Thottal Thodarum

Sep 14, 2008

எ.வ.த.இ.ம.படம் A Wednesday


ஹிந்தியில் வர வர கலக்கி கொண்டிருக்கிறார்கள், அதுவும் சமீபகாலமாய் வித்யாசமான கதைகளை கொண்டு வருகிற படங்கள் அதாவது, ஆமீர், ராக் ஆன், எ வெட்நெஸ்டே போன்ற படங்களை பார்க்கும் போது மனசில் எ.வ்.த.இ.ம என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஓரு வயதானவர் (நஸ்ரூதீன் ஷா) ரயிலில் வருகிறார். அங்கே ஓரு பேக்கை வைத்துவிட்டு போகிறார். மீண்டும் ஓரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். தன் பர்ஸ் காணாமல் போய்விட்டதாக கம்ளெயிண்ட் குடுக்கிறார்.அந்த ஸ்டேச்னிலும் ஓரு பையை வைத்துவிட்டு, இதற்கிடையில் மனைவியிடமிருந்து மார்கெட்டில் காய்கறி மற்றும் இதர சாமான்களை வாங்கி வர சொல்ல அதற்கும் சரி என்று சொல்லியபடி அதையும் வாங்கி கொண்டு ஓரு உயரமான இன்னமும் முடிக்கபடாத ஓரு கட்டத்தின் உச்சியில் ஓரு டேபிளில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் லேப்டாப், போன், செல்போன்கள், சிம்கள், ஓரு சிறிய ஹாண்டி டிவி, போன்ற உபகரணங்களை எல்லாம் ஆன் செய்தவுடன் அவர் செய்யும் ஓரு காரியம், மும்பையின் கமிஷனருக்கு போன் செய்து தான் மும்பையில் முக்கிய இடங்களில் பாம் வைத்திருப்பதாகவும், அந்த இடங்களை பற்றிய தகவல்கள் வேண்டுமானால் உடனடியாக, மும்பை தொடர் ரெயில் குண்டு வெடிப்பு சம்பந்தமான நான்கு கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார். இதே செய்தியை ஒரு தொலைக்காட்சி சேனலுக்கும் சொல்லிவிட்டு, அவர்கள் கவர் செய்வதை வைத்தே தன்னுடய டிமாண்டுகள் நடக்கிறதா என்று பார்த்தபடி மேலும் அவர்களை மிரட்டுகிறா



இவருடய மிரட்டலுக்கு பயந்தாரா கமிஷனர்? எதற்காக ஓரு சாதாரண மும்பைவாசியாய் காட்டப்படும் நஸ்ரூதீன் ஷா இப்படி செய்யவேண்டும்? அவருக்கும் அந்த தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளூக்கு தயவு செய்து தியேட்டரில் சென்று படம் பார்ககவும்.

சரியாக 1.45 மணி நேர உங்களை சீட்டின் நுனிக்கு தள்ளூம் த்ரில்லர். த்ரில்லர் மட்டுமல்ல, ஓரு அருமையான சமுதாய கருத்தையும் சொல்லியிருப்பார்கள். அந்த கேரக்டருக்கு இவர்களை விட்டால் வேறு யாரையும் யோசிக்கவே முடியாத வகையில் கேரக்டரில் வாழ்திருக்கிறார்கள் ஷாவும், அனுபம்கெரும்... ஹாட்ஸ் ஆப்..

அருமையான ஓளிப்ப்பதிவு, நல்ல டயலாக், மிக சிற்ந்த நடிப்பு, இயல்பான எடிட்டிங். என்று எதிலும் குறை சொல்ல முடியாத படம்

கேள்விகள் கேட்க வேண்டுமானால் சில கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது எதற்கு? ஓரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எல்லோருக்கும் இருப்பதால்தான் தியேட்டரில் படம் பார்த்த எல்லோரும் முடிந்தவுடன் கைதட்டி வரவேற்றதை பார்க்கும் போது என்ன மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தயவு செய்து தியேட்டரில் பார்க்கவும், ஏனென்றால் இது போன்ற படங்களை ஆத்ரித்தால் தான் நல்ல படங்கள் வருவதற்கான முயற்சிகள் கூடும்.

ம்ஹூம் எப்போ வரும் தமிழில் இந்த மாதிரி படம்?(எ.வ.த.இ.படம்)

தீவிரவாதிகள் பற்றிய உங்களுக்கும் எனக்கும் உள்ள எண்ணங்களை காட்டும் க்ண்ணாடி கவிதை இங்கே அமுக்கவும்/./
Post a Comment

1 comment:

Anonymous said...

Seem to be the knot of Speed 1.