Thottal Thodarum

Nov 20, 2006

தயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா?

தயாநிதிக்கு ஓரு நியாயம் , கலாநிதிக்கு ஓரு நியாயமா?போர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்..? இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம்? கலாநிதிக்கு ஓரு நியாயம்>>>
கேபிள் சங்கர்..
www.shortfilmindia.com
www.classiindia.com
Post a Comment

2 comments:

SurveySan said...

இன்னா சொல்ல வரீங்க?
செய்தி போட்டா மக்கள்ஸ் வாயப் பொளந்து முழிச்சுக்குவாங்கன்னா ;)

கலாநிதி மாறனின் முன்னேற்றம் உண்மையானதே. நல்ல backing இருந்தாலும், மனிதர் திறமையால்தான் இந்த அளவுக்கு முன்னேற்றம் கிடைத்தது என்பதே அடியேனின் கருத்து.

இதுக்கு ஒரு சர்வே போட்டுருவமா?

சுரேஷ் பாபு said...

இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களின் வரிசையில் "கலாநிதி மாறன்". எப்படி இது சாத்தியம்? அனைவராலும் இது முடியுமா? அவர் நல்ல திறமையானவர் என்றாலும் எப்படி 15 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி? "சன் நெட்வொர்க்" ஊழலுக்கு அப்பாற்ப்பட்ட நிறுவனமாக இருக்கலாம்.ஆனால் அது ஊழல் வழிகளில் உயர்ந்த நிறுவனம் என்பதே உண்மை.தந்தை பலமுறை மத்திய அமைச்சர்,தாத்தா முதலமைச்சர் என்பதே பெரும் பலமாகும்.இப்போது தம்பி மத்திய அமைச்சர் இதைவிட பக்கபலம் வேறு என்ன வேண்டும்?கட்சி பலத்தை வைத்து கருணாநிதி வளர்த்த நிறுவனம்தான் "சன் நெட்வொர்க்".முரசொலி மாறன் படிக்க தி.மு.கழகம் உதவியது என்பதே உண்மை.1960 முதல் 1990 வரை இவர்களின் தொழில் என்ன? சொத்து மதிப்பு என்ன?
தொழில் அரசியல்? கருணாநிதி-யை கேட்டால் எனக்கும் "சன் நெட்வொர்க்" நிறுவனத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பார். ஆனால் உண்மையை யாரும் மறைக்க முடியாது.
1960 களில் இந்த குடும்பத்தின் சொத்து சில லட்சங்களே.ஆனால் இப்போது எத்தனை ஆயிரம் கோடிகள்? முரசொலி மாறன் இப்போது உயிரோடு இல்லை,அவர் வழியில் இப்போது தயாநிதி மாறன் "சன் நெட்வொர்க்குக்கு" அதிகாரத்தை வைத்து உதவுகிறார் என்பதை யாரும் மறக்க முடியாது.
கருணாநிதி சொல்கிறார்,அவர் சினிமாவில் பாடல்,வசனம் எழுதி,படம் தயாரித்து,புத்தகம் எழுதி,பத்திரிக்கை நடத்தி பணம் சேர்த்தேன் என்று.அப்படியானால் இதோ சிறு ஒப்பீடு,தமிழ் சினிமாவில் நிறைய பாடல் எழுதிய "வாலி" இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இல்லை.அதிக படங்களுக்கு வசனம் எழுதிய "ஆரூர்தாஸ்" இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இல்லை.அதிக படங்கள் தயாரித்த "ஏ.வி.எம்" நிறுவனம் இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இல்லை.நிறைய புத்தகங்கள் எழுதிய எத்தனையோ பேர் இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இல்லை.ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் முன்ணனி பத்திரிக்கை நடத்தி வரும் பலர் இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இல்லை. சரி,இவரை விட அதிக முறை முதலமைச்சராக சிலர் இந்திய மாநிலங்களில் இருந்தவர்கள் இவரை விட பணக்காரராக இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படியும் யாரும் இல்லை.ஆனால் மேலே சொல்லப்பட்டவர்களை விட "கருணாநிதியே" பெரும் பணக்காரர் என்பதே உண்மை.இன்னும் எத்தனையோ அடுக்கி கோண்டே போகலாம் ஆனால் என்ன பிரயோஜனம்?

முடிவாய் ஒன்றை தெரிந்து கொள்வோம், கலாநிதி மாறன்,தயாநிதி மாறன் வளர்ச்சி ஒரு பெரிய விஷயம் இல்லை, ஒருவேளை நம்மில் ஒருவர் கருணாநிதிக்கு பேரனாகவோ,முரசொலி மாறனுக்கு மகனாகவோ இருந்திருந்தாலும் இந்த வளர்ச்சி சாத்தியம் தான்.தவறான வழியில் பாட்டனும்,தந்தையும் சேர்த்த சொத்தில் செல்வந்தனாய் வலம் வருவதும் பலம் பெருவதும் பெருமை அல்ல. நம் சுய உழைப்பில் உயர்வோம்.ஊழல்வாதிகளின் வாரிசுகளின் வளர்ச்சியோடு நம்மை ஒப்பிட வேண்டிய தேவை இல்லை. இவர்கள் நமக்கு முன் மாதிரியும் இல்லை.