Thottal Thodarum

Sep 25, 2008

சிவாஜி, தசாவதாரம், தாம்தூம், ராமன் தேடிய சீதை.....


ஓரு விஷயம் மட்டும் புரியமாட்டேன் என்கிறது.. எவ்வள்வோ படங்களை பார்த்து நாம் விமர்சிக்கிறோம். ஆனால் நாம் நல்ல படம் என்று நினக்கிற படங்கள் விமர்சனங்களில் வேண்டுமானால் நல்ல வரவேற்பை பெறுகிறதே தவிர.. வசூலில் பெரிதாககூட சாதிப்பதில்லை.



உதாரணத்திற்கு நமது விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி சாதித்த படங்கள், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களே..இவை தவிர நமது விமர்சகர்களால் பிய்த்து, கடித்து குதறப்பட்ட சிவாஜி, தசாவதாரம், தாம் தூம், போன்ற படங்கள் நமது விமர்சனங்களை மீறி வெற்றி படங்களாய் வலம் வருகிறது.



மிக நல்ல படம் என்று பலராலும் பாராட்ட படுகிற அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், போன்ற படங்கள் எல்லாம் டீவியிலும், டிவிடியிலும் பார்த்து நன்றாகயிருக்கிறது என்று இன்ன்மும் சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்த ப்டங்கள்.


தற்போது சமீபத்தில் ரிலீசான ராமன் தேடிய சீதை படம் விமர்சகர்களால் மிகவும் பாராட்ட பட்டு, மிக நல்ல படம் என்று படம் பார்த்த மக்கள் சொன்னாலும் கூட, வசூலில் மிக மிக பின் தங்கிய் நிலையிலேயே உள்ளது. ஆனால் சரோஜா, போன்ற இளைஞர்களுக்கான படங்கள் நன்றாகவே பிக் அப் ஆகியிருக்கிறது. இதற்கு காரணம் இளைஞர்களை மிகவும் கவர்ந்ததே என்பது என் கருத்து.


தமிழில் நல்ல படங்கள் வருவதேயில்லை என்று சொல்பவர்கள் முக்கால்வாசி பேர் தியேட்டர்களில் போய் படம் பார்பதில்லை.. முடிந்தவரை திருட்டு டிவிடியிலேயோ, தரவிறக்கம் செய்தோதான் படம் பார்க்கிறார்கள். தியேட்டருக்கு போக கட்டுபடியாகாது என்று சொல்பவர்கள், தசாவதாரம், சிவாஜி, போன்ற படங்களை தியேட்டரில் சென்று பார்க்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை தியேட்டரில் ஓடாத நல்ல படங்கள் தொடருமேயானால்.. பெறும்பான்மை இளைஞர்களை கவரும் மசாலா படங்கள்தான் வெளிவரும் என்பது என் கருத்து.எனென்றால் சினிமா துறையில் இருப்பதால் பல நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதை சொல்ல போகும் போது அவர்க்ள சொல்வதெல்லாம் “கமர்சியலா ஓரு கதை சொல்லுங்க” தான் சொல்கிறார்கள்.

எனவே நல்ல படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரியுங்கள் என்ற் என் வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.

Post a Comment

6 comments:

Cable சங்கர் said...

:) :) ;)

லக்கிலுக் said...

உங்கள் விமர்சனத்தை படித்து ராமன் தேடிய சீதை பார்த்தேன். பயங்கர தலைவலி. பேசாமல் பைலட்டுக்கே போயிருக்கலாம்.

Cable சங்கர் said...

:(:(:(:(

யூர்கன் க்ருகியர் said...

//எனவே நல்ல படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரியுங்கள் என்ற் என் வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.//

Done!

Cable சங்கர் said...

நன்றி ஜூர்கேன்..

Rafiq Raja said...

லக்கி, ராமன் தேடிய சீதை உங்களுக்கு புடிக்கவில்லையா? சரிதான், நீங்கள் தள ஏகன், தளபதி சிவகாசி படங்களையும், நயன், அசினை மட்டும் ரசிக்கும் கூட்டம் போல :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்
- "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"