Thottal Thodarum

Aug 10, 2008

எஸ்கேபான கமலும்,மண் ஓட்டாத "குசேலனும்"

"பெண்கள் ஆடி மாத திருவிழாக்களுக்கு சென்றதால் குசேலன் படம் பார்க்க வரவில்லை, ஆடி மாதம் முடிவதால் மக்கள் மீண்டும் குசேலனை பார்பதற்காக தியேட்டருக்கு வருவார்கள்"
என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாத கதையாய் இயக்குனர் வாசு இன்றைய செய்திதாள்களில் கூறியிருக்கிறார்.

எல்லா பத்திரிக்கைகளிலும்,மீடியாக்களீலும், ஆகா, ஓகோ என்று பாராட்டினாலும், தியேட்டரில் மக்கள் நொந்து போய் வெளீயே போய் யாரும் பார்க்காதீங்க என்று பாராட்ட, அதனால் தியேட்டர் எல்லாம் காலியாக இருக்கும் காட்சியை கண்ணால் கண்டு வயிற்றெறிந்து போயிருக்கும் தியேட்டர் அதிபர்கள் எல்லாம் இந்த பேட்டியை கண்டு சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று புரியாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் "பத்து நாட்களூக்குள் எந்த படத்தின் வெற்றியையும் கணிக்கமுடியாது என்று ஓரு புதிய கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.இயக்குனர்.அதெல்லாம் அந்த காலம், ஓரே சமயத்தில் 1000பிரிண்டுகள் வரை வெளீயிடப்படும் இம்மாதிரி பெரிய படங்கள் எல்லாம் பத்து நாட்களுக்கு பிறகு பிக் அப் ஆவதற்கு முன்னே பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு டங்குவார் கிழிந்து போய்விடும். அவர் சொல்வதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களான " சுப்பிரமணீயபுரம்" போன்ற் படங்கள்தான். மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, மிக குறைந்த தியேட்டர்களீல் வெளியிடப்பட்டு, பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காத அந்த படம் பற்றி மக்கள் தங்கள் வாய் மொழி விளம்பரத்தினால் படம் வெற்றிப் பெற செய்வதற்க்கு சிறிது நாட்கள் அது கூட அந்த படம் நல்ல படமானால் மூன்றாவது அல்லது நான்கவது நாளீல் தெரிந்துவிடும். அந்த படம் தேறுமா? தேறாதா? என்று.

நல்ல கதையை ஸூப்பர் ஸ்டாரின் இமேஜூக்காக கதையையும் கெடுத்து, சூப்பர் ஸ்டாரின் இமேஜையையும் கெடுத்த இயக்குனர். மேலும் சாக்கு போக்கு சொல்லாமல் அடுத்த படத்திலாவது தன் மகனை வைத்து இயக்கும் இந்தி பாஜீகர் படத்தின் ரீமேக்கையாவது கெடுக்காமல் அவர் தன் மகனின் வாழ்வில் ஓளீயேற்றுவாராக..

நல்ல வேளை கமல் தப்பித்தார். ஏன் என்றால் குசேலனுக்கு முன்பு அவர் கமலை வைத்து படம் எடுப்பதாகத்தான் பேச்சு.

கமல் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......
Post a Comment

No comments: