அதற்கு அப்புறம் வழக்கமான ரவுடி, அவனின் காதல், ரவுடியிஸத்தை விட சொல்வது, என்று எல்லாமே வழக்கமாய். வித்யாசமாய் க்ளைமாக்ஸ் வைக்கிறேன் பேர்விழி என்று தேவையேயில்லாமல் செட் போட்ட மலைக் கோயிலிலிருந்து கதாநாயகி குதித்து தற்கொலை.. எதற்காக.. ?


படத்தின் ஹீரோ அறிமுகம் செம்பி என்று போடுகிறார்கள்.. ஆனால் இவர் பல தமிழ் சினிமாவில் போலீஸாய், ரவுடியாய், என்று பல கேரக்டர்களில் நடித்தவர்.. இவர் பெயர் பாண்டி ரவி.. ரவியின் நடிப்பில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த போது கூட இருந்தளவுக்கு கூட, இதில் சொல்லி கொள்ளும்படியாய் இல்லை.. பாவம் கடைசி காட்சிகளில் எங்கேயிருந்தும் குதிக்காதவர் எதற்கு சேது போல் நடக்க வேண்டும்? கதாநாயகி தனுஷ்யா.. சில இடங்களில் மிக அழகாகவும், இன்னும் சில இடங்களில் மிக அழகாகவும், சிற்சில இடங்களில் பய்முறுத்துபவராகவும்.. இருக்கிறார். அப்புறம் அந்த குண்டு அம்மா..


படத்தில் பாராட்டபட வேண்டிய ஓரு நபர் ஒளிப்பதிவாள்ர் ஸ்ரீ..ஸ்ரீனிவாசரெட்டி. வித்யாசமான ஆங்கிள்களில் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார்.அதிலும் காசி தெருக்களில் அவரின் கேமரா புகுந்து வெளிவரும் வேகமிருக்கிறதே. சூப்பர்.. ஆனால் டைரக்டர் ஷாட் வைக்கிறேன் பேர்விழி என்று ’எக்ஸ்ப்ரஸ் வேக’ ஸ்லோவாய் ஒவ்வொருவரும் ரெண்டு செகண்ட் கழித்தே,ரியாக்‌ஷன் செய்வதும், படு அபத்தமான ரியாக்‌ஷன்களூம் நம்மை ரொம்பவே வெறுப்பேற்றுகிறது.

படத்தில் காமெடிக்கு குறைவேயில்லை.. முழுக்க, முழுக்க காசியிலேயே எடுக்கபட்ட இந்த கதையில் வரும் எல்லோரும் கொஞ்சம் கூட இந்தி கலப்பில்லாமல் தமிழ் பேசி வளையவருகிரார்கள். ரவுடி, அரசியவாதி, வியாபாரி, எதிர்கேங்க், கமிசனர், போலீஸ் என்று.. ஓரே காமெடி போங்கள். பாடல்கள் சொதப்பல் ரகம்.

இந்த படம் முன்பு ஆலயம் என்ற பேரில் எடுக்கபட்டது.. திடீரென்று பேர் மாற்றி சாமிடா என்று வைத்திருக்கிறார்கள். சாமியை ‘டா’ போட்டதாலோ என்னவோ, சாமி கண்ணை குத்திவிட்டது.. பார்த்த நம் கண்களை..


படித்ததில் பிடித்தது

ராட்டடூயி- சிறுகதை..
“ஏய்…கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது”, லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி.

“எலியா?….”, கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங் ரூம் சோபாவின் பின்னால் எட்டிப் பார்ப்பதைப் பார்த்து பயந்து போய் நின்று விட்டாள் தாரிணி.

“ஆமாம்மா, லைட்ட போடேடடடன்….சத்தம் போட வக்கிறடி நீ. இன்னும் எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல. அதைப் போட்டுட்டு சோபாவை அந்த பக்கம் புடி.”

“ஒரு நிமிஷம்…ஸ்டவ்ல ரசம் வைச்சிருக்கேன். தோ..இறக்கி வெச்சுட்டு வரேன்”, லைட்டைப் போட்டுக் கொண்டே சொன்னாள்.

சமயோசிதமாக, அவன் பக்கத்தில் இருந்த பால்கனி(patio) கதவையும், அதன் பின் இருந்த வயர் கதவையும் திறந்து வைத்தான். குளிர்க் காற்று சுளீர் என்று உள்ளே நுழைந்தது. லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Dec 7, 2008

தரிசனம்



என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்துவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து,கேட்டால் என் நிம்மதி போகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று துள்ளி எழுந்து,

"என்ன நீங்க.... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூனூக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..."

என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து

"சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.அதிகாலை மூ்ன்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளிக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது. எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். "டோலக்" :" ஜல் ...ஜல்..."ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு டிரான்ஸ் வந்தது போல் தலை ஆட்டச் சொன்னது.

நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த தொடர்பஜனை இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது. மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.

அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.

நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும். அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே "குமுக்கு,,,குமுக்கு..." என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார்.

அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள். அங்கே ஓரு பக்தி மின்சாரம் எந்த கனைக்டிவிட்டியும் இல்லாமல் காற்றில் இருந்தது. அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.

எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது.

"என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள்.

நான் அவளிடம் "என்ன தரிசனம்?' என்றேன்.

அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல்

"உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?"

"அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?" அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.

Dec 3, 2008

ஆணாதிக்கம்



பூ படத்தின் முதல் பாடல் காட்சியை வெட்டிவிடபோவதாய் ஓரு செய்தி.. ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளீப்பாடாகவே தோன்றுகிறது.

அழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்க்கும் போது உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது.

பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.

அழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தைகுட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.

எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார்.. இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால் ஏற்றுக் கொள்ளாது.

ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..

என்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் கேட்டேன். “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், கலவி ஏற்படுவதாய் காட்சியமைத்திருந்தேன்.”

அதற்கு அவர் “ சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். இதற்கு முன்னால் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்..

ஆணாதிக்கம்..???


Blogger Tips -முத்தம் - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,

Dec 2, 2008

கலைஞரின் “நம்ம குடும்பம்”

மதுரை ஆர்.சி.வியில் சன் குழும சேனலகள் நாளை முதல் ஓளிபரப்பு

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?

ராஜ்டிவி.

இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ் அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களது நிலமை என்னவாகும்?

கலைஞர் தொலைக்காட்சி

சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத் ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்று சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியை தூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய் ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.

ஹாத்வே

பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள் அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெ அரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால் அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல் இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும் வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?

ஆர்.சி.வி

மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்‌ஷன் கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனி ஆர்.சி.வியின் கதி..?

அரசு கேபிள் கார்பரேஷன்

நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்ட கார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில் அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாக கொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதி என்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.

ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?

இவர்களையெல்லாம் விட பாவம்.. அறிவிழி என்று ஓருவர் மாய்ந்து, மாய்ந்து மாறன் சகோதரர்கள் கலைஞரை ஏமாற்றி விட்டதாக தொடர் பதிவு எழுதியவர்.. இனிமேல் அவர் என்ன செய்ய போகிறார்.

கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.. ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம் அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது.. இதை நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்து கொண்டுதானிருக்கிறார்கள்..

இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்க போகிறதோ..?

வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களை முடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரது பேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்ன செய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்கு ”ரவுண்டாய்” கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள் என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின் பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?


Blogger Tips -முத்தம் - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,

Dec 1, 2008

கொத்து பரோட்டா

சிறுகதை போட்டி.

**** அவர்களின் பதிவில் சிறுகதை போட்டி நடத்த போகிறார்களாம்.. அவர் யாரென்று அப்புறம் சொல்வதாய் சொல்லியிருக்கிறார் பரிசல். பரிசல் நடுவராய் இருக்க போவதாய் தெரிகிறது.. அவரின் தீர்ப்பு நாட்டாமை தீர்பாய் இருக்கும் என்று நம்புவோமாக.. அவரின் நடுநிலமை பற்றி அனைவரும் அறிந்ததே..(எப்படியெல்லாம் பாராட்ட வேண்டியிருக்கு.. அது சரி ப்ரைஸ் வாங்கறதுன்னா சும்மாவா..?)

நீயூஸ்

பம்பாய் தாஜ் பிரச்சனையை நேரடியாய் ஓளிபரப்பியதை பற்றி பலருக்கும், பல கருத்துகள் இருக்கிறது. அவர்கள் அப்படி நேரடியாய் ஓளிபரப்புவதை தீவிரவாதிகள் டீவீயில் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு வெளியே நடக்கும் தகவல்கள் தெரிந்து கொண்டே இருக்குமே..? என்று.. உங்களூக்கு ஓரு விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். முதல் நாள் தவிர எல்லா நாட்களிலும் தாஜ், ஓபராய், நாரிமன் போன்ற இடங்களில் கேபிள், மற்றும் தொலைக்காட்சி ஓளிபரப்புகளை கட் செய்துவிட்டார்கள். அதனால் தீவிரவாதிகளுக்கு செய்திகள் போவதற்கு வாய்ப்பை குறைத்துவிட்டார்கள். ஆனால் ஓரு விஷயம்.. எந்த சேனலாவது அங்கே நடப்பதை உள்ளது உள்ளபடி காட்டாமல் போனால் நமக்கு உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். ஓரு பக்கம் நல்லது என்றாலும், இன்னொரு பக்கம் ஆப்பு இருக்கத்தான் செய்கிறது.. என்ன செய்ய..?

நன்றி

தொடர்ந்து மூன்றாவது மாதமாய் 10,000 ஹிட்ஸை தாண்ட வைத்த பதிவுலக வாசகர்களுக்கும், என்னை பின் தொடரும் பரிசல்,லக்கிலுக், அருண், ஜூர்கேன், ராஜ்,வெண்பூ, ஆர்.நாகப்பன்,அதிரை ஜமால்,அக்னிபார்வை, அத்திரி,முரளிகண்ணன், நவநீதன், ரபீக் ராஜா, உண்மைதமிழன், ஜீவன்,ஹரி, அருப்புகோட்டை பாஸ்கர், தமிழ்சினிமா, ராமன், சிம்பா, அதிஷா, தமிழ் நெஞ்சம், அவர்களுக்கும் பின்னூட்டமிட்டும், ஓட்டை குத்தியும் என்னை ஊக்குவிற்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



படித்ததில் பிடித்தது

24/7

பாலியில் தொழிலாளி வீட்டில்

காத்திருக்கும் கஸ்டமர்கள்

ஆயுத பூஜை

திரு ரவி ஆதித்யாவின் பதிவிலிருந்து..மேலும் படிக்க..